• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கொரோனாவுக்கு செக் வைப்போமா...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deepa Babu

அமைச்சர்
Joined
Feb 18, 2021
Messages
1,273
Reaction score
3,393
Location
salem
Corona check.jpg

கொரோனாவுக்கு செக் வைப்போமா...

கொரோனாவுக்கு மட்டுமல்லாமல் அனைத்து நோயையும் எதிர்த்துப் போராட நம் பாரம்பரியத்தில் உரிய வீட்டு மருத்துவ வழிகள் சுலபமாக இருக்கிறது.

நோய் வரப்போகிறதோ, வந்துவிட்டதோ என்று அச்சத்தில் துவண்டு விடாமல் அதிலிருந்து மீண்டு வரும் வழிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்வோம்.

கொரானா வைரஸ் நம் உடலில் நுழைந்து விட்டால் அதைக் குணப்படுத்த நம்மிடம் மருந்துகள் இல்லை தான். ஆனால் அவற்றை தடுக்கவும், அதிலிருந்து விரைந்து குணமாகவும் இயற்கை மருத்துவம் இருக்கிறது.

அதில் முதல் பங்கு வகிப்பது நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீர் கஷாயம். எந்தவகை நோய் தொற்றுதல் இல்லாதவர்கள் கூட இந்த கஷாயத்தை வாரம் 1 முறை அல்லது 15 நாட்கள் இடைவெளி என்றால் தொடர்ந்து மூன்று நாட்கள் பருகவேண்டும். காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லதொரு தீர்வை விரைவில் கொடுக்கும்.

காய்ச்சல் கண்டவர்கள் தினந்தோறும் 2 முறை 30 மி.லி முதல் 50 மி.லி வரை 5 நாட்களுக்கு நிலவேம்பு (அ) கபசுர குடிநீரினை பருகவேண்டும். நிலவேம்பு குடிநீரானது அனைத்து வைரஸ் காய்ச்சல்களையும் வராமல் கட்டுப்படுத்தவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கவும் உதவுகிறது.

அடுத்து வைட்டமின் ‘சி’ அதிகமுள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, கொய்யா ஆகிய பழங்களை தினமும் எடுத்துக் கொள்ளலாம். பெரிய நெல்லிக்காயை மோரில் அடித்துக் குடிப்பதும் நல்லப் பயனை தரும்.


இஞ்சி, பூண்டு முதலியவற்றிலும் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்து கிடக்கிறது. அவற்றையும் ஏதோ ஒரு வகையில் பாலில் பூண்டுப்பல் போட்டு கொதிக்க வைத்து அருந்தலாம், இஞ்சி டீ கொதிக்க வைத்து குடித்தாலும் நல்ல பலன் தரும். எழுமிச்சை ஜுஸ் விரும்பி குடிப்பவர்கள் என்றால் அவற்றில் இஞ்சி சாறு விட்டு தேன் கலந்தும் குடிக்கலாம். இவை வயிற்றுக்கும் நல்லது.

நம் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க நம்மிடம் உள்ள சில பொருட்களை வைத்தே சிறந்ததொரு மசாலா தேநீர் தயாரிக்கலாம்.

இவற்றுக்கு தேவையான பொருட்களையும், அளவுகளையும் பகிர்கின்றேன். பயன்படுத்தி பயனடையுங்கள் சகோஸ்...

1. ஓமம் - 100g

2. சோம்பு - 50g

3. கிராம்பு - 5g

4. பட்டை - 5g

5. சுக்கு - 10g

6. ஏலக்காய் - 10g

இந்த ஆறு பொருட்களையும் வெறும் வாணலியில் லேசாக வறுத்து பவுடர் செய்து ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

காலை, மாலை தேநீர் போடும் போது இரண்டு பேருக்கு ஒரு ஸ்பூன் வீதம் கலந்து கொதிக்க வைத்து குடித்தால் நம் உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்.

பாதாம் பருப்பு போன்ற நட்ஸ் வகை உணவுகளில் மாங்கனீஸ் (manganese), வைட்டமின் ஈ சத்துகள் நோய் எதிர்ப்புச் சக்திக்கு காரணமான வெள்ளை அணுக்களின் செயல்பாட்டைத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

இப்பொழுது கோடை வேறு ஆரம்பித்து விட்டது. இது மாதிரி வெயிலின் தாக்கத்தில் இவற்றோடு நிறைய தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள்.

தண்ணீர் உடலின் கழிவுகளை வெளியேற்றி, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. மேலும் உடல் வெப்பத்தை சீராகப் பராமரிக்கிறது. மெட்டபாலிசத்தை அதிகரித்து, எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

அதோடு நீர் மோர், பனங்கற்கண்டு என உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு வகைகளை சேர்த்துக் கொள்வதால் வெப்பத்தினால் உண்டாகும் நோய்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

கோடைக்காலம் வந்தாச்சு என்றதும் ஃப்ரிட்ஜ்ஜில் ஜில் வாட்டர் வைப்பது வழக்கம். ஆனால் தற்போது வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக குளிர்ந்த நீர் அருந்தாமல் மிதமான வெந்நீரை மட்டுமே குடிக்க வேண்டும்


************************************

சரி, இவ்வளவு நேரம் நாம் உட்கொள்ள வேண்டிய உணவு முறைகளை பற்றிப் பார்த்தோம். அடுத்து நாம் பின்பற்ற வேண்டிய தூய்மை மற்றும் சுகாதார வழிகளை பார்ப்போமா...

தொண்டையில் கரகரப்பு இருந்தால் மட்டுமில்லை, பொதுவாகவே தினமும் படுக்கும் முன் உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது நல்லதொரு பலனை தரும்.

வாரத்திற்கு இருமுறை நொச்சி இலை, யூகிலிப்டஸ் இலை, வேப்பிலை போன்றவை போட்டு நீரை கொதிக்க வைத்து நீராவி பிடிக்க வேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்ட நேரம் தினமும் ஒரு வேளை பிடிக்கலாம்.

இந்த இலைகள் கிடைக்காதவர்கள் துளசி, கற்பூரவல்லி, மஞ்சள்தூள், வேப்பிலை போட்டும் நீராவி பிடிக்கலாம். இவை அனைத்தும் கிருமி நாசினியாக செயல்பட்டு நம்முள் நோய் கிருமிகளை தங்க விடாது.

மறவாதீர்கள்... தேவைக்கு அதிகமான உஷ்ணத்தில் அடிக்கடி நீராவி பிடித்தால் அது உடலின் நீர்ச்சத்தை உறிந்து வேறு பிரச்சினைகளில் மாட்டிவிடும் அபாயமும் இருக்கிறது. அதோடு அதிகளவு சூடு நம் நாசிப் பகுதியையும் பதம் பார்த்துவிடும். கவனமாக இருங்கள்.

எந்தவொரு கிருமியும் நம்முடைய நாசி மற்றும் தொண்டையில் ஓரிரு நாட்கள் தங்கிவிட்டு தான் உள்ளிறங்கும். அந்த நேரத்தில் நாம் பின்பற்றும் இந்த வழிமுறைகள் அவற்றை தொடக்கத்திலேயே செயலிழக்க செய்துவிடும்.

சாதாராணமாக கிருமித்தொற்றுகள் சுகாதாரமான இடங்களில் நிச்சயம் உயிர் வாழாது. ஆனால் இந்த கொரோனா தொற்று சற்று வேறுபட்டதாகவே இருக்கிறது.

நாள் கணக்கில் அவற்றால் வெளியிடங்களில், பொருள்களின் மீது செயலாற்ற முடியும். மேலும் தொற்றுகள் எப்போதும் வெளியிலிருந்து மட்டும் வருவதில்லை. சுகாதாரமற்ற முறையில் வீடு இருக்கும் போது அங்கும் உருவாக வாய்ப்புண்டு. அதனால் வீட்டை எப்போதும் சுத்தமாக சுகாதாரமாக பராமரிப்பது அவசியம்.

தினசரி இல்லையென்றாலும் வாரத்துக்கு இருமுறையாவது வீட்டை துடைத்து எடுப்பது நல்லது. வீடு துடைக்கும் போது கிருமி நாசினிகளோடு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துகொள்வதும் நல்லது.

வாசல்புற கதவுகளின் கைப்பிடி, வாயில் கேட் போன்றவற்றையும் தினசரி கிருமி நாசினி கொண்டு துடைத்து விடுங்கள். வாசலில் இருக்கும் மிதியடிகளையும் அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்.

காற்றால் இவை பரவுவதில்லை என்றாலும் நீர்த்திவலைகளால் எளிதில் தொற்றக்கூடியது என்பதால் வீட்டையும் கிருமிகள் இல்லாமல் பாதுக்காப்பதும் அவசியம். துணிகளை வெயிலில் உலர்த்தி எடுப்பது நலம் பயக்கும்.

ஹேன்ட் வாஷ் பற்றி எல்லோரும் எச்சரிப்பதால் தனியாக சொல்ல தேவை இருக்காது.

அனைத்து மதத்தினரும் சாம்பிராணி தூபம் போடுவதை கடைபிடிக்கின்றனர். அக்காலங்களில் அரசர்கள், பெரும்செல்வந்தர்கள் இருப்பிடங்களில், வாசனைப்புகையாகவும், கொடிய நச்சுக்களைப் போக்கக் கூடியவையாகவும் இவற்றை பயன்படுத்தினர்.

காலப்போக்கில் நாம் சாம்பிராணி வில்லைகளுக்கு மாறி விட்டாலும் இன்றளவிலும் இன்னும் பெரியவர்கள் இருக்கின்ற வீடுகளில் வாரம் ஒருமுறையாவது வீடு முழுவதும் சாம்பிராணி புகைப் போடுகின்றனர்.

பெண்களின் கருப்பை சார்ந்த அனைத்து பாதிப்புகளையும் சரி செய்வதுடன் சாம்பிராணி புகையை சுவாசிக்க, அது உடலில் உள்ள இராஜ உறுப்புகள் அனைத்தையும் எந்த வியாதியும் அணுகாமல் காத்து வரும். தற்போதைய ஆய்வுகளில் குங்கிலிய, சாம்பிராணி மரப் பிசின்களில் உள்ள வேதிப்பொருட்கள் புற்று வியாதிகளை சரியாக்கக்கூடிய மருத்துவ தன்மை மிக்கவை என ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.

இதையே நம் முன்னோர் அன்றே கூறி வீடுகளில் வாரம் இருமுறை சாம்பிராணி புகைக்கச் சொல்லி அறிவுறுத்தி வந்தனர். சாம்பிராணி புகை நச்சுக்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் மிக்கது. எனவே, வீடுகளில் நாம் பயன்படுத்தும் எல்லா இடங்களிலும் சாம்பிராணி புகையிட்டு வர, நோய் கிருமிகள் விலகி விடும்.

1)கருங்காலி 2)மருதாணி விதை 3)கஸ்தூரி மஞ்சள் 4)சாம்பிராணி 5)செந்நாயருவி 6)இலுப்பை 7)புனுகு 8)புங்கன் 9)குங்கிலியம் 10)வெள்ளெருகு 11)ஏலக்காய் 12)வெண்கடுகு 13)கோராசனை 14)கோஷ்டம் 15)நொச்சி 16)ரோஜா இதழ்கள் 17)ஆலமர பட்டை 18)சந்தனம் 19)அகில் 20)தேவதாரு 21)துளசி 22)தாமரை 23)லாமிச்சை வேர் 24)மைகாசி 25)தும்பை 26)அருகம்புல் 27)வேப்பிலை 28)வில்வ இலை 29)நன்னாரி 30)வெட்டிவேர் 31)நாய்கடுகு 32)ஆலங்குச்சி 33)அரசங்குச்சி 34)நாவல் குச்சி

இந்த மூலிகை கலவையை கொண்டு தூபம் போடுவதால் நோய் தொல்லை நீங்கும். எந்த விஷக் கிருமிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டில் தங்காது.

இவை பெரும்பாலும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஆகையால் முடிந்தளவு இவற்றில் எதைஎதை சேர்க்க முடியுமோ அவற்றை கொண்டு நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பல பேருக்கு தெரிந்திருக்கும், 1984 டிசம்பர் 3ல் ஏற்பட்ட மத்திய பிரதேசத்தின் போப்பால் விஷவாயு கசிவின் பொழுது பல உயிர்கள் காவு வாங்கப்பட்டன. அவற்றில் ஹோமங்கள் நடைப்பெற்ற வீடுகளில் மட்டும் பெரிதாக பாதிப்பு உண்டாகவில்லை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

ஆகையால் சமய முறைகளை தாண்டி நம்மை கலக்கமுற செய்யும் கொரானாவை விரட்ட முடிந்தவரை இவற்றில் இருந்து கிடைக்கும் மூலிகைகளை வாங்கி வீட்டில் சாம்பிராணி தூபம் போட்டு தைரியமாக இருக்கலாம். இம்மூலிகைகளில் அநேகப் பொருட்கள் ஹோமப் பொருட்களோடு சேர்ந்தனவாம்.

ஸோ... கொரோனாவை விரட்ட மட்டுமல்ல எந்த ஒரு நோய் கிருமியை விரட்டவும் இவ்விஷயங்களை சலிப்பில்லாமல் தொடர்ந்து செய்து ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்.

நான் இங்கே பகிர்வதை சென்ற வருடம் லாக்டவுன் அறிவித்த அன்றே என் முகநூல் டைம்லைனில் பகிர்ந்து இருந்தேன். அப்போது இருந்ததை விட நிலைமை இப்போது இன்னமும் மோசமாகி இருப்பதால் இன்னொரு முறை இங்கே பகிர்கின்றேன் சகோஸ், நம் வாழ்நாளில் விடாது இதை பின்பற்றி அடுத்த தலைமுறைக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

வாழ்க வளமுடன்!!! வாழ்க வையகம்!!!

என்றும் அன்புடன்,

தீபா பாபு
 




Last edited:

SahiMahi

புதிய முகம்
Joined
Apr 23, 2021
Messages
10
Reaction score
22
Location
Chennai
Well said...ஹோமங்கள் பற்றி கூறியது அருமை.நமது முன்னோர்கள் ஒன்றும் மூடர் அல்ல...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top