காலையில் எப்போதும் எழும் நேரம் தாண்டி கொஞ்சமே தாமதமாய் துயில் களைந்த மிரு, கண்களை தேய்த்தவாறு திறக்க... அவளருகே உறங்கிக்கொண்டிருந்த வருண்தான் முதலில் அவள் கண்களுக்கு தென்பட்டான்.
அதில் நொடியில் திடுகிட்டவளுக்கு, பின்பே அவளது நெஞ்சத்தில் உறவாடிக் கொண்டிருந்த தாலி அவனுடனான உறவை உணர்த்த,
ஆசுவாசமாகியவள் புன்னகையோடு கன்னத்திற்கு கைக்கொடுத்து அவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கவிழ்ந்து படுத்திருந்தவன் முகம் மட்டும் அவள் பக்கம் பக்கவாட்டாக திரும்பியிருக்க, அவன் போர்த்தியிருந்த போர்வை கொஞ்சமே விலகி இருந்தது.
கேசம் கலைந்திருக்க, அதனை சீராக்க பரபரத்த கரங்களை சிரமப்பட்டு அடக்கினாள்.
அவனது அண்மை, இந்த விடியலை அவளது வாழ்வில் மிக இனிமையான விடியலாய் மாற்றியது.
நேற்று திருமணத்தின்போது பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக இருந்தவனை ரசித்ததைவிட கூடுதலாகவே, இப்போது சமத்தாக உறங்கும் கணவனை ரசித்தாள்.
====
குட்டி பிட்டு...
மக்களே டெய்லி காலையில ஒரு எபி ஈவினிங் ஒரு எபி போட்டா உங்களுக்கு ஓகேயா...
பொல்லொவ் பண்ண முடியுமா...
சொல்லுங்க... நாளையில இருந்து டெய்லி மார்னிங் & ஈவினிங் ரெண்டு எபியா போடுறேன்...