• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

குருஷேத்திர கதைகள் _ 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,016
Location
madurai
பீமனால் ஏற்பட்ட மோசமான காயங்களுடன் துரியோதனன் போர்க்களத்தில் படுத்துக் கொண்டு மரணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தான் அப்போது அவனால் பேச முடியாமல் தனது மூன்று விரல்களை உயர்த்திய நிலையிலேயே வைத்திருந்தான்.
அவன் மனதில் மூன்று கேள்விகள் இருந்தது..

1.அஸ்தினாபுரத்தைச் சுற்றி ஒரு கோட்டையைக் கட்டாதது,

2.விதுரனைப் போரில் ஈடுபடச் செய்யாதது,

3.துரோணரின் மரணத்திற்குப் பிறகு அஸ்வதாமனைத் தளபதியாக ஆக்காமல் இருந்தது.

இவை மூன்றையும் செய்திருந்தால் தான் வென்று இருக்கலாமோ என்று துரியோதனன் நம்பினான்...

அந்த மூன்று விரல்கள் உயர்த்தியதன் பொருளைப் புரிந்துகொள்ள அவரது ஆட்கள் முயற்சிகள் மேற்கொண்டும் பயனற்று போனது. அவரது அவலநிலையைப் பார்த்த கிருஷ்ணர் துரியோதனனிடம், "உன்னுடைய மனதில் உள்ள குழப்பமான கேள்விகளை நான் அறிவேன். அதற்கு விடை அளிக்கிறேன்" என்றார்.

*நீங்கள் அங்கு ஒரு கோட்டையைக் கட்டியிருந்தால், குதிரையைக் கொண்டு கோட்டையைத் தகர்க்க நகுலனிடம் அறிவுறுத்தியிருப்பேன்*

*விதுரனைப் போரில் பங்கேற்கச் செய்திருந்தால் நானும் போரில் ஈடுபட்டிருப்பேன்*

*நீங்கள் அஸ்வதாமனைத் தளபதியாக நியமித்திருந்தால், நான் யுதிஷ்டிரனின் கோபத்தைத் தூண்டியிருப்பேன்*
என்று பதிலளித்தார்

*பலருக்குத் தெரியாத விஷயம்!*

நகுலன் தனது குதிரையை கனமழையில் கூட ஈரமாக்காமல் ஓட்ட முடியும் என்பது அதோடு நனையாமல் மட்டுமல்ல ஒரு துளிக்கும் இன்னொரு துளிக்கும் இடையில் வேகமாக பயணிக்கவும் முடியும்.
எவ்வளவு வலிமையான கோட்டையையும் குதிரையால் தகர்க்க முடியும். கவுரவர்கள் மற்றும் பாண்டவர்களில் நகுலனால் மட்டுமே இதனைச் செய்ய முடியும்.

யுதிஷ்டிரருக்குக் கோபம் வந்தால், அவரது கண் பார்வையால் அனைத்தையும் எரிக்க முடியும்...

போரில் கிருஷ்ணர் நேரடியாக பங்கேற்றிருந்தால் முடிவு ஒரே நாளில் தெரிந்திருக்கும்...

கிருஷ்ணரின் இந்த பதில்களைக் கேட்ட துரியோதனன் மூன்று விரல்களையும் மூடிவிட்டு சில நொடிகளில் அவன் மரணித்தான்.

*சர்வம் கிருஷ்ணார்ப்பணம்* 🙏🙏🙏
🌷பகிர்வு🌷
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,016
Location
madurai
🌷🌷🌷

🌷 திருத்ராஷ்ட்ரனுக்கு ஏன் கண் குருடானது ..?.. ஏன் அவனுக்கு நூறு குழந்தைகள்..?..

🌷 குருசேஷத்திர போர் முடிந்து, தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துகொண்டிருந்தது.
அப்போது திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம், கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி
செய்தேன்.அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.

🌷 அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன். அதன் பின் ஒரு கேள்வி கேட்கிறேன்.
நீ அதற்கு பதில் சொன்னால், நான் உனக்கு பதில் தருகிறேன்! என்ற பகவான், கதையைக் கூறினார்.

🌷 நீதி தவறாது ஆட்சி செய்த ஓர் அரசனிடம் மிகவும் வறியவன் ஒருவன் சமையற்காரனாகச் சேர்ந்தான்.
மிகச் சுவையாக சமைப்பது, அரசரை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.

🌷 அரசருக்கு வித்தியாசமான சுவையை அறிமுகப்படுத்தி பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை தோன்றியது.அதன்படி,அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து, அரசருக்குப் பரிமாறினான்.
தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அப்பதார்த்தத்தின் சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி அதை சமைக்கவும்
கட்டளை இட்டு, சமையற்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.

🌷 திருதராஷ்டிரா, இப்போது சொல்... அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார்.
வசிஷ்டரின் சமையற்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்து விட்டார்.

🌷 ஆயினும் வசிஷ்டர் அதைக் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார்.
அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே! சமையற்காரன் பணம், பரிசுகளுக்குஆசைப்பட்டிருப்பான்
அதனால் அவன் செய்த தவறு சிறியது.

🌷 ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான்! என்றார், திருதராஷ்டிரன்.
புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா! நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது, மன்னவன் செய்ததே தவறு! என கூறினாய்.

🌷 அத்தகைய நீதி பரிபாலனம்தான் பீஷ்மர், துரோணர்,
போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி,
நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது.

🌷 ஆனால், நான்
சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.
அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய துயரும், வேதனையும் அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய்.

🌷 ஆனால் தினம்தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்கு, கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்.

🌷 தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார். தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான் ..!!

🌷பகிர்வு🌷
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,016
Location
madurai
🌷🌷🌷

🌷 குருச்சேத்திரப் போரில் ஈடுபடுவோர் உணவருந்த பொறுப்பை ஏற்ற உடுப்பி மன்னன் .. உணவை சமைத்து வீணாக்காமல் நிர்வகிக்க தினம் தினம் சூசகமாக ஆலோசனை தந்த பகவான் பரந்தாமன் ..

🌷 ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரானது போர்களுக்கெல்லாம் தாயாக இருந்தது. அனைத்து மன்னர்களும் நூற்றுவர்களோடோ அல்லது ஐவர்களோடோ இணைந்து போரில் ஈடுபட்டனர். அத்தகைய மாபெரும் போரில் நடுநிலையாக மன்னர் உடுப்பி இருந்தார் ..

🌷 அவர் கிருஷ்ணரிடம் ..

".. போர்களில் ஈடுபடுவோர் உணவருந்த வேண்டும். எனவே அவர்களுக்கு உணவளிக்கும் பொறுப்பை நான் ஏற்கிறேன் .."

என்றார். இன்றும் உடுப்பி மக்களில் பலர் உணவளிக்கும் நபர்களாக உணவகங்களை நடத்துபவர்களாக இருக்கின்றனர் ..

🌷 பதினெட்டு நாள்கள் அந்த போர் நீடித்தது, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வீரர்கள் இறந்துக் கொண்டுருந்தனர். அதனால் உடுப்பி மன்னர் குறைந்த அளவிலான உணவை சமைக்க வேண்டி இருந்தது, இல்லையென்றால் உணவு வீணாகும் சூழல் ஏற்படும். ஆச்சரியம் என்னவென்றால் எந்தவொரு நாளும் உணவு வீணாகவே இல்லை ..

🌷 இத்தனைக்கும் ஒரு நாளில் எத்தனை வீரர்கள் இறந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது‌. அப்படியிருந்தும் துல்லியமாக உணவை சமைத்து வீணாக்காமல் இருந்தது அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்தது ..

🌷 உடுப்பி மன்னரிடம் ..

" இதை எப்படி இவ்வளவு சரியாக நிர்வகிக்கிறீர்கள் ..!?!.."

என்று கேட்டபோது, ஒவ்வொரு இரவும் நான் கிருஷ்ணரின் கூடாரத்துக்குச் செல்வேன், கிருஷ்ணர் இரவில் வறுத்த நிலக்கடலை சாப்பிடுவார் எனவே அதை ஒரு கிண்ணத்தில் வைத்து கொடுப்பேன் ..

🌷 அவர் எத்தனை கடலை சாப்பிடுகிறார் என்பதை வைத்து அடுத்த நாள் எவ்வளவு மரணங்கள் நிகழும் என்பதைக் கணக்கிட்டு கொள்வேன். உதாரணமாக அவர் 10 நிலக்கடலை சாப்பிட்டால் அடுத்த நாள் 10000 இறப்புகள் ஏற்படும் என்று பொருள். அவ்வாறு அடுத்த நாள் 10000 பேருக்கு குறைவானவர்களுக்குச் சமைப்பேன். எல்லாம் கிருஷ்ணரின் மாயாஜாலம் ..

🌷பகிர்வு🌷
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,016
Location
madurai
🌷🌷🌷

🌷 அக்ரூரர் விஷ்ணுவை காணுதல்
தனுர் யாகம் ஒன்றினை செய்வதற்கு கம்சன் ஏற்பாடு செய்திருந்தார் .. கிருஷ்ணரும் பலராமரும் மதுராவிற்கு வந்தபின் அவர்களைக் கொல்வதற்காக ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் மதுராவிற்கு அழைத்து வருமாறு அக்ரூரரை அனுப்பினார் .. அக்ரூரர் கம்சனின் நம்பிக்கைக்குரிய நண்பனாக இருந்தார் .. அதேவேளை அவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மிக உயர்ந்த பக்தர் ஆவார். விருந்தாவனம் சென்ற அக்ரூரர் கிருஷ்ணரையும் பலராமரையும் மதுராவிற்கு கம்சனால் அழைக்கப்பட்டிருந்த செய்தியைக் கூறினார் ..

🌷 கிருஷ்ணரும் பலராமரும் மதுராவிற்குச் செல்கிறார்கள் என்பதை அறிந்த கோபியர்கள் கவலையடைந்தார்கள். தம்மை விட்டுக் கிருஷ்ணர் பிரிவதை எண்ணி எல்லோரும் மிகவும் வருந்தினார்கள். கிருஷ்ணர், பலராமர் ஆகியோருடன் மேலும் சில கோபாலர்களும் தனுர் யாகத்தைக் காண்பதற்காக மதுரா செல்லப் புறப்பட்டார்கள். சூரியன் உதயமானதும் அக்ரூரர் நீராடி முடித்து, தேரில் ஏறி, கிருஷ்ணருடனும் பலராமருடனும் மதுராவுக்கு செல்ல புறப்பட்டார். நந்த மகாராஜாவும் மற்ற ஆயர்களும் மாட்டு வண்டிகளில் தயிர், பால், நெய் போன்ற பால் பண்டங்களை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணர் மற்றும் பலராமர் சென்ற தேரைப் பின் தொடர்ந்து சென்றார்கள்.

🌷 கோபியர்களெல்லாம் கண்களில் பரிதாபத்துடன் கிருஷ்ணரையும் பலராமரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கோபியரின் துயரம் கிருஷ்ணரை வெகுவாகப் பாதித்தது. ஆனால் மதுராவிற்குச் செல்வதை அவர் தன் முக்கிய கடமையாகக் கருதினார். ஏனெனில் கிருஷ்ணர் மதுரா சென்றால் தான் கம்சனை வதம் செய்ய முடியும். எனவே கிருஷ்ணர் கோபியருக்கு சமாதான வார்த்தைகள் கூறி, அவர்கள் வருந்தத் தேவையில்லை, தன் கடமையை முடித்துவிட்டு விரைவில் திரும்புவதாகவும் கிருஷ்ணர் கூறினார். ஆனாலும் அவர்கள் வழியை விட்டு விலகுவதாகவில்லை ..

🌷 தேர் புறப்படத் தொடங்கி, மேற்கு நோக்கிச் சென்றது. தேரின் மேலிருந்த கொடி கண்ணுக்குத் தெரிந்த வரை அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அக்ரூரரும் பலராமரும் உடனிருக்க, பகவான் கிருஷ்ணர் யமுனை நதியின் கரையை நோக்கி மிகுந்த வேகத்துடன் தேரைச் செலுத்தினார். யமுனையில் நீராடிய மாத்திரத்தில் ஒருவன் தன் பாவச் சுமைகளைக் களையலாம்.

🌷 கிருஷ்ணரும் பலராமரும் நதியில் நீராடி முகம் கழுவிக் கொண்டார்கள். யமுனையின் பளிங்கு போன்ற தெளிவான நீரைச் சிறிது அருந்தி விட்டு, அவர்கள் இருவரும் மீண்டும் தேரில் அமர்ந்திருந்தார்கள். உயர்ந்த மரங்களின் நிழலில் தேர் நின்று கொண்டிருந்தது. பின்னர் அக்ரூரர் அவர்களிடம் அனுமதி பெற்று, யமுனையில் நீராடச் சென்றார். வேத முறையின் படி ஒருவன் நதியில் நீராடியபின் இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் ..

🌷 அக்ரூரர் நதியில் நின்ற போது அவர் திடீரென்று கிருஷ்ணரும் பலராமரும் நீரில் நின்று கொண்டிருக்கக் கண்டார். இது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில் கிருஷ்ணரும் பலராமரும் தேரில் உட்கார்ந்திருப்பதை அவர் நன்கு அறிவார். எனவே அவர் குழப்படடைந்து, அவ்விரு சிறுவர்களும் எங்கு இருகிறார்கள் என்று பார்க்க நீரிலிருந்து வெளியேறினார். அவர்களிள் இருவரும் முன்பு போலவே தேரில் அமர்ந்திருக்கக் கண்டு அவர் மேலும் ஆச்சரியமடைந்தார். அவர்களைத் தேரின் மேல் பார்த்தபோது, நீரில் அவர்களைக் கண்டது உண்மைதானா என்று அவர் எண்ண தொடங்கினார் ..

🌷 அவர் மீண்டும் நதிக்குச் சென்றார். இம்முறை அவர் நதியில் கிருஷ்ணரையும் பலராமரையும் தவிர பல்வேறான தேவர்களையும், சித்தர்களையும், சாரணர்களையும், கந்தவர்களையும் கண்டார். அவர்கள் எல்லோரும் பிரபுவின் முன் நின்றிருந்தார்கள். பிரபு நீரில் படுத்திருந்தார். ஆயிரம் தலைகளைக் கொண்ட சேஷ நாகரையும் அக்ரூரர் கண்டார். சேஷ நாகப் பிரபு நீல நிற ஆடைகளை அணிந்திருந்தார். அவரின் கழுத்துக்கள் பால் வண்ணமாகக் காட்சியளித்தன. சேஷ நாகரின் வெள்ளைக் கழுத்துக்கள் பனி மூடிய மலைச் சிகரங்களைப் போலவும் தோன்றின. சேஷ நாகரின் வளைவான மடியின் மேல் கிருஷ்ணர் நான்கு கைகளுடன் நிதானமாக அமர்ந்திருப்பதை அக்ரூரர் கண்டார் ..

🌷 பலராமர் சேஷ நாகராவும் கிருஷ்ணர் மகா விஷ்ணுவாகவும் உரு மாறி அக்ரூரருக்குக் காட்சியளித்தார்கள். புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் நான்கு கைகளுடன் மிக அழகாகப் புன்னகைத்திருப்பதை அக்ரூரர் கண்டார். பிரபுவின் தரிசனத்தால் எல்லோரும் மகிழ்ந்திருந்தார்கள். அவரும் மிகுந்த பிரியத்துடன் எல்லேரையும் நோக்கிக் கொண்டிருந்தார். விஷ்ணு மூத்திக்குரிய விசேஷ சின்னங்களான சங்கு, சக்கரம், கதை, தாமரை, ஆகியவற்றை நான்கு கைகளிலும் ஏந்தி அவர் மிக அழகாகக் காட்சியளித்தார் ..

🌷 பிரபுவின் நெருங்கிய தோழர்களும், நான்கு குமாரர்களுமான சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகியோரும் சுனந்தர், நந்தர் போன்ற மற்றத் தோழர்களும் பிரம்மா, சிவன் போன்ற தேவர்களும் பிரபுவைச் சூழ்ந்திருப்பதை அக்ரூரர் கண்டார். மகா பண்டிதர்களான ஒன்பது மகரிஷிகளும் அங்கிருந்தார்கள். பிரகலாதர், நாரதர் போன்ற பெரும் பக்தர்கள் திறந்த உள்ளங்களுடனும், புனிதமான சொற்களாலும் பிரபுவைத் துதித்துக் கொண்டிருந்தார்கள் ..

🌷 புருஷோத்தமரான முழுமுதற் கடவுளின் பரமான ரூபத்தைக் கண்டவுடன் அக்ரூரர் மகிழ்ச்சியில் திளைத்தவராய் பக்தியால் உடல் முழுவதும் பரமானந்தம் பரவுவதை உணர்ந்தார். அவர் கண நேரம் திகைப்படைந்தாலும், உணர்வைத் தெளிவாக்கிக் கொண்டு பகவானின் முன் தலை வணங்கிக் நெகிழ்ந்த குரலில் பிரார்த்தனை செய்தார் ..

🌷பகிர்வு🌷
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top