• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சக்கரவியூகம் 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
8
அதிகாரம் தான் ஒருவரின் இருப்பை உறுதி செய்கிறது!
அதிகாரம் தான் ஒருவரின் அடையாளத்தை தீர்மானிக்கிறது!
அதிகாரம் தான் எதிர்ப்பவர்களை நசுக்கவும் செய்கிறது!
அதிகாரம் தான் பிம்பங்களை கட்டமைக்கிறது!
இயல்பாக அவள் கேட்டாள். அவனுக்கு ஒரு நிமிடம் மூச்சடைத்தது!
கலாட்டா செய்து கொண்டிருந்த அந்த ஸ்ரீதரன் சற்று தூரமாகக் காணாமல் போனான்.

தமிழுக்கு முன் அமர்ந்திருந்த அந்த ஸ்ரீதரன் அந்த மெல்லிய வெளிச்சத்தில் அவளை ரசிக்கும் ரசிகனாக மாறியிருந்தான்.
நிலவு போன்ற முகம், பிறை நெற்றி, வில்லாக வளைந்த திருத்தப்பட்ட புருவங்களின் கீழ் கெண்டை மீனாய் மையிட்ட விழிகள், கூரான நாசி... அதில் இடது பக்கம் மிகச் சிறிய ஒற்றைக் கல் மூக்குத்தி. அது அவளது முகத்தை அவ்வளவு அழகாகக் காட்ட, ரசித்துப் பார்த்தான். அதற்கும் கீழே ஆரஞ்சு சுளை உதடுகள், கடிக்கத் தோன்றிய செழிப்பான ஆப்பிள் கன்னங்களும் வெண்ணிற சங்கு கழுத்தும், அதில் தவழ்ந்த மெல்லிய சங்கிலியும்... அதன் கீழே என்று போக விரும்பிய பார்வையை இழுத்துப் பிடித்தான்.

ரசித்துத் தான் பார்த்தானே தவிர அவள்மேல் ஆர்வம் என்றெல்லாம் அவனால் கூற முடியவில்லை. அப்படி நினைப்பதே அபத்தமாகப் பட்டது அவனுக்கு!

ரசனை வேறு ஆர்வம் வேறு... இரண்டையும் அவனால் ஒன்றுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஆர்வம் தனக்கே சொந்தமென்று கூறத் தலைப்படும் ஆனால் ரசனை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளும்.

மலரை ரசிப்பது போல... ஒரு குழந்தையின் சிரிப்பை ரசிப்பது போல... தமிழும் அவனுடைய ரசனையைத் தூண்டி விட்டாள். அவளது அப்பாவித்தனத்தால்... அவ்வளவே!

அறிவார்த்தமாக இருக்கிறாள் என்று சற்று மரியாதையான தூரத்தில் வைத்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அவளது சிறுபிள்ளைத்தனங்கள் அவனை அவளிடம் கலாட்டா செய்யச் சீண்டி விட்டுக் கொண்டிருந்தன என்பதுதான் உண்மை!

அதனாலேயே பெண்களென்றால் தள்ளி நின்று பழகிக் கொண்ட ஸ்ரீதரன் அவளிடம் வம்பளத்து கொண்டிருப்பதும்... அதிலும் அவ்வளவு கசப்பான அனுபவங்களுக்குப் பிறகும் ஒரு பெண்ணிடம் ஆர்வமாகப் பேசினான் என்றால் அது தமிழிடம் மட்டுமே.

நாளை வரை மட்டுமே என்ற லிமிட்டட் எடிஷன் அறிமுகம் தனக்கு வசதியாக இருக்கிறதா என்று தனக்கு தானே ஒரு கேள்வியையும் வைத்துக் கொண்டான்.

எதுவாக இருந்தாலும் இந்த நொடி இனிமையாக இருக்கிறது! அதை ஏன் ஆராய்ந்து கெடுத்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது!

அவன் மௌனமாக அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அப்போதுதான் தான் கேட்ட கேள்வியின் அபத்தம் அவளுக்கும் புரிந்தது.

ச்சே... இப்படி யாராவது கேட்பார்களா? என்று தன்னை தானே திட்டிக்கொண்டவளுக்கு முகம் செக்க செவேலென்று சிவந்தது!
உணர்வுகளை அவளது முகம் கண்ணாடியாகப் பிரதிபலிக்க, பார்த்துக் கொண்டே இருந்தவனுக்குக் காலின் கீழ் பூமி நழுவும் உணர்வு!

ஏதோ ஒன்று வெளிவரவே முடியாத சுழலுக்குள் தன்னை இழுப்பது போன்ற பிரமை!

ஆனால் அந்த உணர்வு அவனுக்கு மிகவும் பிடித்தது!
என்றுமில்லாத வகையில் அவன் அந்த உணர்வை ரசித்தான். அவளையும் ரசித்தான்...!

அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்தவள். அவனது பார்வை தன்னையே நோக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

உடல் சில்லிட்டது. எதுவும் பேசாமல் காரிலிருந்து அவள் இறங்க முயல... அவளது கைகளைப் பிடித்து, அவளைத் தடுத்து அங்கேயே அமரவைத்தான்!

தமிழ்நதிக்கு மனம் பகீரென்றது!

பிள்ளையார் பிடிக்கக் குரங்காகியது போல அல்லவா நிலைமை இப்போது! கடவுளே காப்பாற்று என்று அவசரமாகக் கடவுளுக்கு விண்ணப்பமிட்டாலும் அவன் அதையெல்லாம் கண்டுகொண்டால்தானே?

“சோதியம் சோதிச்சுட்டு பதில் வாங்காம போனா எப்படி?” கள்ளச் சிரிப்போடு அவன் கேட்டான். அந்தக் குரல் என்னவோ அவளை வசியம் செய்து கொண்டிருந்தது. படப்படத்த மனதோடு மௌனமாகத் தலை குனிந்தாள்.

“சொல்லனுமா? இல்ல வேண்டாமா?” அவனது குரல் இயல்பாக இருந்ததா இல்லை போதையாக வழிந்ததா என்று அவளுக்குப் புரியவே இல்லை.

“என்ன சொல்லனுமா?” தான் என்ன கேட்டோம் என்பதும் அவளுக்கு அப்போது புரியவில்லை.

“ஏதோ கேள்வி கேட்டீங்களே தமிழ்...”

“இல்லையே... நான் ஒன்னும் கேட்கலையே...” காத்துத்தான் மாமா வருது என்ற ரேஞ்சில் அவளது குரலிருக்க, அவளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவனின் கண்களில் விஷம சிரிப்பு.
காற்றுக்காக ஜன்னலைத் திறக்க ரிமோட்டை அழுத்திப் பிடித்தான்.

கண்ணாடி கீழிறங்க காற்று வேகமாக உட்புகுந்து சிலிர்க்க வைத்தது.

“நீங்கக் கேட்கலை... ஆனா நான் கேட்டே ஆகணுமே...” அதே விஷம சிரிப்போடு அவன் கூறினான்.

“என்ன கேட்கணும்?” அவளுக்கு உள்ளுக்குள் பயமாக இருந்தது. என்ன கேட்டு வைப்பானோ என்ற பய உணர்வில் தத்தளித்தாள்.
“ம்ம்ம்... எப்பவுமே நீங்க இப்படித்தானா... இல்ல... இப்படித்தான் எப்பவுமேவா?” சிரிக்காமல் அவளது படபடக்கும் விழிகளைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

ஒருநிமிடம் அவளுக்கு என்ன கூற வருகிறான் என்பது புரியவில்லை.

புரிந்த பிறகோ அவனை உலுக்கும் கோபம் வந்தது! அந்த நேரத்தில் அவளைச் சுற்றி கட்டப்பட்டிருந்த மாயவலை அறுந்தது.

“யோவ்... போய்யா...” கையை அவனை நோக்கி ஆட்டிக் கோபமாகக் கூற, அந்தச் சிறுபிள்ளைத்தனமான கோபம்.

ஸ்ரீதரனை வசீகரித்தது.
வாய்விட்டுச் சிரித்தவன், “என்ன இங்கிலீஷ்... கேள்வி கேட்டா பதில் வர மாட்டேங்குது...” விஷமத்தைக் கைவிடாமல் அவன் கேட்டான்.

“இங்க பார்... நீ லூசு... உங்க அம்மா லூசு... உங்க அப்பா லூசு... உன் குடும்பமே லூசு... இதில் என்னை லூசுன்னு சொல்றியா?” மரியாதையைக் கைவிட்டு அவனைக் கொதித்தாள்.

புன்னகையோடு அவளைப் பார்த்தவன், “தேங்க்ஸ் பார் யுவர் காம்ப்ளிமென்ட்ஸ்...” அலட்டாமல் கூறினான்.

“யோவ்... இது காம்ப்ளிமென்டா? உன்னைத் திட்றேன்.” ரோஷமாகக் கூறினாள்.

“வளர நன்னி...” என்று மீண்டும் சிரித்தான். அவள் தான் தலையில் கை வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

சற்று நேரம் மௌனமாக இருந்தவன்,
“நம்ம மனசுக்கு ஒரு முகம் இருந்தாலும் வெளிய நாம இன்னொரு முகம் வெச்சுக்கறோம் இல்லையா தமிழ்? அதாவது முகமூடி...” சம்பந்தமே இல்லாமல் அவன் கூற, அவளுக்கு என்ன திடீரென்று இப்படிக் கேட்கிறான் என்று நிமிர்ந்து பார்த்தாள்.

முதலில் அவன் பார்த்த பார்வை இப்போதும் மாறவில்லை. அதே பார்வைதான். ஆனால் அவனும் அந்த நிலையில் பிறழாமல் இயல்பாக இருக்க முயற்சித்துக் கொண்டு அவளையும் இயல்பாகப் பேச வைக்க முயற்சிக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. அவனுக்கு மறுமொழி கூறாமல் என்ன கூற வருகிறான் என்பதை போலப் பார்த்தாள்.

“வெளிய நாம போட்டுக்கற அந்த முகமூடிக்கு என்ன முகவரி வேண்டுமானாலும் இருக்கலாம்... அறிவுஜீவின்னோ, பிசினெஸ் மேக்னட்னோ, தத்துவஞானியென்று கூட இருக்கலாம்... ஆனா நமக்கு இருக்க அந்த இன்னொரு முகத்துக்கு அந்த மாதிரி எந்த ரெஸ்ட்ரிக்ஷனும் இல்ல...”

“ஏன் அந்த மாதிரி அடையாளங்கள் எல்லாம் ரெஸ்ட்ரிக்ஷன்னு நினைக்கறீங்க? நாம கஷ்டப்பட்டு உருவாக்கற அடையாளம் தானே அது?” இயல்பாக அவளுக்குத் தோன்றிய சந்தேகத்தைக் கேட்டாள்.

“அதைத் தான் சொல்லிட்டீங்களே... நாம உருவாக்கற அடையாளம்ன்னு... நாம உருவாக்கற அடையாளத்துக்காக நம்மோட நிஜ முகத்தை மறைத்து வைக்கிறோம் இல்லையா?”

அவன் கேட்பதிலும் அர்த்தமிருப்பதாகப் பட்டது அவளுக்கு... ஆனால் அதையெல்லாம் ஏன் இப்போது கூறுகிறான்?

“இப்ப எதற்காக இந்த விஷயத்தைச் சொல்றீங்க?”

“உங்க நிஜ முகம் முன்னாடி நீங்க வெளிப்படுத்தின முகம் இல்ல... அந்த முகம் நிறைய அறிவார்த்தமா சிந்திக்கும்... பொறுமையா இருக்கிற மாதிரி காட்டிக்கும்... தமிழ் தமிழ்ன்னு உயிரை விட்டுட்டு இருக்கும்...” என்று உள்ளும் புறமுமான அவளைப் பகுத்தறிந்து அவன் கூற, அது அவளுள் எரிச்சலைத் தான் தூண்டியது.

“... அப்ப அதெல்லாம் நான் போட்டுட்டு இருக்க வேஷம்... அப்படித்தானே சொல்ல வரீங்க...”

முகம் சிவந்து போய் அவள் கேட்கும் கேள்வியை ரசித்தான் அவன்.

“அப்படி கிடையாது. ஆழமான கடல்மேல் பகுதில அமைதியா இருக்கும்... அது அமைதியான முகத்தைக் காட்டுதுன்னும் அது ஆழமில்லைன்னும் சொல்ல முடியுமா? அதுமேல் பகுதிக்கு அந்தக் கடல் போட்டுக்கிட்ட முகமூடி... அந்தக் கடலைப் பொறுத்தவரைக்கும் அதனுடைய முகமூடியும் நிஜம் தான் முகமும் நிஜம் தான் இல்லையா?”

“கண்டிப்பா...”

“அதுமாதிரிதான். நீங்களும்!... வெளிய போட்டுக்கிட்ட அந்த முகமூடியும் நிஜம் தான். ஆனா அந்த முகமூடியை நம்பினா உள்ள ஒரு அல்ப சின்னக் குழந்தை இருக்கா... அதைத்தான் சொன்னேன்...” மென்மையான புன்னகையோடு அவன் கூற வந்ததைக் கூற, அவளது கண்கள் பளிச்சிட்டது.

“இதைத் தான் இப்படி சுத்தி வளைச்சு சொன்னீங்களா?” என்று அவள் புன்னகைக்க,

“ஆமா... நான் வேறென்ன சொல்ல வந்தேன்னு நினைச்சீங்க?” மீண்டும் அந்த விஷம புன்னகை அவனது உதட்டில் ஒட்டிக்கொண்டது.

“ஒன்னும் நினைக்கல...” என்று அவள் உதட்டைச் சுளித்து கொள்ள,

“தமிழ்... முகமூடியற்ற முகத்தை ஒரு சில இடத்தில் தான் வெளிப்படுத்த முடியும். நம்ம மனசுக்கு நெருக்கமா பீல் பண்ற இடத்தில் தான் அது சாத்தியம்...” என்று இடைவெளி விட்டவன்,
“தமிழ்நதிக்கு இங்க அந்த கம்ஃபர்ட்சோன் கிடைக்குதுன்னு நினைக்கிறேன்.” மெல்லிய புன்னகையோடு அவன் அனுமானித்ததை மென்மையாக உணர்த்த முயன்றான். அதை அவளுக்கு உணர்த்த முயன்றானா அல்லது தானே உணர முயன்றானா என்பதுவும் அவனுக்கே வெளிச்சம்!

“அதுக்குள்ளே எப்படி சாத்தியம்? பார்த்து ஒரு அஞ்சு மணி நேரம் ஆகியிருக்குமா?” அவளால் அதை அங்கீகரிக்க முடியவில்லை என்பதை அவளும் மறைமுகமாகக் கூறினாள்.

“ம்ம்ம்...” என்று கூறி கடிகாரத்தைப் பார்த்து, “நாலு மணி நேரம் முப்பத்து ரெண்டு நிமிஷம்...” என்று புன்னகைத்தான்.
அவனது அந்தப் புன்னகை அவளை உறைய வைத்தது.

மனசுக்குள் சில்லென்ற உணர்வு தாக்க, அதை என்ன உணர்வென்று வரையறுத்துக் கூற அவளால் முடியவில்லை.
அவளுடைய மனம் குழப்பத்தில் இருந்தது தான் உண்மை!

ஸ்ரீதரனிடம் தடுமாறிக் கொண்டிருந்த மனதை அவள் முயன்று தான் மடை மாற்றிக்கொண்டிருந்தாள்.
சாத்தியமே இல்லை. கண்டிப்பாக இல்லையென்று கூறியது மனம்!

அவன் கூறியதை போல ஏதோ ஒரு கம்ஃபர்ட்சோன்.

எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்த தமிழைப் பார்த்து அவன் என்னவெனப் புருவத்தை உயர்த்திக் கேட்டான். ஒன்றுமில்லை என்று தலையாட்டினாள்.

“தூக்கம் வந்தா தூங்குங்க...” இயல்பாக அவன் கூறிவிட்டு அவனது கைப்பேசியை ஆன் செய்ய,

“நீங்க?” தமிழ்நதி அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“எனக்கு இது பழக்கம் தான். தினமுமே நான் தூங்க எப்படியும் ரெண்டு இல்லைன்னா மூன்று மணி ஆகிடும்...” வெகு இயல்புபோல அவன் கூறினான்.

“உடம்பு கெட்டுடாதா? தூக்கம் முக்கியம் இல்லையா?” என்று கவலையாகக் கூறியவளை ஆச்சரியமாகப் பார்த்தான். இது போன்ற அக்கறைகள் அவனது அன்னையோடு காலாவதியாகிவிட்டனவே!

மனதுக்குள் ஏனோ மயிலிறகு மென்மையாக வருடியது போலிருந்தது!

“நம்ம வேலை அப்படி இருக்கும்போது அதற்குத் தகுந்த மாதிரி தானே இருக்க முடியும் தமிழ்?”

“ப்ச்... ஆமால்ல... உங்க டிரைவிங் கேரீர்ல தூக்கத்தை பெருசா நினைக்க முடியாதே...” சற்று அக்கறையோடு அவள் கூறிய வார்த்தைகளில் சற்று வியந்த பார்வை பார்த்தவனின் உதடுகளில் அவள் கண்டு கொள்ள முடியாத குறும்புச் சிரிப்பு.

அந்த அக்கறையான வார்த்தைகள் அவனுடைய அன்னையை நினைவுப்படுத்தி மென்மையாகத் தடவி சென்றது.

“ஆமா... ஆமா...” என்று ஆமாம் சாமி போட்டுவிட்டு, “என்னோட வேலை பற்றிப் பார்த்தி தான் சொன்னானா?” அதே குறும்போடு கேட்டான்.

அவளோ அப்பாவியாக, “ஏன் கேட்கறீங்க?” என்று கேட்டாள்.

“இல்ல... தெளிவா இருக்கீங்களே... அதான்...” என்று சிரித்தான்.

“நான் எப்பவுமே தெளிவு தான். நீங்கத் தான் கலாய்க்கறீங்க...” உதட்டைச் சுளித்து கொண்டு அவள் கூறினாள்.

“ச்சே ச்சே... உங்களை யாராவது கலாய்க்க முடியுமா? உங்களை நீங்களே கலாய்ச்சுகிட்டாத்தான் உண்டு தமிழ்...”

மீண்டும் கிண்டலடித்தவனைப் பார்த்து முறைத்தாள்.

“ஆனாலும் வாய் ஜாஸ்தி உங்களுக்கு...” என்று உதட்டைச் சுளித்து கொண்டு அவள் கூறினாள்.

“நான் சொன்ன கம்ஃபர்ட்சோன் அதுதான் தமிழ்... உங்க கிட்ட ஈசியா இப்படியெல்லாம் பேச முடியுது. கிண்டலடிக்க முடியுது. ரொம்ப நாட்கள் கழிச்சு ஃப்ரீயா பேசிட்டு இருக்கேன்... யூ நோ, ஐ ஆம் வெரி மச் இன்ட்ரோவெர்ட் நவ் அ டேஸ்...”

“இப்ப தான் இன்ட்ரோவெர்ட்ன்னா?” அவள் புரியாமல் கேட்டாள்.

“எஸ்... எங்க கேரளாவில் இருந்த வரைக்குமே கலாட்டாவா தான் இருக்கும்... பசுமையான நாட்கள். ஃப்ரெண்ட்ஸ், அம்மா, அப்பா, கசின்ஸ், தென்னங்கள் இப்படி எல்லாமே சந்தோஷம் தான்...” என்று கூறிக்கொண்டே போக, அவளது கண்கள் விரிந்தது.

“நீங்கக் கள்ளு குடிப்பீங்களா?” ஆச்சரியமாக அவள் கேட்டாள். அவளது வியப்பைப் பார்த்து அவனுக்குள் சுவாரசியம்!

“ஓய் நாட்... ஆலப்புழை நாட்டுகாரன் கள்ளு குடிக்கலன்னா தான் ஆச்சரியம்...” என்று சிரித்தான்.

“அதைப் பெருமையா வேற சொல்றீங்க?” அவளது முகம் சிறியதாக,

“ஆமா... கள்ளுன்னா மெத்தனால் கலந்த சாராயம் கிடையாது. அது ப்ரோபையோடிக்ஸ் நிறைந்த ஒரு சத்தான பானம்... தென்னமரத்திலிருந்து நேரடியா இறக்கிக் குடிக்கலாம்... தென்னங்கள்ளோ பனங்கள்ளோ ஒரு மரத்துக் கள்ளா நாற்பது நாள் குடிச்சா மலையையே புரட்டிப் போடலாமாம்... எங்க முத்தச்சி சொல்லுவாங்க... இன்பாக்ட் அவங்களே ஒரு மரத்து கள்ளு குடிப்பாங்க...” விலாவரியாகக் கூறியவன் கடைசியில் இயல்பாக அவனது பாட்டியைப் பற்றியும் கூறிவிட, அவளோ அதிர்ந்து பார்த்தாள்!

“என்ன சொல்றீங்க? உங்க பாட்டியுமா?”

“ப்ச்... எதற்கெல்லாம் ஷாக் ஆகறதுன்னு கிடையாதா? இதில் என்ன தப்பு இருக்கு?” வெகு இயல்பாக அவன் கேட்டான்.

அவளுக்குத் தான் தலை சுற்றியது. ஆண்கள் குடிப்பதே தவறு எனும்போது பெண்கள் அதிலும் அவனது முத்தச்சி கள் குடிப்பார் என்ற செய்தி அவளைத் தலை சுற்றச் செய்தது!

“என்ன தப்பு இருக்கா? லேடீஸ் குடிக்கிறது தப்பு இல்லையா?”

“பேசிக்கா ஒரு விஷயத்தைப் புரிஞ்சுகங்க தமிழ்... இப்ப உங்க தமிழ்நாட்டில் டாஸ்மாக்ல வித்துட்டு இருக்கறது வெறுமனே சாராயம்... மெத்தனால் ஒரு பர்சண்டேஜ் சேர்த்து அதைத்தான் சாராயம்ன்னு வித்துட்டு இருக்காங்க... அது பெரிய முதலாளிங்களோட சதி...” என்று நிறுத்தியவன், சற்று இடைவெளி விட்டு,
“ஆனா நம்ம முன்னோர்கள் அவங்க உடல் குளிர குடிச்சது இந்தக் கள் தான். பெண்களையும் சேர்த்து. தமிழ்நாட்டையும் சேர்த்து தான் சொல்றேன். அவ்வளவும் சத்து. நம்ம உடம்புக்குத் தேவையான ப்ரோபையோடிக்ஸ்... அதில் லேசான போதை வரும்... அவ்வளவுதான். ஆனால் அந்தக் கள்ளுலையே இப்ப எரிசாராயம் கலந்து ஏமாத்துறாங்க... அதைக் குடிக்கறது தப்பு... அது உடம்புக்குக் கெடுதல்... புரிஞ்சுதா?”

குழந்தைக்கு விளக்குவது போல அவன் விளக்கினான். அதை கேட்டவள், “ம்ம்ம்ம்...” என்று வேகமாகத் தலையாட்ட,

“என்ன புரிஞ்சுது?” என்று கேட்டான்.

“இனிமே என் ஃப்ரெண்ட்ஸ் கிட்டயும் சொல்றேன். பியர் சாப்பிடாதீங்கடி... கள்ளு சாப்பிடுங்கன்னு...” அப்பாவியைப் போலக் கூற, வாய்விட்டுச் சிரித்தான்.

“வாலு பொண்ணே...” என்று தலையில் தட்டியவன்,
“சரிம்மா... நீங்கப் படுங்க... நான் கொஞ்ச நேரம் வெளிய இருக்கேன்...” என்று கதவைத் திறக்க,

“ஏன்? நானும் வரேனே...” என்று அவளும் இறங்கப் பார்க்க, அவசரமாக மறுத்தான்.

“நோ தமிழ்... வெளிய என்ன எங்க எப்படி இருக்கும்ன்னு தெரியாது. நீங்க உள்ள இருங்க...”

“ஏன் நீங்க மட்டும் போறீங்க?” ரோஷமாக அவள் கேட்டாள்.

“ஏன்... நீங்களும் நானும் ஒண்ணா?”

“இதில் வேறுபடுத்திப் பார்க்க என்ன இருக்கு? உங்களுக்கு இருக்க இரண்டு கை இரண்டு கால் தான் எனக்கும் இருக்கு... உங்களுக்கும் வலிக்கும் எனக்கும் வலிக்கும்... அப்படி இருக்கும்போது எதை வெச்சு இப்படி சொல்றீங்க?” விடாப்பிடியாக அவள் கேட்டாள்.

“அம்மே பகவதி... நான் உங்க கிட்ட இந்தச் சண்டை போடவேல்லாம் வரலை... நீங்கத் தூங்கட்டும்ன்னு தான் சொன்னேன்...” பதில் பேசாமல் சரணடைந்தவனை பார்த்துச் சிரித்தாள்.

அவளது அந்தச் சிரித்த முகத்தைக் கண்களை அகற்ற முடியாமல் பார்த்துக் கொண்டே இருந்தான். சிரிக்கும் போது அவளது கன்னத்தில் விழுந்த குழி, அவ்வளவு அழகாக இருந்தது. அவனை வசீகரித்தது. வசியம் செய்யப் பார்த்தது.

தலையை உலுக்கிக் கொண்டான்.

அவனது மனதில் சிலுசிலுவெனக் காற்று வீசியது.

“அதெல்லாம் தேவையில்லை. நான் மட்டும் தனியா இங்க உட்கார்ந்து. நீங்கச் சொன்ன பேயெல்லாம் என்கிட்டே பேட்டி எடுக்கனுமா? நோ... முடியாது...” என்று விடாப்பிடியாகக் கூறினாள்.

அவளது சிறுபிள்ளைத்தனத்தை பார்த்துச் சிரித்தவனை உதட்டைச் சுளித்து கொண்டு முறைத்துப் பார்த்தாள்.

“சரி... வாங்க...” என்று தலையாட்டிவிட்டு அவன் கீழே இறங்கினான். சற்று தள்ளி நின்றுக் கொண்டு கையில் சிகரெட்டை எடுத்துக் கொண்டான்.

அந்த குளிருக்கு அவனுக்குத் தேவைப்பட்டது. சிகரெட்டை பற்ற வைத்து இழுத்து புகையை விட்டவனின் மனம் நிதானமடையத் துவங்கியிருந்தது.

“ஒன் மினிட்... வந்துடறேன்.” என்று கூறிவிட்டு கலைந்திருந்த தலைமுடியை ஒதுக்கியவள். அதில் திருப்தி இல்லாமல் கைப்பேசியில் கேமரா மோடை ஆன் செய்து முடியின் லட்சணத்தை தீவிரமாகப் பார்த்தாள். ஆங்காங்கே கலைந்து தான் காட்சியளித்து கொண்டிருந்தது.

என்ன செய்தாலும் இந்த முடியும் அடங்காதே... என்று எண்ணியவள் தன்னையும் அறியாமல் அதைக் கூறியும் இருந்தாள்.

அவளது செய்கைகளை வெளியே நின்று கைகளைக் கட்டி கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு வெகுசிரிப்பாக இருந்தது. வாய் விட்டுச் சிரிக்கவும் செய்தவனை திரும்பிப் பார்த்து முறைத்தாள். கையிலிருந்த சிகரெட்டை பார்க்கும் போது அவ்வளவு கோபமாக இருந்தது அவளுக்கு...

ஆனால் அதை அவனிடம் எப்படிக் கூற முடியும்?

“ஹலோ என்ன... லொள்ளா?”

“எனக்கா? சான்சே இல்ல... இந்த அத்துவான காட்டில் ஜஸ்ட் வெளிய வர்றதுக்கு இத்தனை அலம்பலா... அம்மே... ஷாப்பிங் கூட்டிட்டு போறவன் கதியை நினைச்சா தான். பேடிச்சு போயி...” தமியாளத்தில் அவளைக் கலாய்க்க ஒற்றை விரலைக் காட்டி பயம் காட்டினாள்.

தலை முடியைப் பிரித்து விட ஐயர்ன் செய்யப்பட்ட அந்த பட்டுக் கூந்தல் நீளமாக முதுகில் புரண்டு, இடை தாண்டி முடி முழங்காலை தொட்டது. அதைக் கலைத்து விட்டு மொத்தமாக அள்ளிக் கேட்ச் கிளிப்பில் அடக்கினாள்.

ஹேன்ட் பேகில் இருந்த வெட் டிஸ்யுவை எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்தவள், அந்தக் குட்டி ஹேன்ட் பேகை அவளுக்கு முன் இருந்த டேஷ் போர்டில் தள்ளினாள்.

எப்போதும் இருக்கும் பாதுகாப்பு உணர்வு என்பதெல்லாம் அவளது விஷயத்தில் கிடையாது. அம்மணியின் ஞாபகசக்தி அத்தகையது. உண்ட கையைக் கழுவ மறப்பவள் என்ற அழகான பெயர் இருப்பதாலேயே தனது முக்கியமான பொருட்களை முதலிலேயே பாதுகாத்து வைத்து விடுவாள்.

டேஷ் போர்டில் ஹேன்ட் பேகை உள்ளே தள்ள முயன்றாலும் போகாமல் அழிச்சாட்டியம் செய்ய... என்னவென்று கைவிட்டு பார்த்தாள்.

கனமான ஏதோ ஒன்று தட்டுப்பட்டது!

சலித்துக் கொண்டு அதை வெளியே எடுத்து விட்டு உள்ளே பேகை தள்ளி விடலாம் என்று எண்ணிக்கொண்டு வெளியே எடுக்க,
அதைப் பார்த்து அதிர்ந்தாள்.

அது ஒரு சிறியவகை கைத்துப்பாக்கி!
 
Last edited:

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,398
Reaction score
22,045
Location
Tamil Nadu
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳...
டன்டனக்கா....டன்டனக்கா...
🙈🙈💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😏😏😏😏...

0ad847a08b586a6d6391ef119be53db0.jpg
நீங்க எனக்கு கொஞ்சமே கொஞ்சம் தான் கொடுத்தீங்க...
🧐☹😟😔😔😕🙁😞😒😏😏😏😏😏

😉 ஆனால் நான்உங்களுக்கு நிறைய தர்றேன்...

5923af7aaaa9edf41a0acb439089f2ae.jpgc8b17b11aa99324dca8a3032e0be468f.jpg6fe369c9d8393c1e900fdf88c0620ca6.jpg

Last edited:

Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,547
Reaction score
6,766
Location
Salem

Nirmala vandhachu 😍😍😍
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top