கொண்டாட்டம்

Jaalan

Author
Author
SM Exclusive Author
#1
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி முடித்து காயத்ரி வந்து நிற்க, நூர் சீரியஸ் ஆக கணேஷுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
" நான் நெனச்சது கரெக்ட் கணேஷ். நீங்க உடனே இங்க வாங்க, நாம கெளம்பனும் இப்போவே.." போனை மடித்து பாக்கெட்டிற்குள் திணித்தவள், ஸ்டில் இமேஜ் ஆகா உறைந்து நின்ற தோழிகளை பார்த்தாள் . அவள் ஆர்வத்தில் கொஞ்சம் ஓவராக போய் விட்டோமோ என அப்போது தான் தோன்றியது.
" சாரி.. கொஞ்சம் எக்சைட் ஆயிட்டேன், க்ளூ ல இருந்த நம்பர் , சிடிஐ பேங்க் அக்கவுண்ட் நம்பராம் , இப்போ தான் கணேஷ் சொன்னாரு. நாம இப்போ அங்க போக போறோம், ஓகேயா .." என ஒரு மந்திர புன்னகையை வீசி விட்டு நகர்ந்தாள். இவள் தான் சற்று முன் அழுத்தாளா , என தோழிகளுக்கே ஒரு நிமிடம் திகைப்பாக தான் இருந்தது.

காரில் அரை மணி நேரம் உயிரை கை கால் என எல்லாவற்றிலும் பிடித்து வௌவால் போல தொங்கி கொண்டு தான் வந்தார்கள் தோழிகள். இவ்வளவு வேகமாக யாரும் காரோட்டி இவர்கள் பார்த்தது கூட இல்லை. அலமாரியில் நுழைந்த எலி போல கார் ட்ராபிக்கில் புகுந்து புகுந்து, ரெட்-இல் முறைத்த, டிராபிக் சிக்னல்கலை கண்டு கொல்லாமல் ஜுட் விட்ட படி பாங்கை வந்து அடைந்த போது, பேங்க் மூட அரை மணி நேரமே பாக்கி இருந்தது. கார் கதவு திறந்ததும் , ஏஸி காரில் வேர்வையில் நனைந்தவாறு இறங்கினர் தோழிகள்.
நொடி கூட தாமதிக்காமல் பாங்கினுள் விரைந்தாள் நூர். அவள் வேகம் நியாயமானது தான். அது ஒரு கவர்மெண்ட் பேங்க் என்பதால் பணி நேரம் முடிந்ததும் பஞ்சாய் பறந்து விடுவார்களே ஊழியர்கள். நூர் என்குவரி கவுண்டரை அடைந்ததும் தான் மூச்சு விட்டாள். அங்கே மூக்கின் விளிம்பில் தொத்திய கண்ணாடியும், காதோரம் உஜாலாவுக்கு மாறிய நரை முடிகளுமாய் ஒருவர் இவள் வந்ததையும் கவனியாமல் கணினியில் மூழ்கி அல்ல முக்தி அடைந்திருந்தார்.

" சார் சார் " நூர் கவுண்டரை லேசாக தட்டவும், தன் தியானத்திலிருந்து விழித்தவராய் , தன மூக்கு கண்ணாடி வழியே பார்த்தார்.

" சொல்லுங்க என்ன விஷயம்."

" எனக்கு ஒரு அக்கவுண்ட் டீடைல் வேணும், ஐ அம் ப்ரொம் சிபிஐ .."

" ஓ .. அதுக்கென்ன பேசா பண்ணிடலாம், நம்பர் வச்சிருக்கீங்களா " தன் சீட்டில் நிமிர்ந்து உக்கார்ந்தான்.

" ஒன்னு மூணு ஒன்னு ரெண்டு.." என நூர் ஒவ்வொரு நம்பராக சொல்ல, மிகவும் பொறுப்பாக அதை தன் கணினிக்கு ஊட்டினான் அவன்.

" அக்கவுண்ட் ஹோல்டர் மீனாட்ஷி சுந்தர்.." நூறை பார்த்தான்.

ஒரு வேளை பெயர் மாற்றி கொடுத்திருப்பானோ என சிந்தித்தவள், " எப்போ ஓபன் பன்னிருக்காங்கனு சொல்லுங்க .."

" அதுவா.. முப்பது வருஷம் முன்னாடி ஓபன் பன்னிருக்கார், இதுல என்ன வேடிக்கைன்னா அவர் அக்கவுண்டையே ஆண்டவன் க்ளோஸ் பண்ணிட்டான், ஆனா இந்த அக்கவுண்ட் நாதியத்து கிடக்கு.." சொல்லிவிட்டு உண்டியலை உருட்டியது போல சிரித்தான்.

குழம்பி போனவள், முடிந்த வரை எட்டி அவன் கணினி திரை பார்த்தாள் , " என்ன சார் .. நான் மூணு ஒன்னு சொன்னா , நீங்க மூணு தடவை ஒன்னு அடிச்சு வச்ருகீங்க.."

" ஓ அப்படியா.. சாரி மேடம்.." தன் மூக்கு கண்ணாடியை சற்று முன் தள்ளியவாறு சரியான அக்கவுண்ட்டை அடிக்க தொடங்கினான்.

" முக்கியமான விஷயம் சார் கொஞ்சம் கவனமா அடிங்க .. பேர் மித்ரனா இருக்கும்.. "

" மித்ரனா..? " அதிர்ச்சியானான்

" ஆமா சார் , ஏன் உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா.." என இவள் கேட்க அதை சுத்தமாக கவனியாமல் பக்கத்துக்கு கவுண்டருக்கு பார்வையை திருப்பினான்.

" அம்மா மித்ரா.. மதியம் ரவா லட்டு கொடுத்தேனே சாப்பிட்டுட்டு ஒண்ணுமே சொல்லலியே.." என்றான் ஏக்கமாக

பக்கத்து கவுண்டரில் ஒரு இளம்பெண் இவனை சற்றும் சட்டை செய்யாமல் குரல் மட்டும் அனுப்பினாள் , " சாரி சார், ரொம்ப நல்லா இருந்துச்சு.."

" ஹி ஹி, என்னமா இதுக்கெல்லாம் நமக்குள்ள சாரி கேட்டுட்டு... உனக்கு நான் பண்ண மாட்டேனா.."

இதற்கு பதில் ஏதும் வராததால், தன் வாயில் ஊற்றிய ஜொள்ளால் அந்த கவுண்டரை ஊற வைத்த வாறே திரும்பினான், கொலை வெறியில் இருந்த நூர் முகத்தை கண்டதும் , மீண்டும் வேலைக்குள் நுழைந்தான், " ஆமா மேடம் , மித்ரன்னு ஒரு அக்கவுண்ட் போன மாசம் தான் ஓபன் ஆயிருக்கு. ஆனா அது லாக்கர் அக்கவுண்ட் ஆச்சே ..! வாரண்ட் வச்சிருக்கீங்களா.."

" நான் போலீஸ் தாங்க வாரண்ட்ல தேவை இல்ல " நூர் தன் ஐடி கார்டை தேட, ஆறு மணிக்கான பெல் அடித்தது, நிமிர்ந்து பார்க்கையில் கவுண்டர் வாயோடு சேர்த்து இவள் வாயையும் அடைத்து விட்டு கிளம்ப தொடங்கினான் அவன். இவனிடம் பேசி முடியாது, என எண்ணியவள் திரும்ப, அங்கே நடந்தவை அனைத்தையும் சிலையாய் பார்த்துக் கொண்டிருந்தனர் தோழிகள்.

" நான் கமிஷனர் ஆபீஸ் போகணும், நீங்க வர வேண்டாம். " பதிலுக்கு காத்திராமல் நகர்ந்தாள் நூர்.

*************

அந்த சிறிய சொகுசு படகு , கடல் நீரில் தள்ளாட அதன் மேல் கோப்பை நீரில் தள்ளாடியவாறு ரவியும் ஜெரியும் பேசிக் கொண்டிருந்தனர். கிடைத்த வெற்றிக்கு சைடிஷசாக அடித்த ஸ்காட்ச்சும் சேர்ந்து அவர்களை போதையின் உச்சத்திற்கு சேர்த்திருந்தது.

" இவ்வளவு ஈசியாக முடியும்னு நினைக்கவே இல்ல, எல்லா பணத்தையும் எடுத்தாச்சு..". கையின் கோப்பையை முழுதும் தொண்டையில் கவத்தினான் ரவி,

ஆழ்ந்த சிந்தையுடன் கடலை பார்த்துக் கொண்டிருந்தான் ஜெர்ரி. ரவியிடம் உம் சொல்ல கூட அவன் எத்தனிக்க வில்லை.

அவனது முகத்தில் படர்ந்த கவலையை உணர்ந்த ரவி, " ஏன் ஒரு மாதிரி இருக்குற.. எனிதிங் சீரியஸ் "

" மித்ரன் ப்ரண்ட் சொன்னது தான், " தன் கோப்பையை இதழுக்கு ஊட்டியவன்
" மித்ரன் அவன்ட எதோ சொல்ல நினைச்சிருக்கான், அவன் வேற ஏதோ லாக் நமக்கு வச்சிருப்பானோன்னு தான் எனக்கு தோணுது.."

" அதெல்லாம் இருக்காதுடா.. அப்டியே இருந்தாலும் நூர் தான் அத நோண்டுவா , அவளை முன்னவே கொன்னிருக்கணும் , நீ தான் கேக்கல .. இப்போவும் ஒன்னும் கெட்டு போகல அவளை முடிச்சுட்டா ஒரு ப்ரப்ளேம் இல்ல நமக்கு."

தன் கோப்பையின் மதுவில் நிலவொளி நிகழ்த்தும் ஜாலங்களை ரசித்தவன், " அவளை கொல்றதால நமக்கு பிரச்சனை தான்.."

" நமக்கா இல்ல உனக்கா .." ரவியின் சொற்கள் ஜெர்ரியின் கவனத்தை ஈர்க்க , " என்ன மலரும் நினைவுகளா " நக்கலாக சொன்னான் ரவி.

தன் கோப்பையை ஒரே வீச்சில் முடித்த ஜெர்ரி, " நமக்கு புடிச்சவங்க புடிக்காத விஷயத்தை பண்ணும் போது தான் அவங்கள நமக்கு புடிக்காம போறதே.."
ஜெரியின் வார்த்தைகளை புரிய முடியாமல் ரவியின் ஆல்ககால் மூளை அல்லாடியது.

" புரியலையா..? புரியற மாதிரியே சொல்றேன், எனக்கு உன்ன புடிக்கும், பட் நீ இப்போ பேசுறது பிடிக்கல.."

இதற்கு மேல் இந்த விஷயத்தை பேச கூடாது என்பது மட்டும் ரவிக்கு போதையிலும் தெளிவாக தெரிந்தது. என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று அவன் நினைத்த வேளை , நாராயணன் கடவுளாக காப்பாற்றினான்.

" சார் ஏற்பாடுலாம் பிரமாதமா இருக்கே.."

" என்ன நாராயணன், நீங்க சரக்கு போடலியா .." என்றான் ரவி பேச்சை மாற்றும் நோக்கில்.

" அய்யோ சார் , மலைக்கு போற வரைக்கும் தொட மாட்டேன் சாமி சரணம்.." தன் கழுத்தில் இருந்த மாலையை தடவிக் கொண்டான்.

" பணம் வந்துருச்சு எப்போ சார் பிரிக்க போறோம் "

" என்ன நாராயணன் பிரிக்கத்துலயே இருக்கீங்க, கொஞ்ச நாள் நார்மலா இருப்போம் அப்புறம் பிரிச்சிக்கலாம் யாருக்கும் சந்தேகம் வராது." என்றான் ரவி.

" அப்படி சொல்லுதீகளா.. அதுவும் சரி தான் " மண்டையை சொரிந்தான்.

" அத விடுங்க நாராயணன், இன்னைக்கு என்ன நாள் தெரியுமா.." என்றான் ஜெர்ரி.

" இன்னைக்கு..... நவம்பர் 6 ..... 2016 " என்றான் குழப்பமாக

" அதில்ல இன்னைக்கு உங்க பிறந்த நாள் இல்லையா.." ஜெர்ரி புருவத்தை தூக்கி அவனை பார்த்தான்.

" அம்மா சார், உங்களுக்கு எப்படி தெரியும்.."

" அதெல்லாம் முக்கியமா ஹாப்பி பர்த்டே " கோரஸாக இருவரும் கத்த , அலையில்லா ஆழ்கடலில் இவர்களின் ஓலம் அமைதியினை துளைத்தது.

***********

மறுநாள் காலை 9 மணிக்கு தான் எழுந்தாள் மேரி , இவ்வளவு நேரம் தூங்கி எவ்வளவு நாள் ஆச்சு என சோம்பல் முறித்தவாறே படுக்கையிலிருந்து எழ , தட தட வென யாரோ கதவை தட்டும் ஓசை கேட்டு அதிர்ந்து போனாள் , பயத்துடன் மெதுவாக திறந்தாள்,
" லேப்டாப் .. லேப்டாப் " என அனத்தியவாறே உள்ளே விரைந்தாள் நூர்.

மேரி லேப்டாப் அவளிடம் காட்ட வேறேதும் பேசாமல் அதனை ஆன் செய்தாள் , " இன்னிக்கு காலையிலே வாரண்டோட போய் அந்த அக்கவுண்ட் லாக்கர் ஓபன் பண்ணிட்டேன் , இதான் இருந்துச்சு.." தன் கையிலிருந்த பெண் டிரைவ் தூக்கி காட்டினாள். " அவசரத்துல என் லேப்டாப் இங்கயே வச்சிட்டேன்.. அதான் அவசரமா இங்க.." அதிர்ச்சியில் பேச மறந்தாள் நூர், அந்த பெண் டிரைவ் சேர்த்து வைத்த ரகசியம் அவளை மலைக்க செய்திருக்க வேண்டும், பக்கத்தில் இருந்து எட்டி பார்த்தாள் மேரி.
அங்கே அந்த வீடியோவில் மித்ரன் ஜெர்ரி ரவி நாராயணனுடன் முதன் முறையாக ஓசியா உரையாடல் முழுதும் படமாக ஓடிக்கொண்டிருந்தது. கொள்ளை அடுத்தவர்களை கொன்றதிலிருந்து பணத்தை மாற்ற பேரம் பேசியது வரை அனைத்தையும் அவர்களே ஒப்பு கொள்கிறார்கள். அதை பார்த்து மேரி யும் உறைந்து போக,

" நாம ஜெயிச்சிட்டோம்.." அவளை பாய்ந்து கட்டியணைத்தாள் நூர். " இது ஒன்னு போதும் , மித்ரன் செத்தும் கொடுக்குறேன்பா உஷாரா அவங்க இவனை ஏதும் பண்ணுனா அவங்கள மாட்டி விடனும்னு , இவனை காப்பாத்திக்கணும்னும் அவங்களுக்கே தெரியாம இப்படி வீடியோ எடுத்து வச்சிருக்கான்.. செம்ம .. சரி எனக்கு டைம் இல்ல.. உடனே இத கமிஷ்னர்ட்ட சொல்லி, எல்லாரையும் இன்னைக்கு தூக்கறேன்." சொல்லிவிட்டு மின்னலாய் மறைந்தாள் அந்த காலை வெயிலில்.
 

Advertisements

Latest updates

Top