• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கொரோனா பரவல் அதிகரிப்பின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SM Support Team

Moderator
Staff member
Joined
Apr 7, 2019
Messages
154
Reaction score
950
1618814405648.png

கொரோனா பரவல் அதிகரிப்பின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.
பதிவு: ஏப்ரல் 19, 2021 11:47 AM
மும்பை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,61,919 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,44,178 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,29,53,821 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 19,29,329 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 12,38,52,566 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருகிற சூழலில் பரிசோதனைகளும் அதிகளவில் நடத்தப்படுகின்றன. விழிப்புணர்வு பிரசாரம், தடுப்பூசி திட்டம் என பல உத்திகள் வகுத்து தொற்று பரவலை தடுக்க முயற்சித்தபோதும், எதற்கும் கட்டுப்படாமல் பரவல் அதிகரித்துக்கொண்டே போகிறது. கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்படுகிற உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரிப்பது கவலைதரக்கூடிய அம்சமாக மாறி வருகிறது.

கொரோனா பரவலைத் தடுக்கப் பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன் எதிரொலியாகப் பங்குச்சந்தைகளில் இன்றைய வணிகநேரத் தொடக்கம் முதலே வீழ்ச்சி ஏற்பட்டது. 9.40 மணியளவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1409 புள்ளிகள் சரிந்து 47 ஆயிரத்து 423 ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தை நிப்டி 392 புள்ளிகள் சரிந்து 14 ஆயிரத்து 226 ஆக இருந்தது. தனியார் வங்கிகளின் பங்கு விலை 5 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்து உள்ளது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top