Chitrasaraswathi
Well-known member
எஸ்.எம். தளத்தில் ஸ்ரீநவியின் சர்க்கரை நிலவே எனது பார்வையில். யதார்த்தமான குடும்பக் கதைகளை தருபவர்களில் ஸ்ரீநவியும் ஒருவர். கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த தயா விவசாயம் நஷ்டத்தை தந்த காரணத்தால் குடியிருக்கும் வீட்டுக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டு நகரத்தில் வாழ தனது தாய் மற்றும் இளைய சகோதரி சிந்துவுடன் வருகிறான். மூத்த சகோதரிகள் திருமணமானவர்கள். அவர்களின் கீழ் வீட்டில் குடியிருக்கும் பாஸ்கர் மற்றும் சிந்து திருமணத்திற்கு முன் முறை தவறுவதால் அவர்களின் திருமணத்தை நடத்த வேண்டி பாஸ்கருக்கு மூத்த சகோதரி மிதுனாவை திருமணம் செய்து கொள்கிறான். இருவரின் திருமண வாழ்வு வெற்றி பெற்றதா? இரு மத்தியதர குடும்பச் சூழலையும் யதார்த்தமான எழுத்து நடையில் அருமையாக தந்திருக்கிறார்.