குவாண்டம் எனும் கடல்- (அணு உலகிற்குள் ஓர் ஆய்வு பயணம் quantum theory)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
158
Reaction score
15
Points
18
Location
Coimbatore
பாகம் 11: ஊடுருவும் கலை

குவாண்டம் உலகில் நிறைய சொற்தொடர்கள் கோட்பாடுகள் கருத்துகள் பிரபலமானவை.

அவற்றில் ஒரு பூனையும் அடக்கம். அது ஒரு நிஜ பூனை கிடையாது அது ஒரு கற்பனை பூனை. அதன் பெயர் Schrödinger's cat. இரும்பு அடிக்கும் இடத்தில ஈ க்கு என்ன வேலை? குவாண்டம் கடலில் பூனைக்கு என்ன வேலை? கொஞ்சம் தள்ளி அதைப் பற்றிச் சொல்கிறேன். முதலில் குவாண்டம் டனலிங் என்பதை பார்த்து விட்டு வந்துவிடலாம்.

ரேடியோ ஆக்டிவிட்டி கதிரியக்க பொருட்களை முதலில் கண்டு கொண்டவர் Henri Becquerel என்பவர் ஆவார். இவர் 1896 யிலேயே இதைக் குறித்து கண்டு பிடித்தார். அதன் பின் வந்த மேரி கியுரி அம்மையாரும் அவருடைய இணை... துணை பியூரி கியூரி அவர்களும் பின்னாளில் 1903 இல் நோபல் பரிசு வாங்கும் அளவு அதில் ஆராய்ந்தார்கள்.

குவாண்டமின் பல நிகழ்வுகளை விளக்கக் கதிரியக்க பொருள் எனும் ஆய்வு அடித்தளமாக இருந்து பயன்படுகிறது என்று முன்பே குறிப்பிட்டேன் அப்படிபட்ட ஒன்று தான் quantum tunneling என்ற நிகழ்வு.

Tunneling என்றால் ஒன்றும் அல்ல, தடையைத் தாண்டிச் செல்லும் நிகழ்வு. அதாவது ஒரு அறையில் உங்களை அடைத்து வைத்தால் நீங்கள் பேய் அல்லது ஆவிபோலச் சுவற்றை ஊடுருவித் தப்பித்து சென்றால் எப்படி இருக்கும் அதான் குவான்டம் டனலிங்...

எலெக்ட்ரானால் சில தடையைத் தாண்டிச் செல்ல முடியும் என்பதை கதிர்வீச்சு பொருட்களிலிருந்து கண்டுகொண்டார்கள். எலெக்ட்ரான் ஒரு அணுவின் உட்கருவிலிருந்து வருவதே தடையைத் தாண்டித் தான். உட்கரு நியுட்ரானிலிருந்து புரோட்டான் மற்றும் எலெக்ட்ரான் பிரிந்து வருவதை கவனித்தார்கள்.

அணுவின் உட்கருவிலிருந்து ஆல்பா துகள் வெளியேறுவதை கண்ட ஆய்வாளர்கள் அது எப்படி வெளியேறுகிறது என்பதை கவனித்ததில் அவைகள் குவாண்டம் டனலிங் செய்கிறது என்பதை கண்டார்கள். நியூக்ளியஸ் இல் உறுதியான பிணைப்பிலிருந்து தப்பி வெளியேறுவது தான் கதிரியக்கம்...

கதிரியக்க பொருட்கள் கட்டுகடங்கா ஆற்றல் மூலங்கள் அவைகளிலிருந்து தொடர்ந்து ஆற்றல் வெளியேறிக் கொண்டே இருக்கின்றது.

இதில் சூரியன் ஏன் ஒளிர்கிறது என்பதற்கான காரணம் அந்தச் சாவி ஒளிந்து இருக்கிறது. உண்மையில் நட்சத்திரங்களின் ஆற்றலை அதன் செயல்படும் காரணத்தை நாம் பல வகையில் விளக்க முடியும். உதாரணமாக ஐன்ஸ்டைன் சொன்ன E =MC 2 ஒரு விடை என்றால் இந்தக் குவாண்டம் டனலிங் ஒரு விடை.

ஒரு ஹைட்ரஜன் அணுவும் இன்னோரு ஹைட்ரஜன் அணுவும் இணைந்து தான் நட்சத்திரங்கள் ஒளிர்கிறது என்று நமக்குத் தெரியும் அவைகளுக்குள் இரும்பு போன்ற நிலைத்தன்மை உடைய தனிமமாக மாறும் துடிப்பு இருக்கிறது என்று கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.

ஆனால் அந்த இணைவே குவாண்டம் டனலிங்கினால் தான் நடக்கிறது என்பது தான் குறிப்பிடதக்கது.

எப்படி??

ஒரு கூடையில் நிறைய முட்டைகள் இருப்பதை கற்பனை செய்யுங்கள். அவைகள் ஒன்றாக இருந்தாலும் அந்த முட்டைகளுக்கு உள்ளே உள்ள மஞ்சள் கருக்கள் ஒன்றோடு ஒன்று கலக்க வாய்ப்பு இல்லை அல்லவா. காரணம் மேலே உள்ள ஓடு தடையாக இருந்து அதைத் தடுக்கிறது.

ஒரு கூடையில் உள்ள முட்டைகள் ஒன்று கலப்பதே கஷ்டம் எனில் அடுத்த கூடையில் உள்ள முட்டையுடன் கலப்பது?? அது ரொம்ப கஷ்டம் தான் அல்லவா. ஆனால் அந்த வெள்ளை ஓடு என்கிற தடையை மீறி மஞ்சள் கரு வெளியேறி அடுத்த கருவுடன் இணைவதற்கு ஒப்பான செயல் தான் அணுக்கரு இணைவு. காரணம் ஒரு ஹைட்ரஜன் அணு அதன் உட்கரு தன்னை சுற்றி பின்னி வைத்திருக்கும் தடையை மீறி அதே போல அடுத்த அணு பின்னி வைத்திருக்கும் தடையை மீறி ஒன்றிணைகிறது.

அது எப்படி சாத்தியம் இல்லாத அந்தத் தடை மீறலைச் செய்கிறது என்று பார்த்தால் அதற்குக் காரணமான கோட்பாடாகச் சொல்லப் படுவது ஹேசன் பர்கின் அணுவின் ‘நிலை இன்மை’ கோட்பாடும் அணு துகளில் ‘துகள் அலை’ என்ற இரட்டை நிலை மற்றும் சூப்பர் பொசிசனும் தான்.

ஒரு எலெக்ட்ரானை நாம் அதன் இருப்பிடத்தை பார்க்க முடிந்தால் அதன் திசைவேகம் மாறிவிடும். அதே சமயம் அதன் திசைவேகத்தை அளக்க முயன்றால் அதன் இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளும் என்பதை கவனித்தார் ஹேசண்பர்க். அந்தத் திசைவேகம் அணுக்கருவில் இருக்கும் பிணைப்பைவிட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்தத் துகள் குவாண்டம் டனலிங் செய்து விடும் என்று தெரிவித்தார்.

குவாண்டம் டனலிங் நிறைய இடங்களில் பயன்படுகிறது. சூரியன் ஒளிர்தல் போன்ற பிரமாண்ட பயன்பாடு தொடங்கி டனல் டையோடு (tunnel diode) போன்றவற்றிலும் பயன் படுகிறது.

ஒரு அணுவில் நிறைய நிறைய ஸ்பேஸ்... இடைவெளிகள் வெற்று வெளிகள் இருக்கின்றன என்று ஆரம்ப அத்தியாயங்களில் பார்த்தோம். அது ஏன் அப்படி அவ்வளவு வெளி இருக்கிறது என்பதற்கான பதிலும் இந்தக் குவாண்டம் டனலிங் தான் தருகிறது.

மின்காந்தத்தின் விலக்கு விசை ஒரு பக்கம் அணுக்கருவில் வலுவான பிணைப்பு மறுபக்கம் இவற்றைச் சமாளிக்க எலக்ட்ரானுக்கு இந்தளவு வெளி தேவை படுகிறது.

சரி அந்தப் பூனை கதைக்கு வருவோம்.

1935 இல் Schrödinger என்பவர் இந்த thought experiment ஐ... இந்த cat experiment ஐ பற்றிச் சொன்னார். அதனால் தான் இந்த ஆய்வுக்குப் பெயரே Schrödinger's cat.

இந்தக் கோட்பாடு எலெக்ட்ரான்களின் சூப்பர் பொசிசன் மற்றும் இரட்டை தன்மை மற்றும் நிலையற்ற தன்மை இவற்றை அடிப்படையாகக் கொண்ட இவற்றை விளக்கக்கூடிய ஒரு கற்பனை ஆய்வு.

அந்த ஆய்வைப் பற்றி விரிவாக அடுத்த பாகத்தில் சொல்கிறேன்.
 
SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
158
Reaction score
15
Points
18
Location
Coimbatore
பாகம் 12 : பெட்டியில் ஒரு பூனை


ரிலேடிவ் என்னும் சிக்கலான கோட்பாடை நம்மைப் போலப் பாமரனுக்கு விளக்க ஐன்ஸ்டைன் ஒரு கதை சொன்னார் நியாபகம் இருக்கா? அதாவது ஒருவன் காதலியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது பல மணிநேரம் கூட நொடி பொழுதுபோலத் தோன்றும் ஆனால் அவனை ஒரு சூடான அடுப்பில் உட்கார வைத்தால் அவனுக்கு ஒவ்வொரு நொடியும் பல மணி நேரம்போலத் தோன்றும் என்று.

இவரைப் போலத்தான் குவாண்டம் ஐ புரியவைக்கிறேன் விளக்குகிறேன் என ஒருவர் ஒரு கதை சொன்னார். ஒரு பெட்டியில் ஒரு பூனையை வைத்து விட்டால் அந்தப் பெட்டியை நீங்கள் திறந்து பார்த்தால் அந்தப் பூனை உயிரோடு இருக்கும். ஆனால் அதை மூடி வைத்தால் குவாண்டம் கொள்கை படி உள்ளே அந்தப் பூனை ஒரே நேரத்தில் உயிரோடவும் செத்தும் இருக்கும் என்றார்.

(அட போயா இவ்ளோ நாளா புரிந்தது கூட இப்ப உன் விளக்கத்தைக் கேட்டபிறகு புரியாம போய் விட்டது= மக்கள் மைண்ட் வாய்ஸ் அநேகமா.....)

விஷயம் இது தான் ...

ஒரு தப்பி செல்ல முடியாத ஸ்டீல் பெட்டிக்குள் ஒரு பூனையை அடைத்து வைத்து விட வேண்டியது. அந்தப் பாக்ஸ் இல் ஒரு மூலையில் கதிரியக்க தன்மை கொண்ட ஒரு பொருளை வைக்க வேண்டியது. அது ஒரு ஒற்றை அணு.
இப்போது அந்தப் பொருள் கதிரியக்கத்தை வெளியிட்டால் அந்தப் பூனை இறந்து விடும். அப்படி கதிரியக்கம் வெளிப்படாமலும் போகலாம் அதாவது கதிரியக்கம் வெளிப்பட வாய்ப்பு 50 / 50 சத வாய்ப்பு என வைத்துக் கொள்ளுங்கள் (இதுக்கு நேராவே அந்தப் பூனையைக் கொன்னுட்டு போகலாமே) இப்படி அந்தப் பாக்ஸை மூடி வைத்தால் அந்தப் பூனை உள்ளே உயிரோடு இருக்குமா அல்லது இறந்து போய் இருக்குமா? அதான் கேள்வி.

இதென்ன கேள்வி இருந்தாலும் தான் இருக்கும் இல்ல இறந்தாலும் தான் இறக்கும் அதான் கதிரியக்கத்திற்கு 50 /50 வாய்ப்பு னு சொன்னிங்களேயென நீங்கள் சொல்லலாம். ஆனால் Schrödinger என்ன சொல்றாப்டினா. அந்த ஒற்றை கதிரியக்க அணு பெட்டியின் உள்ளே கண்காணிக்க யாரும் இல்லாதபோது துகள் அலை எனும் இரட்டை நிலையில் சூப்பர் பொசிசனில் இருக்கும் என்பதால் அந்தப் பூனை குவாண்டம் உண்மை படி உயிரோடவும் அதே நேரத்தில் இறந்தும் இருக்கும். ஆனால் பெட்டியை நீங்கத் திறந்து கண்காணித்தால் அந்தப் பூனை ஒன்னு உயிரோடு இருக்கும் அல்லது இறந்து இருக்கும்.

இது அபத்தமாகத் தோன்றினாலும் பூனை அளவு பெரிய உருவத்தில் இந்த நிகழ்வை உணர்வது கடினம் தான் என்றாலும் அணு அளவில் பார்க்கும்போது குவாண்டம் தியரி படி ஒரு வேலை அந்தப் பூனை குவாண்டம் துகள் அளவில் இருக்குமேயானால் அது ஒரே நேரத்தில் இறந்தும், உயிரோடவும் தான் இருக்கும்.

அப்புறம் சொல்ல மறந்துட்டேன் இந்தப் பூனை எஸ்ஸ்ப்ரிமெண்டை செய்து பார்க்க விரும்பினால் முதலில் பீட்டா அமைப்பினருக்கு தெரியாம பார்த்துகோங்க...

குவான்டம் பற்றி நமக்கு எது புரிந்ததோ இல்லையோ ஒரு விஷயம் மிக நன்றாகப் புரிந்து இருக்கும். அதாவது குவாண்டம் இயற்பியல் என்பது நாம் அன்றாடம் காணும்...அனுபவிக்கும்... உணரும் இயற்பியலை விட முற்றிலும் மாறுபட்டது.
சின்ன வயதில்" ஆலிஸ் இன் வண்டர்லேண்ட் (Alice in wonderland) உங்களில் எத்தனை பேர் பார்த்து இருகிறீர்கள்? ஆலிஸ் அந்தக் குட்டி பெண் அவ்வபோது ஒரு அதிசய உலகிற்கு சென்று வருவாள். அங்கே எல்லாமே விசித்திர அறிவியலாக இருக்கும்.
அங்கே தண்ணீர் மேலே இருந்து கீழே வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. அங்கே நீர் கீழே இருந்து மேலே கூடப் போகலாம். அதில் ஒரு முயல் கதாபாத்திரம் வரும் அதனுடைய கடிகாரம் மட்டும் மிக வேகமாக ஓடிக் கொண்டே இருக்கும். மரத்தில் ஒரு முறை ஒரு பூனை ஆலிஸ் ஐ பார்த்துச் சிரிக்கும் பிறகு படி படியாக மறையும். முதலில் கால்கள் பிறகு காது பிறகு உடம்பு என்று… பின் ஒரு கட்டத்தில் அந்தரத்தில் பூனை முற்றிலும் மறைந்து விட்டு இருக்க வெறும் சிரிப்பு மட்டும் மிச்சம் இருக்கும். பூனையே இல்லாத வெறும் சிரிப்பு எப்படி சாத்தியம் அது எந்த லாஜிக்கை கொண்டதை?

குவாண்டம் உலகம் என்பதும் அந்த ஆலிஸ் சென்று வரும் அதிசய உலகம்போலத் தான். குவாண்டம் சொல்லும் உண்மைகள் கிட்ட தட்ட பூனை இல்லாத வெறும் சிரிப்புபோலத் தான். (என்ன...இந்தப் பாகத்துல ரெண்டு பூனை வந்துடிச்சே) இங்கே நம்முடன் பொருந்தாத அறிவியல்கள் ஏராளம்.
அதில் சில குவாண்டம் ரெண்டு வரி உண்மைகளை இப்போது சொல்கிறேன் கேளுங்கள்.

🌑 எல்லா இடத்திற்குமான ஒரே சீரான இயக்கம் என்பது சாத்தியம் இல்லை. ஒரே திசையில் எப்போதும் நகரும் ஒன்று (உதாரணம் கடிகார முள்)அதற்க்கு நேர் எதிர் திசையில் சிறிது நகரும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது.

🌑 'கச்சிதமான கடிகாரம்' என்பது சாத்தியம் இல்லை. நேரம் என்பதே ஒரு குவாண்டம் இயக்கம் தான். அது எப்போதும் சிறிது பிழையைக் கொண்டது கச்சிதமாக நேரம் கணக்கிடுவது சாத்தியம் இல்லை

🌑கச்சிதமான அளவீடுகள் சாத்தியம் இல்லை. குவாண்டம் உலகில் அளவீடுகள் எப்போதும் துல்லியம் குறைவாக அல்லது பிழை உடனும் தான் காண படும் கச்சித அளவீடுகள் சாதியம் இல்லை

🌑இங்கு ஆய்வாளரே ஆய்வு பொருளில் ஒரு அங்கம்.
அளப்பதற்கு அவர் நிச்சயம் நுண் அளவில் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவரால் இயக்கத்தையோ இருப்பிடத்தையோ அளவிட முடியாது.

🌑குவாண்டம் படி ஒளியை மிஞ்சும் சாத்தியம் உள்ளது. அதை டைக்கான் எனக் குவான்டம் கணித்துள்ளது.

🌑 குவாண்டம் துகளால் காலத்தில் பின்னோக்கி செல்ல முடியும். Double slit ஆய்வில் கண்காணிக்க படும் அலை மீண்டும் கடந்து காலத்துக்கே அதாவது தங்கள் மூலத்திற்கு திரும்பிச் சென்று துகள் வடிவில் வெளி படுகின்றன.

🌑 இயற்கையில் நிலையான என்று ஏதும் இல்லை

🌑 எல்லா பொருளுமே சுழல கூடியவைதான். குவாண்டம் உலகில் சுழலாத பொருள் என்று ஏதும் இல்லை… எல்லா புள்ளிகளும் சுழற்சியை மேற்கொள்பவை தான்.

🌑வெற்று வெளி என்று நாம் சொல்வது. நிஜமாக ஒன்றும் அற்றது அல்ல. அது பல வித ஆற்றலை உட்கொண்டுள்ளது.

இப்படி குவாண்டமின் அதிசயங்கள்… உண்மைகள் ஏராளம்...
அதில் குவாண்டம் என்டேங்கள்மெண்ட் (quantum entanglement) என்ற அதிசய அபூர்வ நிகழ்வைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
நாம் இதற்க்கு முன் பார்த்த குவாண்டம் சூப்பர் பொசிஷன் மற்றும் குவாண்டம் டனலிங் இவை இரண்டையும் விட அதிக விசித்திரத்தை கொண்டது குவாண்டம் entanglement.
 
SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
158
Reaction score
15
Points
18
Location
Coimbatore
பாகம் 13 : குவாண்டம் MGR

உங்களுக்கு Spoky action என்றால் என்ன என்று தெரியுமா?
இந்த வார்த்தையை ஒரு மிகப் பெரிய சைன்டிஸ்ட் பயன்படுத்தியதை தொடர்ந்து குவாண்டம் உலகில் இவ்வார்த்தை மிகப் பிரபலம் ஆகி விட்டது. யார் அந்த விஞ்ஞானி எதற்கு அதைச் சொன்னார்?
சொல்கிறேன்.

ஒரு வண்ணத்து பூச்சியின் வண்ணங்களை ரசிக்கிறீர்கள் அல்லது ஒரு இலையின் பசுமையை. இவை களின் நிறம் ஒரு குவாண்டம் விளைவு என்பதை அறியுங்கள்.

ஒரு இலை பச்சையாக இருப்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு இலை சிகப்பு நிறத்தை உட்கிறகிக்கிறது. அதற்க்கு குறைவான அலைநீலம் கொண்ட நீல நிறத்தையும் உள்வாங்குகிறது. ஆனால் பச்சையை மட்டுமே பிரதி பலிக்கிறது. உயரே சிகப்பையும் கீழே நீலத்தையும் விட்டு விட்டு நடுவே பச்சை மட்டும் ஏன் பிரதிபலிக்கிறது. ? அதான் குவாண்டம் விளைவு.

நீங்கள் உலகில் பார்க்கும் உருவங்கள் எல்லாமே குவாண்டம் விளைவுகள் தான்.

பல விசித்திர நிகழ்வுகள் மட்டும் அல்ல பல சாதாரண அன்றாடம் நாம் காணும் நிகழ்வுகள் எல்லாம் கூடக் குவாண்டம் நிகழ்வுகள் தான். ஆனால் அடுத்ததாக நான் சொல்லப் போகும் நிகழ்வு ஒரு சாதாரண நிகழ்வு அல்ல அது மிக விசித்திரமான ஒன்று. அதன் பெயர்

"Quantum entanglement "​

நீங்கள் பழைய MGR படம் நீரும் நெருப்பும் பார்த்து இருப்பீர்கள். அதில் இரட்டை சகோதரர் வேடத்தில் MGR நடித்து இருப்பார். அதில் ஒரு MGR க்கு அடித்தால் பல கிலோ மீட்டர் தள்ளி உள்ள MGR க்கு வலிப்பதை போலக் காட்டி இருப்பார்கள். ஒரு பேச்சுக்கு அந்த MGR ஐ ஒரு குவாண்டம் துகளாக வைத்துக் கொண்டால் மேலே சொன்ன நிகழ்வு தான் குவாண்டம் என்டேங்கல்மெண்ட்.

ஒன்றோடு ஒன்று இனம் காண முடியாத பிணைப்பில் பிணைந்து இருக்கும் இரு துகள்களில் நடக்கும் விசித்திரம் இது. இதில் ஒரு துகளை நீங்கள் சீண்டினால் அது அடுத்த துகளில் எதிரொலிக்கும்.
உதாரணமாக ஒரு துகளை நீங்கள் வலது பக்கமாகச் சுழற்றினால் அதே கணத்தில் அந்த ஜோடி துகள் இடது பக்கமாகச் சுற்று கிறது. இந்தத் துகளின் ஸ்டேட்டஸை நீங்கள் மாற்ற முயன்றால் அடுத்த துகளில் நிலை உடனே மாறிவிடும்.

என்ன ஆச்சர்யம் என்றால் அந்த இன்னொரு துகளை நீங்கள் பல மீட்டர் தள்ளி வைத்தாலும் அது வேலை செய்யும். பிறகு பல கிலோ மீட்டர் வைத்தாலும் இது நடக்கும். கடைசியா பல ஒளி ஆண்டுத் தொலைவு கொண்டு போய் வைத்தாலும் இது வேலை செய்கிறது. அல்லது பிரபஞ்சத்தின் வேறொரு முனையில் கொண்டு போய் வைத்தாலும் அருமையாக வேலை செய்கிறது.

முதல் முதலில் இதை ஆரம்பித்து வைத்தவர் ஐன்ஸ்டைன் தான் என்பது ஆச்சர்யமான விஷயம். ஏன் ஆச்சர்யம் என்றால் அவரே இதைக் கடைசி வரை நம்ப வில்லை என்பதால் தான்.

1935 இல் ஐன்ஸ்டைன் EPR paradox என்ற ஒன்றை பற்றிக் கலந்துரையாடல் செய்தவண்ணம் இருந்தார். இது ஐன்ஸ்டைனின் கருத்து தவிர boris podolsky மற்றும் nathan rosen என்ற இருவரின் கருத்துகளையும் உள்ளடக்கிய ஒரு ஆய்வு. (Einstein, Podolsky, Rosen paradox என்பதன் சுருக்கம் தான் இந்த EPR) இவர்கள் ஆய்வின் நோக்கம் குவாண்டம் மெக்காணிசம் சொல்லும் உண்மைகள் முழுமையானவை அல்ல என விளக்குவதே.
அவர்கள் entanglement என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்க வில்லை.

EPR பேப்பர்களை தொடர்ந்து வந்த Erwin Schrödinger என்பவர் (பெயர் எங்கயோ கேள்வி பட்ட மாதிரி இருக்கா ? அட கடந்த அத்தியாயத்தில் பூனை கதை சொன்னாரே அவர் தான் பா) ஐன்ஸ்டைனுக்கு ஜெர்மன் மொழியில் எழுதிய entanglement என்பதை மொழிபெயர்த்துக் குறிப்பிட்டு இருந்தார். EPR experiment இல் இரண்டு துகள்களுக்கு இடையிலான தொடர்பைப் பற்றிக் குறிப்பிட்ட்டு இருந்தார். ஆனால் அவரும் ஐன்ஸ்டைனை போலவே entanglement இல் திருப்தி இல்லாதவராக இருந்தார் காரணம் இரு துகள் இடையே தகவல் பரிமாற்றம் ஒளியை விட வேகமாகச் செல்வதை ரிலேட்டிவ் அனுமதிப்பதில்லை என்பதால். ஆனால் பின்னால் வந்த ஆய்வுகள் நிரூபித்தது வேறாக இருந்தது.
 
SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
158
Reaction score
15
Points
18
Location
Coimbatore
பாகம் 14 : ஸ்பூக்கி ஆக்ஷன்


கடந்த பாகத்தில் சொல்லிக் கொண்டிருந்த ஆச்சர்யத்தை தொடரலாம்....

ஒரு துகளை நாம் அளக்க முயன்றால் அந்தச் செயலே துகளில் நிலையைப் பாதிக்கும் என்று முன்பே சொன்னேன்.

குவான்டம் துகள்கள் பொதுவாகச் சுழற்சியில் இருக்கும்போது எந்தத் திசையில் அவை சுழலுகின்றன எனக் கணிப்பது கஷ்டம்.

அது ஒரே நேரத்தில் கடிகார முள் நகரும் திசையிலும் அதே நேரத்தில் அதற்க்கு எதிர் திசையிலும் ஒரே நேரத்தில் சுழல கூடியது. மேலும் எந்த அச்சை மையமாகக் கொண்டு சுழல்கிறது என்று காண்பதும் கடினம்.

அந்தளவு தாறுமாறாகச் சுழல கூடியவை அவை. அது மட்டும் அல்ல அளப்பவர் தான் அதன் தன்மையையே நிர்ணையிக்கிறார். ஒருவர் அதைக் கிடைமட்டமாக அளக்க முயன்றால். அது மேலும் கீழும் என அச்சை அடைகிறது. மாறாக யாரவது அதைச் செங்குத்தாக அளக்க முயன்றால் அது வலது இடதாக அச்சை மாற்றிக் கொள்கிறது. சரி என்று அதன் போக்கிற்கு விட்டுப் பிடித்து ஒரு துகளை அளந்து ஆய்ந்து பார்த்தால் உடனே அந்த இன்னொரு துகளும் தனது நிலையை மாற்றிக் கொள்கிறது.

அதுவும் முன்பு சொன்னது போல எவ்ளோ தூரமாக இருந்தாலும்.

காலத்திற்கும் இதை ஐன்ஸ்டைன் நம்ப வில்லை. பிரபஞ்சத்தில் எதனாலும் ஒளியின் வேகத்தை மிஞ்ச முடியாது என்பதை உறுதியாக உலகிற்கு சொன்ன ஐன்ஸ்டைன் இரு துகள்களை இடையே தகவல்கள் ஒளியை விட வேகத்தில் கடத்த படுகின்றன என்ற கூற்றை நம்ப மறுத்தார். நீல் போர்க்கும் ஐன்ஸ்டைனுக்கும் வாக்குவாதம் நடந்த படியே இருந்தது. அதுவும் இந்த எண்டேங்கல்மண்ட் சமாச்சாரத்தைப் பொருத்த வரை இது எப்படி நடக்கிறது என்று ஐன்ஸ்டைன் ஒரு கருதுகோள் ஒன்றை சொன்னார்.

அதாவது உங்களிடமும் உங்கள் நண்பரிடமும் ஆளுக்கொரு பெட்டி கொடுக்கப் படுகிறது. இதில் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய இரு பொருட்கள் உள்ளது என்று சொல்லப் படுகிறது. உங்கள் நண்பர் அதை உலகின் வேறொரு முலைக்கு எடுத்துச் சென்று அண்டார்டிகாவில் வைத்துக் கொண்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது உங்களிடம் உள்ள பெட்டியைத் திறந்து பார்த்து உங்கள் நண்பனின் பெட்டியில் இருப்பது என்ன என்று சொல்ல வேண்டும் என்று சொன்னால் அது சாத்தியமா? அதெப்படி முடியும் சாத்தியம் இல்லை என்கிறீர்களா?

சரி இப்போது பெட்டியைத் திறந்து பார்த்த நீங்கள் அதில் ஒரு வலது கால் காலனி உள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போ உங்கள் நண்பனிடம் இருப்பது என்ன என்று கேட்டால் அவனிடம் இருப்பது இடது கால் ஷூ என்று சொல்லிவிடலாம் இல்லையா.

அப்படி தான் இரண்டு துகளுக்கும் உள்ள தொடர்பும். அதாவது விளைவுகள் முன் கூட்டியே நிர்ணயிக்கப் பட்ட அடித்தளங்களைக் கொண்டது என்றார் ஐன்ஸ்டைன். ஆனால் எல்க்ட்ரானும் எதிர் எலக்ட்ரான் என்று அழைக்கப்படும் பாசிட்றானும் கொண்டு சோதனை செய்து பார்த்தவர்கள் ஐன்ஸ்டைன் தவறு எனக் கண்டார்கள்.

நீல் போர் ஐன்ஸ்டைனின் வாதங்களைச் சந்தேகத்திற்கு இடமின்றி தவறு என ஆதாரத்துடன் நிரூபித்தார்.

கடைசியாக ஐன்ஸ்டைன் அசந்து போய் இதற்குப் பேய் தனமான ஒரு நிகழ்வு என்று பொருள் படும் படி the spooky action என்று பெயர் வைத்து அழைத்தார்.

இந்த entanglement குணாதிசயம் பல எதிர்கால சாத்தியங்களைக் கொண்டது.

குறிப்பாகத் தகவல் தொழில் நுட்பத்தில்.

கொஞ்சம் யோசித்து பாருங்கள் ஒரு துகளுக்குப் பரிமாறும் தகவல் பிரபஞ்சத்தில் வேறு ஏங்கோ உள்ள ஒரு துகளில் பிரதி பலிக்கிறது என்றால் அதைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம்.

எதிர்காலத்தில் தொலை தூர பயணம் செல்லும் விண்வெளி வீரர்களை வினாடிக்கும் குறைவான வேகத்தில் தொடர்பு கொள்ளலாம் என்றால் அது மிகப் பயனுள்ளது தானே.

மேலும் டெலி போர்டிங் அறிவியலிலும் இது எதிர்கால பங்களிப்பைச் செய்யலாம்.

Spooky action என்ன எல்லாம் செய்யும் என்பதை பொறுத்திருந்து தான் நாம் பார்க்க வேண்டும்.

குவாண்டம் நிகழ்வுகளைப் பொறுத்த வரை மரணம் என்பதே குவாண்டம் நிகழ்வு தானென வர்ணிக்கும் ஆட்களும் இருக்கிறார்கள்.
அதாவது குவாண்டம் டனலிங் பார்த்தோமே அதில் ஒன்று வேறொன்றாகப் பரிமணிக்கும் நிகழ்வுகள் தான் நடக்கிறது. ஒரு வகையில் நமது மரணம் என்பது ஆன்மா செய்யும் டனலிங் எனலாம்.

அந்த ரீதியில் ஆன்மாவுக்கு அழிவில்லை அது சட்டையை மாற்றுவதை போல உடலை மாற்றுகிறது என்று கீதை சொல்வதை உறுதி செய்வதாக வைத்துக் கொள்ளலாம்.

இதுவரை உறுதியாக நமக்குத் தெரிந்தது எல்லாம் குவாண்டமின் 'சர்வமும் நானே 'எனப் பல தளத்தில் ஒரே நேரத்தில் நிறைந்து கடவுள்போலக் கெத்து பண்ணுவது தான்.
குவாண்டமின் இந்தத் தன்மையை யாரும் ஒத்துக்கொள்ளாமல் மறுக்க முடியாது.

ஒன்றும் இல்லை நீங்கள் ரயிலில் பயணம் செயகிறீர்கள் அதன் ஜன்னல் கண்ணாடி வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வருகிறீர்கள். தீடீரென ஒரு பார்வை கோண மாற்றத்தில் அதே கண்ணாடியில் உங்கள் முகம் தெரிந்து கொண்டே வருவதை கவனிக்கிறீர்கள். ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கண்ணாடிக்குப் பின் இருப்பதையும் கண்ணாடிக்கு முன் இருப்பதையும் ஒன்றாகப் பிரதிபலிக்கும் செயல் இருக்கிறதே அது குவாண்டம் நிகழ்வு தவிர வேறு இல்லை.

கடந்த ஒரு அத்தியாயத்தில் குவாண்டம் ரெண்டு வரி உண்மைகள் சிலதை சொல்லி இருந்தேன். அதே போல இப்போது மேலும் ஓரிரண்டு ரெண்டு வரி உண்மைகள் சொல்கிறேன் கேளுங்கள்.

🌑 குவாண்டமை பொறுத்த வரை அழிவு என்பது இயற்கை விதி. அழிவில்லாத சிதைவு இல்லாத உடைதல் இல்லாத நிலைத்த ஒன்று என்று ஏதும் பிரபஞ்சத்தில் இல்லை

🌑 இரண்டு துகள்களைப் பிரித்தறிவது கடினம்.
ஓரளவுக்கே மேல் அருகே நெருங்கும் துகள்கள் மங்கலாகி பிரித்து அறிய முடியாமல் போகிறது.

🌑 அலைகள் மிக நுடப்பான அளவில் நுண்ணிய துகல்களால் ஆனவை.

🌑 பொருள் ஆற்றலாக மாறுவதை குவாண்டம் அனுமதிக்கிறது.

🌑எல்லா பொருளிலும் துகள் தன்மை அடங்கி உள்ளது. எல்லா அலைகளிலும் துகள்கள் கலந்துள்ளன.

குவாண்டமின் அதிசய உண்மைகள் நீண்டு கொண்டே செல்கிறது. வரும் பாகங்களில் மேலும் பேசலாம்.
 
SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
158
Reaction score
15
Points
18
Location
Coimbatore
பாகம் 15 : குவாண்டம் எனும் குழந்தை


குவாண்டம் தொடரில் இதுவரை நாம் அணுக்களின் குணாதிசயங்கள் மற்றும் நுண் உலகில் நடந்து கொண்டிருக்கும் அதிசய நிகழ்வுகள்பற்றி அறிந்து கொண்டோம் என்றாலும் குவாண்டம் தியரி யை யார் கண்டு பிடித்தது அதற்கான பெருமை யாருக்கு சாரும் என்பதில் இன்னும் குழப்பம் நீடிபதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

அந்தக் காரணம் என்ன வென்றால் குவாண்டம் தனி ஒருவனால் கண்டு பிடிக்கப் பட்டது என்று சொல்ல முடியாத அளவிற்கு பல பேர் வளர்த்த குழந்தை அது. இந்த அத்தியாயத்தில் குவாண்டம் வளர்ந்த விதத்தைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.

The father of quantum physics என்று நாம் max plank ஐ அழைக்கிறோம் என்றாலும் குவாண்டம் ஐ கண்டு பிடித்தவர் அவர் அல்ல.

இந்த விஷயத்தில் குவாண்டம் மின்சாரதை கண்டு பிடித்த வரலாறை போன்ற ஒன்று தான்.

மின்சாரத்தை கண்டு பிடித்தவர் யார் என்ற கேள்விக்குப் பெஞ்சமின் பிரங்களின் என்ற ஒரு விடை உண்டு உண்மையில் அவர் தாத்தாவுக்குத் தாத்தா பிறக்காத காலத்திலேயே மின் சக்தியைப் பற்றி மனிதன் அறிந்திருந்தான். பிராங்களின் செய்தது எல்லாம் உலகதார் எளிதில் அறியும் வண்ணம் சில சோதனைகளைத் தான்.

குவாண்டம் ஐ பொறுத்தவரை கண்டுபிடிப்பாளர் யார் என்று கேட்டால் குறைந்த பட்சம் 10 பெயர்களையாவது சொல்ல வேண்டி வரும்.
எனவே முக்கியமான அந்த 10 பெயர்களைச் சொல்கிறேன் குறித்து கொள்ளுங்கள். அவர்கள்.....

 1. Max Planck
 2. Albert Einstein
 3. Niels Bohr
 4. Louis de Broglie
 5. Max Born
 6. Paul Dirac
 7. Werner Heisenberg
 8. Wolfgang Pauli
 9. Erwin Schrödinger
 10. Richard Feynman

(இவற்றில் ஒரு சில பெயர்கள் நமது கட்டுரையில் ஆங்காங்கே இடம் பெற்றவை தான். மற்றவை இனி வரும் பாகங்களில் இடம் பெறலாம்.)

குவாண்டம் இன் தொடக்க புள்ளி எது என்று தெளிவாக வரையறுக்க முடியாது. 1838 இல் மைக்கேல் பேரடே கேதோடு கதிர்களைக் கண்டு பிடித்ததை தொடக்கமாக ஓரளவு சொல்லலாம். (அல்லது மேரி கியுரியை) அதனைத் தொடர்ந்து black body radiation என்ற ஒரு சிக்கலைப் பற்றி கிர்ச்சாப்ஃ என்பவர் 1859 இல் விளக்கி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து 1877 இல் boltzman என்பவர் ஆற்றல் நிலையைப் பிரித்துப் பார்க்க முடியும் என்று சொன்னார். அதே 1877 இல் heinrich hertz என்பவர் போட்டோ எலக்ட்ரிக் எபெக்ட் ஐ சொன்னார்.

அப்புறம் 1900 இல் நூற்றாண்டின் ஆரம்பத்தில் குவாண்டம் தந்தை max planck அவர்கள் quantum hypothesis களை விளக்கிச் சொன்னார்.
அவர் கூற்றுப் படி ஆற்றலைக் கதிரியக்கத்தில் வெளியிடும் எந்த அமைப்பையும் எண்களாகப் பிரித்துக் கோட்பாடாக விளக்க முடியும்.
அந்த ஆற்றல் அந்த அமைப்பு வெளியிடும் அதிர்வெண்ணுடன் தொடர்புடையது என்றார். இரண்டுக்கும் உள்ள தொடர்பை விளக்கப் பார்முலாவும் கொடுத்தார். அந்தப் பார்முலாவை நீங்கள் எடுத்துப் பாருங்கள் அதில் h என்ற எழுத்து வரும்.

அந்த h என்பது பிலாங் மாரிலி என்று அழைக்கப் படுகிறது. அது ஒரு எண். குவாண்டம் தொடர்பான அனைத்து கணக்குகளிலும் இந்த எண் பயன்படுகிறது.

அதாவது ஆற்றல் என்பது ஒரே சீராக ஓடும் நதிபோல இல்லாமல் அது உருட்டி விட்ட கோலிகுண்டுகளை போலத் தனி தனி யானது என்று புரிந்து கொண்ட பின் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை அதாவது ஒரு போட்டான் ஒரு குறிப்பிட்ட ஆற்றலைக் கையால்கிறது என்று எடுத்துச் சொல்லி அந்த அளவை... இதை மாரிலியாக வைத்து மற்றதை அளந்து கொள்ளுங்கள் என்றார். (அதாவது ஆற்றல் எப்போதும் ஒரு குறிப்பிட்ட எண்ணின் பெருக்கல் தொகையாகவே இருப்பதை பார்த்து அந்த எண்னை கண்டுகொண்டார்) அந்தக் குறிப்பிட்ட அளவு ஆற்றல் தான் பிளாங் மாரிலி h. அந்தத் தோராயமாக 6.626176 x 10-34 joule-seconds க்கு சமம்.
தெளிந்த நீரோடை போல ஓடிக் கொண்டிருந்த குவாண்டம் கதையில் சில திருப்பங்ள் கொடுத்ததில் பிளாக் க்கு முக்கிய பங்கு உள்ளது.

அதன் பின் 1905 இல் அறிவியல் உலகின் மாமேதையான ஐன்ஸ்டைன் 1905 இல் போட்டோ எலெக்ட்ரிக் எபிக்ட்டை ஆய்ந்து ஒரு கட்டுரை எழுதினார் அது இரண்டு விஷயங்களை மற்ற அறிவியலாளருக்குச் சந்தேகமின்றி உறுதி செய்தது. ஒன்று அணு என்ற ஒன்று இருக்கிறது (அதுவரை அது சந்தேகமாக இருந்தது.) இரண்டு= ஒளி போட்டான் எனும் ஆற்றல் பொட்டலங்களாகப் பரவுகிறது.

இதில் இந்த இரண்டாவது பாயிண்ட் பிளாங் கூற்றுகளுக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது.

சரி ஒரு நிமிஷம்... இந்தக் குவாண்டம் தியரியே ஏதோ நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத கதையாகவே இருக்கிறதே. இந்த அறிவியலால் நடைமுறை உலகிற்கு ஏதும் பயன் உள்ளதா?
சொல்கிறேன்.
 
SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
158
Reaction score
15
Points
18
Location
Coimbatore
பாகம் 16 : அதிரும் ஸ்பிரிங்


"quantum mechanics" என்ற வார்த்தை முதன்முதலில் Max Born, Werner Heisenberg, and Wolfgang Pauli, கொண்ட குழுவால் 1920 இல் பயன் படுத்தபட்டது. Born 1924 இல் எழுதிய பேப்பர் இல் முதல் முதலில் குறிக்க பட்டது. "

சரி இவ்ளோ சொல்றோமே இந்தக் குவாண்டம் தியரியால் என்ன லாபம் ?இதனால் அன்றாட வாழ்வில் ஏதும் பயனுள்ளதா??

குவாண்டம் தியரி நமது அன்றாட வாழ்வில் நமக்கே தெரியாத பல application இல் பயன்படுகிறது. சில உதாரணங்களை... அது பயன்படும் சில பொருட்களைப் பட்டியலிடுகிறேன்...

lasers, CDs, DVDs, solar cells, fibre-optics, digital cameras, photocopiers, bar-code readers, fluorescent lights, LED lights, computer screens, transistors, semi -conductors, super- conductors, spectroscopy, MRI scanners, இது மட்டும் இல்லை இன்னோரு மிகப் பெரிய பயன்பாடு ஒன்று எதிர்காலத்தில் கூடிய விரைவில் இருக்க போகிறது அதன் பெயர் quantum computer அதைப் பற்றி விரிவாகப் பிறகு சொல்கிறேன்.

குவாண்டமில் நாம் பல terms களை கேள்வி பட்டு இருக்கிறோம். உதாரணம் குவாண்டம் டனலிங், சூப்பர் பொசிஷன், dual ஸ்டேட்டஸ் இப்படி.

சரி Uncertainty தியரி என்றால் என்ன?
இது நாம் ஏற்கனவே பார்த்து விட்டு ஒன்று தான் அதாவது குவாண்டம் துகளில் வேகத்தை அளந்தால் அது தன் இருப்பிடத்தை மாற்றிக் கொள்கிறது. இருப்பிடத்தை அளந்தால் தனது திசை வேகத்தை மாற்றிக் கொள்கிறது என்று பார்த்தோமே அதான் இது.

இதை 1926 இல் Werner Heisenberg தான் விளக்கினார்.

(இவரை நினைவு இருக்கு தானே...கட்டுரையின் ஆரம்ப அத்தியாயங்களில் அணு அமைப்பில் எலெக்ட்ரான்கள் அர்பிட்டாளில் மேகம்போல அமைந்திருப்பதை விளக்கியவர்)

குவாண்டம் தியரியில் நீங்கள் decoherence, என்ற வார்தையை கூடக் கேள்வி படலாம். அதற்க்கு பொருள் குவாண்டம் துகள் தனது சூப்பர் பொசிசன். அல்லது இரட்டை தன்மை போன்ற சிறப்புத் தன்மைகளை இழந்து ஆய்வாளர்கள் கண்காணிப்புக்கு உட்படும் படியாக மாறி நிற்பது என்று பொருள்.

குவாண்டம் இல் quantum field theory என்ற ஒன்று உண்டு. அது என்ன என்று பார்க்கலாம்.

அனைத்தும் பொருட்களும் அனுக்களால் ஆனது என்ற புள்ளியைத் தாண்டி நாம் அனைத்து பொருட்களும் குவார்க் போன்ற சப் அடாமிக் பொருளால் ஆனது என்று பார்த்துக் கொண்டு இருக்கிறோம்… இன்னும் ஆழமாகப் பார்தால் அவைகள் வெறும் மாயை போல மேகம்போல இருப்பதைப்பார்த்தோம் அந்த மேகங்களும் எதனால் ஆனது என்று ஆராய்ந்தால். அவைகள் வெறும் field ஆல் ஆனது என்று அறியலாம். எலக்ட்ரிக்கல் பீல்ட்... மேக்னடிக் பீல்ட் போல இது வெறும் எனர்ஜி பீல்ட்.

இந்தப் பீல்ட் ஒரு உருவம் அற்ற துடிக்கும் அமைப்பு என்று சொல்லலாம்.
ஒரு புரித்தாலுக்காக இதைக் கற்பனை செய்யுங்கள். அதாவது ஸ்பிரிங் வைத்த கட்டில் அல்லது சோபாவை பார்த்து இருக்கிறீர்கள் தானே அதன் மேல் தோலை உரித்து எடுத்து விட்டால் உள்ளே ஆங்காங்கே ஸ்பிரிங் கள் நீட்டிக் கொண்டிருப்பதை பார்க்கலாம் அல்லவா? அது தான் அந்தப் பீல்ட் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த ஸ்பிரிங் மேலே கீழேயென மட்டும் நகரும் கிடைமட்டத்தில் சாயாது எனில் அதற்குப் பெயர்தான் scalar field. இதன் மதிப்பு ஒரு சிங்கிள் நம்பர் ஆக இருக்கும்.

இப்போது அந்த ஸ்பிரிங் அனைத்தையும் ஒரு மெல்லிய கம்பியால் இணையுங்கள் இப்போது ஒரு ஸ்பிரிங்கை மேலே கீழே என்று சுண்டுங்கள் இப்போது என்ன நடக்கும்.?எல்லா ஸ்பிரிங்கும் ஒன்றோடு ஒன்று கட்ட பட்டுள்ளதால் ஒன்றை சுண்டினால் அது மற்றவற்றில் ஒரு அலையை ஏற்படுத்தும் அல்லவா. அந்த அலைகள் அல்லது பீல்டின் அசைவுகள் தான் பார்டிக்ள்ஸ் என்று அழைக்கப் படுகின்றன. இவைகள் நாம் empty space என்று சொல்லும் இடத்திலும் நிரம்பி இருப்பதால். வேற்று வெளி என்பது நிஜத்தில் ஒன்றும் இல்லாத வெளி அல்ல அது பல ஆற்றல்கள் அடங்கிட வெளி என்று அறிய முடிகிறது.

எனவே அணைத்து படைப்புகளும் கடைசியில் வெறும் அதிர்வில் முடிய அந்தக் கடைசி துளியை ஒற்றை பரிமாண இழையெனக் கொண்டால், அதனை விளக்க உருவான கோட்பாடு தான் இழை கோட்பாடு ஆதாவது ஸ்ட்ரிங் தியரி.
 
SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
158
Reaction score
15
Points
18
Location
Coimbatore
பாகம் 17 : குவாண்டம் தந்தை

கடந்த பாகத்தில் ஓரளவு அறிமுக படுத்தி இருந்த max plank அவர்களைக் கொஞ்சம் விரிவாக அறிமுக படுத்தி வேண்டிய நேரம் இது. இவர் ஒரு ஜெர்மன் தியாரிட்டிகள் பிஸிஸிஸ்ட்.

இவ்வளவு நேரமாகக் கட்டுரையில் இவர் தலை காட்டாமல் இருந்ததே பெரிய விஷயம்.

காரணம் முன்பே சொன்னேன் குவாண்டம் பிஸிக்ஸ் இன் தந்தை இவர் தான். குவாண்டம் தியரியில் மிகப் பெரிய கிரெடிட் இவருக்குத் தரவேண்டி உள்ளது. குவாண்டம் இல் அவர் செய்த வேலைகளுக்கு 1918 ஆம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்றவர் இவர். குவாண்டம் தியரியின் initial founder என்று இவரை அழைக்கிறார்கள்.

1899 இல் பிளாங்க் போட்டான் போன்ற துகள்கள் சிறு சிறு ஆற்றல் போட்டாளங்களாக வெளியேறுகிறது என்பதை கண்டவர் அதைக் கணித சமனபாடுகளாகத் துல்லியமாக விளக்க முடியும் என்பதை கண்டார். மேலும் துகள்கள் வெளியிடும் ஆற்றல் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட மாறிலி எண்ணுக்கு இன்டெகர் பெருக்கல் தொகைக்குச் சமமாக மட்டுமே இருப்பதை பார்த்தார். அந்தக் குறிப்பிட்ட எண் தான் முன்பு குறிப்பிட்ட பிளாங்க மாறிலி (plank constant) அதாவது h.

இதைப் பார்முலாவில் உட்புகுத்தி தான் இன்று வரை குவாண்டம் ஆற்றல்கள் கணக்கிட படுகின்றன. இந்தப் பிளாங் மாறிலி அதுவரை இருந்திராத பல புதிய அலகுகளை உண்டாக்க உதவியது (plank units).

உதாரணமாக plank length, plank time, plank, plank temperature இப்படி.

பிளாங் சொன்ன இந்த அலகுகளானது இயற்கையின் 5 பெரும் மாறிலியை அடிப்படையாகக் கொண்டது.

ஒன்று= வெற்றிடத்தில் ஒளியின் வேக மாறிலி.

இரண்டு = ஈர்ப்புவிதியின் மாறிலி.

மூன்று = கூலும் ஆற்றல் மாறிலி

நான்கு= போல்டஸ்மேன் மாறிலி

ஐந்தாவது = இவருடைய சொந்த மாறிலி அதாவது பிளாங்க் காண்ஸ்டண்ட்

இதை எல்லாம் இவர் தொடங்கியது எங்கே இருந்து ? கண்டு கொண்டது எங்கே இருந்து?

1894 ஆம் ஆண்டில் black body இல் இருந்து வெளியேறும் ரெடியேஷனை கவனித்த பிளாங்க் அதன் ஸ்பெக்ட்ரம் களை ஆராய்ந்து தான் இதைக் கண்டு கொண்டார் என்று சொன்னால் முதலில் black body என்றால் என்ன என்று கேட்பீர்கள்.

அது ஒன்றும் இல்லை அணைத்து நிறத்தையும் ஒளியையும் உள்ளிழுத்து கொள்ளும் ஒரு அமைப்பு தான் பிளாக் பாடி. அனைத்தையும் உட்கிறகித்து எதையும் வெளியே அனுபாததால். இந்தப் பொருட்கள் பார்க்கக் கருப்பு நிறமாக இருக்கும்.

பிளாக் பாடிகளிலிருந்து வெளியேறும் ரெடியேஷன் வெப்பமாகவும் ஒளியாகவும் வெளியேறுகிறது. அந்தக் கதிர்வீச்சுக்கள் அதன் frequencyயைச் சார்ந்தது.

சில ஆரம்ப கட்ட தடுமாற்றங்களுக்கு பின் பிளாங் தனது முதல் black body radiation law வை 1900 இல் வெளியிட்டார். இது பிளாக் பாடி கதிர்வீச்சை விளக்குகிறது என அவர் உணர்ந்தாலும். இதில் சில குறைபாடுகள் உண்டு இன்னும் இதை மெருகேற்ற வேண்டும் என உணர்ந்தார் பிளாங்க்.

அதன் பின் 1900 தின் பிற்பகுதியில் ஆற அமர மீண்டும் தனது கோட்பாடுகளை அலசிச் சரி பார்த்தபோது சில புதிய நுணுக்கமான உண்மைகளை அவர் கண்டு கொண்டார். அதாவது பிளாக் பாடி வெளியிடும் கதிர்வீச்சுக்கள் quantized form இல் மட்டுமே வெளியிடப் படுகிறது என்பதை கண்டார்.

(இந்த quantized என்பது குவாண்டம் தியரியை அடிக்கடி இடம் பெறும் வார்த்தை இதற்க்கு பொருள் கிட்ட தட்ட ''ஒரு நிர்ணயிக்கப் பட்ட'' என்ற பொருள் படும் படியான சொல் அதாவது ஏதோ ஒன்றின் maximum லெவல் நிர்ணயிக்கப் பட்டது என்றால் அது ஒரு quantized விஷயம் என்று பொருள்) வெளியிடப்படும் ஆற்றல் ஒரு பெருக்கல் தொகையாக இருப்பதை கண்டார் என்று சொன்னேன் அல்லவா.

இதைக் கொண்டு அவர் சொன்ன energy காண பார்முலா தான் E = hv

நமக்கு ஆற்றலுக்கான பார்முலா என்றாலே நினைவுக்கு வருவது ஐன்ஸ்டைனின் மூன்றெழுத்து பார்முலா தான் ஆனால் அது எங்கே என்றால் பெரிய பெரிய பிரமாண்டம், கோலகள், நட்சத்திரங்கள், வெளி போன்றவற்றிற்கு தான். ஆனால் குவாண்டம் உலகில் அதற்க்கு நிகரான பார்முலா தான் E= hv.

இதில் E என்பது energy. h என்பது நாம் முன்பே பார்த்த பிளாங் மாறிலி. v என்பது frequency.

அதாவது இந்தச் சூத்திரம் தியரி வடிவில் என்ன சொல்ல வருகிறது என்றால். ஒரு பொருளிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சில் நீங்கள் frequency ஐ கண்டு பிடித்து விடீர்கள் என்றால் அதனுடன் பிளாங் மாறிலி எண் ஐ பெருக்கினால் வரும் விடை தான் அந்தப் பொருள் வெளியிடும் ஆற்றலின் அளவு.
இந்த ஆய்வில் ஆற்றலின் quantization என்பது முழுக்க முழுக்க பிளாங்கின் யூகமாகத் தான் இருந்தது. 1905 இல் ஐஸ்டைன் வந்து தான் அதை உறுதி செய்தார்.
****​

கட்டுரையின் முதல் பாகத்திலேயே ஒரு விஷயத்தைச் சொன்னேன். குவாண்டமும் தியரி ஆஃப் ரிலேடிவிட்டி யும் ஒன்றோடு ஒன்று இணையாத இரு துருவங்கள் என்று. அறிவியல் உலகில் மிகப் பெரிய தலைப்புகள் இவை இரண்டும் தான் என்றாலும் இவை இரண்டையும் ஒன்றிணைப்பது சுலபமல்ல.

இதில் ஒன்று மிக அதிக அளவில் மாஸ் பற்றிப் பேசுகிறது. காரணம் நிறை முக்கிய பங்கு வகிக்கக்கூடிய கோள்கள், நட்சத்திரங்கள் போன்றவற்றின் செயல்பாட்டை இது விளக்குகிறது.

இன்னொன்றோ.... நிறை என்றால் என்ன என்றே தெரியாத ஒளி துகள் போட்டான் போன்ற துகள்களை மற்றும் பிரபஞ்சத்திலேயே மிகக் குறைவான நிறை கொண்ட (கிட்ட தட்ட ஒரு கிராமில் கோடி கோடி கோடி கோடி மடங்கு குறைந்த) நியூட்ரினோ போன்ற துகள்களைப் பற்றி எல்லாம் அலசு கிறது எனவே இவை இரண்டும் எங்கே ஒன்று சேர்வது?

அதே போலப் பிரபஞ்சத்தின் நான்கு விசைகள் சொன்னேன் அல்லவா… அந்த நான்கையும் ஒரே கூடாரத்தில் அடைப்பதும் கடினம்.

இதைச் சாதிப்பதற்கு தான் Stephan Hawkins போன்ற மாமேதைகளும் முயன்று வருகின்றனர்.

அனைத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு தியரி தான் theory of everything.

பிரபஞ்சத்தின் நான்கு விசைகளை ஒன்றிணைக்கும் கோட்பாடு தான் unified theory.

இந்த இரண்டையும் ஒன்று சேர்க்க இன்னும் கூடப் பல தியரிகள் பாடுபடுகின்றன உதாரணமாக loop quantum gravity.

ரிலேடிவிட்டி எலெக்ட்ரோமேக்னடிக் உடன் இணைந்த பின் தான் குவாண்டமும் ரிலேடிவிட்டியையும் ஒன்றிணைப்பதற்கான கதவுகள் திறந்தன. இந்தக் கதவுகள் வாயிலாக வெளிவந்த தியரி தான் குவாண்டம் எலெக்ட்ரோடைனமிக் QED. முன்பு சொன்ன குவாண்டம் பீல்டு தியரிக்கு இதை ஒரு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.

குவாண்டமை ரிலேடிவியுடன் இணைக்கப் படாதபாடுபட்டுக் கொண்டிருக்க குவாண்டமின் அணுவுக்கு அணு என்று சொல்லும் அளவு ஆழ்ந்து போய் மிக நுண்ணிய ஒற்றை ஸ்ட்ரிங் ஐ கொண்டு ஸ்ட்ரிங் தியரியும் அதன் கிளைகளாக M தியரியும் தோன்றின. இவைகள் மிக மிகச் சுவாரஸ்யமானவை...

நாம் முப்பரிமாண உலகில் வாழ்கிறோம் என்று நமக்குத் தெரியும். ஐன்ஸ்டைனுக்கு பிறகு காலம் ஒரு பரிமாணம் என்பதை புரிந்து கொண்ட பின் பல விஷயங்களில் நமது புரிதல் மாற்றத்தைக் கண்டது…

உதாரணமாகக் கோள்கள் சூரியனை எப்படி சுற்றுகின்றன என்று கேட்டால், குழந்தைகள் வட்ட பாதையில் என்று பதில் சொல்வார்கள். அடல்ட்ஸ்… நீள் வட்ட பாதையில் என்று பதில் சொல்வார்கள். ஆனால் ஐன்ஸ்டைன் போன்ற லெஜெண்ட்ஸ்…

அது ஸ்பேஸ் டைம் எனும் கால வெளியில் ஒரு நேர் கோடு என்கிறார்.

4 டைமன்ஷனுக்கே இப்படினா 10 டைமன்சன்களை விளக்கும் ஸ்ட்ரிங் தியரியும் 11 டைமன்ஷன்களை விளக்கும் M தியரியும் எப்படி இருக்கும்......?
 
Last edited:

SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
158
Reaction score
15
Points
18
Location
Coimbatore
பாகம் 18 : இழையோடு இழையாக

ஒரு பொருளை மிக நுணுக்கமாக ஆராய்ந்தால்... மிகச் சிறிய அலகாக அழகாகக் கிடைப்பது அணு. அந்த அணுக்கள் எதனால் செய்யப்பட்டது (6 ஆவது அத்தியாயத்தில் சொன்ன குவார்க் நினைவு இருக்கிறதா) என்றெல்லாம் தாண்டி அணுவுக்கே அணு என்று சொல்லலாம்...

அப்படி அந்த நுண் துகளையும் நுனுக்கி போய்க் கடைசியாக இதன் உருவாக்கம் என்ன எங்கே இருந்து தான் அணுவின் ஆரம்பம் அமைந்து இருக்கிறது என்று ஆழமாக இறங்கி பார்த்ததில் கிடைத்த மிக (வேணும்னா ஒரு 4, 5 மிகப் போட்டுகோங்க) சிறிய ஒரு பொருள் தான் ஸ்ட்ரிங் அதாவது இழை.

(பொருள் என்பது இங்கே தர்க்க படி தப்பு string என்பதை பொருளாகப் பார்க்க முடியாது எனக்கு வேறு வழி இல்லாமல் பொருள் என்றேன்) அந்த string ஐ பிடித்துக் கொண்டு அலசி ஆராய்ந்து சொல்லப் பட்ட தியரி தான் string theory.

இங்கே ஒரு ஸ்ட்ரிங் என்பது மிக மிகச் சின்னதான ஒன்று என்று கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று சொல்லும்போது இப்போது நீங்கள் கற்பனை செய்ததை விடப் பல கோடி மடங்கு சின்னது ஸ்ட்ரிங்.
அது எவ்வளவு சின்ன ஒன்று என்று சொன்னால் கொஞ்சம் ஆச்சர்யமாக இருக்கும்.

ஒரு அணுவை எடுத்துக் கொண்டு இந்தப் பூமி அளவு பெரிதாக்கினால்… அதில் ஒரு ஸ்ட்ரிங் என்பது... மன்னிக்கணும் கண்ணுக்குத் தெரியவில்லை.

அதனால் ஒரு அணுவை வியாழன் கிரகத்தின் அளவு ஆக்குவோம். ஆனால் ஸ்ட்ரிங் என்பது மன்னிக்கணும் இப்பவும் பார்க்க முடியவில்லை.

ஒரு அணுவைச் சூரியன் அளவு பெரிதாக்கினால் கூட உங்களால் ஸ்ட்ரிங் ஐ அடையாளம் காண இயலாது.

ஒரு அணுவை மொத்த சூரிய குடும்பத்தின் அளவிற்கு பெரிதாக்கினால் ஒரு ஸ்ட்ரிங் என்பது ஒரு மரத்தின் அளவில் பார்க்கலாம்.
ஸ்ட்ரிங் எவ்ளோ பெரிசு என்று புரிகிறதா?

நாம் கண்ணால் பார்க்கும் அணைத்து பொருளும் ஏன் இந்த மொத்த பிரபஞ்சமே ஸ்ட்ரிங் இல் இருந்து தான் தொடங்குகிறது என்று சொல்லும்போது நாம் பொருட்களை மட்டுமே நினைத்துக் கொள்ள கூடாது. ஆச்சர்யம் என்ன வென்றால் கண்ணால் பார்க்க முடியாத க்ராவிட்டி… எலெக்ட்ரோ மேக்னடிக் போன்ற சமாச்சாரங்களும் ஸ்ட்ரிங் ஆல் ஆனது தான்.

இந்த ஸ்ட்ரிங் எப்படி பட்டது?

இது ஒரு ஒரு பரிமாண ஒற்றை கோடு ஆற்றல் அல்லது துடிப்பு அவ்வளவு தான்.

இது எப்படி இருக்கும்?

வழக்கம்போலக் கற்பனையைக் கொஞ்சம் தட்டி விடுங்க…
அதாவது உங்கள் கையில் ஒரு மெல்லிய துண்டு நூலைப் பிடித்து இருக்கிறீர்கள் என்று கற்பனை செய்யுங்கள். ஆனால் அந்த நூல் ஒரு ரப்பரால் ஆனது. இப்போ அதை இரு கைகளால் இழுத்து பிடித்துக் கொண்டு நண்பர் ஒருவரால் ரப்பரின் நடுவில் சுண்டி விடச் சொல்லுங்கள்.
இப்போது அந்தத் துண்டில் அலை அலையாகத் துடிப்புகள் எழுந்து கொஞ்ச நேரம் கழித்து அடங்கி விடும் அல்லவா.

அப்படி அல்லாமல் அந்தத் துடிப்பு ஒரு போதும் அடங்காமல் துடித்துக் கொண்டே இருப்பதாய் கற்பனை செய்யுங்கள். இப்போது அந்தக் கற்பனை நூலை இரு புறமும் இணைத்து வட்டமாக்கி விடுங்கள் ஆனால் துடிப்பு அப்படியே தொடர்ந்து கொண்டே இருக்கட்டும். இப்ப பார்க்கத் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு ரப்பர் பேண்ட் போன்ற ஒன்று கிடைக்கிறது அல்லவா? இதான் ஸ்ட்ரிங்.

நமது பிரபஞ்சம் மொத்தமும் இன்று நாம் அறிந்த வகையில் ஸ்ட்ரிங்கால் ஆனது. இந்த ஸ்ட்ரிங் ஐ சாதாரண அணு துகள்போல நிறை மற்றும் மின் சுமை கொண்டதாகக் கருதலாம் தவறில்லை ஆனால் மறக்காமல் இன்னொன்றை இணைத்துக் கொள்ள வேண்டும் அதுதான் துடிக்கும் நிலை. அந்தத் துடிப்பின் அதிர்வு தான் நாம் காணும் உணரும் பிரபஞ்சத்தை உண்டாக்குகிறது.
ஆனால் ஆச்சர்யம் அது இல்லை. சற்றே வேறு துடிப்பில் அதிர்ந்தால் இந்த இழைகள் நாம் காணாத உணராத பல பிரபஞ்சத்தை உண்டாக்குகிறது. அதான் ஸ்ட்ரிங் தியரியில் சிறப்பு.

1960 இல் முதல் முதலில் ஆரம்ப கால ஸ்ட்ரிங் தியரி பூஸானிக் ஸ்ட்ரிங் தியரி என்ற பெயரில் உண்டானது. அந்தப் பெயருக்குக் காரணம் முதலில் அது பூஸான் எனும் துகள்களில் மட்டும் ஏற்படும் விளைவை விளக்கியது. அதன் பின்னர் கொஞ்சம் முன்னேறி super string theory உண்டானது. இந்தச் சூப்பர் ஸ்ட்ரிங் தியரி சூப்பர் சிமிட்ரிகளை விளக்குவதால் சிறப்பு பெற்றது. Super symmetry என்று இங்கே நாம் அழைப்பது பூஸான் மட்டும் அல்ல, இன்னொரு வகையான உள் துகள் பிரிவான fermions களையும் ஒன்று சேர்த்து விளக்குவதை தான்.

(அட என்னங்க இது பூஸான் ...பெர்மியான்னு ஒன்னும் புரில என்பவர்கள் 6 ஆவது அத்தியாயத்தை மீண்டும் ஒரு முறை புரட்டிப் பாருங்கள் அதில் அணுவின் உட்கருவில் இரண்டு வகை துகள்.... ஒன்று போர்ஸ் கேரியர் (அதான் நம்ம பூஸான்) (இதில் ஒன்று தான் ஹிக் பூஸான் என்பது) இன்னொன்று மேட்டர் பார்ட்டிகள் (அதான் பெர்மியான். இதில் வரும் ஒரு வகை தான் குவார்க்) சொல்லி இருந்தேன் நினைவு இருக்கிறதா ? இல்லாதவர்கள் மீண்டும் ஒரு முறை 6 வது அத்தியாயம் படித்துப் பாருங்கள் புரியும்.)

ஸ்ட்ரிங் இன் துடிப்பு தான் இந்தப் பிரபஞ்சத்தை உண்டு பண்ணுகிறது என்று சொன்னேன் அல்லவா… அந்தத் துடிப்பை ஒரு வயலின் கம்பியுடன் ஒப்பிடலாம் ஒரு குறிபிட்ட அதிர்வில் குறிப்பிட்ட ராகம் உண்டாக்கும் வயலினின் துடிப்பு போல ஸ்ட்ரிங் ஒவ்வொரு குறிப்பிட்ட அதிர்விற்கும் வேறு வேறு புதிய புதிய பரிமாணத்தில் புதிய புதிய இணை பிரபஞ்சங்களைப் படைக்கிறது.

ஆம் ஸ்ட்ரிங் என்பது நாம் கண்ட வரை உண்மை என்று ஏற்று கொண்டால், அதன் பல பரிமாண பிரபஞ்ச கோட்பாடை ஏற்க வேண்டி உள்ளது. இல்லை என்றால் கணக்கு இடிக்கிறது.

முதலில் சரியாக வளர்ச்சி அடையாத கோட்பாடாக இருந்த பூஸான் ஸ்ட்ரிங் தியரி படி கால வெளி க்கு மொத்தம் 26 பரிமாணங்கள் இருந்தன. அதன் பின் அதை ஆராய்ந்தவர்கள் அடடே தப்பு கணக்கு போட்டுவிட்டோம் என்று சூப்பர் சிமிட்ரிகள் தியரி அல்லது சூப்பர் ஸ்ட்ரிங் தியரி யை உண்டு பண்ணிவர்கள் 10 டைமன்ஷன்களை விளக்கினார்கள் (அதில் 9 ஸ்பேஸ் டைம். மற்றும் ஒன்று நம்ம சாதா டைம்)

பிறகு இதில் ஒரு டைமன்ஷனை இன்னும் சேர்த்து கொண்டு 11 பரிமாணங்கள் கொண்ட M தியரி உண்டானது.

ஸ்ட்ரிங் தியரி க்ராவிட்டியை பார்டிகளை போர்ஸ் களை எல்லாம் ஒன்றிணைப்பதால் இது theory of every thing இன் ஒரு அங்கம் என்று கருத படுகிறது. பிறகு 1997 இல் ஸ்ட்ரிங் தியரியை குவாண்டம் பீல்டு தியரிக்கு சொந்தமாக்கினார்கள்.

இழையின் அதிர்வு உண்டு பண்னும் பல விஷயங்களைப் போல ஒன்று தான் graviton. அதாவது க்ராவிட்டியை சுமந்துள்ள குவாண்டம் துகள்கள். இவைகளை விளக்கும் பிரிவு தான் குவாண்டம் க்ராவிட்டி தியரி. ஸ்ட்ரிங் இல் உள்ள பல கிளை கதைகளை அவற்றுக்குள்ள ஒற்றுமையை ஒன்று திரட்டிச் சொல்லப் பட்ட மெயின் கதை தான் M தியரி.

ஸ்ட்ரிங் கோட்பாடுகள் கோள்களின் ஈர்ப்பு தொடங்கி பிளாக் ஹோல் வரை பல விஷயங்களை ஆராய உதவுகிறது. இது பல அடிப்படை விஷயங்களை ஒன்றிணைக்க முடிவதால் விஞ்ஞானிகளின் நீண்ட நாள் கனவான அனைத்தையும் ஒன்றிணைத்த ஒரு கோட்பாடு... பிரபஞ்சத்தை முழுதாக விளக்கும் ஒரு கோட்பாடு அதாவது theory of everything ஐ இதைக் கொண்டு உண்டாக்க முடியும் என்று என்ற ஒரு நப்பாசை விஞ்ஞானிகளுக்கு உண்டு.
(ஆனால் இன்று வரை அந்தக் கனவு முழுதாகப் பலிக்க வில்லை)

ஸ்ட்ரிங் துடித்துக் கொண்டும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து கொண்டும் ஒன்றை ஒன்று தொடர்பு கொள்கின்றன. அப்படி துடிப்பில் உண்டாவது தான் நாம் காணும் அணைத்து பிரபஞ்ச பொருட்களும் என்று சொன்னோம். இந்தக் காணும் பிரபஞ்சமே குவாண்டம் அளவில் உற்று பார்க்கும்போது கானும்போது ஒன்றாகவும் யாரும் காணாதபோது வேறாகவும் இருப்பதை பார்த்தோம். அதாவது துகள் அலை கோட்பாடு.

அப்படி இரட்டை நிலையில் அல்லது இங்கும் இல்லாத அங்கும் இல்லாத ஒரு நிலையில் அவைகள் எங்கு இருக்கின்றன என்றால் இணை பிரபஞ்சத்தில் தான்… அங்கு நமது போலவே மோத்த பிரபஞ்சத்தை உண்டாக்கி எடுக்கின்றன. அவைகள் நம்மால் உணர முடியாத பரிமாணத்தில் நமக்கு அருகிலேயே இருக்கின்றன. என்று மிச்சியோ காக்கு போன்றோர்கள் நம்புகிறார்கள். யார் இந்த மிச்சியோ காக்கு என்கிறீர்களா… அவர்தான் ஸ்ட்ரிங் தியரியை சொன்னவர். அதே போல 1995 இல் M தியரியை சொன்னவர் Edward Witten என்பவர் ஆவார்.

இந்த இணை பிரபஞ்சம் எல்லாம் நிஜமா உண்மையில் சாத்தியமா?

உங்களுக்குத் தேஜாவு அனுபவம் இருக்கிறதா அதாவது ஒரு நிகழ்வு அல்லது ஒரு புதிய இடம்... இது ஏற்கனவே நடந்துள்ளதை போல உணர்வது. அதற்குக் காரணம் அது இணை பிரபஞ்சத்தை நமது மூளை சின்னதாக உணர்வது தான் என்கிறார் மிச்சியோ காக்கு.

செல்லாது செல்லாது வேறு நல்ல ஆதாரம் இருந்தா கொடுங்கள் என்று கேட்டால் அவர்கள் சில காமா கதிர் போன்ற சில விசித்திர கதிர்கள் அவ்வபோது பதிவாவதை காட்டுகிறார்கள் அவைகள் நமது பிரபஞ்சத்தைச் சார்ந்த கதிர்கள் அல்ல.

என்ன தான் ஆதாரம் கொடுத்தாலும் Multiverse எனப் படும் பல பரிமாண பிரபஞ்ச கோட்பாடு இன்று வரை விஞ்ஞானிகளின் கற்பனையில் இருக்கும் ஒரு கோட்பாடு தானே தவிர நிரூபிக்கப் பட்ட ஒன்று அல்ல.

அதே சமயம் இன்னொன்றையும் நான் சொல்லி ஆக வேண்டும் ஒரு காலத்தில் அணு என்பதும் விஞ்ஞானிகளின் யூகமாகத் தான் இருந்தது பிறகு ஆதாரத்துடன் நிரூபிக்கப் பட்டது. எலெக்ட்ராணும் அப்படி தான். நியூட்ரான் இருப்பது கூட அவர்களால் முன் கூட்டியே யூகிக்க பட்டது தான். ஐன்ஸ்டைனின் 90 சதவீத கண்டுபிடிப்புகள் அவரது யூகங்கள் தான் என்பது ஆச்சர்யமான உண்மை.

எனவே யார் கண்டார் இன்றைய யூகம் நாளை நிஜமாகலாம். யார் கண்டார், இன்னொரு இணை பிரபஞ்சத்தில் இதே கட்டுரையை நாம் எழுதிக் கொண்டிருக்கலாம்.
 
SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
158
Reaction score
15
Points
18
Location
Coimbatore
பாகம்19: பரிமாணங்கள் பதினொன்று


ஸ்ட்ரிங் தியரி உண்டானபோது அது ஒரு ஒற்றை தியரியாக உண்டாகவில்லை. மொத்தம் 5 தியரியாக உண்டானது.

அவைகள் ...
type I, type IIA, type IIB, and two flavors of heterotic string theory (SO(32) and E8×E8).

பிறகு 1995 இல் witten என்பவர் கலிபோர்னியா பல்கலை கழகத்தில் annual conference இல் ஒரு பேருரை ஆற்றினார்… the second superstring revolution என்ற பெயரில் அந்த 5 ஐ ஒன்றாக்கி ஒரு கோட்பாடை வெளியிட்டார் அந்தக் கோட்பாடு தான் பிற்கலத்தில் M தியரியாகப் பரிமணித்தது.

ஒரு சின்ன ஆச்சர்யம் சொல்கிறேன்.

உங்களுக்குத் தெரிந்த பிஸிஸிட் யாரவது இருந்தால் அவர்களிடம் M தியரியில் உள்ள M இன் விரிவாக்கம் என்ன என்று கேட்டுப் பாருங்கள். ஆச்சர்யபடுவீர்கள் காரணம் உண்மையில் அதற்கு யாருக்கும் விடை தெரியாது. Multi verse தியரி என்று நாமே வேணுமானால் வைத்துக் கொள்ளலாம் அவ்ளோ தான். அல்லது மேஜிக் தியரி என்றும் வைத்துக் கொள்ளலாம். நிஜமான விளக்கம் யாரிடமும் இல்லை. அதை உண்டாக்கிய witten இடம் அதைப் பற்றிக் கேட்டபோது "மேஜிக் தியரி அல்லது மிஸ்டிரியஸ் தியரினு எதையாவது வச்சிக்கோங்க" என்று மழுப்பி விட்டார்.

எம் தியரி மொத்தம் 11 டைமன்சனில் விளக்கப் பட்டது என்று சொன்னேன் அல்லவா… அதில் ஒன்று டைம்... 3 ஸ்பேஸ் டைமன்சன். மேலும் 6 டைமன்ஷன்கள் எக்ஸ்டரா டைமன்சன்கள் என்று அழைக்கப் பட்டது அவைகள் அளக்க மிக மிகச் சிறியது. இதனுடன் இன்னுமும் ஒரு ஸ்பேஸ் டைமன்ஷன்களை இணைத்து 11 ஆக்கியது.

அந்த 11 பற்றியும் விளக்க வேண்டும் என்றால் முதல் 3 நீளம் அகலம் ஆழம் என்று நமக்குத் தெரியும்.

4வது பரிமாணம் என்பது டைம் இல் பயணிக்கக் கூடியது என்றும் தெரியும்.

(டெசெரெக்டர்ஸ்) இனி மற்றதை சொல்கிறேன்.

5 ஆவது பரிமாணம் நம்மை இணை பிரபஞ்சத்தில் பயணிக்க அனுமதிப்பது.

6 ஆவது நம்மை இணை பிரபஞ்சத்தில் உள்ள டைமில் பிரயாணம் செய்ய அனுமதிக்கிறது.

7 வது பரிமாணத்தில் நீங்கள் நினைத்த எந்தப் பிரபஞ்சத்திலும் சுதந்திரமாகப் பிரயானிக்கலாம். அவற்றின் நிகழ் கால நிலைபற்றி எந்தக் கவலையும் இல்லை.

8 வதில் நீங்கள் அந்த அனைத்து சாத்தியமான பிரபஞ்சத்திலும் டைம் டிராவல் பண்ணுவதை பற்றியது.

9 ஆவது பரிமாணத்தில் நாம் சாத்தியமுள்ள அனைத்து யூனிவர்சிலும் அதன் மொத்த கால வரலாற்றை ஒன்றிணைக்க முடியும். மேலும் அதன் மொத்த சாத்தியமுள்ள இயற்பியலை ஆராய முடியும்.

10 ஆவது மேற்கண்ட மொத்ததையும் ஒன்றிணைந்த கோட்பாடுகளை உணர்த்துவது...

இதற்கு மேல் உள்ள 11 ஆவது பரிமாணம் என்பதை பற்றி நம்மால் ஏதும் கற்பனை செய்ய இயலாது.

உயர்ரக பரிமாணங்கள் எப்படி பட்டது அவைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியுமா? உதாரணமாக 3d யிலிருந்து 4 ஆவது பரிமாணதிற்கு போவோம். அதை நம்மால் எப்படி புரிந்து கொள்ள முடியும்?

சரி மீண்டும் கொஞ்சம் உங்கள் கற்பனையைக் கொடுங்கள்... ஒரு புத்தகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பல மனிதர்களின் அழகிய சித்திரங்கள் வரைய பட்ட புத்தகம் அது. காகிதத்தில் இருக்கும் சித்திரம் என்பது 2 D (ஓரே ஒரு ஒற்றை கோடு தான் 1D அதாவது single dimension. புத்தகத்தில் படங்கள் இருப்பது 2d)

இப்போது அந்தப் படங்களுக்கு உயிர் இருப்பதாகக் கற்பனை செய்யுங்கள் அவைகள் தங்கள் மொத்த புத்தக உலகை ஒரு 2D உலகமாகத் தான் பார்க்க முடியும். இப்போது ஒரு பேச்சுக்கு உங்கள் கைகளை அந்த 2D உலகில் விடுவதாகக் கொள்ளுங்கள். அவர்களுக்கு அது எப்படி தெரியும் என்று நினைக்கிறீர்கள்?
அவைகளால் உங்கள் முழு கையை ஒரே நேரத்தில் நாம் பார்ப்பதை போலப் பார்க்க முடியாது அவர்களுக்கு உங்கள் கையில் ஒரு பகுதி தான் 2D யில் சித்திரம்போலத் தெரியும். கை நகர்த்த நகர்த்த அவர்கள் பார்வையில் உருமாறும் ஒரு 2 D வடிவம் என்ற வகையில் தான் தெரியும். இது எதற்குச் சமம் என்றால் ஒரு பெரிய பானையில் ஏறி இருக்கும் ஒரு சித்தெரும்புக்கு சமம் அந்த எறும்பு என்ன தான் பானையை சுற்றி சுற்றி வந்தாலும் பானை ஒரு முப்பரிமாண பொருள் என்பதை உணர முடியாது. அதற்கு ஒரு நேரத்தில் தெரிவதெல்லாம் பனையின் 2 D வடிவம் தான்.

சரி இப்போ அந்த எறும்பு கஷ்டபட்டு அறிவு கூர்மையை பயன்படுத்தி பானையின் முப்பரிமானத்தை உணர வேண்டும் என்றால் என்ன சாத்திய கூறு இருக்கிறது.??

தனது இன்னோரு நண்பன் எறும்பு தூரே செல்வதை பார்க்கும் எறும்பு பானை வளைவு என்பதால் ஒரு எல்லைக்குப் பின் பார்வையிலிருந்து கீழ் நோக்கி மறைவதை பார்த்தால் ...அதை வைத்துக் கொஞ்சம் கற்பனையைச் செலவிட்டு புரிந்து கொள்ள முயற்சித்தால் உட்கார்ந்த இடத்தில எறும்பால் ஓரளவு பானையை புரிந்து கொள்ள முடியும்.

இதே போலக் கதைதான் மனிதன் உயர் பரிமாணத்துக்குப் போகும்போது....

இங்கே மனிதன் வெறும் எறும்புபோல இருக்க உயர் பரிமாணங்கள் பானை போலப் புரியாமல் வளைந்து செல்கின்றன.

ஒரு பேச்சுக்கு நமது 3D உலகில் ஒரு 4 D பொருள் வருகிறது என்று கொண்டால் அது நமக்குப் பார்க்க உருவம் மாறிக் கொண்டே இருக்கும் ஒரு 3D பொருள்போலத் தான் தெரியும். (நமது கையைச் சித்திர மனிதர்கள் உணர்ந்தது போல) அல்லது அந்தப் பொருள் ஒரு மனிதன் என்றால் அவன் உடனே உடனே கால மாற்றம் அடைவதை போல உணருவோம். குவாண்டமின் M தியரி முழுக்க முழுக்க இது போன்ற விசித்திரங்களை உள்ளடக்கியது.

ஸ்ட்ரிங் எப்படி இருக்கும் என்பதை கற்பனையை உபயோகித்து புரிந்து கொண்டீர்கள். இப்போது M தியரி படி இந்தப் பல பிரபஞ்சங்கள் எப்படி அமைந்துள்ளது என்பதை பார்ப்போம். அவர்கள் இதை ஒரு membrane போல அதாவது ஜவ்வடுக்கு போல அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதாவது ஒரு வெங்காயத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் உரிக்க உரிக்கப் பல அடுக்குகளாக மெல்லிய தோல் அமைந்திருப்பதை பார்க்கிறோம் அல்லவா... அதில் ஒவொரு அடுக்கும் ஒவொரு மெல்லிய தோலும் ஒரு பிரபஞ்சம் எனக் கற்பனை செய்யது கொள்ளுங்கள். மேலே உள்ள மேல் அடுக்கு தோல் தான் நமது மொத்த பிரபஞ்சம் என்றால் அடுத்த பிரபஞ்சம் அதற்கு இணையாக அதை ஒட்டியே அமைந்துள்ளது. ஆனால் இந்த அடுக்கில் உள்ளவர்களால் அந்த அடுக்கை உணர முடியாத படி அமைந்திருக்கிறது. ஆனால் அணைத்து பிரபஞ்சமும் ஒன்றின் கொஞ்சம் மாறுதல் செய்யப் பட்ட காப்பியாக இருக்கலாம் என்பது அவர்கள் வாதம்.

அடுத்த ஒரு பிரபஞ்சம் நமக்கு மிக அருகிலேயே நம்மால் உணர முடியாமல் இருக்கலாம் என்ற தியரி ஆச்சர்யமாகத் தான் உள்ளது என்றாலும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் ஒரு காலி அறையில் நீங்கள் அமர்ந்து இருக்கிறீர்கள் அதே அறையில் தான் டிவி ஒளிபரப்பு ரெடியோ… fm... போன் கால்கள்... இன்டர்நெட்...வைஃபை... இப்படி கண்ணுக்குத் தெரியாத ஒரு பெரிய டிராபிக் நிரம்பி இருக்கிறது. ஆனால் அதை எதையும் நீங்கள் உணர முடியாததற்கு காரணம் அவைகள் மின்காந்தம் என்ற ரூபத்தில் நம்மால் உணர முடியாத நிலையில் இருப்பதால் தான்... அதே போலத் தான் பல பரிமாணங்களில் பல பிரபஞ்சங்கள் இங்கேயே இப்போதே நம்முடனே ஆனால் நம்மால் உணர முடியாத படி பரவி இருக்கிறது என்று M தியரி சொல்கிறது.

சரி இப்போது யாராவது ஒரு குண்டூசியை வைத்து அந்த வெங்காயத்தை குத்தினால் அந்தக் குறிப்பிட்ட புள்ளி இரு அடுக்குகளை ஒன்றாக இணைப்பதை பார்க்கலாம் அல்லவா அதுபோலத் தான் பிளாக் ஹோல்…வார்ம் ஹோல் எல்லாம் அடுத்த பிரபஞ்சத்தின் நுழைவாயில்கள் என்று குவாண்டம் விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றார்கள்.

பிளாக் ஹோலுக்குள் நுழையும் ஒரு மனிதன் முடிவிலியாக அதிகரிக்கும் ஈர்ப்பு விசையால் பல கிலோமீட்டருக்கு அவன் உடல் நீண்டு ரப்பர் போல இழுக்க பட்டுக் கொடூர மரணம் அடைவான் என்பது தான் பிளாக் ஹோல் பற்றி நாம் உணர்ந்தது. ஆனால் இதை மறுக்கும் விஞ்ஞானிகள் அப்படி இல்லை அவன் வேறு பரிமாணத்துக்குச் செல்வான் அதாவது இணை பிரபஞ்சத்துக்கு என்ற கருத்தைச் சொல்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் மனிதனால் வேறு பிரபஞ்சத்துக்குப் போக முடியாது. ஆனால் எம் தியரி படி அந்த ஊருக்குப் போகும் சாத்தியம் கொண்ட ஒரு விஷயம் இருக்கிறது.

அதைப் பற்றி அடுத்த பாகத்தில் சொல்கிறேன்.
கூடவே அறிவியலில் இதுவரை விடை காணாத ஒரு விஷயத்துக்கு என்னிடம் விடை உண்டு என்று சொல்கிறது ஸ்ட்ரிங்...அதையும் என்ன என்று இறுதி அத்தியாயமாகிய அடுத்த பாகத்தில் பார்ப்போம்.....
 
SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
158
Reaction score
15
Points
18
Location
Coimbatore
பாகம் 20 : எதிர்காலத்தின் தொடக்கம்


பிரபஞ்சத்தின் நான்கு விசைகள்பற்றி அறிந்தோம் அல்லவா. அதில் மிக வலிமை குறைவாக இருப்பது ஈர்ப்பு விசை என்று பார்த்தோம்.

அதைவிட மின்காந்த விசை பல மடங்குச் சக்தி வாய்ந்தது. எந்தளவு என்றால் ஒன்றுக்கு பக்கத்தில் கிட்ட தட்ட 30 சைபர்கள் போட வேண்டி வரும் அத்தனை மடங்கு.

அந்த மின்காந்ததை விடப் பல மடங்கு அதிக விசை கொண்டது தான் அணுவுக்கு உள்ளே இருக்கும் பிணைப்பு விசை...

குவாண்டம் விஞ்ஞானிகள் இந்த ஈர்ப்பு விசைபற்றி ஒரு கருத்தைச் சொல்கிறார்கள். அதாவது ஈர்ப்பு விசையும் நிஜமாக மிக வலிமையான ஒன்றாக இருக்கலாம். அவை நம்மால் உணர முடியாமல் போய் இருக்கலாம். நாம் உணரும் விசை ஒரு நிழல் அதாவது உண்மை நிகழ்வின் மிச்சம் ஆக இருக்கலாம் என்கிறார்கள்.

ஒரு வெடி விபத்து பிரமாண்டமாக வெடித்து சிதறுகிறது. ஆனால் அதை நாம் பார்க்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள் சிதறலின் கடைசி பகுதியில் சில சில்லுகள் ஏகுறுவதை நாம் பார்ப்பது போல இந்த ஈர்ப்பு விசையை நாம் உணறுகிறோமே என்கிறார்கள்.

ஒற்றை ஸ்ட்ரிங் என்பது ஒரு துடிக்கும் இழை என்று சொன்னேன். அதில் முனை வளைந்த நூல்போல இழையால் உண்டாவது தான் பிரபஞ்சத்தில் நாம் கண்ணுறும் எல்லாம் பொருளும்.

இதில் முனைகள் இனைந்து ரப்பர் பேண்ட் போல ஸ்ட்ரிங் ஆல் உண்டானது தான் க்ராவிட்டி காண துகள்கள் அதன் பெயர் கிராவிட்டான்.

இந்தக் கிராவிட்டான்களால் நமது பிரபஞ்சத்தை விட்டு வேறு பிரபஞ்சத்திற்கு தப்பி செல்ல முடியும் என்று குவாண்டம் சந்தேகிக்கிறது.

****​

அறிவியல் உலகில் உள்ள பதில் தெரியாத பல கேள்விகளில் தலையாய கேள்வி தான் பிக் பேங்க்கு முன் என்ன என்பது.

அதாவது இன்றைய அறிவியல் பிக் பாங் என்று பெரும் வெடிப்பின் மூலம் சுமார் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்தப் பிரபஞ்சம் தோன்றியதை வலியுறுத்துக்குகிறது. காலமும் வெளியும் அதிலிருந்து தான் உண்டாகின என்கிறது. ஆனால் பிக் பேங்க்கு முன் என்ன இருந்தது. அது என்ன காலம் என்ற கேள்விக்கு அதனிடம் பதில் இல்லை.

ஆனால் குவாண்டம் பிசிக்ஸ் அதற்கு ஒரு விடை வைத்து இருக்கிறது. பல பிரபஞ்ச கோட்பாடை கொண்ட குவாண்டம் இயற்பியல் பிக் பாங் என்பதை பிரபஞ்ச தொடக்கமாகப் பார்க்கவில்லை. பிரபஞ்ச இணைவாக அல்லது பிரிவாகப் பார்க்கிறது.

ஸ்டீபன் ஹாக்கின்ஸ் போன்றோர்கள் பிரபஞ்சத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால் குவாண்டம் வேறு வித நம்பிக்கை கொண்டது. அதாவது பல பரிமாணம் கொண்ட பல பிரபஞ்சங்கள் எதோ ஒரு காரணத்தால் ஒன்றை ஒன்று சந்திக்க நேர்ந்தால் உண்டாகும் விளைவு தான் பிக் பாங் என்கிறது.

***​

குவாண்டம் தியரி நமக்கு எதிர்காலத்தில் டைம் டிராவலிங்,
டெலிபோர்டேஷன், மல்டி வேர்ஸ் ரிசர்ச், பேரலல் யூனிவேர்ஸ் என்று பல சாத்தியங்களைத் திறந்து வைத்தாலும் நமக்கு அடுத்த படியில் உடனடியாகக் காத்திருக்கும் பலன் குவாண்டம் கம்பியூட்டர்.
குவாண்டம் கம்பியூட்டர் சாதா கம்பியுடரை விட லட்சம் மடங்கு ஆற்றல் அதிகம் கொண்டு செயல் படக் கூடியவை.

சாதாரண கணினிகள் 0 மற்றும் 1 என்ற பைனரி பாஷை மட்டுமே தெரிந்தவை அவைகளுக்கு கொடுக்கப் படும் input எல்லாமே இதன் வாயிலாகவே செல்கிறது என்று நாம் அறிவோம்.

ஆனால் qbit இல் செயல் படப் போகும் குவாண்டம் கம்பியூட்டர் ஒரே நேரத்தில் இரு தளத்தில் இருக்க முடிய கூடிய துகளை (போட்டான் எனும் ஒளி துகள் பயன்படும் என்கிறார்கள்) கொண்டு இயங்க போவதால். வெறும் 0,1 என்ற சாத்தியங்களைத் தாண்டி நிறைய சாத்தியங்களை ஒரே நேரத்தில் அலசும் ஒரு அல்கரிதத்தை உண்டாக்க முடியும்.

இது நிச்சயம் கணினி உலகில் பெரிய புரட்சியாக இருக்க போகிறது. இதைத் தாராளமாக 'எதிர்காலத்தின் தொடக்கம்' எனலாம்.

குவாண்டம் என்ன தான் கண்ணுக்குத் தெரியாத சிறிய துகளாக இருந்தாலும் அதைப் பற்றி ஆராய மிகப் பெரிய சோதனை கூடம் தேவை படுகிறது. பிரமாண்ட ஆய்வகம் பெர்மி யில் பல முறை குவாண்டம் ஆய்வுகள் உண்மையென நிரூபிக்கப் பட்டுள்ளது.
ஆனால் குவாண்டமின் பிரமாண்டத்தை அளக்க பெர்மி போதுமானதாக இல்லை. எனவே அதற்கெனச் சிறப்பு வசதிகளுடன் இன்னும் பிரமாண்டமாகக் கட்ட பட்ட ஆய்வகம் தான் CERN. தீராப் பசியுடன் தொடர்ந்து துகள்களை ஆராய்ந்து வருகிறது CERN.

***​

குவாண்டம் அறிவியலின் தன்மைகள் அதன் உண்மைகள் நம்மை ஆச்ரய படுத்தி நமது கற்பனை திறனின் எல்லைகளைச் சோதிக்க கூடியவை.
அதனால் தான் கட்டுரை ஆரம்பத்தில் கற்பனை யின் தேவை என்பதை மிக வற்புறுத்தினேன்.
ஐன்ஸ்டைனின் அந்த இரண்டு கூற்றுக் களை மீண்டும் நினைவு படுத்துகிறேன்.

"அதிகம் சிந்திக்க தெரிந்தவன் பெரிய அறிவாளி அல்ல…
அதிகம் கற்பனை செய்யக் கூடியவனே உண்மையான அறிவாளி "

"தர்க்க அறிவு உங்களை A யிலிருந்து B க்கு அழைத்துச் செல்லும் ஆனால் கற்பனை உங்களை எங்கே வேணா அழைத்துச் செல்லும்."

ஐன்ஸ்டைன் கற்பனை பண்ண சொன்னதை தான் நமது கலாம் அய்யா சுருக்கமாகக் கனவு காணுங்கள் என்று சுருக்கமாகச் சொல்லி விட்டாரா தெரியாது.

சார்பியல் எனும் சமுத்திரம் கட்டுரையில் கடைசியில் சொன்னதை தான் குவாண்டமிர்கும் நான் சொல்ல வேண்டி உள்ளது அதாவது குவான்டமை என்னால் முழுதாக விளக்கி விட முடியாது ஆனால் அதைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்து அதைப் பற்றி மேலும் அறியும் ஆவலை உண்டாக்க முடியும்.

அதைத்தான் இந்தக் கட்டுரை தொடரில் செய்து இருக்கின்றேன்.
குவாண்டம் எளிதில் புரியாத ...புரிய வைக்க முடியாத புதிர் தான் ஆனாலும் நீங்கள் இந்தக் கணத்தில்....

 1. "குவாண்டா 'என்றால் என்ன…"?
 2. "குவாண்டம் சூப்பர் பொசிஷன் என்றால் என்ன"?
 3. "குவாண்டம் என்டேங்கள்மெண்ட் (quantum entanglement) என்றால் என்ன?''
 4. "குவாண்டம் டனலிங் என்றால் என்ன?"
 5. "யூனிபைடு தியரி என்றால் என்ன ?"
 6. "குவாண்டம் க்ராவிட்டி என்றால் என்ன?"
 7. "ஸ்ட்ரிங் தியரி என்றால் என்ன?"
 8. " தியரி ஆப் எவ்ரி திங் எதை விளக்க முயற்சிகிறது?"
 9. "குவாண்டம் எனர்ஜி என்றால் என்ன?"
 10. "குவார்க்… பூஸான் இவைகள் எல்லாம் என்ன??"
 11. "பிரபஞ்சத்தின் 4 விசைகள் என்ன அவை அணுக்கருவில் என்ன பங்களிக்கிறது?"
 12. "11 பரிமாணங்கள் என்கிறார்களே அதுயெல்லாம் என்ன"?
 13. "குவாண்டம் கம்பியூட்டர் என்றால் என்ன"?
 14. "M தியரி எதை விளக்குகிறது"
 15. "க்ராவிட்டான் பற்றி ஏதும் சொல்ல முடியுமா"

போன்ற கேள்விகளுக்குப் பதில் தெரிந்தவர்களாக இருப்பீர்களேயானால் எனது கட்டுரையின் நோக்கம் நிறைவேரி விட்டதாகவே கொள்வேன்.

முற்றும்
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top