• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

'சமர்ப்பணம்-அறிமுகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அனைவருக்கும் வணக்கம்.

சமர்ப்பணம், டிவோஷன், டெடிகேஷன் போன்ற ஆத்மார்த்தமான உணர்வுகள் காதல், பாசம், நன்றி, மரியாதை போன்றவற்றை அழகாய், ஆழமாய் வெளி கொண்டு வரும் அர்ப்பணிப்பு. எல்லோரிடமும், எல்லாவற்றிக்கும் இந்த அர்ப்பணிப்பு நமக்குத் தோன்றி விடாது.
அப்படி ஒருவரிடம் நமக்குத் தோன்றுகிறது என்றால் அவர் நம் வாழ்வில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.அப்படி என் வாழ்வில்

முதலாவதாக என் எழுத்துக்களை வாசித்து, நேசித்து எனக்கு இத்தனை பெரிய அங்கீகாரம், பெயர், புகழ் கொடுத்திருக்கும் என் வாசக பெருமக்களுக்கு, முதலில்.

ரெண்டாவதாகத் திருமதி.லக்ஷ்மி அகர்வால்- ‘நீ சிதைத்தது என் முகத்தைத் தான், என்னையல்ல’ என்று பீனிக்ஸ் பறவைபோல் பிறந்து எழுந்திருப்பவருக்கும், தங்களுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து மீண்டும் வீறு நடை போடும் பெண் போராளிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாய் நிற்பவர்களுக்கு.

மூன்றாவது திருமதி சசி அக்கா. ‘ஜெம் ஆப் எ வுமன்.’என் சிறகுகளை நான் விரித்துப் பறக்க துணை நிற்கும் உடன் பிறவா சகோதிரி. வேலைக்கும் நடுவே என்னை அழைத்து என் கேள்விகளுக்குப் பொறுமையாய் பதில் அளித்து, '10,000 words உன்னால் எழுத முடியாதா? எழுத முடியும் என்று ஊக்கம் அளித்த அந்த உன்னத உள்ளத்திற்கு.

நான்காவதாய் ப்ரூப் ரீடிங் செய்து கொடுத்த சகோதரிகள் ஸ்ரீவித்யா நாராயணன், ஜெயா, என் கதை மாந்தர்களுக்குக் கவர் மூலம் உயிர் கொடுத்த சாந்தினிதாஸ் இவர்கள் மூவருக்கும்,
என் எழுத்து பணியில் குருவாய், தோழியாய், வழிகாட்டிகளாய் இருக்கும் சக எழுத்தாள தோழமைகளுக்கும்.

இந்த அத்தனை உறவுகளையும் என் வாழ்வில் கொண்டு வந்த "எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கும்.

வெறும் நன்றி என்ற வார்த்தையைச் சொன்னால் அது சிறு குடுவையில் சமுத்திரத்தை அடைக்க முயல்வதை போன்றது. எனவே இந்த எழுத்துக்கள் இவர்கள் அனைவர்க்கும் என் அர்ப்பணம்


''சமர்ப்பணம்''.
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
என் முதல் கதை "என்ன தவம் செய்தேன்" - ஹியூமன் ட்ராபிக்கிங் பற்றியது.

ரெண்டாவது கதை "காஞ்சி தலைவன்", நம் கலாச்சாரம், பாரம்பரியம், சிலை கடத்தல் பற்றியது.

மூன்றாவது "ஊரு விட்டு ஊரு வந்து" போதை மருந்து, ஹவாலா, ஆர்கன் திருட்டு, terror பைனான்சிங், எல்லை தாண்டிய invisible நார்க்கோ வார் பற்றியது.

இந்த மூன்றிற்கும் நீங்கள் கொடுத்த ஆதரவை,வரவேற்பு ஆதாரமாய் கொண்டு அடுத்து உங்கள் கைகளில் என் நான்காவது கதைக்களம் "சமர்ப்பணம்".
இதை படிக்கும் உங்களுக்கே சம்பர்ப்பிக்கிறேன்.



ஒரு பெண்ணின் முகத்தில் புன்னகையை வரவழைக்க உனக்கு ரெண்டு நிமிடம் தேவைப்படும்.
மூன்று நொடிகளே ஆனது உன் அமிலம் கொண்டு என் கனவுகளை நீ சிதைக்க எடுத்து கொண்ட காலம்.
நீ மாற்றியது என் முகத்தை தான் என் இதயத்தை அல்ல
நீ வீசிய அமிலம் என் முகத்தை சிதைத்தது என்னவோ உண்மை
ஆனால் என் உயிர்ப்பு, என் கனவு சிதையவில்லை
.

-லட்சுமி அகர்வால்.


ஆசிட் அட்டாக் - உலகின் மிகக் கொடூரமான மனித உரிமை மீறல். ஒரு நொடி கையில் எடுக்கும் அமிலம், பலர் வாழ்வை வாழ்நாள் முழுக்க கருக வைத்து விடும் அவலம் இது.

'இந்தியா டுடே' டேட்டா இன்டலிஜென்ஸ் யூனிட் (டி.யு.யூ) 2014 மற்றும் 2018 க்கு இடையில் நாட்டில் அமிலத் தாக்குதல்களால் 1,483 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறிந்துள்ளது. இது தேசிய குற்ற பதிவு பணியகம் வெளியிட்ட தரவுகளின் அடிப்படை தகவல்.


முகம் சிதைந்து, சமூகத்தில் அவதூறுக்கு, கேலி, கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டு, இவர்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு வெட்கப்படாத ,குற்றவாளிகள் தண்டனையின்றி தப்பிப்பது என்று ஆசிட் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் பல சமூக அவலங்களை எதிர்த்து நின்று வருகின்றனர்.

அதிர்ச்சி, பயம், திகைப்பு, வலி வேதனை ஒரு புறம் என்றால் இதை பற்றிக் கண்டு கொள்ளாத சமூகம், மந்தமான நீதி அமைப்பு, rehab குறைபாடு என்று இதன் லிஸ்ட் வெகுநீளம்.

இந்தகதை ஒரு வாரத்தில் எழுதி முடிக்கப்பட்ட ஒன்று. தகவல்களைதடி, சார்ட் அவுட் செய்யத் தான் அதிக நேரம் ஆனது.

ஆசிட் அட்டாக் நடந்த பெண்களின் வழக்கைப் படித்த போதெல்லாம் ரெண்டு நாள் உணவை எடுத்துக் கொள்ளவே முடியவில்லை.

ரெண்டு வருடம் ஆடை என்ற ஒன்றே அணிய முடியாமல், தனி அறைக்குள் இவர்கள் கைதியாய் இருந்தது கொடூரம்.

லட்சுமி அகர்வால் மீது அமில தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் ஒரே மாதத்தில் சிறை விட்டு வெளியே வந்து அவனுக்குஇன்னொரு பெண்ணுடன் ஆகி விட்டது என்பதை படித்தபோது எப்படி ரியாக்ட் ஆவது என்று கூடத் தெரியவில்லை.

தவறு செய்தவன் ஒரு நொடியில் செய்து விட்டுச் சென்று விடுகிறான்.ஆனால் இவர்கள் வாழ் நாள் முழுவதும் அதற்கான நரகத்தை அனுபவித்து வருகிறார்கள்.

பெண்கள்மீது மட்டும் அல்ல, ஆண்கள்மீதும் அமில தாக்குதல் நடப்பது வெகுசர்வ சாதாரணம். எப்படி பாலியல் வன்கொடுமை பெண் குழந்தைகளுக்கு மட்டுமே நடப்பதில்லையோ அப்படி.

change.org என்ற வலைத்தளம் உள்ளது.பல சமூக பிரச்சனைகளுக்கு மனு கொடுக்க மக்களிடம் சைன் வாங்கும் தளம்.இதில் பல பிரச்சனைகளுக்கு சைன் போட்டு இருக்கும் போது தான், அமில தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குதனி ஸ்பெஷல் கோர்ட் வேண்டும், ஆசிட் தாக்குதலுக்கு சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்ற அந்த petition கண்ணில் பட்டது.அதே சமயம் ஒரு awareness விளம்பரம் பார்க்க நேரிட்டது.



இது எல்லாம் தீபிகா படுகோன் நடித்த சபக்-இது லட்சுமி அகர்வால் வாழ்க்கை விவரிக்கும் படம். அடுத்து விஜய் நடித்த பிகில் படம் எல்லாம் வருவதற்கு முன்பு ஏற்ப்டுத்திய தாக்கம். இவை ரெண்டும் வெளியாகியபிறகு அமில தாக்குதல்பற்றி மக்களிடம் விழிப்புணர்வு கொஞ்சமாவது வந்து இருக்கும்.





என் கதைகளில் அதிக தகவல் கொடுப்பதாய் என்னிடம் சொல்லப்பட்டது. என் கதைக்கும், கதை மாந்தருக்கும் தேவையில்லாத எதையும் கொடுக்கவில்லை என்று தான் நினைக்கிறன்.

இந்த கதையும் மற்ற என் கதைகளை போலவே பெண்மையை முன்னிறுத்தியே என் கதைக்களம். இவர்கள் நிஜங்களின் நிழலே.

உண்மையான காதல் எது? காதல் என்று பெயர் செய்து கொண்டு பெண்களை stalk செய்து, பாலியல் வன்கொடுமை செய்வது கதைகளில் வருவது போல் தெய்வீகம் எல்லாம் இல்லை.

அதனால் வரும் பிரச்சனைகள், காதல் என்ற பெயரால் ஏமாற்றப்படும் பெண்களின் வாழ்வு, மூட்டபடும் சிதையிலிருந்து மீண்டு வருவது, மெடிக்கல் மாபியா, ஹியூமன் ட்ராபிக்கிங், பாலியல் அடிமைத்தனம், அமில தாக்குதல் என்று ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த சிலவற்றின் கலவையே.

கதைமாந்தர்கள் சந்திக்கும் அவலங்கள், கொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் உண்மை தகவலின் அடிப்படை கொண்டவையே

இதற்கும் உங்கள் வரவேற்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறன்.

உங்கள் அன்பையும், ஆதரவையும் எதிர்நோக்கி, உங்களின் மேலான கருத்துக்களை படித்து விட்டு நிச்சயம் பதிவிட்டால் மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வர முயலும் என் சிறு முயற்சி உங்கள் ஈடுபாட்டால் இன்னும் உலக அளவில் சென்று அடையும்.

நீங்களும் துணை இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்

Sincere thanks to
Change.org
Wikipedia
Yourstory.com
Shethepeople

https://www.meerfoundation.org/about
https://www.makelovenotscars.org/
https://www.sundayguardianlive.com/culture/system-failed-acid-attack-survivors
https://www.pri.org/stories/2016-03-16/23-year-old-woman-just-opened-indias-first-rehab-clinic-acid-attack-survivors
https://ijme.in/articles/white-coated-corruption/?galley=html
https://www.health24.com/News/Public-Health/How-doctors-in-India-scam-sick-patients-20150225
http://doctors.ajc.com/patient_stories_sexual_abuse_doctors/
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4771530/


வாரத்திற்கு ரெண்டு அல்லது மூன்று பதிவு கொடுக்கிறேன்.

அமேசானில் முழு புத்தகமாய் படிக்கச் லிங்க் கீழே உள்ளது.

https://www.amazon.in/சமர்ப்பணம்-SAMARPANAM-Tamil-ANITHA-RAJKUMAR-ebook/dp/B082GTCMBY/ref=sr_1_2?crid=MJN8V699GUF1&keywords=samarpanam&qid=1581913496&sprefix=samarpana,aps,362&sr=8-2

உங்கள் ரெவியூ, கருத்துக்கள் தான் நிஜ அவார்ட், பூஸ்ட்.எழுதத் தூண்டும் ஆதாரம் எல்லாம்.


அமேசான் படித்தவர்கள், இனி படிக்கச் போகிறவர்கள் உங்கள் ரேட்டிங், கருத்துக்களை அங்கே பதிவு இட்டால் மற்றவர்களுக்கும் படிக்கச் ஏதுவாய் இருக்கும்.

இந்தக் கதை வாசிக்கும் நீங்கள் அப்படியே கடந்து விடலாம்.ஆனால் இது உங்களிடம் சென்று சேர்ந்து இருக்கிறதா என்பது நீங்கள் என்னுடன் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களை கொண்டு தான் என்னால் புரிந்து கொள்ள முடியும்.

எழுதுபவர்கள் எது வேண்டும் என்றாலும் எழுதி விடலாம் அது உங்களிடம் எப்படி சேர்ந்து இருக்கிறது என்பது நீங்கப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றால் எனக்குப் புரிய வாய்ப்பில்லை என்பதையும் மனதில் கொள்ளுங்கள் நட்பூஸ்.

என் இந்தச் சிறு முயற்சிக்கு உங்கள் அன்பும், ஆதரவும் வேண்டுகிறேன்.


with love
yours
honey
 




Last edited:

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,397
Reaction score
22,044
Location
Tamil Nadu
:love::love::love:

?உங்களின் அருமையான எண்ணங்கள் அவ்ளோளோளோ அழகு....

?சின்னப் பிரச்சினைகளுக்கு மனச் சுணக்கங்கள் ஏற்படும் போது... இவர்களை வாசித்தால் நிச்சயம் தன்னம்பிக்கை வருவது உறுதி.....IMG-20200213-WA0009.jpg

?அவர்களின் வலிகளை வாசிக்க காத்திருக்கேன்....IMG-20200217-WA0004.jpg
 




Last edited:

Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
Dnt no hw to react to this or how to express my feelings. உங்கள் ஒவ்வரு கதையும் தரும் சிந்தனை, யதார்த்த வாழ்வின் நிகழ்வுகளை மையமாக கொண்ட கதைகளானது வாசகர் மனம் கவர்ந்தவையாகவே உள்ளன.
Reading books r nt only giving us a mind relax.its nt just a hobby.it teach us more about our society.v can know about
where r v living?
what r v doing?
What v did 2 our society? Etc......
"society mean,, WE are right!

இவை ஒரு வகை மக்களை சென்றைடையும் வழிகள் எனலாம்...நம்மளால சமூகத்தை திருத்த முடியாதுனாலயும் இப்படியான சமூகத்தை விட்டு தம்மை பாதுக்காக்கவாவது முடியும்..
Keep going sis. காதலன் காதலியின் உண்மையான உன்னதமான காதலில் மயங்குவதை போல வாசகரை எப்படி எவ்வாறு வார்த்தைகளால் மயக்கலாம்னு தெரிஞ்சு வச்சிருக்கீங்க.

Same like this there are more writers in our(MS team) for all??
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Dnt no hw to react to this or how to express my feelings. உங்கள் ஒவ்வரு கதையும் தரும் சிந்தனை, யதார்த்த வாழ்வின் நிகழ்வுகளை மையமாக கொண்ட கதைகளானது வாசகர் மனம் கவர்ந்தவையாகவே உள்ளன.
Reading books r nt only giving us a mind relax.its nt just a hobby.it teach us more about our society.v can know about
where r v living?
what r v doing?
What v did 2 our society? Etc......
"society mean,, WE are right!

இவை ஒரு வகை மக்களை சென்றைடையும் வழிகள் எனலாம்...நம்மளால சமூகத்தை திருத்த முடியாதுனாலயும் இப்படியான சமூகத்தை விட்டு தம்மை பாதுக்காக்கவாவது முடியும்..
Keep going sis. காதலன் காதலியின் உண்மையான உன்னதமான காதலில் மயங்குவதை போல வாசகரை எப்படி எவ்வாறு வார்த்தைகளால் மயக்கலாம்னு தெரிஞ்சு வச்சிருக்கீங்க.

Same like this there are more writers in our(MS team) for all??
thanks ma,
such a boosting words.
happy that you like it.
need your continous love and support.
mere thanks wont suffice.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top