குறுநாவல் போட்டி- அறிவிப்பு

Premalatha

General
SM Team
#22
குறுநாவால் குத்தும் குறுமனத்தார் நாணக்
குறுநாவல் போட்டி குடுத்தீர் - குறுகாப்
பெருமனத் தோடு புரியும் செயல்கள்

சிறந்தோங்கும் பாரில் செழித்து!

:):)(y)(y)(y)
இது ரொம்பவே நல்லா இருக்கு... ப்ரோ😍😍
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#24
Super bro....👌👌👌neengal SM site il iruppathil enakkor perumai bro😍😍😍😍
ஆம், எஸ்.எம். ஸைட்டில் இருப்பதில் எனக்கும் பெருமையே 😀😀👍👍

சத்தளத்தில் வாழும் சரஸ்வதியும் வெண்மைமிகு
நித்திலத்து நீள்கடல்வாழ் தேவியும் - சத்தியுமாய்
முத்திறத்த பெண்கள் முறுவலுடன் வாழ்கின்ற

இத்தளத்தில் வாழ்தல் இனிது!

(சத்தளம் - சத்+தளம் - பிரம்மாவின் சத்யலோகம்; பிரம்மாவின் நாக்கு என்றும் பொருள்கொள்ளலாம்; நித்திலம் - முத்து; சத்தி (சக்தி) - உமை (பார்வதி))
 
#26
ஆம், எஸ்.எம். ஸைட்டில் இருப்பதில் எனக்கும் பெருமையே 😀😀👍👍

சத்தளத்தில் வாழும் சரஸ்வதியும் வெண்மைமிகு
நித்திலத்து நீள்கடல்வாழ் தேவியும் - சத்தியுமாய்
முத்திறத்த பெண்கள் முறுவலுடன் வாழ்கின்ற

இத்தளத்தில் வாழ்தல் இனிது!

(சத்தளம் - சத்+தளம் - பிரம்மாவின் சத்யலோகம்; பிரம்மாவின் நாக்கு என்றும் பொருள்கொள்ளலாம்; நித்திலம் - முத்து; சத்தி (சக்தி) - உமை (பார்வதி))
😄😄😄😄😄😄
அதுக்கும் ஓர் கவியா...😲😍😍😍😄😄😄👌👌
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#27
ஹாய் மக்களே

ஜூலை 15 ஆம் தேதி நம் தளத்தில் நடைபெறும் குறுநாவல் போட்டி முடிவடைகிறது. கதைகளை முடிக்காதவர்கள் விரைவில் முடிக்கவும். ஜூலை ஒன்பதாம் தேதி voting ஆரம்பிக்கிறது. ஜூலை பதினான்காம் தேதி முடிகிறது. ஜூலை பதினைந்தாம் தேதி குறுநாவல் போட்டி முடிவுகள் வெளியாகும். இந்த முறை முழுக்க முழுக்க voting கை மையப்படுத்தி மட்டுமே முடிவுகள் இருக்கும். அதனால் வாசகர்கள் உங்களுக்கு பிடித்த நாவலுக்கு உங்களது பொன்னான வாக்குகளை தந்து வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். வாழ்த்துகள் எழுத்தாளர்களே!

அநியாயத்துக்கு நாம யார் யாரையோ கலாய்க்கறதுக்காக ஆரம்பிக்கப்பட்ட போட்டிதான். ஆனாலும் அதில் அவ்வளவு அழகா ஒவ்வொருத்தரும் பங்களிப்பை தந்திருக்கீங்க. வாழ்க வளமுடன். நாம் மற்றவர்களை கலாய்க்க முடிவு செய்தாலும் constructive வாத்தான் செய்வோம் மக்களே. பதினைந்தாம் தேதி முடிவு வெளியானவுடன், இருபதாம் தேதி இன்னொரு அறிவிப்போடு வருகிறோம். காத்திருங்கள் மக்களே!
@smteam voting dates maathitteengalo?
 

Advertisements

Latest updates

Top