சந்தன பூங்காற்றே....12

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#1
சந்தன பூங்காற்றே....12

ஒற்றை சிவப்பு நிற ரோஜாவோடு வந்து நின்ற விக்னேஷை முறைத்து கொண்டு நின்றாள் காவ்யா.😾

"ஏன், நேத்து வரல?".😈

"அது.... பேபி , உன் அண்ணகிட்ட சொல்றத்துக்கு முன்ன எங்க வீட்ல சொல்லணும் இல்ல!"😎

"என்ன....?!"😯

"பயப்படாத, இன்னும் உன் பேரை மட்டும் சொல்லல". 😜

"லூசாடா நீ!?"😒

"ம்ம் உன்னை பாத்ததுல இருந்து...." என்று நேற்றைய பிறந்த நாள் பரிசாக இன்று ஒற்றை ரோஜாவை நீட்டினான்.😍🌷

காவ்யா பற்களைக் கடித்தபடி, "வேறெந்த கிஃப்டும் உனக்கு கிடைக்கலையா?" என்று கேட்க,😡

"ம்ம் தேடி பாத்தேன் ஆனா, காதலுக்கு ரோஜாவை விட வொர்த் கிஃப்ட் வேற இல்லயாம்...." வேறு வழியின்றி அவசரத்தில் வாங்கி வந்ததை மழுப்ப கவிதையை உளரினான்.💕😝

"உன்னெல்லாம் திருத்தவே முடியாது, ச்சே" தலையிலடித்து கொண்டு சென்றாள் அவள்.😫

விக்கி அவள் வாங்க மறுத்த ரோஜாவை தன் பையில் பத்திரப்படுத்திக் கொண்டான்.💝

💞💞💞💞💞

ஆவலாக டிஃபன் பாக்ஸை திறந்த சந்தோஷ் முகம் மலர்ந்தது. "ஹே, அதிரசம்" என்று ஒன்றை எடுத்து ஆசையாக கடித்தான்.😋

"ம்ம்ம்ம்.... சூப்பர்ப்...." என அவன் ரசித்து சாப்பிட சாதனாவிற்கும் சந்தோஷமாக இருந்தது.😄

"என்ன திடீர்னு, அதிரசம் கொண்டு வந்திருக்க?" இன்னொன்றை எடுத்து சாப்பிட்டபடி அவன் கேட்க,😁

"சும்மா தான் அம்மா செஞ்சாங்க, உனக்கு பிடிக்கும்னு எடுத்துட்டு வந்தேன்" சாதனா சொல்ல, சந்தோஷ் "தேங்க்ஸ்" என்றான்.😆

'சந்தோஷுக்கு வெல்ல அதிரசம்னா அவ்ளோ பிடிக்கும், ஆனா எனக்கு தான் பதமே வரதில்ல' என்று கல்யாணி அன்று வாட்டமாக சொல்லி இருந்தார்.😌

அது நினைவு வர, சாதனா ராஜேஸ்வரியிடம் கேட்டு இதோ இரண்டு நாட்களில் அவனுக்கு பிடித்த வெல்ல அதிரசத்தை தந்து விட்டாள்.😅

"....சின்ன வயசுல தீபாவளிக்கு என் அம்மத்தா செஞ்சு தருவாங்க பாரு எனக்கு அவ்ளோ பிடிக்கும்...." சந்தோஷ் சிலாகித்து சொல்ல,😍

"'அம்மத்தா'ன்னா?" சாதனா வினவ,😺

"என் அம்மம்மாவை நான் அப்படி தான் கூப்பிடுவேன்" என்று சொல்லி புன்னகைத்தான்.😸

"ஆன்டிகிட்ட நான் ரொம்ப தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடு" சந்தோஷ் நன்றி நவில,🙏

"அதை நீயே நேர்ல வந்து சொல்லிடு, அம்மா உன்ன வீட்டுக்கு வர சொன்னாங்க, எப்படி தெரியுமா?" என்றவள் ராஜேஸ்வரி போலவே பேசிக் காட்டினாள்.🙌

"ரெண்டு முறை வாசல் வரை வந்த புள்ளைய வீட்டுக்குள்ள கூப்பிட தோணல உனக்கு'ன்னு சொல்லி நங்குன்னு ஒரு கொட்டு வச்சாங்க" சாதனா சொல்லிவிட்டு வலிப்பதைப் போல் தலையை தேய்த்துக் கொள்ள சந்தோஷ் வாய்விட்டு சிரித்து விட்டான்.😹

"சரி விடு, உன் டப்பா ஸ்கூட்டி மறுபடியும் ரிப்பேர் ஆகும்போது நான் உன்னை ட்ராப் செய்ய வீட்டுக்கு வரேன்" அவன் கிண்டலடிக்க,😜

"என் வண்டியை பத்தி தப்பா பேசுனா எனக்கு கோபம் வரும்" சாதனா எச்சரித்தாள்.😡

"அப்ப முதல்ல வண்டியை மாத்திட்டு புதுசு வாங்கற வழிய பாரு!" சந்தோஷ் ஆலோசனை வழங்க,😎

"அந்த வண்டி என்னோட செண்டிமெண்ட் ப்பா" சாதனா மறுத்தாள்.😶

"என்ன செண்டிமெண்ட் மண்ணாங்கட்டி" அவன் கேலியில் இறங்க,😒

"....அது முதல் மாச சம்பளத்தில சத்யா எனக்காக வாங்கி தந்தது...." அவள் பதில் தர சந்தோஷ் அவளை வியந்து பார்த்தான்.😮

"சத்யாவ உனக்கு ரொம்ப பிடிக்குமா?".

ஆமென்று தலையாட்டினாள்.😿

"இப்ப சத்யா எங்க இருக்கார்னு தெரியுமா?".

தெரியாதென தலையசைத்தாள்.🙀

சந்தோஷுக்கு வேறேன்ன சொல்வதென்று புரியவில்லை. ஒரு நொடி சாதனாவின் இடத்தில் காவ்யாவை வைத்து நினைத்து பார்க்க நடுங்கி போனான்.😯

"பரவாயில்ல, என் மக்கர் ஸ்கூட்டியால தான் இந்த மக்கு சந்தோஷ் ஃபிரண்ஷிப் கிடைச்சதுன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்" சாதனா சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடியே விட்டாள்.😲

"மக்கு....!! நான்....!! ஏய் நான் உன்னோட சீனியர் ஆஃபீஸர் ஞாபகமிருக்கட்டும்"
அவன் மிரட்டலாக சொல்லி விட்டு..... சிரித்தும் விட்டான் அவன் இட கன்னத்தில் அழகாய் குழி விழ.😉

🌾🌾🌾🌾🌾🌾
 
Top