• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சாத்திரம் ஏனடா! - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rishaba

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jan 8, 2021
Messages
484
Reaction score
712
Location
Theni


1709022647094.png
சாத்திரம் ஏனடா! - 4மஞ்சள் நிற வெஸ்பா அப்ஸராவையும், அகிலனையும் கோவிலுக்குத் தாங்கிச் சென்று கொண்டிருந்தது. பின்னாடி அமர்ந்து வந்தவன், “ஏய், எங்கடீ போற?” அகிலன் கடுகடுத்தான்.

“கோவிலுக்குதான் அகி, அது தெரியாமதான் என்கூட பைக்ல வர்றியா?” அவனுக்குச் சளைக்காமல் அபியும் பதில் தர அவளின் மென்மையான முகம் சற்று கோபத்தில் சிவந்து போய் இருந்தது, பைக்கில் அவள் பின்னால் அமர்ந்து இருந்தாலும் அவளின் மூச்சின் வேகத்தை வைத்தே மனநிலையைக் கணித்துவிட்டான்.

“நீ எப்பவும் அம்மன் கோவிலுக்குதான போவ? இப்ப என்ன புதுசா பெருமாள் கோவில் இருக்க பக்கமா போற…?” பதில் அளிக்க விரும்பாமல் அமைதி காத்தாள். “இந்தப் பக்கம் இருக்க பெருமாள் கோவிலுக்கு தான் போறோமா?” அதே கேள்வியை வேறுபடுத்திக் கேட்டான். சற்று இளகி அவன் கேட்ட விதத்தில் அவள் கோபம் சற்று மட்டுப்பட்டது.

“அதுவா, வேற ஒண்ணுமில்லை அகி, அம்மன் கோவிலுக்கு மட்டும் போறதால இப்பல்லாம் நைட் கிருஷ்ணன் கனவுல வந்து அவர பார்க்க வரமாட்டேங்கிறேன்னு கோவப்படுறாருடா, என் செல்லத்த வருத்தப்பட விடலாமா? அதனாலதான் இப்போ கிருஷ்ணன பார்க்க போயிக்கிட்டு இருக்கோம்” இப்போது அகியின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிப்பது ரியர்வியூ கண்ணாடியில் தெளிவாகத் தெரிந்தது அவளுக்கு.

“என்னடா ரொம்ப ஜெலுஸா பீல் பண்றீயா?” அவளின் சூதுள்ள வார்த்தையில் தன்னை சுதாரித்தவன், “ம்..ஹீம்.. நீ முதல்லயே பெருமாள் கோவிலுக்குதான் போறோம்னு சொல்லியிருந்தா அதையே சோசியல் மீடியாலயும் அப்டேட் செஞ்சுருப்பேன்” வார்த்தைகளை அழுத்தம் கொடுத்துச் சொன்னான். அவனின் அழுத்தம் பொதிந்த வார்த்தைகளை மனத்தில் பதித்துக் கொண்டாள்.

தன் போக்கைக் கண்டு கொண்டு கோவிலை வேண்டும் என்றே மாற்றி அழைத்து வந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தவன், தானும் எதையும் மறைக்கவில்லை என அழுத்தம் கொடுத்து வார்த்தைகளை விட்டான்.

“நீ வர..வர.. சோசியல் மீடியா கூட ரொம்ப ஜெல்லா இருக்க, சரியில்ல அகி.. ஆபீஸ் போனோமா.. வேலையப் பார்த்தோமா, அதோட நிப்பாட்டிக்கோ, ரொம்ப கொஞ்சிக் குழையாத...” அவனை நேருக்கு நேராகப் பார்த்து, “கொஞ்சம் ஒவராதான் போயிக்கிட்டிருக்க..” என தன் கண்டன பார்வையை அவனின் மேல் உதிர்த்தாள்.

அவன் மனத்தில் இருந்த ஏமாற்றம் அப்பட்டமாக பிரதிபலித்தது. அதை ஒதுக்கி, “சரிடீ… அம்மா அம்மன் கோவிலுக்குதான் பிரசாதம் பண்ணிக் கொடுத்தாங்க, இப்ப இதை என்ன பண்றது?” என பிரசாதம் இருந்த சம்படத்தைத் தூக்கிக் காண்பித்தான்.

“ஏன் பெருமாளுக்கு பிரசாதம் கொடுத்தா ஏத்துக்க மாட்டாரா? அதுவும் நான் கொடுத்தா பெருமாள் பிரியப்பட்டு எழுந்து வந்தே கூட சாப்பிடுவார் தெரியுமா? ஏன்னா கிருஷ்ணனுக்கு நான்னா ரொம்ப இஷ்டம்” அவனை மேலும் சீண்டிக்கொண்டே இருந்தாள்.

அதில் கடுப்பானவன், “இந்தா பிரசாத வாளி ..போ.. போய் உன்னோட பார்ட் டைம் லவ்வர்கிட்ட கெஞ்சுவியோ, கொஞ்சுவியோ கொண்டு போய் நீயே கொடு, நான் வெளியவே வெய்ட் பண்றேன்” பைக்கைவிட்டு இறங்கி கோவில் சுவர் பக்கமாக போய் சாய்ந்து நின்று கொண்டான்.

“என்கூட வர்றதைவிட உனக்கு அப்படி என்ன வெட்டி முறிக்கிற வேலை..? என்னை விட இந்த சோசியல் மீடியாதான் உனக்கு ரொம்ப முக்கியமா போயிருச்சா..?” அவனின் உதாசீனத்தால் முகத்தை சுறுக்கிக் கொண்டாள்.

அவளின் சிறு முகவாட்டத்தைப் பொறுக்க இயலாமல், “அப்படி இல்லடி.. கோவிலுக்குள் வந்தா சைட் அடிக்க விடமாட்ட, அதே வெளியே இருந்து ஒரு நல்ல பிகரா பார்த்தா கண்ணுக்கும், மூளைக்கும் நல்லது”

அவளின் மனநிலையை எடை போட்டுக் கொண்டே தொடர்ந்தான், “அதோட நம்ம அம்மன் கோவிலுக்கு போகாமலேயே... சோசியல் மீடியால ப்ரெண்டா இருக்கதால இங்க இருந்தே உனக்கு அம்மன் கோவில்ல ஒரு ஸ்பெசல் அர்ச்சனை பண்ணியாச்சு தெரியுமா? இது கூட கனெக்ட் இல்லாட்டி முடியுமா?” என தன் போனை தூக்கிக் காண்பித்தான்.

அவளும் பொறுமையின்றி, “கடைசியா கேக்குறேன் கோவிலுக்குள்ள வர்றீயா? இல்லையா?” அவள் கேட்ட விதம் கண்டிப்பாக கோவிலுக்குள் வந்தே தீர வேண்டும் என்பதைத் தெளிவாகக் காட்ட,

“நீ மட்டும் என்னவாம், வேணும்னுதான கோவில மாற்றி பெருமாள் கோவிலுக்குக் கூப்பிட்டு வந்த… நீ எது செஞ்சாலும் கரெக்ட்... நான் ஏதாவது பண்ணா மட்டும் குறை சொல்லிக்கிட்டே இருப்பியா?”

அவளின் முறைப்பால் கோவிலுக்குள் சென்றான் அகி. அன்று பெருமாளுக்கு விசேஷ நாள் எதுவும் இல்லாமல் இருக்க, கோவிலில் கூட்டம் மிகக்குறைவாகவே இருந்தது. அவளின் பிரசாதத்தை பூசாரி மகிழ்ச்சியுடன் வாங்கி பெருமாளின் கண்ஒளி படும் இடத்தில் வைத்தார்.

பெருமாளை மானசீகமாக வணங்கி விட்டு, கோவிலைச் சுற்றியுள்ள அரளி, துளசி செடிகளைக் கண்டவள் அதன் அருகில் அமர்ந்து கொண்டாள். என்னவோ இந்த செடிகளுக்காகவே வந்தவள் போல் அதனுடன் ஐக்கியமானாள். நேரம் கடந்து கொண்டே செல்ல கைக்கடிகாரத்தையும், அவளையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டே இருந்தவன், இதுக்கு மேல் முடியாது என்பதைப் போல்,

“அபி.. நேரமாச்சு..வா.. கிளம்பலாம்” அங்கு தரையில் சிதறி கிடந்த நீரில் விரல்களால் கிறுக்கிக் கொண்டு இருந்தவளின் கை விரல்களை பிடித்து அவள் வரையும் அஜந்தா ஒவியத்தைத் தடை செய்தான்.

அவனின் கையை உதறிவிட்டு, “எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் கோவில்ல இருக்கணும். நீ போ.. நான் டிராப் பண்ணமாட்டேன்” என ஒதுங்கிக் கொண்டாள். அபியின் ஒதுக்கத்தில் நிராதரவாய் நின்றவனின் அதிர்ந்த பார்வை அவளை முறுவலிக்கச் செய்தது.

“ஏய்.. அபி ப்ளீஸ் டி ஆபீஸ்க்கு டைமாச்சு, டிராப் பண்ணிருமா... என் செல்லம் இல்ல” இறுதியில் கெஞ்சவே தொடங்கினான்.

“அதான் செல்லம் இல்லன்னு சொல்லிட்டியே?”

இப்போது முறைக்கும் முறை அவனது, “அவ்வளவுதான.. போ.. நான்.. கேப் புக் பண்ணி போயிக்கிறேன். உன்னோட உதவி ஒண்ணும் வேண்டாம்” என்றானே தவிர அவளுக்காக காக்கவே செய்தான்.

சற்று யோசித்தவள் அகியின் திருட்டு பார்வையைக் கண்டு, “நீ எதுக்கு இதெல்லாம் பண்றேன்னு எனக்கு தெரியாதுன்னு நினைக்கறியா?”

“ம்ம்... உனக்கு தெரியக்கூடாதுன்னு எதுவும் செய்யல, எதுக்கு செய்றேன்னு நீ புரிஞ்சுக்கிட்டா சரி. இந்த அகி உனக்கு எப்பவும் சப்போர்டா இருப்பேனே தவிர அதுக்காக உன்னோட இழப்பை பார்த்துட்டு சும்மா இருப்பேன்னு மட்டும் நினைக்காத, உனக்கு எப்பவும் நான் நல்ல ப்ரெண்டா இருக்க நினைக்கிறேன், அதை முதல்ல புரிஞ்சுக்கோ” நீளமாக அகி பேசி முடிக்க.

“வா...கிளம்பலாம்” என அதோடு நிறுத்திக் கொண்டாள், வழியில் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை, இதுவும் இவர்களுக்கு புதிது. இருவரும் சேர்ந்து இருந்தால் அந்த இடத்தில் கலகலப்புக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. வாயே ஓய்வு கேட்டாலும் அதற்கு மட்டும் ஈவு இரக்கம் பார்க்க மாட்டார்கள்.

அந்த அளவு எதைப் பற்றி பேசினார்கள் என்று கேட்டால், அதுவா... எதை பற்றி பேசிக்கிட்டு இருந்தோம் என இருவரும் ஒரே மாதிரி யோசிப்பார்கள். அப்படிப்பட்டவர்களின் அமைதிக்கு காரணம் யாராக இருப்பார்கள்? இல்லை அவர்களின் பிரச்சனைதான், தீர்க்ககூடியதா? அலுவலகம் வந்து சேர அவனை அங்கே வாசலில் இறக்கிவிட்டு கிளம்பத் தயாரானாள். இவர்களின் மெளனத்திற்கு சிறு விடை கிடைக்க,

“அபிமா, என்ன டிராப் பண்ண இவ்வளவு தூரம் வந்துட்ட, அதுக்காக எங்க ஆபீஸ் கேண்டீன்ல போய் உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கித் தாரேன், இங்க மார்னிங் சான்ட்வீச் செம்மையா இருக்கும் வா..!”

அகி பேசி முடிக்க அவனை ஏளனமாகப் பார்த்துவிட்டு, “நீயே போய் கொட்டிக்கோ, எனக்குத் தேவையில்லை” விருட்டென கிளம்பிச் சென்றாள். தூரத்தில் பிடிவாதத்துடன் செல்லும் அவளை இதயத்தைக் கத்தியிட்டு துளைக்கும் வலியை கண்களில் கடத்தி புள்ளியாக தெரியும் வரை பார்வையிட்டான் அவளவன்.

மதிய வேளையில் வீட்டிற்குள் இருந்த இன்டோர் ப்ளான்ட்ஸ் அனைத்தையும் எடுத்து அதற்கு மண், உரம் மாற்றி அதற்கு புது ஊட்டம் சேர்த்துக்கொண்டு இருந்தாள். அங்கு இருந்த செடி வகைகள் வீட்டிற்கு அழகோடு, ஆரோக்கியத்தையும் தரும் வகையில் கார்பன்-டை ஆக்சைடை ஈர்த்து ஆக்சிஜனை வாரி வழங்கும் பலவகை செடிகளாக இருந்தது.

அவள் அளிக்கும் ஊட்டம் செடிகளுக்கு மட்டும் இல்லை அவளின் மனக்காயத்திற்கும் என்பது அங்கு பராமரித்துக் கொண்டு இருந்தவளின் முகத்தில் ஏற்பட்ட மாற்றமே தெளிவாகக் காண்பித்தது.

உத்தமியும், ராமமூர்த்தியும் மதிய வேளையில் சிறுதூக்கத்தை ஆரம்பித்து இருந்தனர். வயதானவர்களின் சிறு சொர்க்கம் அந்த நடுபொழுது துயில். செடிகளை தட்டிக்கொடுத்து செல்லம் கொஞ்சியவளின் அருகில் வந்து அமர்ந்தான் அகி, “ஒய்.. ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு தூங்காம இதை எதுக்கு எடுத்துப் போட்டு பார்த்துக்கிட்டு இருக்க?”

அவனை புருவம் உயர்த்தி, “நீ எதுக்கு இப்ப ஆபீஸ்லயிருந்து சீக்கிரம் வந்த?”

“ஏன்டீ நான் வந்தது பிடிக்கலையா? ஆபீஸ்ல வேலை இல்ல. சும்மா.. அங்க இருக்கறதுக்கு உன்கூட இருக்கலாம்னுதான் வந்தேன்” அவன் பேச்சில் எதைக் கண்டு கொண்டாளோ..! கண்களை இடுக்கிப் பார்த்த பார்வையில் அவனுள் ஏதோ பிரள்வது போல தோன்ற, அதையும் சமாளித்து, “பாவம் சின்னப்புள்ள தனியா இருக்குமே அப்படின்னு துணைக்கு வந்தேன்” கையில் இருந்த டப்பாவை நீட்டினான்.

“இந்த சிக்கன் சான்ட்வீட்ச் காலையில அவ்வளவு சொல்லியும் சாப்பிடாம போயிட்ட..”

“அதுக்குன்னு காலையில போட்டத இப்ப வாங்கிட்டு வருவியா?”

“அடியேய்.. ஃப்ரஷா போடச் சொல்லி சூடாயிருக்கிற ஹாட்பேக்ல வாங்கி வந்தா என்னைப் பார்த்து எப்படி கேக்குற நீ..?” அழும் தோரணையில் கேட்டவனை முறைத்துப் பார்த்தாள்.

அவனின் அக்கறையில், “ரியலி... நீ அவ்வளவு நல்லவன் இல்லையே..!” அவள் பார்வையில் சிறு நம்பிக்கையற்று இருந்தது. அகிலனிடம் தெரிவது புது மாற்றம் என்று சொல்ல முடியாது, அப்ஸராவுக்கு வாரம் தவறாமல் அவளுக்குப் பிடித்த உணவு வகைகளை வாங்கி வந்து சமைத்து தரும் தாயின் பரிசுத்தத்தைக் கொண்டவன். ஆனால் சில நாட்களாக அவனின் சுபாவம் ஏதோ இயல்பாகத் தெரியவில்லை. தன்னை நினைத்து வருந்துகிறான் தனக்காக தான் அனைத்தையும் செய்கிறான் என அவளுக்கு தோன்றதான் செய்தது.

அவளின் உதாசீனப்பேச்சில், “போடீ..” கோபத்தில் அங்கு இருந்து எழுந்து சென்றான்.

“எங்கடா போற, இங்க வா... இந்தத் தொட்டில இருக்க மண்ண பேப்பர்ல கொட்டு, நான் போய் கை கழுவிட்டு வாரேன்” அவனிடம் இவ்வளவு நேரம் தான் பார்த்துக் கொண்டு இருந்த வேலையை ஒப்படைத்துவிட்டு, கை கழுவ எழுந்து சென்றாள்.

“கோவிச்சுக்கிட்டுப் போறவன சமாதானப்படுத்தாம.. வேலையாடி வாங்குற, இதெல்லாம் கல்யாணம் ஆகிறவரைக்கும்தான், அதுக்கு அப்புறம் இப்படி வேலை வாங்குறதை வச்சுக்காத.. உன் மாமியாருக்கு சும்மாவே என்னய கண்டா பிடிக்காது, இதுல நீ என்னை கூப்பிட்டு வச்சு வேலை வேற வாங்குனா... அவ்வளவுதான்..! ”

அவன் சொல்வது எதுவும் காதில் விழுந்தது...? ம்ஹூம்... அவள் அதை எதையும் பொருட்படுத்தாமல், அவன் வாங்கி வந்த சான்ட்வெட்ஜை காலி செய்யத் துவங்கினாள். “ஏய்.. எனக்கும் தாடி, பார்க்க வச்சுக்கிட்டு சாப்பிடுற”

“ம்... சூப்பரா இருக்குடா. இந்தா கொஞ்சம்தான் தருவேன்” என கொஞ்சமாக.... மிக கொஞ்சமாய் பிய்த்து அவன் வாயில் போட்டாள். அதையும் ஆவென வாயைத் திறந்து வாங்கிக் கொண்டு, “இதுக்கு நீ ஊட்டாமலேயே இருந்திருக்கலாம், மோப்பம் பிடிச்ச மாதிரி இருக்கு.. புத்தியப் பாரு.. சீ...ச்..சீ.. போ” என திட்டினாலும் அவள் கொடுத்த வேலையை செவ்வனே செய்தான்.

“உனக்கு வேணும்னா டெய்லி ஆபீஸ் போறப்போ சாப்பிடுவல்ல, நான் எங்க போறது... போடா.. எப்பப் பாரு என்கூட போட்டிக்கு வந்துட்டு, கம்போடியா குரங்கு” அவனை ஏசிக்கோண்டே வாங்கி வந்ததை ரசித்துச் சாப்பிட்டாள். பிடித்ததை சாப்பிடுவதன்மூலம் தன்னுடைய இன்னல்களை விரட்ட எண்ணினாளோ..!

“டேய்.. நல்லாயிருக்கு டா, அடுத்த தடவை வாங்கிட்டு வரப்ப இன்னும் இரண்டு சேர்த்து வாங்கிட்டு வாடா”

“ஆல்ரெடி டென்ஷனா இருக்குன்னு சொல்லிச் சொல்லி தின்னு.. தின்னு.. கொஞ்சம் வெயிட் போட்டுட்ட, இதுல எக்ஸ்ட்ரா இரண்டு வேறயா..? போடி... அதெல்லாம் வாங்கிட்டு வர முடியாது ப்பே...ப்பே..” அவள் மறுத்தாலும் வாங்கி வரத்தான் போகிறான், இருப்பினும் அபியை கடுப்பேத்துவது அவனுக்கு சுவாரசியத்தை அள்ளித் தரும்.

“ஏன்டா சாப்பிடுறதுல கண்ணு வைக்கிற, லூசு.. அத்தைக்கிட்ட சொல்லி உனக்கு முதல்ல சாப்பாட கட் பண்ண சொல்றேன்...” அவளுக்கு நாக்கைத் துருத்திக் காண்பித்தான். “போடா...” என எழப் போனவளை கையை பிடித்து அமரவைத்து அவனுக்குப் பின்னால் இருந்த மற்றொரு டப்பாவை நீட்டினான்.

அவளும் அதை ஆசையாக வாங்கித் திறந்து பார்க்க இவளுக்கு மிகவும் பிடித்து ஹாட் சாக்லேட் இருந்தது. எவ்வளவுதான் மனக்காயத்தை திரையிட்டு மறைத்தாலும் அந்த ஸ்வீட்டைக் கண்டவுடன் சில ஞாபங்கள் வர அவளை மீறி விழிநீர் உடைத்துக் கொண்டு பெருகியது. சில மறக்க முடியாத ஞாபகங்கள் வந்து அவளை சங்கடப்படுத்த... எப்போதும் போருக்கு செல்லும் மங்கையாக வீரத்தைக் கொட்டும் பார்வை வீசுபவளின் விழிகளில் கண்ணீரைக் கண்டவன் அவள் அருகில் சென்று, “ஏய்.. என்னடீ அழுகுற.. உனக்கு அழுகை எல்லாம் வருமா...?“ அவளை திசை திருப்பினான்.

அவன் தோள்களை கட்டிக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள், அழுபவளின் உடல் நடுங்க முதுகை நீவி விட்டுக்கொண்டே, “இவ்வளவு நாள் தைரியமா இருந்துட்டு இப்ப ஏன்டீ அழுகுற. சரி...சரி... இங்க பாரு இனி உனக்கு பிடிக்காததை நான் எப்பவும் செய்மாட்டேன், நம்பு... இந்தா..” என்று ஒரு குச்சியை நீட்டினான். அபி என்னவென்று புரியாமல் பார்க்க, “ஒ.. குச்சி எதுக்குன்னு பாக்குறியா..?”

‘ஆம்...’ என அழுகையுடன் தலையை மட்டும் ஆட்டியவளிடம், “நீ இதை வச்சு, லட்சுமன கோடு போடு... அதை தாண்டி நான் போகமாட்டேன்” என சிறுபிள்ளைத் தனமாகக் கூறினாலும்.. இவர்களின் சிறுவயது தொட்டு இன்று வரையும் அப்ஸராவை மீறி அகி எந்த செயலையும் செய்தது இல்லை, அவ்வளவு ஏன்? அவன் செய்ய நினைத்த சில விஷயங்களும் தன் தோளில் ஆறுதல் தேடும் இந்த பெண்ணவளுக்காகவே..!

“ஏன்டா ரொம்ப தப்பு பண்ணுறேனா?” அவள் செய்வதும், செய்ய நினைப்பதும் சரியே என்றாலும் அந்த முடிவில் சில்லு.. சில்லாக உடைந்து போனவளும் அவளே...!

“ம்..ம்” என தலையை ஆட்டியவன், அவளது ஏங்கிய விழிகளைக் கண்டு

“அப்படியில்லடா... நீ யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைக்குற, அடுத்தவங்களோட சந்தோஷத்தை யோசிச்சுக்கிட்டு உன்னோட லைப்ப அழிச்சுப்பயோன்னு பயமாயிருக்கு”

“நீ அடுத்தவங்களாடா..?” கண்களை அகல விரித்து ‘அவ்வளவுதானா’ என்பது போல் பார்த்தாள்.

“உன்னோட லைப்ப பாருடீ.. சும்மா.. சும்மா.. வாழ்க்கை முழுக்க என்னை பிடிச்சே தொங்கிக்கிட்டு இருப்பியா?”

“ஆமா... வேதாளம் மாதிரி எப்பவும் விடாம உன் தோள்ல தொங்கிக்கிட்டு இருப்பேன்.. புரிஞ்சதா” அவன் நெற்றியில் தட்டிவிட்டு, மேலும் அகியின் தோள்களை இறுக்கிக் கொண்டாள்.

‘பிடிவாதக்காரி’ என சிரித்துக் கொண்டே முனங்கியவன், அவளைத் தன் தோள்களில் அரவணைத்துக் கொண்டான்.

‘தோள் கொடுக்கும் தோழனாக’ இருப்பவன் அவளின் துயரத்துக்கு தானும் ஒரு காரணம் என எண்ணுபவன், தான் அவள் அருகில் இல்லாமல் போனால் நிச்சயம் உடைந்து விடுவாள் என நன்கு புரிந்தவன். அபியின் துயரத்தைப் போக்க வழி காணுவானா..?
 
Last edited:

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,550
Reaction score
43,529
Age
39
Location
Tirunelveli
அப்படினா அவ லவ்வருக்கு தங்கச்சி இருக்காளான்னு பாத்து கரெக்ட் பண்ணனும் டா😜😜😜

இவ கோவிலுக்கே போயிட்டு வந்துட்டா,

அவன் அந்த விஸ்வா கனவுலயே கன்டினியூ பண்ணிட்டு இருக்கானாமா🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

நல்ல இருக்கு அப்டேட் 👍 👍 👍
 
Rishaba

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jan 8, 2021
Messages
484
Reaction score
712
Location
Theni
thank you so much bro.. இவ்வளவு தூரம் ரசிச்சு படிச்சதுக்கு :love: 🙏🙏
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top