சந்தன பூங்காற்றே....20

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#1
சந்தன பூங்காற்றே 20

காலையில் இருந்தே கம்பெனியில் அதிக வேலை காரணமாக சாதனா சோர்ந்து காணப்பட்டாள்.

அதைவிட அதிகமாக சந்தோஷின் நடவடிக்கைகளால் அவள் மனம் சோர்ந்து கிடந்தது.

தான் மறுத்தும் தனக்கு உதவி செய்த சந்தோஷ், இப்போது தன்னை விட்டு ஒதுங்கி செல்வதை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை.

சந்தோஷின் மனநிலையை அவளால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை.

அவனிடம் மனம்விட்டுப் பேச எண்ணியவள், மாலை வேலை முடிந்த பிறகும் அலுவலக வளாகத்தில் காத்திருந்தாள்.

முன்பு அவள் காத்திருந்த அதே இடம். அன்று கோபத்தோடு இருந்தாள். இன்று காதலுடன்.

சாதனாவை கவனித்த சந்தோஷ் தானும் பேச நினைத்து அவளை அணுகி நின்றான்.

....!

சாதனாவிற்கு அவனிடம் பேச ஆயிரமாயிரம் விசயங்கள் இருந்தும் அவன் முன் நா எழாமல் நின்றாள்.

அவனே முதலில் பேச்சை தொடங்கினான்.

"....உன் மனசுல ஆசையை வளர்க்கிற மாதிரி நான் எப்பவாவது தவறா நடந்திருந்தா என்னை மன்னிச்சுடு சாதனா"
என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"இல்ல சந்தோஷ், உன்மேல எந்த தப்பும் இல்ல... நான் தான்...." என்று அவசரமாய் மறுத்து சொன்னாள்.

"விடு சாதனா, இது சாதாரண அஃபெக்சன் தான். இதுக்காக உன்னையும் தப்பு சொல்ல முடியாது!" அவன் பெருந்தன்மையாக சொல்ல,

"....வயசுல ஏற்படற அஃபெக்சனுக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு நான் ஒண்ணும் முட்டாள் இல்ல...." என்று அழுத்திச் சொன்னாள்.

"நீ என்ன உளர்ர சாதனா" அவன் சற்று கடுமையாக கேட்டான்.

"நான் ஒண்ணும் சின்ன குழந்தை இல்ல சந்தோஷ்..... எனக்கு உன்னை பிடிச்சிருக்கு,
..... நான் உன்னை விரும்புறேன்.... உன்கூட சேர்ந்து வாழணும்னு ஆசபடறேன்..... உன்னால தான் என் மனச புரிஞ்சுக்க முடியல...."

சாதனா தன் காதலை வெளிப்படுத்த, சந்தோஷ் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இன்றி பதில் பேசவும் மறந்து நின்றான்.

சாதனா, "ஆனா, நான் உன் மனசுல இல்ல.... அதுக்கான காரணம் கூட எனக்கு தெரியும்....நீ என்னை ச..சந்தேக ப..படற இல்ல...." சொன்ன அவள் குரலும் உடைந்தது அவள் மனதைப் போல.

"பைத்தியம் மாதிரி உளறாத, நான் எப்படி உன்னை சந்தேகபடுவேன்?" என்றான் சந்தோஷ் பொறுமை இழந்தவனாய்.

"அப்ப ஏன் என்னை விட்டு விலகி போற?" சாதனா விடாமல் கேட்க,

"நீ என்னோட நம்பிக்கையை சிதைச்சிட்ட சாதனா" என்று குரலை உயர்த்தினான்.

....!!

"நாம ரெண்டு பேரும் கடைசிவரைக்கும் நல்ல நண்பர்களா இருக்கணும்னு ஆசபட்டேன். அம்மாவும் காவ்யாவும் கேலி செஞ்சப்ப கூட நான் நம்ம ஃபிரண்ஷிபை நம்பினேன். அந்த நம்பிக்கையை நீதான் குலைச்சிட்ட சாதனா.... நீ இவ்வளவு பலவீனமான இருப்பன்னு நான் நிச்சயமா எதிர்பாக்கல...."

....!

"இந்த உலகத்தில எல்லா சொந்தமும் எதிர்பார்போட உருவாகறது தான். காதல் கூட எதிர்பார்ப்போட வருவது தான். நட்பு மட்டும் தான் அதிகபட்ச எதிர்பார்ப்பு இல்லாம வர தூய்மையான உறவு.... ஃபிரண்ட்ஷிப்கு தேவையானதெல்லாம் ஃபிரண்ட்ஷிப் மட்டுந்தான். வேற எதுவும் இல்ல."

....!

"அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, கணவன், மனைவி, காதலன், காதலி.... இந்த சொந்தங்கள் எந்த சூழ்நிலையிலும் மாறுவதே இல்ல, ஏன்? ஃபிரண்ட்ஷிப் மட்டும் காதலா மாறணும்னு எதிர்பாக்கறாங்க, எனக்கு புரியல....?"

....!

"தயவு செஞ்சு நான் சொல்றதை கேளு சாதனா, உனக்கு என்னைவிட நல்ல கணவன் கிடைக்கலாம்.... எனக்கு உன்னைவிட நல்ல மனைவி கிடைக்கலாம். ஆனா, உனக்கு என்னைவிட நல்ல தோழனோ!... எனக்கு உன்னைவிட நல்ல தோழியோ!... நிச்சயமா கிடைக்க மாட்டாங்க..." என்று உணர்ச்சிகரமாய் பேசிவிட்டு அருகிருந்த சோஃபாவில் தொப்பென்று அமர்ந்து விட்டான்.

அவனை சில நாட்களாகவே அரித்து கொண்டிருந்தவற்றை சாதனாவிடம் கொட்டிவிட்டதால், சந்தோஷின் மனதிலிருந்த இறுக்கம் ஓரளவு விலகியது.

மனம் தளர்ந்து தன் தலையை அழுத்த கோதி விட்டு நிமிர்ந்தான்.

இவ்வளவு நேரமாக அவனெதிரில் நின்றிருந்த தந்தசிலை இப்போது அங்கு காணப்படவில்லை.

....!

தனது கல்லூரி நாட்களில் கூட கிடைக்காத ஃபிரண்ட்ஷிப் சாதனாவுக்கு சந்தோஷிடமிருந்து கிடைத்தது.

அதற்காக பலமுறை கடவுளுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறாள். ஆனால், இப்போது....

சந்தோஷின் வார்த்தைகளால் குறுகி போன இதயத்தோடு தன் ஸ்கூட்டியில் சென்று கொண்டு இருந்தவளை அவளது மனசாட்சி இரக்கமின்றி கடிந்து கொண்டிருந்தது.

'சந்தோஷ் உன்மேல வச்சிருந்த நம்பிக்கையை நீயே சுக்கு நூறாய் உடைச்சுட்டியே....?'

'உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்த தூய்மையான நட்பை நீயே கலங்க படுத்திட்டியே....?'

என்ற குற்றச்சாட்டில் உள்ளுக்குள் வெந்து கொண்டிருந்தாள் அவள்.

'என் சுயநலத்துக்காக சந்தோஷோட நட்பையும் நம்பிக்கையையும் நானே அழிச்சிகிட்டேனா????' என்ற கேள்வி திரும்ப திரும்ப அவளை தாக்கி கொண்டிருந்தது.

சாதனா தன்நிலை மறந்திட அவள் வண்டி கட்டுப்பாட்டை இழக்க, எதிரே வேகமாக வந்த காரில் மோதியது.

தூரத்தில், "சாதனா........." என்று சந்தோஷ் அலறிய குரல் கேட்பது போலிந்தது.

அடுத்த நொடி அவள் நினைவிழந்து சாலையில் விழுந்து கிடந்தாள்.

💔💔💔💔💔💔

(இதில் இருப்பது சந்தோஷின் தனிப்பட்ட கருத்து மட்டுமே.....இதில என்னை தப்பா நினைக்காதிங்க மக்கா....🙏)

✍✍✍✍✍✍
 

akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
Hi Yuva Karthika,

I couldn't follow your story from beginning... But started reading from middle... Awesome writing... :)

Not only that... the way you explain the thoughts are very clear. I have missed few episodes in beginning... will come back once I come from the beginning... Please don't mistake... Bit time constraint...

Great Job... Keep Going... :) :) :) (y)(y)(y)(y)
 

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#3
Hi Yuva Karthika,

I couldn't follow your story from beginning... But started reading from middle... Awesome writing... :)

Not only that... the way you explain the thoughts are very clear. I have missed few episodes in beginning... will come back once I come from the beginning... Please don't mistake... Bit time constraint...

Great Job... Keep Going... :) :) :) (y)(y)(y)(y)
😍😍😍😍 Thank you very much sahi🍭🍭🍡🍡 for your greatful support and comment 🤩🤩🤩🤩
 

Advertisements

Top