• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சகுந்தலா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
இந்தக் கட்டுரை சாகுந்தலம் கதாபாத்திரம் பற்றியது.


இந்து புராணமாகிய மகாபாரதத்தின் ஒரு கதாபாத்திரமே சகுந்தலை அல்லது சகுந்தலா (சமற்கிருதம்: शकुन्तला, ஷகுந்தலா ). இவர் பரதப் பேரரசனின் தாயாரும், பௌரவா வம்சத்தை நிறுவிய துஷ்யந்தனின் மனைவியுமாவார். இவரை பற்றிய கதை, காளிதாசன் இயற்றியஅபிக்ஞான சாகுந்தலம் என்ற நூலில் நாடக வடிவில் இயற்றப்பட்டது.



பெயர் வரலாறு

கன்வ முனிவர் காட்டிற்கு சென்ற போது, சகுந்தல பறவைகளால் சூழப்பட்டிருந்த குழந்தையை கண்டெடுத்தார். அதனால் அவளுக்கு பறவைகளால் காப்பாற்றப்பட்டவள் என்னும் பொருள்படும் சகுந்தலா (சமற்கிருதம்: शकुन्तला / शकुन्तळा) என்னும் பெயரை சூட்டினார்.


வனத்தின் தனிமையில் சாகுந்தங்களால் (பறவைகளால்) அவள் சூழப்பட்டிருந்தாள்,
எனவே சகுந்தலா (பறவைகளால் காக்கப்பட்டவள்) என என்னால் பெயரிடப்பட்டாள்.


பிறப்பும் குழந்தைப்பருவமும்

சகுந்தலா விசுவாமித்திர முனிவருக்கும் மேனகை என்னும் வானுலகத் தேவமங்கைக்கும் பிறந்தவள் ஆவாள். மாபெரும் முனிவரான விசுவாமித்திரரின் ஆழ்ந்த தவத்திலிருந்து அவரைத் திசைதிருப்பத் தேவர்களின் தலைவனான இந்திரன் அளித்த உத்தரவின்பேரில் ம்ண்ணுலகம் வந்தவள்தான் மேனகை. அவள் தன் நோக்கத்தில் வெற்றிபெற்று அவரால் ஒரு குழந்தையையும் பெற்றுக்கொள்கிறாள். பல ஆண்டுகளாக கடுமையான ஆச்சாரத்தால் தான் பெற்ற பலன்களை இழந்துவிட்டதால் கோபமடைந்த விசுவாமித்திரர் அந்தக் குழந்தையிடமிருந்தும் தாயிடமிருந்தும் விலகி தன்னுடைய பணிக்கு திரும்புகிறார். தன்னால் அந்தக் குழந்தையை அவரிடம் விட்டுச்செல்ல முடியாது என்பதையும், மேல் உலகத்திற்கு திரும்ப வேண்டி இருந்ததையும் உணர்ந்துகொண்ட பின்னர் புதிதாகப் பிறந்த சகுந்தலாவை மேனகா காட்டிலேயே விட்டுச்செல்கிறாள். பறவைகளால் சூழப்பட்டு பாதுகாக்கப்படும் சகுந்தலாவை கன்வ முனிவர் கண்டெடுக்கிறார், இதனால் அவளுக்கு அவர் சகுந்தலா என்று பெயரிடுகிறார்.[1] (சமற்கிருதம்: சகுந்தல, தமிழ்: பறவைகளால் பாதுக்கப்பட்ட) அக் குழந்தையை இந்தியாவிலுள்ள உத்தர்கண்டில் இருக்கும் கோத்வாரா நகரத்திலிருந்து ஏறத்தாழ 10 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் இமய மலையின் ஷிவாலிக் மலைகளில் ஓடும் மாலினி ஆற்றின் கரைகளில் அமைந்துள்ள "கன்வ ஆசிரமம்" எனப்படும் தன்னுடைய ஆசிரமத்திற்கு எடுத்துச்செல்கிறார். இந்த செய்தியை காளிதாசர் மாலினி ஆற்றின் கரைகளில் அமைந்துள்ள கன்வ ரிஷி ஆசிரமத்தை விவரிக்கும் தனது புகழ்பெற்ற அபிஞான சகுந்தலம் என்ற காப்பியத்தில் வலுப்படுத்துகிறார்.



துஷ்யந்தனுடன் சந்திப்பு

மன்னர் துஷ்யந்தன் தன்னுடைய படையினருடன் காட்டில் பயணித்த போது சகுந்தலாவை சந்திக்கிறார். தன்னுடைய அம்பினால் காயமடைந்த மானைத் தேடி ஆசிரமத்திற்கு வரும் அவர், சகுந்தலாவின் செல்லப்பிராணியாக இருக்கும் மானிற்கு மருந்திடுவதை பார்த்து அவர் மீது காதல் கொள்கிறாள் சகுந்தலை. அவர் அந்த மானைக் காயப்படுத்தியற்காக பணிவோடு மன்னி்ப்பு கேட்டுக்கொண்டு ஆசிரமத்தில் கொஞ்ச நாட்களை செலவிடுகிறார். அவர்கள் காதல் வயப்படுகின்றனர் என்பதோடு துஷ்யந்தன் சகுந்தலாவை ஆசிரமத்திலேயே காந்தர்வ திருமணம் செய்துகொள்கிறார். தலைநகரத்தில் உருவான கலகங்களின் காரணமாக சில நாட்களில் சென்றுவிடும் துஷ்யந்தன் தங்களுடைய காதலின் அடையாளச் சின்னமாக சகுந்தலாவிடம் ஒரு அரச மோதிரத்தைக் கொடுத்து, தான் விரைவிலேயே திரும்பி வருவதாகச் சத்தியம் செய்துவிட்டுச் செல்கிறார்.



சாபம்

நாள்தோறும் சகுந்தலா தன்னுடைய கணவனை நினைத்து கனவு காண்கிறாள். இதனால் கவனம் சிதறுகிறது. ஒருநாள் வலிமை மிகுந்த முனிவரான துர்வாசர் ஆசிரமத்திற்கு வருகிறார். ஆனால் துஷ்யந்தனைப் பற்றிய தன்னுடைய சிந்தனைகளின் காரணமாக சகுந்தலா அவருக்கு உரிய வரவேற்பு அளிக்க தவறிவிடுகிறாள். இந்த சிறிய அவமதிப்பால் கோபமடைந்த மாமுனி அவள் கனவு காணும் நபர் அவளை மறந்தேவிடுவார் என்று சபிக்கிறார். அவர் கோபத்தோடு புறப்படுகையில் சகுந்தலாவின் தோழியர்களுள் ஒருத்தி தன்னுடைய தோழியின் கவனச்சிதறலுக்கான காரணத்தை அவருக்கு விரிவாக எடுத்துரைக்கிறாள். தன்னுடைய மிதமிஞ்சிய கோபத்தில் அவ்வளவு நியாயமில்லை என்பதை உணர்ந்த மாமுனி தன்னுடைய சாபம் நீங்க பரிகாரம் சொல்கிறார். சகுந்தலாவை மறந்துவிட்ட அந்த நபர், அவர் அவளுக்கு தனிப்பட்ட முறையில் வழங்கிய அடையாளச் சின்னத்தை காட்டினால் மட்டுமே அவளை குறித்த நினைவைப் பெறுவார் என்று கூறிவிடுகிறார்.

காலம் செல்கிறது, சகுந்தலாவிற்கு துஷ்யந்தன் ஏன் இன்னும் தன்னைத் தேடி வரவில்லை என்று தெரியவில்லை, முடிவில் தன்னுடைய தந்தை மற்றும் சிலருடன் தலைநகரத்திற்கு செல்ல தீர்மானிக்கிறாள். போகும் வழியில் அவர்கள் ஒரு சிறிய பரிசலில் ஆற்றைக் கடந்துசெல்ல வேண்டியிருக்கிறது, ஆற்றின் அடர்நீலத்தால் கவரப்பட்ட சகுந்தலா தண்ணீரில் தன்னுடைய கையை விடுகிறாள். அவளுடைய மோதிரம் அவளுக்குத் தெரியாமலேயே விரலில் இருந்து நழுவிவிடுகிறது.

துஷ்யந்தனின் அரண்மனைக்கு வந்த பின்னர் சகுந்தலா நோகடிக்கப்படுகிறாள். தன்னுடைய கணவன் தன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாததையும், தன்னைக் குறித்த எதையும் அவரால் நினைவுபடுத்திக்கொள்ள முடியாததையும் கண்டு திகைக்கிறாள். தான் அவருடைய மனைவிதான் என்று அவருக்கு நினைவுபடுத்த அவள் முயன்றாலும், மோதிரம் இல்லாமல் துஷ்யந்தனால் அவளை அடையாளம் காண இயலவில்லை. அவமானமடைந்த அவள் காட்டிற்குத் திரும்பி, தன்னுடைய மகனைக் கூட்டிக்கொண்டு தானே காட்டின் ஒரு பகுதியில் குடியேறுகிறாள். அவளுடைய மகன் பரதன் வளரும்வரை அவள் அங்கேயே தன்னுடைய காலத்தை செலவிடுகிறாள். காட்டு விலங்குகளால் மட்டுமே சூழப்பெற்ற பரதன் பலம்பொருந்திய இளைஞனாகவும், புலிகள் மற்றும் சிங்கங்களின் வாய்களைப் பிளந்து அவற்றின் பற்களை எண்ணிவிடும் திறன்கொண்டவனாகவும் வளர்கிறான்.



அங்கீகாரம்

அதேசமயத்தில், ஒரு மீனவன் தான் பிடித்த மீனின் வயிற்றில் அரச மோதிரம் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைகிறான். அரச முத்திரையை அடையாளம் கண்ட அவன அந்த மோதிரத்தை அரண்மனைக்கு எடுத்துச்செல்கிறான், அதைப்பார்த்தவுடன் துஷ்யந்தனுக்கு தன்னுடைய இனிய மனைவி குறித்த நினைவுகள் திரும்பி வருகின்றன. அவன் உடனடியாக அவளைக் கண்டுபிடிக்கத் தீர்மானித்து அவளுடைய தந்தையின் ஆசிரமத்திற்கு வருகிறான், அங்கு அவள் நீண்டகாலமாகவே இல்லை என்பதை அறிகிறான். தொடர்ந்து அடர்ந்த காட்டிற்குள் தன்னுடைய மனைவியைத் தேடும்பொழுது காட்டில் ஒரு ஆச்சரியமான காட்சியைக் காண்கிறான்: ஒரு இளைஞன் சிங்கத்தின் வாயை அகலத் திறந்து அதன் பற்களை எண்ணுவதில் மும்முரமாக இருக்கிறான். அவனுடைய அற்புதமான துணிச்சலாலும் வலிமையாலும் ஆச்சரியமுற்ற அரசர் அந்தப் இளைஞனைப்ப் பாராட்டி அவனுடைய பெயரைக் கேட்கிறான். இளைஞன் தன்னுடைய பெயர் பரதன் என்றும், துஷ்யந்த அரசனின் மகன் என்றும் சொல்வதைக் கேட்டு ஆச்சரியமடைகிறான். அவ்விளைஞன் துஷ்யந்தனை சகுந்தலாவிடம் கூட்டிச்செல்கிறான், இவ்வாறு அந்தக் குடும்பத்தினர் ஒன்றிணைகின்றனர்.

மகாபாரதத்தில் சற்றே மாறுபட்ட வடிவத்தில் இந்தக் கதை சொல்லப்படுகிறது, சகுந்தலாவை துஷ்யந்தன் நினைவிற்கு கொண்டுவர தவறுவது உண்மையில் இந்த திருமணத்தின் நேர்மைத்தன்மை குறித்து வதந்திகள் பரவலாம் என்று அச்சம்கொள்வதால் அவரை தன்னுடைய உண்மையான மனைவியாக ஏற்றுக்கொள்ள மறுத்து திட்டமிட்டு செய்யப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.

ஒரு மாற்று வடிவம் என்னவெனில், துஷ்யந்தன் சகுந்தலாவை அடையாளப்படுத்த தவறிய பின்னர் அவளுடைய தாயாரான மேனகா சொர்க்கத்திற்கு சகுந்தலாவைக் கூட்டிச்செல்கிறார். அங்கு அவர் பரதனை பெற்றெடுக்கிறார். துஷ்யந்தன் தேவர்களுடன் போரிட வேண்டிய நிலை வருகிறது. அதில் அவர் வெற்றி பெறுகிறார். அவருக்கு அதற்கான பரிசு தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் மீண்டும் சேர்வதே. ஒரு இளைஞன் சிங்கத்தின் பற்களை எண்ணுகின்ற காட்சி ஒன்றை அவர் காண்கிறார். அவ்விளைஞனின் கைக் கவசம் அவன் கையிலிருந்து நழுவி விழுந்துவிடுகிறது. பரதனின் தாய் அல்லது தந்தையால் மட்டுமே அவனுடைய கையில் அதை மீண்டும் பொருத்த முடியும் என்று தேவர்களால் துஷ்யந்தனுக்கு சொல்லப்படுகிறது. துஷ்யந்தன் அதை வெற்றிகரமாக அவனுடைய கையில் பொருத்திவிடுகிறார். இதனால் குழப்பமடைந்த பரதன் அந்த அரசனை தன்னுடைய தாயார் சகுந்தலாவிடம் அழைத்துச்சென்று அவர் தன்னுடைய தந்தை என்று கூறுவதாக தெரிவிக்கிறான். சகுந்தலா தேவி அதை ஆமோதித்து துஷ்யந்தனே பரதனின் தந்தை என்று கூறுகிறார். இவ்வாறு அந்தக் குடும்பத்தினர் சொர்க்கத்தில் ஒன்றுசேர்கின்றனர். அத்துடன் அவர்கள் பூவுலகிற்கு திரும்பிவந்து பாண்டவர்கள் பிறப்பிற்கு முன்பு பல ஆண்டுகளுக்கு ஆட்சி செய்கின்றனர்.


 




Aarthi

முதலமைச்சர்
Joined
Dec 4, 2018
Messages
11,352
Reaction score
28,967
Location
Tamizhnadu
Bharadhan son Bheeshmar ah ka.....something oru storyla padichruken.... thushyandhan generation than panja paandava's apdinu ..??
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
Bharadhan son Bheeshmar ah ka.....something oru storyla padichruken.... thushyandhan generation than panja paandava's apdinu ..??
Bharathan son santhanu avaroda son than bishmar bharathan kadahaiyai la irunthu than mahabharatam start agudhu ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top