• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சக்கரங்கள் (Chakras)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
170
Reaction score
18
Location
Coimbatore
1643439637643.png
மனித உடல் கண்களுக்கு புலனாகும் ஸ்தூல சரீரம் மற்றும் புலனாகாத சூக்கும சரீரம் ஆகியவற்றினைக் கொண்டது. சக்கரங்கள் என்பவை மனித உடலின் சூக்கும சரீரத்தில் அமைந்த சக்தி மையங்களாகும். இவை மொத்தம் ஏழு, அவை மூலாதாரம், சுவாதிஷ்டானம், ம்ணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்கினை, துரியம் என்பவை ஆகும். இது முதுகெலும்புத்தண்டின் கீழிருந்து மேல் நோக்கி நெடுகிலும் வரிசையாக அமைந்துள்ளது. இந்த சக்கரங்கள் உண்மையில் ஸ்தூல உடலில் கிடையாது, ஆனால் சூக்கும உடலில் உண்டு.

மனிதனின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் இந்த சக்கரங்கள் கட்டுப்படுத்துகின்றன. இது ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான தன்மைகளையும், உணர்வுகளையும் மனதுக்கும்,உடலுக்கும் அளிக்கக்கூடியவையாகும்.

இந்த அதிசய சக்கரங்களைப் பற்றி பார்ப்போம்,

ஒவ்வொரு சக்கரமும் தாமரை வடிவினைக்கொண்டவை, சாதாரணமாக இவைகள் மலராத நிலையில் உள்ளன, யோகப் பயிற்சியின் மூலம் குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இவை மலர்கின்றன.

1643441102704.png

ஒவ்வொரு சக்கரத்திற்கும் பல இதழ்கள் உண்டு. இந்த இதழ்களின் எண்ணிக்கை ஆரம்ப நிலையிலிருந்து, அதாவது மூலாதாரத்திலிருந்து படிப்படியாக மோல்நோக்கி அதிகரிக்கும். ஒவ்வொரு சக்கரங்கத்திற்க்கும் ஒரு ஆண் தெய்வம், மந்திரம், நிறம் ஆகியவை உண்டு. மேலும் சக்கரத்திலுள்ள தாமரையின் ஒவ்வொரு இதழுக்கும் ஒரு மந்திர எழுத்து இருக்கிறது. பஞ்ச பூதங்களான நிலம்,நீர்,காற்று,நெருப்பு மற்றும் ஆகாயம் இவற்றுடன் ஒவவொறு சக்கரமும் தொடர்பு கொண்டுள்ளது.

இவ்வாறு ஆண் தன்மையுடைய இச்சக்கரத்தில் பெண் வடிவாகிய குண்டலினி சக்தியானது பாயும்போது ண்டலினி சக்தியின் பெயர் சக்கரத்திற்கு ஏற்றார்போல் மாறுபடுகின்றது. அதுவே ஒவ்வொரு சக்கரத்தின் பெண் தெய்வமாகும். ஆண் வடிவாகிய சக்கரத்தில் பெண் வடிவாகிய குண்டலினி சக்தியானது சேரும்போது உடலுக்கும், மனதுக்கும் புதிய சக்திகளையும், மாற்றங்களையும் தருகின்றன. இதுவே யோகத்தினால் கிடைக்கும் பயன் ஆகும்.

சூக்கும உடலில் காணப்படும் இந்த சக்கரத்தின் இருப்பிடங்களை ஸ்தூல உடலுடன் தொடர்பு படுத்தி தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். அப்போதுதான் மிகச்சரியாக குண்டலினி யோக தியானத்தினை பிழையின்றி செய்யமுடியும்.

ஆண்களுக்கு மூத்திரத்துவாரத்துக்கும் மலத்துவாரத்துக்கும் உள்ள இடைவெளியிலும், பெண்களுக்கு பெண்குறியின் உட்புறம் கருப்பைவாசல் அருகிலும் மூலாதாரச் சக்கரமானது அமைந்துள்ளது.

மூலாதாரச்சக்கரத்திற்கு சற்று ஏற்புறமாக,சுமார் நான்கு விரல் மேலே சுவாதிஷ்டானம் உள்ளது.

மூன்றாவது சக்கரமான ம்ணிபூரகம் நாபியின் பின்னே முதுகுத்தண்டில் அமைந்துள்ளது.

இதன் பின்னால் இதயத்துக்கு நேர் பின்புறம் முதுகுத்தண்டில் அனாகத சக்கரமானது அமைந்துள்ளது.

விசுக்தி சக்கரம் மைய கழுத்துக்குப் பின்னால் அதே முதுகுத்தண்டில் அமைந்துள்ளது.

ஆக்கினை சக்கரம் முதுகுத்தண்டின் உச்சியில், இரு புருவங்களுக்கும் இடையே நேர் பின்புறம் அமந்துள்ளது.

கடைசியில் துரியமானது தலையின் மேற்புறம் கவிழ்ந்த நிலையில் ஆயிரம் இதழ்களுடன் காணப்படுகிறது.

மேலும் மூலாதாரமானது நிலத்துடனும், சுவாதிஷ்டானம் நீருடனும், மணிபூரகம் காற்றுடனும், அனாகதம் நெருப்புடனும், விசுக்தி ஆகாயத்துடனும் தொடர்பு கொண்டுள்ளன.
 




Last edited:

SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
170
Reaction score
18
Location
Coimbatore
மூலாதாரம்

1643430347422.png


அமைப்பு : இது நான்கு இதழ்கள் கொண்ட சிவப்பு நிறத்தாமரை ஆகும். கறுப்பு நிறலிங்கத்தை மூன்றரைச் சுற்றுக்கள் சுற்றப்பட்ட பொன்னிறக் குண்டலினி சர்ப்பத்தை மையத்தில் கொண்டது. இச்சக்கரத்தில் இருந்து நான்கு முக்கிய நாடிகள் வெளிக் கிளம்புகின்றன. அவை தாமரையின் நான்கு இதழ்கள் போல் தோற்றமளிக்கும். ஒவ்வொரு நாடியின் அசைவினால் ஏற்படும் சப்தங்கள் "வ ஸ ச ஷ" என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.

இடம் : மூலாதாரச் சக்கரமானது பிறப்பு உறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது. அது இடை, பிங்கலை, சுழுமுனை என்கிற மூன்று நாடிகள் சேரும் இடத்தில் உள்ளது. இன்னும் துல்லியமாக சொல்வதானால் ஆசனத்திற்கு இரண்டு விரற்கிடை மேலும், பிறப்பு உறுப்புக்கு இரு விரற்கிடை கீழும் உள்ள நான்கு விரற்கிடை அளவுள்ள இடத்திலேயே மூலாதார சக்கரம் இருக்கின்றது.

மூலக்கூறு : பூமி

ஆண் தெய்வம் : பிரம்மா, இவர் படைப்பவர், கோதுமை நிற மேனியுடன் மஞ்சள் நிற வேட்டியும், பச்சை நிற துண்டும் அணிந்து நான்கு தலையும், நான்கு கைகளுடனும் காணப்படுகிறார். இவரின் மேற்புற இடக்கையில் தாமரை மலரும், கீழ்ப்புற இடக்கையில் புனித வேதத்தையும், மேற்புற வலக்கை அபாய முத்திரையையும், கீழ்ப்புற வலக்கை அமுதம் உள்ள பாத்திரத்தையும் கொண்டுள்ளது.

பெண் தெய்வம் : மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர் டாகினி/தாகினி. பளபளக்கும் ரோஜா சிகப்பு வண்ணத்தினையும், நான்கு கரத்தினையும் கொண்டவள். மண்டையோடு, வாள், கேடயம், திரிசூலம் ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறாள்.

மிருகம் : வினாயகர், யானை முகம் கொண்டவர்.

சம்பந்தப்பட்ட உறுப்புகள் : சிறுநீரகம், சிறுநீரகப்பை

பீஜமந்திரம் : லங்

பலன்கள் : குண்டலினி சக்தியை விழிப்புறச் செய்தல், ஸ்திரத்தன்மையையும், உயிர் ஆற்றலையும், அதிகரிக்கச் செய்யும். இந்த சக்கரம் தூண்டப்படிருந்தால் உணவு, உறக்கம் ஆகியவற்றிலேயே அதிக நாட்டம் இருக்கும்.
 




Last edited:

SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
170
Reaction score
18
Location
Coimbatore
சுவாதிஷ்டானம்

1643430416191.png
அமைப்பு : ஆறு இதழ்கள் கொண்ட ஆரஞ்சு நிறத்தாமரை ஆகும். இச்சக்கரத்தினின்று ஆறுமுக்கிய நாடிகள் வெளிக் கிளம்புகின்றன. அவை தாமரையின் ஆறு இதழ்கள் போல் உருவகப் படுத்தி இருக்கின்றனர். ஒவ்வொரு நாடியின் அசைவினால் ஏற்படும் சப்தங்கள் "ஸ, ஹ, ம், ய, ர, ல" என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இதன் மையத்தில் வளைந்த சாம்பல் நிறப் பிறைச் சந்திரன் ஒன்றும் குறிக்கப் படுகிறது.

இடம் : பிறப்புறுப்புக்கு மேல்.

மூலக்கூறு : நீர்

ஆண் தெய்வம் : விஷ்ணு, இவர் காப்பவர், கரு நீல நிற மேனியுடன் தங்க நிற வேட்டியும், பச்சை நிற துண்டும் அணிந்து நான்கு கைகளுடனும் காணப்படுகிறார். சங்கு, சக்கரம், கதை, தாமரை மலர் ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறார்.

பெண் தெய்வம் : மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர் ராகிணி (அ) சாகிணி. செந்தாமரையில் அமர்ந்து சிகப்பு நிற புடவை அணிந்து இரண்டு தலையும், நான்கு கைகளுடனும் காணப்படுகிறாள். மண்டையோடு, அம்பு, கோடாரி, உடுக்கை ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறாள்.

மிருகம் : பச்சை நிற முதலை, வருணனின் வாகனம்.

சம்பந்தப்பட்ட உறுப்புகள் : கர்ப்பப்பை, பிறப்புறுப்புகள், பெருங்குடல்

பீஜமந்திரம் : வங்

பலன்கள் : இந்த சக்கரம் மலர்வதால் நமது சுய கட்டுப்பாட்டின் தீவிரம் தூண்டப் பட்டு விழிப்புணர்வு நிலை மிளிரும். நமது எண்ணம், செயல், சிந்தனை சார்ந்த விஷயங்களின் மீதான மேம்பட்ட பிடிப்புணர்வுக்கு இந்த சக்கரம் தூண்டப் படுவது அவசியமாகிறது.

வேறு:

மூலாதார தலத்திற்கு மேலே உள்ள தலம் சுவாதிஷ்டான சக்கரம். அனைத்து சித்தர்களும் இந்த சக்கரம் குறித்து பாடி உள்ளார்கள். அவற்றுள் போகர்
சிறப்பாக சொல்லி உள்ளதையும் அகத்தியர் மற்றும் திருமூலரும் சொன்ன ரகசியங்களை பார்ப்போம்.

துதிசெய் மூலத்தை தாண்டி அப்பால்
துடியான நாலங் குலமே தாண்ட
பதிசெய்த பிரம்மனுட வீடுமாகும்
பகர்ந்த சுவாதிஷ்டானம் மென்றுபேரு
அதிசெய நால்வட்டாக வலயஞ்சுத்தல்
ஆறிதழ் தானச்சரத்தை யறியகேழு
பதிசெய்த பாமபுராமா யாக வந்தால்
பாங்கான நாடு பீசம் லங்நங் ஆமே
- போகர் வைத்திய காவியம் 1000 (பாடல்35)

நகாரம்மென்ற எழுத்ததுவும் பிரமர்க்காகும்
லாஎன்ற எழுத்ததுவும் பிரிதிவி பீஜம்
வகாரம்மென்ற துரியத் திருப்பிடந்தான்
புகழ்கின்ற இருக்கான வேதமாகும்
அகாரம்மென்ற அன்னமாம் வாகனந்தான்
அதனுடைய நிறம்பொன் நிறமுமாகும்
மகாருகின்ற இவருடைய தொழிலின் கூறு
மயிரெலும்பு இறைச்சிதோல் நரம்போடன்சே
- போகர் வைத்திய காவியம் 1000 (பாடல்36)

அஞ்சான பொன்னிநிறம் பிரம்மன் பக்கம்
அடங்காத வாணி நிறப்பாள் ளறிந்துகொள்ளு
- போகர் வைத்திய காவியம் 1000 (பாடல்37)

கேளடா நிலையறிந்து வாசிகொண்டு
கீழ் மேலும் நன்றாக நின்றுபாரு
சூலட நின்றநிலை பார்க்கும் போது
ஜோதிஒன்று தோன்றுமடா பிரம்ம சொரூபம்
ஆளடா பிரம்மநிலை ரூபம் கண்டால்
அடங்காத வாசியது அடங்கும் வீட்டில்
கானடா வாசியது அடங்கி நின்றால்
கண்ணடங்கா பூரானத்தை காணலாமே
- அகத்தியர் வாத சௌமியம் (பாடல்59)

கொண்ட இச்சக்கரம் கூத்தன் எழுத்தைந்து
- திருமூலர் திருமந்திரம் (பாடல் 909)

நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும்
- திருமூலர் திருமந்திரம் (பாடல் 907)

ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்தைந்தும்
பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்
ஆகின்ற ஐம்பத்தோர் எழுத்த்துள் நிற்கப்
பாகொன்றி நிற்கும் பராபரன் தானே .
- திருமூலர் திருமந்திரம் (பாடல் 905)

சுவாதிஷ்டான சக்கரத்தின் இருப்பிடம்:
**********************************************

மூலாதாரத்தில் இருந்து அவரவர் கைவிரல் அளவில் நான்கு விரல் அளவு மேலே உள்ளது சுவாதிஷ்டானம்.

சக்கர அமைப்பு:
*******************

நாற்கோணம் என்ற சதுரம். அதை சுற்றி
வட்டம். வட்டத்தை சுற்றி ஆறு தாமரை
இதழ்கள். இதன் நிறம் பொன்நிறம் என்ற மஞ்சள்.

மந்திரம்:
***********

ஆதார தலங்கலீல் கூத்தன் என்ற சிவன். பீஜ மந்திரம் ஐந்து எழுத்து மந்திரமான “நமசிவய” உள்ளது . ஐந்து பூதங்களான மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் உள்ளது. அதன் நிறங்களும் உள்ளது.

ஆறு ஆதார தளங்களில் உள்ள மொத்த இதழ்கள் ஐம்பது இதனுள் ஐம்பது எழுத்துக்கள் அடங்கும். நிறாதார தலமான சகஸ்ராரத்தில் ஓம் என்பது ஒரு எழுத்து உள்ளது. அதையும் சேர்த்து 51 எழுத்தாக விரியும். அக்காலத்தில்
தமிழுக்கு ஐம்பத்தொரு எழுத்து என்றும்
கூறுவார். சமஸ்கிருதத்தில் 51 எழுத்து
என்றும் கூறுவார்.

இந்த 51 எழுத்துக்களும் ஐந்து எழுத்தில்
அடக்கம். எனவே ஐந்து பீஜ மந்திரத்தையும் ஓம் உச்சரித்தல் சிறப்பு
அல்லது போதும்.

சுவாதிஷ்டான சக்கரத்தின் பீஜ மந்திரம்: லங் அல்லது லம். அல்லது நங் அல்லது நம். இத்தலத்துள் இருப்பது உகாரம் என்ற பஞ்ச வித்து. இத்தலம் பிருதிவி என்ற மண்ணின் கூறு. பிரிதிவின் பீஜ மந்திரம் லா. இதை லங் என்றும் லம் என்றும் உச்சரிக்கலாம்.

சிவனின் பீஜமந்திரமானது "நமசிவய". இந்த மந்திரத்தில் "ந" என்பது மண் பூதமாகும் "ந".
இதை "நங்" என்றோ அல்லது "நம்" என்றோ உச்சரித்தல் வேண்டும்.

இந்த தலத்தின் உணர்வு நிலை அல்லது
அவத்தை "துரியம்" என்ற உணர்வுநிலை.

ஒருவர் தியானம் செய்யும்போது ஐந்துவகை அதிர்வு அலைகள் உருவாகின்றன என்று இன்றைய அறிவியல் சொல்கிறது. அதன் படி துரியம் என்ற நிலையில் உருவாவது காமா அதிர்வலை ஆகும்.

இத்தலத்தின் அதி தேவதைகள் பிரம்மாவும் சரஸ்வதியும் ஆவார்கள்.

இவர்களிடம் படைத்தல் என்ற குழந்தை வரம் வேண்டல் சிறப்பு. அறிவு ஆற்றல் பெறவும் பிற படைப்புகள், நூல்கள், திட்டங்கள் செய்வதர்க்கும் இந்த சக்கரத்தில் வேண்டுதல்
செய்யவேண்டும்.

குண்டலினி யோகத்தில் இரண்டாவது சக்தி ஆதார மையமான சுவாதிஷ்டானம் உள்ளது. இதற்கு "நிராகுலம்"
என்றொரு பெயரும் உண்டு. நிராகுலம்
என்றால் துன்பமற்று ஞானமயமாக இருப்பது என பொருள்படும்.

மூலாதாரத்திற்கு மேலே இருக்கும்
இரண்டாவது சக்கரம் சுவாதிஷ்டானம். நமது பிறப்பு உறுப்பிற்கு மேலே இது
இருக்கிறதாம். அதாவது மூலாதார சக்கரத்தில் இருந்து நான்கு விரற்கடை அளவு மேலே இருப்பதாக கூறியிருக்கின்றனர். இந்த சக்கரமானது பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "ந" என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் விளக்குவதாக அமைகின்றது.

இச்சக்கரத்தினின்று ஆறு முக்கிய நாடிகள் வெளிக் கிளம்புகின்றன. அவை தாமரையின் ஆறு இதழ்கள் போல் உருவகப் படுத்தி இருக்கின்றனர். ஒவ்வொரு நாடியின் அசைவினால் ஏற்படும் சப்தங்கள் "ஸ, ஹ, ம்,
ய, ர, ல" என்ற எழுத்துக்களால்
குறிக்கப்படுகின்றன. இதன் மையத்தில்
வளைந்த பிறைச் சந்திரன் ஒன்றும் குறிக்கப் படுகிறது.

அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும் சுவாதிஷ்டான சக்கரத்தின் மாதிரி படம் தான் இது.

சுவாதிஷ்டானத்தின்,
அதிதேவன் பிரம்மதேவர்.
அதிதேவதை ராகிணி/சாகிணி.
பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர் இதன் மூலக் கூறாக கூறப்பட்டிருக்கிறது.

சுவாதிஷ்டானமானது நமது பிறப்பு உறுப்புகள், கருப்பை, குடல் ஆகிய உறுப்புகளுக்கு தொடர்புடையதாம்.

சுவாதிஷ்டானத்திற்கான மூல மந்திரம் "வங்" என்பதாகும். சுவாதிஷ்டானத்தை மனதில் இருத்தி மூலமந்திரத்தை உருவேற்றி வர குண்டலினி சக்தியானது இந்த மையத்தை அடையும். இது விடாத முறையான தொடர் முயற்சி மற்றும் பயிற்சியினால் மட்டுமே சாத்தியமாகும்.

சித்தர்கள் இந்த சக்கரங்கள் ஒவ்வொன்றையும் ஆணின் அம்சமாகவே கூறியிருக்கின்றனர்.

குண்டலினி சக்தியை பெண் அம்சமாக
அதாவது வாலையின் அம்சமாய்
உருவகிக்ன்றனர். இந்த சக்கரத்தின் வழியே குண்டலினி சக்தி பாயும் போது அவை பூரணத்துவம் அடைந்து மலர்வதே சித்தியடைதல் எனப்படுகிறது.

இந்த சக்கரம் மலர்வதால் நமது சுய
கட்டுப்பாட்டின் தீவிரம் தூண்டப் பட்டு
விழிப்புணர்வு நிலை மிளிரும். நமது
எண்ணம், செயல், சிந்தனை சார்ந்த
விஷயங்களின் மீதான மேம்பட்ட
பிடிப்புணர்வுக்கு இந்த சக்கரம் தூண்டப்படுவது மிக மிக அவசியமாகிறது.
 




Last edited:

SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
170
Reaction score
18
Location
Coimbatore
மணிபூரகம்

1643439799380.png

அமைப்பு : பத்து இதழ்கள் கொண்ட பிரகாசமான மஞ்சள் நிறத்தாமரை. நெருப்பு ஜ்வாலையை (ஜட்டராக்னி) மையத்தில் கொண்டது இந்தச் சக்கரம். இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பத்து யோக நாடிகள் கிளம்புகின்றன. இதன் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை டட, ணத, தத, தந, பப என்ற எழுத்துக்களால் குறிப்பிடுகின்றனர். மணிப்பூரகத்தின் அதிதேவன் விஷ்ணு, அதிதேவதை லக்குமி/லாகிணி.

இடம் : தொப்புள்

மூலக்கூறு : நெருப்பு

ஆண் தெய்வம் : பிராப்த ருத்திரன், நீல நிற மேனியுடனும், வெள்ளிக் கழுத்துடனும் தங்கப் புலித் தோலில் அமர்ந்து இரு கைகளுடனும் காணப்படுகிறார். சூலம், உடுக்கை, மலர் ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறார்.

பெண் தெய்வம் : மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர் லாகிணி. மூன்று தலையும், நான்கு கைகளுடனும் காணப்படுகிறாள். வஜ்ராயுதம்(இடி), காமத்தை தூண்டும் அம்பு, நெருப்பு, முத்திரை ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறாள்.

மிருகம் : ஆண் ஆடு, அக்கினியின் வாகனம்.

சம்பந்தப்பட்ட உறுப்புகள் : வயிறு, கல்லீரல், சிறுகுடல், மண்ணீரல்

பீஜமந்திரம் : ரங்

பலன்கள் : உடல் சக்தியையும், மிக்க ஆரோக்கியத்தையும் தீவிரப்படுத்தி விழிப்படையச் செய்கிறது. உடலின் உறுதி மற்றும் நல மேம்பாட்டுக்கானது. இந்த சக்கரம் தூண்டப்பட்டவர்கள் கடும் உழைப்பாளிகளாக எறும்பைப் போல் சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள்.
 




Last edited:

SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
170
Reaction score
18
Location
Coimbatore
அனாகதம்
1643439879990.png
அமைப்பு : பன்னிரெண்டு தாமரை இதழ்கள் கொண்ட பச்சை நிறத்துடன் கூடிய இந்தச் சக்கரத்தின் மையத்தில் அறுகோண வடிவத்தில் பிரகாசமாக ஒளிவீசும் பொன்னிற ஜோதியைக் கொண்டது. இந்த அனாகத சக்கரம் இதயத்தோடு தொடர்புடையதாக கூறப் படுகிறது. இந்த சக்கரமானது பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "சி" என்னும் எழுத்தையும் அதன் தத்துவத்தையும் விளக்குவதாக அமைகின்றது.

இடம் : இந்த ஆதார மையமானது நமது கழுத்திற்கு கீழே இதயத்திற்கும், நுரையீரலுக்கும் நடுவில் சுழிமுனை நாடியில் அமைந்திருக்கிறது.

மூலக்கூறு : காற்று

ஆண் தெய்வம் : ஈசான ருத்திர சிவன், நீல நிற மேனியுடன் புலித் தோல் அணிந்து இரு கைகளுடனும் காணப்படுகிறார். திரிசூலம், தமரு உடுக்கை ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறார். தலையில் கங்கை நீர் செறிந்து கொண்டிருக்கிறாள்.

பெண் தெய்வம் : மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர் காகினி. ரோஜா வண்ணம் கொண்டவள். சிகப்பு நிற தாமரையில் அமர்ந்து வான நீல நிற புடவை அணிந்து நான்கு தலையும், நான்கு கைகளுடனும் காணப்படுகிறாள். மண்டையோடு, வாள், கேடயம், திரிசூலம் ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறாள்.

மிருகம் : மலையாடு

சம்பந்தப்பட்ட உறுப்புகள் : இதயம்

பீஜமந்திரம் : யங்

பலன்கள் : அன்பு, இரக்கம், உணர்வு, இவற்றின் மூலம் உறவுகள் சீராகும். இந்த சக்கரத்துகென்று சில முக்கியத்துவங்கள் உண்டு. படைப்பாற்றல், அன்பு போன்றவற்றின் ஆதார சக்கரம் இது. அருள் நிலை, ஆன்மீக வளர்ச்சி போன்றவற்றிற்கு உரியவை. மூலாதார சக்கரத்தில் இருந்து எழுப்பப் பட்ட குண்டலினியானது அனாகத சக்கரத்தை வந்தடையும் போது அதற்கு “அக்கினி குண்டலினி” என்று பெயராகிறது. இப்படி அனாகத சக்கரம் மலர்ந்த நிலையில், சாதகனின் உள்ளத்தில் கருணை, அன்பு, இரக்கம் போன்ற சாத்வீக குணங்கள் மேம்படும். படைப்பாற்றலின் ரகசியமும் புரியவரும்.
 




Last edited:

SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
170
Reaction score
18
Location
Coimbatore
விசுத்தி
1643440098982.png
அமைப்பு : பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட, உள்ளே நீல நிறத்தையுடைய அடர் நீலம் கொண்ட சக்கரமாகும். பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது. இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன. அவற்றின் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை லுரூ, ருஊ, வஈ, இஆ, அஅ, அம்ஔ, ஓஐ, ஏலூ என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.

இடம் : தொண்டை, இந்த சக்தி ஆதார மையமானது நமது தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை நாடியில் அமைந்து இருப்பதாக குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை, மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள், நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன் விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக குறிப்பிடப் படுகிறது.

மூலக்கூறு : ஆகாயம்

ஆண் தெய்வம் : பஞ்சாட்சர சிவன், நீல நிற மேனியுடன் புலித் தோல் அணிந்து இந்து தலையும், நான்கு கைகளுடனும் காணப்படுகிறார். திரிசூலம், உடுக்கை, ஜப மாலை, அபாய முத்திரை ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறார்.

பெண் தெய்வம் : மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர் சாகிணி. இளம் ரோஜா வண்ணம் கொண்டவள். சிகப்பு நிற தாமரையில் அமர்ந்து வான நீல நிற புடவை அணிந்து நான்கு தலையும், நான்கு கைகளுடனும் காணப்படுகிறாள். மண்டையோடு, அங்குசம், புனித வேதம், ஜப மாலை ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறாள்.

மிருகம் : சாம்பல் நிற யானை.

சம்பந்தப்பட்ட உறுப்புகள் : தொண்டை, நுரையீரல்

பீஜமந்திரம் : ஹங்

பலன்கள் : சரணாகதியை வெளிக்கொணரும். மறைவான ஆத்மசக்தியின் பரிமாணத்தைத் திறக்கச் செய்யும். புனிதத்துவம் வளரும். விசுக்தி சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் விஷத்தன்மை உடலுக்குள் நுழையாமல் தடுக்க முடியும். விஷம் என்றால் உணவு மட்டுமல்ல, தீய உணர்வுகள், எண்ணங்கள், சக்திகள் என்று விஷத்தன்மை கொண்டவற்றிலிருந்து விடுபட முடியும். இந்த சக்கரம் மலர்வதன் மூலம் தீமையை உருவாக்கும் அல்லது விளைவிக்கும் எண்ணங்கள், உணர்வுகள் எல்லாம் சாதகனை விட்டு நீங்கிடும். இதனால் எதனையும் விருப்பு வெறுப்போ அல்லது பற்றுதலோ இல்லாது சாட்சி நிலையில் இருந்து கவனிக்க முடியும். நான் என்கிற அகந்தை அழிந்து அன்பும், கருணையும் மிளிர்ந்தவனாகிடுவான் என்கின்றனர்.
 




Last edited:

SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
170
Reaction score
18
Location
Coimbatore
ஆக்கினை
1643440018103.png
அமைப்பு : இரண்டு தாமரை இதழ்கள் கொண்ட கருநீல நிறத்தையும், முறையே இதழின் வலது பக்கம் சூரியனையும், இதழின் இடது பக்கம் சந்திரனையும், நடுவில் நீல நிற லிங்கத்தையும் கொண்ட சக்கரமாகும். இதன் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை ஹ, ள என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.

இடம் : புருவ மத்தியில், இந்த சக்கரம் நமது புருவ மத்திக்கு நேராக மூளையில் அமைந்திருப்பதாக குறிப்பிடப் படுகிறது. இன்னும் சரியாக சொல்வதெனில் நமது நெற்றியில் உள்ள பள்ள முடிச்சுக்கு இனையாக இருக்கிறது. இதற்குத் 'திரிகூடம்" என்றும் பெயர். இந்த ஆக்ஞா சக்கரமும் மற்ற சக்கரங்களைப் போல சுழுமுனை நாடியில் அமைந்துள்ளது.

ஆண் தெய்வம் : அர்த்தநாரீஸ்வரர் (சிவ-சக்தி), வெண்மை நிற லிங்கத்தின் நடுவே வலது பக்கம் பாதி சிவன் நீல நிற மேனியுடன் புலித் தோல் அணிந்தும், இடது பக்கம் பாதி சக்தி ரோஜா நிற மேனியுடன் சிகப்பு நிற புடவை அணிந்தும் காணப்படுகின்றனர். சிவன் கையில் திரிசூலமும், சக்தி கையில் தாமரை மலரும் உள்ளன.

பெண் தெய்வம் : மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர் வாகினி. இளம் ரோஜா வண்ணம் கொண்டவள். சிகப்பு நிற தாமரையில் அமர்ந்து சிகப்பு நிற புடவை அணிந்து ஆறு தலையும், நான்கு கைகளுடனும் காணப்படுகிறாள். மண்டையோடு, உடுக்கை, ஜப மாலை, முத்திரை ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறாள். வண்ண கற்கள் பதித்த ஆபரணங்களை அணிந்திருக்கிறாள்.

மிருகம் : -

சம்பந்தப்பட்ட உறுப்புகள் : கண்கள், நெற்றியின் கீழ்ப்பகுதி

பீஜமந்திரம் : (ॐ)ஆ... உ... ம்...

பலன்கள் : சூரிய சந்திர சக்திகளை ஒன்றுபடுத்தி, இந்த சக்கரத்தின் மீது தொடர்ந்து தியானம் செய்வது, ஞாபக சக்தியை அதிகப்படுத்தும், விழிப்புணர்வை ஒருமுகப்படுத்தும். இது ஞானம், தெளிவு, போன்றவற்றுக்கான சக்கரம். விசுக்தியைப் பொறுத்தவரை, அந்தச் சக்கரம் தூண்டப்பட்டால் ஆற்றலோடு திகழமுடியுமே தவிர சமூகத்தில் நிறைய எதிர்ப்புகள் இருக்கும். சமூக வாழ்க்கையோடு உடன்பட இயலாது. மக்களிடமிருந்து விலகி வாழ்கிற நிலையிலேயே இருப்பார்கள். ஆனால் ஆக்கிஞை முழுவதுமாகத் தூண்டப்பட்டவர்கள் சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற ஞானவான்களாகத் திகழ்கிறார்கள். ஆக்ஞா சக்கரம் மலர்வதையே நெற்றி கண் திறப்பதாக பொதுவில் குறிப்பிடுகின்றனர். இத்தகைய மலர்ச்சி நிலையில் சாதகனின் கவனக்குவிப்பு, விழிப்புணர்வு, நினைவாற்றல் போன்றவை பல மடங்கு அதிகரிக்கும். வாழ்வின் ஞானத்தை எல்லாம் தன்னகத்தே ஈர்த்துக் கொண்ட உயரிய நிலை இது.
 




Last edited:

SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
170
Reaction score
18
Location
Coimbatore
துரியம் (Sahasrara)

1643430212671.png
1643456749941.png
அமைப்பு : ஆயிரம் தாமரை இதழ்கள், ஊதா நிறத்துடன் அடர் பொன்னிறம் கொண்டது. ஜோதிர் லிங்கத்தை மையத்தில் உடையது. ஆக்ஞா சக்கரத்தில் இருந்து எட்டு விரற்கடை மேலே நமது தலையின் உச்சியில் இந்த சக்தி ஆதார மையம் அமைந்திருக்கிறது. நமது மூளை இதற்கு தொடர்பான உறுப்பாக கூறப்பட்டிருக்கிறது. அதாவது ஆயிரம் யோக நாடிகள் இந்த சக்கரத்தில் இருந்து வெளிக் கிளம்புகின்றன.

இடம் : உச்சந்தலை

ஆண் தெய்வம் : -

பெண் தெய்வம் : -

மிருகம் : -

சம்பந்தப்பட்ட உறுப்புகள் : மூளை

பீஜமந்திரம் : ஓஹும் சத்யம் ஓம்

பலன்கள் : இந்தச் சக்கரம் நன்கு மலர்ந்தால், பிரபஞ்ச உணர்வுடன் முழுமையாக ஒன்றுபடுத்தும் நிலைக்கு இட்டுச் செல்லும். இந்த சக்கரமமானது பரவச நிலையைத் தரத்தக்கது. எப்போதும் ஒருவிதமான பரவச நிலையிலேயே இருக்கிற தன்மையானது சதுரியம் முழுமையாகத் தூண்டப்பட்டவர்களுக்கு உரியது. இவர்களுக்கு உணவு ஊட்டுதல், தூய்மை செய்தல், உடை உடுத்துதல் போன்றவற்றை மற்றவர்கள்தான் செய்ய வேண்டும். இதனால் இவர்கள் “அவதூதர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர்.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top