• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

குறட்டைப் பழக்கத்தை நொடியில் போக்கும் அற்புத மூலிகைமருத்துவம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
குறட்டைப் பழக்கத்தை நொடியில் போக்கும் அற்புத மூலிகைமருத்துவம் பற்றி தெரியுமா உங்களுக்கு

குறட்டை என்ற ஒரு வியாதிதான், அந்த வியாதி உள்ளவர்களுக்கு அதன் சிரமம் ஒன்றும் அந்த சமயத்தில் தெரியாமல், அவரைச்சார்ந்தோருக்கு, அதிக அளவில், மன வேதனை, தூக்கம் கெட்டு ஏற்படும் உடல் வேதனை மற்றும் மன உளைச்சல் ஆகிய துன்பங்களை அடைய வைக்கும் ஒரு மோசமான வியாதி.

குடும்பத்தலைவர் விடும் குறட்டையால், எத்தனைக் குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன, எத்தனை குடும்பத்தலைவிகள், தாங்கள் படும் இன்னலை வெளியே சொல்லமுடியாமல், இரவுநேரம் வந்தாலே அஞ்சி நடுங்கி வாழ்கின்றனர்.

வேலைக்கு செல்லும் குடும்பத் தலைவிகள், தங்கள் கணவர்களின் இந்தக் குறட்டையால் சரியாக தூக்கம் இல்லாமல், காலையில் பணிநேரத்தில் தூங்கிவழிந்து ஆபிஸ் பணிகளில் ஈடுபாடு கட்டமுடியாமல், மேலதிகாரிகளிடம் திட்டு வாங்கின்றனர். இவ்வளவு இன்னல்களுக்கு காரணமான குறட்டை ஏன் வருகிறது?

யாருக்கெல்லாம் குறட்டை வருகிறது?
நாம் சுவாசிக்கும் காற்று மூக்கின் வழியேதான் செல்லவேண்டும், ஆனால் சளித்தொல்லையால் பாதிக்கப்படுபவர்கள்,மது அருந்தும் பழக்கம் உள்ளோர், புகைப் பழக்கம் உள்ளோர்,
அதிக உடல் எடை, பிறவிக்குறைபாடு மற்றும் வயதாவதன் காரணமாக, காற்று மூக்கின் வழியே உள்ளே செல்லும்போது,சளி பிரச்னைகளினால் மூச்சுக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு காற்று சரியாக உள்ளிழுக்கப்பட முடியாமல் தன்னிச்சையாக வாய் வழியே, சுவாசக் காற்று செல்ல முற்படும்போது, தொண்டைக்குழாய் அடைப்பினால், சரியாக சுவாசிக்க முடியாமல், சத்தம் வருகிறது.இந்த சத்தமே, குறட்டையாகிறது.

குறட்டையால் வரும் நோய்கள் :
இரவில் உறக்கத்தில் குறட்டை விடுபவர்கள், பகலில் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதிக சோர்வு, அன்றாட வேலைகளில் அக்கறை செலுத்த முடியாமல், மனா உளைச்சல்களுடனே வாழ்கின்றனர். இத்தகைய குறட்டை, இதயத்திற்கு பாதிப்பை தந்து இதய நோய்களைக் கொடுத்துவிடும்.
எல்லோருக்கும் துன்பங்களையே பரிசாக அளிக்கும் இந்தக் கொடூரக் குறட்டையை, அவர்களிடமிருந்து ஓட ஓட விரட்டி அவர்கள் வாழ்வில் மற்றும் குடும்பத்தில் நிம்மதியை அடைய வைப்பது எப்படி?

என்ன செய்யலாம்?
நாம் குறட்டைக்குக் காரணம் அறிந்துகொண்டோம், பிறவியிலேயே உடல்ரீதியாக சுவாசிக்க கோளாறுகள் உள்ளவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனைகள் மூலம் நலம் பெறலாம்.
அந்த தீர்வுக்கு முன்னால், அவர்கள் சரிசெய்ய வேண்டிய சில விஷயங்கள். முதலாவதாக, சிறிது காலத்திற்காவது, மது மற்றும் புகைப்பழக்கத்தை விட வேண்டும், எளிமையான எளிதில் செரிமாணமாகக்கூடிய உணவுவகைகளை மட்டும் இரவில் உண்ணவேண்டும். படுக்கும்போது ஒருக்கணித்து படுக்க வேண்டும்.உறக்கத்தில் மாறி படுத்தால் பரவாயில்லை, ஆனால் படுக்கப் போகும்போது, ஒருக்களித்தே படுக்கவேண்டும்.

அரிய மருந்து – கற்பூரவல்லி தைலம் :
இப்படி ஒரு மோசமான, குடும்பத்தைப் பாதித்த குறட்டையை, நிம்மதியைக் கெடுத்த குறட்டையை நாம் அதிக செலவில்லாமல் விரட்டலாம், வருகிறீர்களா? உடனே விரட்டுவோம்.
மிக எளிமையான மருந்துதான்,ஆனால் வீரியம் அதிகம்.நாட்டுமருந்து கடைகளில், ஓமத்தைலம் அல்லது கற்பூரவல்லித்தைலம் என்று சிறிய பாட்டிலில் கிடைக்கும் . அதனை வாங்கிக் கொள்ளுங்கள்.

பச்சைக் கற்பூரம் :
அந்த தைலத்துடன், சிறிது பச்சைக்கற்பூரம் சேர்த்து,சிறிதளவு விரலில் எடுத்து, குறட்டை விடும் நபரின் மூக்கில் அல்லது வாயின் வழியே செல்லும் சுவாசத்தில் வைக்க, அந்தத்தைலம் சுவாசத்தின் வழியே உள்ளே செல்லும், செல்லும்போதே ஆக்சிஜன் பற்றாக்குறையால் தடைபட்ட சுவாசத்தை அதிவிரைவில் சரிசெய்யும்,. இதுபோல சில முறை செய்துவர, நிமிடத்தில் குறட்டை நீங்கும்.
குறட்டை விடுபவரும் சிரமமின்றி மூச்சு விட்டு சுவாசிப்பது,அவரின் அமைதியான முகத்தின் வழியே அறியலாம். மேலும், இந்தத் தைலத்துடன் சிறிது மின்ட் ஆயிலும் சேர்த்து உபயோகிக்கலாம், மருந்தின் காரத்தன்மையை குறைந்து, குளுமையுடன் செயலாற்ற வைக்கும்.
சில தினங்களில், குறட்டை விடுபவரின் சுவாசம் சீராகி,அமைதியாக உறங்குவார், அவர் மட்டுமா, அவரின் குடும்பத்தாரும்தான்.

கவனிக்க வேண்டியவை :
இதிலே மிக முக்கியம், உங்கள் விரல் தப்பித்தவறி, அவரின் மூக்கின்மீதோ அல்லது வாயிலோ பட்டுவிட்டால், குறட்டை விடுபவருக்கு, அது அதிக எரிச்சல் கொடுக்கும்.
அவர் தூக்கம் கலைந்து, உங்களை சத்தமிட்டு, பின் சண்டையின் இறுதியில், பொறுமையிழந்து நீங்கள் அவரைத் தேவை இல்லாமல் அடித்து, உறங்க வைக்க வேண்டியதிருக்கும், எதற்கு பாவம், போகட்டும் விட்டுவிடுங்கள், விரைவில்தான் அவர் குறட்டை நீங்கி நீங்களும் நிம்மதியடைப்போகிறீர்களே,
எனவே, அவரின் உடலில் படாமல் சிறிதளவு இந்தத்தைலத்தை சுவாசத்தில் வைத்து, அவர் குறட்டையிலிருந்து குணமடையச் செய்யுங்கள். நீங்களும் நன்கு உறங்கி நலம் பெறலாம்.
இன்றே தொடங்குங்கள், நீங்கள் அதிசயமடைவீர்கள். மிக விரைவில் குறட்டை நீங்கும், நிரந்தரமாக!
 




S Lavanya

நாட்டாமை
Joined
Jan 29, 2018
Messages
96
Reaction score
141
Location
chennai
/////நீங்கள் அவரை தேவை இல்லாமல் அடித்து, உறங்க வைக்க வேண்டி இருக்கும்///// இது வேறயா????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top