• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சால்பின் வரைத்து | மைக்ரோ காவியம் | எண்சீர் விருத்தம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள்
[“காய் காய் மா மா” அரையடி வாய்ப்பாடு]


ஒன்றாகப் பணியாற்றும் தோழர் இருவர்
---ஒருமாலை வண்டியிலே தத்தம் இல்லம்

சென்றடையச் சென்றுக்கொண் டிருந்த வேளை
---தென்றலதும் தீப்பிடிக்கக் காய்ந்த வெயிலால்

நண்பரிலே ஒருவருக்கு வேட்கை மீற
---நாடினர்மற் றவரைத்தன் தாகம் தீர்க்க

அன்னவரோ பைக்குள்ளே வைத்துக் கொண்டே
---”அடடாஇன் றென்னிடமும் தண்ணீர் இல்லை” [1]



எனச்சிறிதும் கூசலின்றிப் பொய்யு ரைத்தே
---’என்நீரை இவனுக்கேன் தரனும்’ என்று

மனத்திற்குள் எண்ணிக்கொண் டமர்ந்தி ருந்தார்
---வாயவர்க்கும் வறண்டதுவே மெல்ல மெல்ல

‘முனர்கேட்ட போதில்லை என்று விட்டு
---மூடிவைத்த நீரைஇவண் குடித்தல் ஆமோ?’

எனவெண்ணி நீரிருந்தும் பருகி டாதே
---ஏறிடும்வேட் கையினிலே தவித்தார் அன்னார்! [2]



வறள்கின்ற நாவைவிட பைக்குள் இருந்தும்
---மனங்குளிரப் பருகவிய லாத நீரால்

பிறக்கின்ற துன்பமது பெரிதென் றுணர்ந்தார்
---பெரியமனம் இல்லாத அந்த நண்பர்;

பிறர்க்குதவ மனமின்றிப் பதுக்கி வைத்தால்
---பின்னரது தனக்குமொரு பயன்தா ராதே;

அறக்கடவுள் ஆமையென நடப்பான் சிலபோழ்(து)
---ஆனாலும் அவனடிகள் ஆணி வேரே! [3]


======================================​

பதம்பிரித்து, புரிய எளிதான ஓட்டத்தில்:

ஒன்றாகப் பணியாற்றும் தோழர் இருவர் ஒரு மாலை வண்டியிலே தம் தம் இல்லம் சென்று அடையச் சென்றுக் கொண்டிருந்த வேளை,

தென்றல் அதும் தீப் பிடிக்கக் காய்ந்த வெயிலால் நண்பரிலே ஒருவருக்கு வேட்கை (தாகம்) மீற (அதிகமாக) நாடினர் மற்றவரைத் தன் தாகம் தீர்க்க,

அன்னவரோ (அவரோ) பைக்குள்ளே வைத்துக்கொண்டே ”அடடா! இன்று என்னிடமும் தண்ணீர் இல்லை”

எனச் சிறிதும் கூசல் (கூச்சம்) இன்றிப் பொய் உரைத்தே, ’என் நீரை இவனுக்கு ஏன் தரனும் (தர வேண்டும்)’ என்று

மனத்திற்குள் எண்ணிக்கொண்டு அமர்ந்து இருந்தார், [*மெல்ல மெல்ல] வாய் அவர்க்கும் வறண்டது(வே) [*],

‘மு(ன்)னர் கேட்டபோது ”இல்லை!” என்றுவிட்டு, மூடி வைத்த நீரை இவண் (இப்போது) குடித்தல் ஆமோ (சரிப்படுமோ)?’ என எண்ணி நீர் இருந்தும் பருகிடாதே, ஏறிடும் வேட்கையினிலே தவித்தார் அன்னார்!

வறள்கின்ற நாவைவிட பைக்குள் இருந்தும் மனங்குளிர பருக இயலாத நீரால் பிறக்கின்ற துன்பம் அது பெரிது என்று உணர்ந்தார், பெரிய மனம் இல்லாத அந்த நண்பர்;

பிறர்க்கு உதவ மனம் இன்றிப் பதுக்கி வைத்தால் பின்னர் அது தனக்கும் ஒரு பயன் தாராதே!

அறக்கடவுள் ஆமை என நடப்பான் சிலபோழ்து, ஆனாலும் அவன் அடிகள் ஆணிவேரே!

(அறத்தின் கடவுள் சில சமயம் ஆமை போல மெதுவாகச் செயல்படுவான், ஆனால் அவனது அடிகள் ஒவ்வொன்றும் ஆணிவேர் போல ஆழமானவை, உறுதியானவை!)

*****************


நன்றி,
விசய் :):):cool:
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
பிறர்க்குதவ மனமின்றிப் பதுக்கி வைத்தால்
---பின்னரது தனக்குமொரு பயன்தா ராதே;


அறக்கடவுள் ஆமையென நடப்பான் சிலபோழ்(து)
---ஆனாலும் அவனடிகள் ஆணி வேரே!


நன்று.
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
சூப்பர் சகோ நிறைய பேர் இன்னைக்கு இப்படி தான் எல்லாத்தையும் பதுக்கி வச்சுட்டு பின்னாளில் அது அவங்களுக்கு கூட பயனில்லாமல் போயிடுது:):):):):)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Solla vantha karuthu nachunnu solliteenga.. ???
நன்றி... அது என்னோட திறன் இல்ல, தமிழ்க் கவிதையின் சிறப்பு...

உண்மையில் நான் இதை எழுதினதுக்கு ஒரு காரணம் பாரதிதாசனின் ‘பாண்டியன் பரிசு’. ரொம்ப ஆண்டுகளுக்கு முன்னாடி படிச்சிருந்தேன், அதை மறுபடி படிக்கனும்னு மனசுல தோனிட்டே இருக்கவும், பி.டி.எஃப்-ஆ பண்ணி மொபைல்ல போட்டுக்கிட்டு கல்லூரிக்குப் போக வர பேருந்துல படிச்சேன்...

ஒரு நாவலுக்கான கதையை அவர் 400 எண்சீர் விருத்தங்களில் (இதே ‘காய் காய் மா மா’ வாய்ப்பாடு) கொடுத்திருப்பார்...

முன்னுரைல அவரே சொல்லிருக்கார் ‘நான் இதை கதையா எழுதினப்ப ரொம்ப வளவளனு போச்சு, அதனால அதத் தூக்கி வெச்சுட்டு விருத்தமா எழுதினேன், 400 விருத்தங்கள்ல முடிஞ்சுடுச்சு...’னு...

400 எண்சீர் விருத்தங்களை முழு மூச்சாப் படிச்சு முடிச்ச தாக்கத்துல ஒரு ஒரு வாரத்துக்கு சாதாராணமா பேசுறதுலாம் கூட ‘காய் காய் மா மா’ வாய்ப்பாட்டுலேயே வந்துச்சு... அப்ப ஒரு நாள் மாலை பேருந்துல வரும்போது என்கிட்ட கொஞ்சம்தான் தண்ணி இருந்துச்சு, அருகில் இருந்த இன்னொரு ஆசிரியர் பிஸ்கட் சாப்பிட்டுட்டு இருந்தார் (எனக்கும் கொடுத்துட்டுதான்! அவர் தினமும் அப்படிச் சாப்பிடுவார், சுகர் பேஷண்ட்!) ‘அவர் நம்மகிட்ட தண்ணி கேட்டா கொடுக்கலாமா வேணாவா’னு ஒரு நொடி ஒரு டிஸ்கஷன் போச்சு மனசுக்குள்ள, உடனே ‘அடச்சீ, அவருக்குக் கொடுக்காம இல்லனு சொல்லிட்டு நாம மட்டும் அதைக் குடிச்சுட முடியுமா? அப்ப அது யாருக்குமே பயனில்லாம்த்தான போகும்’னும் தோனிச்சு... அப்ப இந்த எண்ணம்மெல்லாம் எண்சீர் விருத்தமா தோனிச்சுங்குறதுதான் ஹைலைட்... உடனே என் கைப்பேசில தட்டச்சத் தொடங்கினேன்...

அதுதான் இது :):):)

:)(y)(y) எல்லாப்புகழும் பாரதிதாசனுக்கே...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top