• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கொரோனா - சில சந்தேகங்களும் பதில்களும்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1. எனக்கு காய்ச்சல் வந்து ஒரு வாரம் ஆச்சு.. இன்னைக்கு தான் Positive ன்னு வந்துச்சு. இன்னையில் இருந்து 14 நாள் தனிமையில் இருக்கணுமா ?


இல்லை. அதாவது உங்கள் உடலில் முதல் அறிகுறி என்று தோன்றியதோ அன்றிலிருந்து 14 நாட்கள் கணக்கு. கரோனா வைரஸ் உங்கள் உடலில் 10-12 நாட்கள் வரை மட்டுமே உயிர் வாழும் தன்மை கொண்டது. எனவே தான் 14 நாட்கள் கணக்கில் ஒருவர் மீண்டும் RT PCR பரிசோதனை செய்தால் கூடுமான வரையில் 12 ம் நாள் க்கு பிறகு Negative என்று வருகிறது. அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலில் இல்லை என்று அர்த்தம்.



2. எனக்கு Negative ன்னு லாம் வந்துடிச்சி.. 14 நாளுக்கு பிறகும் இருமல் மட்டும் போகவே மாட்டேங்குது அப்ப என் உடலில் வைரஸ் இருக்கு ன்னு அக்கம் பக்கம் விஞ்ஞானிகள் சொல்கிறார்களே உண்மையா ?


இல்லை. கரோனா வைரஸ் பாதிக்கும் முக்கிய உறுப்பு நுரையீரல்.. அது ஏற்படுத்தும் தாக்கம் நீண்ட நாட்களுக்கு இருக்கும். அதாவது உங்கள் நுரையீரல் கரோனா வைரசால் பாதிக்கபடுவதால் நுரையீரல் Allergic Reaction க்கு உள்ளாகிறது. அந்த Allergy யினால் உருவாகுவது தான் இந்த இருமல். வைரஸ் விட்டு சென்ற பாதிப்பு நுரையீரலை Irritate செய்து கொண்டே இருக்கும் வரை இந்த இருமல் தொடரும். அது எவ்ளோ பகுதியை பாதித்துள்ளது என்பதை அறிய CT Scan உதவுகிறது. 14 நாட்களுக்கு பிறகு இருக்கும் இந்த நீடித்த இருமல் என்பது சிலருக்கு ஒரு மாதமோ இரண்டு மாதங்கள் வரை தொடரலாம்.



3. நான் தனியறையில் 14 நாட்கள் இருந்தேன். அந்த அறையை எங்கள் வீட்டு உறவினர்கள் வீட்டில் உள்ளவர்கள் மருந்து அடிச்சு சுத்தம் செய்யணும் ன்னு சொல்றாங்க ?


அறிவியல் அறிவு கொண்டவர்களுக்கு தெரியும் வைரஸ் உயிர் வாழ ஓர் உயிருள்ள ஒம்புயிரி (Host) தேவை என்று. நம் உடலை விட்டு நீங்கிய பிறகு அது எங்கே போகும் ? அறையிலோ நாம் உடுத்திய உடையிலோ இருக்க அது என்ன முட்டை போடும் கொசு வா ? அறையை சுத்தம் செய்வதில் தப்பு இல்லை..ஆனா அங்க வைரஸ் இருக்கும் ன்னு நம்புவது வடிகட்டிய முட்டாள்தனம்.



4. CRP Test ன்னு ஒன்னு எடுக்கிறாங்களே தனியார் மருத்துவமனையில் ? அது எதுக்கு.. அது தேவையா ?


C-reactive Protein என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் ஒருவகைப் புரதம். உடலில் தொற்றோ, அழற்சியோ ஏற்படும்போது அதற்கு எதிர்வினையாற்றி கல்லீரல், சி.ஆர்.பி புரதத்தை வெளியேற்றி ரத்தத்துக்குள் அனுப்பும். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் படியும் இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படியும் கரோனா நோயாளிக்கு C-Reactive Protein பரிசோதனை செய்ய சொல்லி இது வரை சொல்லவில்லை. ஆனாலும் தனியார் மருத்துவமனைகள் இதை Discharge செய்யும் முன் ஏன் இதை செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். லேசான மற்றும் மிதமான கரோனா நோயாளிகளுக்கு இந்த பரிசோதனை தேவையே இல்லை. இந்த பரிசோதனை எந்த அரசு மருத்துவமனையும் செய்வதில்லை. உங்கள் கையில் லட்சங்கள் இருந்தால் அல்லது மருத்துவமனைக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைத்தால் இது போன்ற கரோனா க்கு தேவை இல்லாத பரிசோதனை (தீவிர தொற்றாளர்கள் தவிர) செய்து நேரத்தையும் பணத்தையும் கரைக்கலாம்.



5. நான் முதல் டோஸ் தடுப்புசி எடுத்து கொண்டேன். பிறகு எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. எப்போது இரண்டவது டோஸ் எடுக்க வேண்டும் ?


அரசின் வழிகாட்டுதல் படி மூன்று மாதங்களுக்கு பிறகு எடுத்துகொள்ளலாம்.



6. எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மீண்டு விட்டேன். எப்போது தடுப்புசி போட வேண்டும் ?


பொதுவாக கரோனா தொற்று ஏற்பட்டு 21 நாட்களுக்கு பிறகு உங்கள் உடலில் IgG எனப்படும் நோய் எதிர்ப்பான்கள் உருவாகி விடும். ஆனால் நாளடைவில் இது காணாமல் போகிறது என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். அந்த கால அளவு 6-9 மாதங்கள் வரை இருக்கிறதாம். எனவே மூன்று மாதங்களுக்கு பிறகு நீங்கள் எபோது வேண்டுமானாலும் தடுப்பூசி எடுத்து கொள்ளலாம்.



7. நான் இப்போது நெகட்டிவ். என்னால் இன்னொருவருக்கு இனிமேல் கரோனா வைரஸ் பரவுமா ?


நீங்கள் நெகட்டிவ் என்றாலே உங்கள் உடலில் கரோனா வைரஸ் உடலில் இல்லை என்று அர்த்தம். பிறகு எப்படி உங்கள் மூலம் பிறருக்கு பரவும் ??



8. நான் கரோனா தொற்றில் இருந்து மீண்ட பிறகும் என்னை சமூகம் ஒதுக்கி வைத்தே பார்க்கிறது ?


இயல்பு தான். அறிவியல் பார்வை இல்லாத நபர்கள் அறிவியல் குருடு என்றே கருதப்படுவார்கள். அவர்களுக்கு சாக்கடையும் ஒன்றாகத் தான் தெரியும். ஓடும் சுத்தமான பால் போன்ற ஆறும் ஒன்றாகத் தான் தெரியும். “போவியா” என்று நகர்ந்து கொண்டே இருங்கள்



9. ஆவிபிடித்தல் கரோனவை ஒழிக்குமா ?


கரோனா வைரஸ் க்கு வாய் இருந்தால் கெக்க பிக்கே என்று சிரித்து உருண்டு விடும். ஆவி பிடித்தல் உங்கள் மூச்சு குழாயை சுத்தம் வேண்டுமானால் செய்யலாம். கரோனா ஒழிப்பிற்கு சல்லி பைசா க்கு தேறாது



10. எப்போது மருத்துவமனை நாட வேண்டும் ?


Pulse Oximeter ல் SpO2 94 or 92 க்கு கீழ் உங்கள் ஆக்சிஜன் லெவல் இருந்தால் மட்டுமே மருத்துவமனையை நாட வேண்டும். தேவை இல்லாமல் தீவிர பாதிப்பில் உள்ள ஒருவருக்கு கிடைக்க வேண்டிய இடத்தை நீங்கள் ஆக்கிரமித்து கொள்ளாதீர்கள்



11. D-Dimer Test லாம் கரோனா நோயாளிக்கு தனியார் மருத்துவமனையில் எடுக்கிறார்களே அவசியமா ?


ரத்த உறைதலுக்கான பரிசோதனை இது. தீவிரமான நோய் தொற்று ஏற்பட்டால் மட்டுமே இது போன்ற பரிசோதனை உதவும். எல்லோருக்கும் இந்த பரிசோதனை அவசியமே இல்லை.



12. Procalcitonin, Ferritin, IL-6, HRCT இந்த பரிசோதனைகள் எல்லாம் அவசியமா ?


அனைவருக்கும் இந்த பரிசோதனை செய்ய சொல்லி WHO வோ அல்லது மத்திய அரசோ சொல்லவில்லை. தீவிர நோய் தொற்று ஏற்பட்டு அவர்களுக்கு மேலும் தீவிர நிலைக்கு செல்லாமல் தடுக்க வேண்டுமானால் இந்த பரிசோதனைகள் ஆய்வு கை கொடுக்கலாம். ஆனால் இன்று தனியார் மருத்துவமனைகள் இதை எல்லாம் எடுத்து கரோனா நோயாளியை சக்கையாக பிழிஞ்சு தள்ளி செல்லும் போது *** Card ல் பணத்துடன் சென்றால் திரும்ப வரும் போது *** Card மட்டும் தான் மிஞ்சும். பணம் இருக்காது.. இந்த பரிசோதனையின் அறிவியல் பின்புலம் பற்றி நோயாளிக்கு தெரியாது. அந்த நோயாளிக்கு தேவையே இருக்காது அந்த பரிசோதனைகள். இருந்தும் Bill எகிற வைத்து விடுகின்றனர் என்பது தான் உண்மை.. அவசியம் என்றால் மட்டுமே இந்த பரிசோதனைக்கு நாம் ஒப்பு கொள்ள வேண்டும்



13. இது வரை உலக அளவில் கரோனாக்கு பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகள் என்ன ?


சில நூறு ரூபாய்களே செலவு வைக்க கூடிய Paracetamol ம் Antibiotics ம் மட்டுமே



14. அப்ப Dexamethosone/Remdesivir லாம் ?


Only Critical Patients. தீவிர நிலையில் உள்ளவர்கள் மட்டுமே இந்த மருந்தை எடுத்து கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனமும் மத்திய அரசு வழிகாட்டி இருக்கிறது. அதுவும் இந்த மருந்து குணபடுத்தும் என்று எந்த உத்திரவாதமும் அளிக்கவில்லை. எனவே தேவை இல்லாமல் எல்லாரும் எடுத்து உள்ள உடலுக்கும் உலை வைத்து கொள்ளாதீர்கள்.



15. இறுதியாக ?


கரோனா தொற்று ஏற்பட்ட பலருக்கு தொடர்ந்து இருமல் இருக்கும். பயப்பட வேண்டாம். காரணம் நுரையீரல் அழற்ச்சி. (Lung Inflammation). ஒரு விபத்தில் கை கால் எலும்பு உடைவதும் கரோனாவால் நுரையீரல் பாதிகப்படுவதும் ஒன்று தான். ஒன்று சேர கொஞ்சம் காலம் எடுக்கும். ஆனால் அது வரை ஓடுவது, பளு தூக்குவது, மாடி படி ஏறுவது,AC யில் இருப்பது என நுரையீரலுக்கு அதிக பளு கொடுத்தால் சீக்கிரம் நுரையீரல் குணமடைய வாய்ப்பில்லை. நல்ல ஓய்வு தேவை. அதே நேரத்தில் இருமலை தவிர்க்க Chlorpheniramine, Dextromethorphan கொண்ட Syrup உட்கொள்வதன் மூலம் சரி செய்யலாம் என மருத்துவ உலகம் பரிந்துரை செய்கிறது.

-படித்ததை பகிர்கிறேன்
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,403
Reaction score
22,049
Location
Tamil Nadu
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....

ரொம்ம்ம்ம்ம்ப ரொம்ப நன்றி சகோதரி...
எளிதாக எல்லோருமே புரிந்து கொள்ளக்கூடிய விளக்கங்கள்...
என்னால் முடிந்த வரை பகிர்கிறேன்...
நன்றி 🌹
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ரொம்பவும் உபயோகமான தகவல். நன்றி சகோதரி.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top