• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கிருஷ்ணாவதாரம் எதற்காக?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
நாம் நினைப்பது போல் கிருஷ்ணாவதாரம் கம்சனை சகடாசுரனை துரியோதனாதியர்களை கொல்லவோ பாண்டவர்களை திரௌபதியை ரட்சிக்கவோ இல்லையாம்

இதையெல்லாம் தான் சீராப்தியில் இருந்தபடியே ஒரு சங்கல்பத்திலேயே முடிக்க முடியுமாம்

பின் ஏன் கிருஷ்ணாவதாரம் என்றால் அதற்க்கு முக்கிய காரணமாக ஆழ்வார் கூறுவதை பார்ப்போம் கண்ணன் பிறந்து வளர்ந்தது ஆயர்பாடியில் ஏன் அங்கே வளரவேண்டும் ஏன் அங்கு வெண்ணையை திருடவேண்டும்

பொதுவாக தன்னிடம் இல்லாத ஒன்றை அது விலை மதிப்பு உள்ளதோ அல்லாததோ மறைமுகமாக அடுத்தவரிடம் இருந்து அல்லது பொருளின் உரியவர்களுக்கு தெரிவிக்காமல் எடுப்பது அல்லது களவாடுவது திருடர்களின் பழக்கம். பகவான் கண்ணனிடம் என்ன இல்லை

எல்லாமே உடைய பூரணன் அல்லவா அவன் அவனிடமும் இல்லாத ஒன்றா என்றால் ஆம் உள்ளது அது என்னவென்றால் அவனது உள்ளத்தில் அழுக்கு என்பதே இராது
மனிதர்களிடம் ஏன் பல ஞானிகளிடமும் கூட உள்ளத்தில் அழுக்கு நிறைய இருக்கும்

எவன் ஒருவன் அனைத்தையும் துறந்து பகவானை சரணடைகிறானோ அவன் மனத்தில் தான். குடிகொண்டு அந்த அழுக்கை போக்க வல்லவன் இதனால்தான் மகான்கள் கண்ணனை
சித்த சோரன் என்று அழைப்பர்
சரி விஷயத்துக்கு வருவோம் பகவான் ஏன் கிருஷ்ணாவதாரம் எடுத்தான் என காண்போம்

ஆழ்வார் கூறுவது பகவான் கிருஷ்ணாவதாரம் எடுத்ததே வெண்ணெய் சாப்பிடத்தான்

என்ன ஓய் புதுக்கதை என கேட்கிறீர்கள் தானே
அதாவது பகவான் வைகுண்டவாசனுக்கு அந்த ஶ்ரீவைகுண்டத்தில் இடைவிடாமல் ஆராதனைகள் செய்து எப்போதும் ஒரே அமிர்தத்தை மட்டுமே கண்டருள செய்து செய்து பகவானுக்கே சலிப்பு ஏற்படுத்திவிட்டார்களாம் நித்ய சூரிகள்

பகவானோ எத்தனை நாள்தான் இந்த ஒரே அமிர்தத்தையே சாப்பிடுவது என எண்ணிய தருணம்
நந்தனின் ஆயர்பாடியில் யசோதை பசும் பாலை சுண்ட காய்ச்சி தயிராக்கி கடையும் மோரில் இருந்து வெண்ணெயின் வாசனை கோகுலத்தையும் தாண்டி பகவானின் வைகுண்டத்தை அடைந்ததாம்

அவ்வளவுதான் பகவானுக்கு வைகுண்டத்தில் இருப்புக் கொள்ளவில்லை

நிதம் நிதம் கண்டருளும் திகட்டிப்போன இந்த அமிர்தத்தை தவிர்த்து தன் கணக்கின் படி ஒரு நொடிப் பொழுது ஆயர்பாடி போய் அங்கே யசோதா உட்பட ஆயர்பாடி பெண்கள் பசும்பாலில் இருந்து எடுக்கும் வெண்ணெயை அழுது செய்து வரலாமே என எண்ணியதுடன்
இதற்காக இன்னும் ஓர் அவதாரம் பூமியில் எடுத்தால் கூட பரவாயில்லை என நினைக்க

அவனுக்கு அதற்க்கும் ஒரு சங்கடம் இருந்ததாம்

காரணம் வைகுண்டத்தில் தனக்கான நித்ய ஆராதனைகள் குறைவின்றி நடக்கும்போது அவர்களை விட்டு எப்படி போவது என கருணையுடன் நினைத்தானாம்

மேலும் அப்படியே போனால் நித்யசூரிகள் மனம் எப்படி கஷ்டப்படும்

நித்யசூரிகள் ஒரு நொடிப் பொழுது தங்கள் கண்களை மூடித் திறந்தால் போதுமே அதற்குள் இன்னொரு அவதாரம் எடுத்து ஆயர்பாடிக்கு சென்று யசோதா மற்றும் ஆயர்பாடி ஆய்ச்சிமார் கடைந்தெடுக்கும் அந்த வெண்ணெயை விழுங்கி விட்டு வரலாமே என எண்ண

அவனது உள்ளத்தை அறிந்த தாயார் ஸ்வாமி இந்த அமுதமும் அந்த வெண்ணையும் ஒன்றாகுமா என மார்பில் இருந்தபடியே கேட்க

பகவான் சொன்னாம் தேவி நீயே அந்த பாற்கடலை கடைந்த போது வந்தவள் தானே அதுபோல் இந்த அழுதமும் பாற்கடலை கடைந்த போது வந்தது தானே

ஆனால் இந்த அமுதம் தேவாசுர போட்டிக்காக கடையபட்டது ஆனால் அங்கே எந்த போட்டியும் இல்லை பக்தியுடன் கடையபடுகிறது அந்த வாசனை உன் நாசிக்கும் வந்திருக்குமே என கேட்க

தாயார் சிரித்துகொண்டே ஸ்வாமி அதற்க்காக ஏன் வருத்தபடுகிறீர்

நித்ய சூரிகள் எப்போதும் இமையே மூடாதவர்கள் எனவே நான் சொல்லும் உபாயத்தை கேளும்

தேவரீருக்கு இப்போ திருவாராதனத்தில் அலங்காரம் முடித்து அகில் சந்தனம் ஜவ்வாது புனுகு போன்றவை கலந்த வாசனை தூபம் காட்ட போகின்றனர்

அப்படி அவர்கள் காட்டும் மேக மண்டலத்தைப் போன்ற அந்த தூபப் புகையின் இடையில் தேவரீர் ஆயர்பாடி சென்று அவதாரத்தை பூர்த்தி செய்து வரலாமே என கூற ( நித்யசூரிகள் காட்டும் தூபத்தில் இருந்து வரும் வெண்மையான வாசனையான புகை சூரிகளுக்கும் பகவானுக்கும் இடையே வெண்மேகத்தால் திரை போட்டது போல் இருக்குமாம்)

பகவானும் ஆம் தாயே அதுதான் சரியான சந்தர்ப்பம் நாம் ஒரு அவதாரம் எடுத்து வருகிறேன். என்று கூறியபடியே

பூலோகத்தில் தேவகியின் வயிற்றில் ஓர் இரவில் ஒருத்தி மகனாக பிறந்து ஆயர்பாடி சென்று யசோதாவின் மகனாக ஒளித்து வளர்ந்தபடிக்கே

ஆயர்பாடியில் யசோதா மற்றும் ஆயர்பாடி பெண்கள் கடைந்தெடுத்த வெண்ணையை தன் ஆசை தீர அமுது செய்தும் அதற்காகவே அவன் ஆயர்பாடி சிறுவர்களுடன் ஆடிபாடி பலவிதமான லீலைகள் செய்து கொண்டும் இறுதியில் பாண்டவர்கள் குந்தி திரௌபதை ஆகியோருக்கு நட்பாகவும் அவர்களுக்காகவே கம்ஷன் சகடாசுரன் காளிங்கன் துரியோதணாதிகளான கௌரவர்கள் கிருபர் துரோணர் கர்ணன் பீஷ்மன் போன்றோர்களையும் எதிர்த்து போரிட வைத்து கிருஷ்ணாவதாரத்தில் தன்னோடு அவர்களையும் இனைத்து கொண்டு தனது இருப்பிடமான வைகுண்டபதி அடைந்தானாம்

தாயருக்கும் பகவானுக்கும் இடையே ஏற்பட்ட உரையாடல் அதன் காரணமான கிருஷ்ணாவதாரம் என எதையும் முழுவதுமாக அறிய முடியாத நித்ய சூரிகள் அந்த தூப புகை குறைந்ததும் தீப ஆராதனை செய்தனராம்

பகவான் காலத்தையே கட்டுக்குள். வைத்திருப்பவன் அவனுக்கு காலம் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்ற இந்த அதிஅற்புதமான தத்துவத்தை நமக்கு உணர்த்தும் விதமாக குருகூர் சடகோபனான நம்மாழ்வாரின் பாடல் அமைந்துள்ளது

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி
விண்ணோர்கள் நன்னீர்
ஆட்டி அத்தூபம் தராநிற்கவே
அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு
உண்ணப்போந்து இமிலேற்றுவன்கூன்
கோட்டியை ஆடினை கூத்து
அடலாயர்தம் கொம்பினுக்கே

அதாவது வைகுண்டத்தில் இருந்து யசோதை வீட்டு வெண்ணெயை அமுது செய்யவே ஆயர்பாடியை நாடி வந்த பகவானுக்கு

பகவானின எண்ணத்தை அறியாத யசோதை வேண்டிய அளவு வெண்ணெய் அவருக்கு கொடுக்காததால் கண்ணனான அவன். வெண்ணையை வீடுதோறும் சென்று திருடக் கிளம்பினானாம்

பகவான் கண்ணனின் அவதாரமே வேறு எதெர்க்காகவும் அல்ல ஆயர்பாடி வெண்ணெயை உண்ணதான் என நம்மாழ்வார் இந்த பாடலில் அழகாக சுட்டி காட்டியுள்ளார்

படித்ததில் பிடித்தது
 
Naemira

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 21, 2018
Messages
2,761
Reaction score
11,533
Age
31
Location
Thovalai

puthusaa iruku pa ... thanks for sharing
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top