• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews சாரதா சாருவின் கவிதையாக ஒரு முகநூல் விமர்சனம்!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
கதை... என் தனிமைக்கொரு முற்றுப்புள்ளி

ஆசிரியர்...சந்தியா ஸ்ரீ

அழகான குடும்பம் அது
அருவியாய் மகிழ்ச்சி
புது வரவாய் மழலை உதயம் ஒன்று

யாவும் துணி கொண்டு துடைத்தாற்போல...
வெற்று வானாகியது
அரவிந்தனவன் வாழ்வில்...

பருவ சிட்டொன்று படிப்பே பிரதானமென்று...
சதை தின்னும் பைசாசமொன்று
அவளனுமதியின்றி
அவளை சூறையாட...
காமம் கொண்டு விதைத்த
விதையொன்று...
துளிர் விட்டது
தளிரவள் வயிற்றில்....
அவள் கீர்த்தனா....

அவளின் நன்மை நாடும் உள்ளொன்று உறவாகி
கை கொடுத்திட
பெற்றோரறியாது
பிள்ளைபெற்று...
அதை துறந்தும் விடுகின்றாள்...

உறவுகள் இழந்த பறவையும்..
உறவறியாது உயிர் வளர்த்த
கீர்த்தனையும்
ஓரிடத்தில்...

இது தெய்வச் செயலோ...
அன்றி விதி தான் முடிச்சிட்டதோ....

வன்புணர்வுக்காளான
வஞ்சியவளை
வாழ்வின் வசந்தமாய்
நினைத்தவன்
அவளின் எதிர் கால படிப்புக்காய்

அவள் மழலை தனை தன் மகளாய் கை ஏந்தினான்...
பிறக்கும் போதே தன் அன்னையை பிரிந்தாலும்
தந்தையார்
அரவிந்தன் அரவணைத்தான்
அவளையும் மனதுள் அமர்த்திட்டான்...

கை குழந்தையுடன் மூன்றாண்டுகள்
தனித்திருந்தவன் வாழ்வில்
மீண்டும் விதி வசந்தமாய்
அவள் வருகையை கொணர்ந்தது

அவளின் மகவென்று அறியாமலேயே
தாயாய் நினைத்தாள்..,
தாரமாயும் உறைந்தாள் அவனுள்ளே....

வசந்த கால பறவைகளாய்
காதல் வானில்
தன் தனிமைக்கு
முற்றுப்புள்ளி வைத்து
வாழ்வில் முகிழ்த்ததே...

இதயங்கள் இரண்டு...

வாழ்த்துக்கள் ஜீ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top