குறுநாவல் போட்டி- முடிவுகள்

#1
ஹாய் மக்களே

வெற்றிகரமாக குறுநாவல் போட்டி முடிந்து விட்டது. உடன் பயணித்து ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.

ஜாலியா ஆரம்பிச்சு ஜாலியாவே போன போட்டி. பல எழுத்தாளர்கள் அவர்களது way of writing கை விட்டு, நகைச்சுவையை கையிலெடுத்தார்கள். அதற்கு நான் நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன். எழுத்தாளர்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் இவ்வளவு பெரிய வெற்றியை இந்த போட்டி பெற்றிருக்காது. அதிலும் வோட்டிங்க் ஆரம்பித்த பின் தான் எங்களை நகம் கடிக்க வைத்தார்கள் வாசகர்கள். பல நேரங்களில் close calls என்பதை போல neck to neck போட்டி. முதலில் ஒருவர் முன்னணியிலிருக்க, அடுத்து இன்னொருவர், அதற்கடுத்து இன்னொருவர் என்று மாற்றி மாற்றி இதயத்துடிப்பை எகிற வைத்து விட்டது இந்த வோட்டிங்க். ஆனாலும் மிக சுவாரசியம். முதலிலேயே சொன்னதை போல வாசகர்களின் தீர்ப்பே இறுதி தீர்ப்பு. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு ஓட்டு போட்டு கதைகளை தேர்ந்தெடுத்த வாசகர்களுக்கு நன்றி.

தேடலில் ஒரு சிறு குறை எனக்கிருந்தது. நல்ல கதைகளை வாசகர்கள் படிக்கவில்லையே என்று! ஆனால் இந்த முறை அப்படி அல்ல. வாசகர்கள் மிகவும் ஆர்வமாக அத்தனை கதைகளையும் படித்து வாக்களித்து இருக்கிறார்கள். ஒவ்வொரு கதையை பற்றியும் ஆர்வமாக பேசுகிறார்கள். புதிய எழுத்தாளர்கள், பழையவர்கள் என்று அவர்களுக்கு பாகுபாடில்லை.

அது போல எழுத்தாளர்களுக்குள்ளும் ஆரோக்கியமான போட்டி, மிக நல்ல விஷயமல்லவா. கண்டிப்பாக ஒவ்வொருவரையும் பாராட்ட வேண்டும்.

இப்போது முடிவுகளுக்கு வருவோம்.

மொத்தம் 1188 பேர் வாக்களித்து இருக்கிறார்கள். இது கூகிள் voting. என்னை தவிர வேறு யாரும் access செய்ய முடியாது. நானே நினைத்தாலும் வோட்டுக்களின் எண்ணிக்கையை கூட்டியோ குறைத்தோ காட்ட முடியாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் பங்களிப்பு மட்டுமே.

ஒருவருக்கு மூன்று ஓட்டுகள். அதாவது மூன்று ஓட்டுகள் வரை போடலாம். மோனிஷாவுடையது மட்டும் என்னுடைய தவறால் டெலீட்டாகி மீண்டும் சேர்க்கபட்டது. அதனால் அவருடையது மட்டும் இரண்டு என்ட்ரி இருக்கும். மற்றவை அனைத்தும் வெளிப்படையாக உங்களது பார்வைக்கு வீடியோவாக!

380 ஓட்டுக்கள் வாங்கி தென்றலின் கெட்டிமேளம் முதலிடம் பிடித்து இருக்கிறது.

310 ஓட்டுகள் வாங்கி அழகியின் ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது.

293 ஓட்டுகள் வாங்கி மோனிஷாவின் யாரடி நீ மோகினி மூன்றாவது இடம் பிடித்திருக்கிறது.

வெற்றி பெற்ற தென்றலுக்கு வாழ்த்துகள். அவருக்கு ஒரு செல்போன் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.இரண்டாமிடம் பெற்ற அழகிக்கும், மோனிஷாவுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

பங்கு பெற்ற அனைவருக்கும் எம்எஸ் பதிப்பகத்தின் புத்தகங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

 
Last edited:

karthika manoharan

Author
Author
SM Exclusive Author
#6
வெற்றி பெற்ற தென்றல் மா வாழ்த்துக்கள்... கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுகள். (என்னையும் சேர்த்து:p) மீண்டும் அடுத்த போட்டியில் இணையலாம் .
 

அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#9
வெற்றி பெற்ற தென்றலுக்கு அழகியின் வாழ்த்துகள்.????
எஸ் எம் தளத்தில் மேலும் இது போல பல வெற்றிகள் காண வாழ்த்துகிறேன்.
தென்றலின் 'கெட்டி மேளம்' நான் விரும்பிப் படித்த கதைகளில் ஒன்று. நல்ல கதையைத் தெரிவு செய்வதில் எனது வாக்கும் பயன்பட்டிருப்பதை நினைத்து மகிழ்ச்சி.
வாழ்த்துகள் தென்றல்.?????
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top