• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காலம் யாவும் அன்பே... என் பார்வையில்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான பழக்கம் இருக்கும். சிலர் கதை மாந்தர்களின் பெயர்களால் கதை படிப்பார்கள்,
சிலர் புத்தகத்தின் முகப்பு அட்டையால் ஈர்க்கப்பட்டு கதை படிப்பார்கள் அதுபோல நான் புத்தகத்தின் தலைப்பைக் கொண்டு கதை படிப்பவள்.

அப்படித்தான் இந்த நாவலின் தலைப்பை கொண்டு கதை படிக்க ஆரம்பித்தேன். தலைப்பை பார்க்கும் பொழுது இது ஏதோ காதலை மையமாகக் கொண்டு எழுதிய கதை என்றே நினைத்தேன். கதையும் என் நினைப்பை பொய்யாக்கவில்லை. நான் நினையா ஒரு விஷயம் warm holes and time travelling.

இக் கதையைப் படித்துவிட்டு நான் Google ஆண்டவரின் துணையுடன் தேடத் தேட எனக்கு கிடைத்தது பெரும் ஆச்சரியங்கள் தான்...

இக்கதையில் மறுக்கவோ,மறக்கவோ முடியாத ஒரு கதாபாத்திரம் என்றால் அது வர்மா, ரதி தான். பெண்ணை ஒரு இயந்திரமாகக் கருதி உனக்கு வீட்டு வேலை செய்வதும் பிள்ளை பெற்றுக் கொடுப்பதும் மட்டுமே தலையாய கடமை என்று சொல்லி மூலையில் முடக்கிய காலத்தில் இதற்கு மாறாய் நீ என்னில் சரி பாதி என்று சொல்லி சரி சமமாக நடத்திய வர்மாவை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை...

வர்மாவின் ஆர்வமும் தூண்டுதலும் மட்டுமே என்னை worm holes பற்றியும் time traveling பற்றியும் படிக்கத் தூண்டியது. வர்மாவின் ஆர்வத்திற்கு சற்றும் குறையாமல் அதைப்பற்றி படிக்க படிக்க என்னை முழுவதும் அதற்குள் இழுத்து மெய்சிலிர்க்க வைத்த தருணங்கள் பல உண்டு...

இக்கதையில் உள்ள பிரமிடு பற்றிய செய்திகள் அக்காவின் கற்பனை என்றாலும் உண்மை போலவே எழுதியிருப்பதை எப்படி பாராட்டுவது
என்றே தெரியவில்லை... அதிலும் ஐந்து கற்களும்,தமிழ் எழுத்துக்களும், ஒவ்வொரு கற்களும் ஒவ்வொரு செய்தியினை கூறுவதை படிக்கும் பொழுது மெய் சிலிர்த்தது என்னவோ உண்மை...

திருவாதிரை நட்சத்திரம் பற்றியும் தண்ணீருக்குள் இருக்கும் சிவன் பற்றியும் படிக்கும் பொழுதும் இதையே தான் நடந்தது.

இக்கதையில் மற்றுமொரு ஸ்திரமான கதாபாத்திரம் சேனா. நட்புக்குள் உனக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்று சொல்வது எளிது. ஆனால் தன் நண்பனுக்காக அவர்களது உயிரணுக்களை பாதுகாத்து அவர்களை மறுபிறவி எடுக்க செய்வது எளிதல்ல அல்லவா. காதலில் காத்திருப்பு என்பதை மட்டுமே கேள்விப்பட்டுள்ள நமக்கு நண்பனுக்காக பல ஆயிரம் ஆண்டுகள் காத்திருப்பது எனும் செய்தி புதிதாகவே இருந்தது.

ஒவ்வொரு முறையும் இவர்களது உரையாடல்களையும் பாசப் பிணைப்பையும் பார்க்கும் பொழுதும் என் மனதில் ஓடிய பாடல் இதுவே
"நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கு எல்லை உண்டு நட்புக்கில்லையே"...

இதுபோல பல பாடல்கள் மனதில் ஓடும்....

இவர்களைப் பற்றி எப்படி சொல்லாமல் இருப்பது அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட ஜோடி வாகி,இயல். என் மனதை மட்டும் விட்டா வைத்திருப்பார்கள்...


செல்ல சண்டை, சிறுபிள்ளைத்தனமான கோபம், கொஞ்சம் சினுங்கல், சிறிது ஊடல், நிறைய காதல் மொத்தமாக சேர்ந்து செய்த கலவை வாகி, இயல்...

கண்ணை மூடிக்கொண்டே படிக்கும் வித்தையை இங்கேதான் கற்றுக் கொண்டேன் நான்??...

மற்றுமொரு கதாபாத்திரம் ஆகாஷ்,வந்தனா. சில இடங்களில் சிரிப்பை வரவழைத்த பெருமை இவர்களையே சேரும்...

இப்படி சிரிக்க,சிந்திக்க, ரசிக்க என்று மொத்தமாக கலந்து செய்த கதைதான் காலம் யாவும் அன்பே.


So thanks to @Thendral akka... Ipti super ana story ya engaluku Padikka kututhathuku???
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,016
Location
madurai
Akka review lam periya work ka...na summa yenaku antha story epti irunthuchunu than ka post pannen...
Nanum than senjen but un alavukku illa ivlo korvaiya varthaigal varadhu namakku just 3line than mudichuruven adha Ange senjuten???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top