குடும்பம்

#1
"ஒரு குடிலின் கீழ்
உறவுகளினால் கோர்த்த முத்துச்சரம்"

"பாச நார் கொண்டு
பந்தங்கள் நெருங்கி தொடுத்த
தொலைதூரம் சென்றாலும்
தொலையாத நியாபங்கள்"

"மொட்டை மாடியில்
மடியில் படுத்து
விடியும் வரை
முடியாத கதை பேசி
கரைத்திட்ட காலங்கள்"

"விழா காலத்தில்
நெருங்கி அமர்ந்து
விருந்துண்ட நொடிகள்"

"ஆலமர விழுதில்
ஆடிய பொழுதுகள்"

"அழியாத சித்திரிமாய்
என் ஆழ் மனம் அதை
ஆக்கிரமித்தது அநியாமயாய்"

"கூடி இருந்து
கொண்டாடிய விஷேசங்கள்
புது வரவின் போது
பூரித்த தருணங்கள்
பூ வனமாய்
வாடாமல் என் இதய வசத்தில்
ஒட்டிக்கொண்டது இடைவெளியில்லாமல்"

"பணத்தேவை பயம் வர
பறந்து சென்றது பந்தங்கள்
தனி கூடு தேடி
கூடிகும்மாளமிட்ட குடில் இங்கு
கும்மிருட்டில்"

"காத்திருக்கிறேன்
கலைந்து போன உறவுகள்
கடல் அலையாய்
கரை வந்து அடையும்
அந்த நொடிக்காக"

"நிஜம் அது தொலைவில் இருப்பினும்
நினைவு அது தொடர்பில் இருக்கிறது
நினைவுகளுடன் நான்"
 

Advertisements

Top