• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காெத்து சப்பாத்தி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sesily Viyagappan

புதிய முகம்
Joined
Feb 24, 2020
Messages
18
Reaction score
9
Location
Chinthamani, Puliangudi
IMG_20200821_195337.jpg

காெத்து சப்பாத்தி

தேவையான பாெருட்கள்

1.சப்பாத்தி - 4
2.தக்காளி - 2 பெருசு
3.பெரிய வெங்காயம்(பல்லாரி) - 3
4.முட்டை - 3 (தேவை என்றால்)
5.கடலை எண்ணெய் - 4டேபில்ஸ் ஸ்பூன்
6.காரம் மசாலா 1/2 ஸ்பூன்
7. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
8. சீரக தூள் 1/4 ஸ்பூன்
10. மிளகாய் தூள் -தேவையான அளவு
11.உப்பு -தேவையான அளவு
12. மிளகு தூள் - 1/4 ஸ்பூன்
13. காெத்தமல்லி தழை - ஒரு கை பிடி
14. இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
15. மிளகாய் - 1
16.பட்டை சிறிய துண்டு
17.எலக்காய் 2
18.கிராம்பு 4
19.பிரியானி இலை 1

செய்முறை:-

வானலி மிதமான சூட்டிற்கு வந்த பிறகு இரண்டு டேபில்ஸ் ஸ்பூன் கடலை எண்ணெய் (வேறு எண்ணெய் விரும்புபவர்கள் அதையே பயண் படுத்தலாம்) விடவும்.

எண்ணெய் சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். கருவேப்பிலை பொரிந்து வரும் நேரத்தில் சிறிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்கவேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்திலேயே இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயத்தின் நிறம் பொன்நிறமாக மாறும் சமயத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளற வேண்டும். மசால் பொருள்கள் வானொலி சூட்டில் தீந்து விடாமல் இருக்க சிறிதளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். தண்ணீர் சேர்ப்பதால் மசால் பொருள்கள் வானெலியுடன் ஒட்டிக் கொள்ளாமல் வெங்காயத்துடன் சேர்ந்து நல்ல சுவையை தரும்.

பின்பு அதோடு பொடி பொடியாக வெட்டி வைத்த தக்காளியையும், தேவையான அளவு உப்பையும் சேர்க்கவேண்டும். தக்காளி கலவையுடன் சேர்ந்து கிரேவி பதம் வரும் வரை மிதமான தீயில் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

கிரேவி பதம் வந்த பிறகு கிரேவிக்கு நடுவே சிறிது இடைவெளியை ஏற்படுத்தி (அதாங்க கல்யாண வீட்டு சாம்பார் ரசம் ஓடிப்போகாமல் இருக்க சாதத்திற்கு நடுவுல ஒரு பள்ளம் வெட்டுவோமே அது மாதிரி) அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் அதன்மீது நாம் எடுத்து வைத்திருக்கும் முட்டையை உடைத்து ஊற்றவேண்டும்.

முட்டை மீது மிளகுத்தூளை தூவி முட்டையின் மஞ்சள் வெள்ளை கருவை கலந்து விடவேண்டும். முட்டை சிறிது நேரம் எண்ணெயில் வெந்த பிறகு அதை வெங்காய தக்காளி கலவையுடன் கலந்து விட வேண்டும். அப்பொழுதுதான் முட்டை துகள்கள் சற்று பெரிதாக இருக்கும். (இல்லன்னா இருக்கா இல்லையானு தெரியாமல் தூள் தூளா போயிடும்) இப்போ நம்மளுடைய கிரேவி தயாரா இருக்கு.

இதில் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்த சப்பாத்தியை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். சப்பாத்தி உங்களுக்கு ஸ்சாப்டா வேண்டுமென்று நீங்கள் ஆசைப்பட்டால் இத ஐந்து நிமிடத்தில் எடுத்துவிட வேண்டும். ஆனால் சிலருக்கு கிரிஸ்பியாக (என்ன மாதிரி) சாப்பிட ரொம்ப பிடிக்கும். அப்படி சாப்பிட பிடித்தவர்கள் கூட ஒரு பத்து நிமிடம் பிரட்டி விட்டு எடுத்து எடுக்கலாம். இறுதியில் கொத்தமல்லி தழை தூவி விட்டால் நமது கொத்து சப்பாத்தி சாப்பிடுவதற்கு தயார்.

குறிப்பு:-
(இனி இரவு செய்யும் சப்பாத்தி மிச்சமாகிட்ட நீங்கள் வருத்தப்பட வேண்டாம். அதை காலையில் கொத்து சப்பாத்தியா மாத்தி கொடுத்திடுங்க.
உங்களுக்கு முட்டை பிடிக்காதுன்னா அப்படின்னு நினைக்கிறவங்க முட்டைக்கு பதிலாக வெஜிடபிள் குருமா இருந்தா கொஞ்சமா சேத்து கிளறி எடுத்தால் சுவையான வெஜிடபிள் கொத்து சப்பாத்தி தயார்.
அதேசமயம் சப்பாத்திக்கு பதிலாக நீங்கள் இதில் பரோட்டா கூட பயன்படுத்தி கொத்து பரோட்டா செய்யலாம்)

செய்து பாத்துட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க...
மீ வெய்டிங் ஃபார் யுவர் ஃபீட் பேக்
முடிஞ்சா உங்க ரெசிப்பி பிக்ஸர கமென்ட் கூட அனுப்புங்க.... என் வாட்ஸ்ஆப் ஸ்டேடஸ்ல வச்சு சந்தோஷ படுவேன்.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top