சாஸ்திர_விதிகளில்_சில துளிகள்"

#1
"#சாஸ்திர_விதிகளில்_சில_துளிகள்"

1. மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.

.2. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

3. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

4. அர்ச்சனைப் பொருட்களை இடது கையால்எடுத்துச் செல்லக் கூடாது

.5. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை,கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.

6. எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.

7. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது.
மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.

8. சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது

.9. இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.

10. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.

11. திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.

12. ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச்செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.

13. கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.

14. குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது

.15. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது.

16. பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.

17. செவ்வாய் கிழமை, புதன் கிழமை பகல்,வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.

18. இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல்கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம.

19. வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது.
20. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.

21. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.

22. கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர்கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.
சில தகவல் நூல்களிலும் சில தகவல் நன்றாக வாழ்ந்தும் , வாழும் தம்பதியர்கள் அனுபவம் அடைந்து சொன்னது ...
23 இறந்தவர்களின் ஆத்மாக்கள் வண்ணத்துப் பூச்சியினுள் புகுந்து இறப்பு ஏற்பட்ட நாளிலிருந்து கொஞ்ச காலம் வரை நம் வீட்டைச் சுற்றி வரும்.ஆகவே,மரணம் ஏற்பட்ட ஒரு வீட்டிற்குள் வண்ணத்துப்பூச்சி அடிக்கடி பறந்து வந்து கொண்டிருந்தால் அந்த வீட்டில் அந்த ஆன்மாக்களின் ஆசியால் சந்தோஷம்,சுபகாரிய நிகழ்வும்,தீர்க்காயுளும் உண்டாகும்.

24 சிங்கம்,புலி,கரடி ஆகிய கொடிய மிருகங்களின் பொம்மைகளை உங்களுடைய வீடுகளில் வைப்பதின் மூலம் எதிரிகளின் தொல்லை அடங்கும்.

25 தன்னைப்பற்றி பிறரிடம் சொல்வதன் மூலம் குறைந்து விடும் விஷயங்கள் இரண்டு. அவை பாவமும் புண்ணியமும்.
நாம் செய்யும் பாவங்களை நாமே பிறரிடம் கூறும் போது அதுவும் குறைந்து கொண்டே வரும்.

26 முறைப்படி மந்திரங்கள் ஓதி பிறர் மீது ஏவப்பட்ட செய்வினைக்கு 1008 நாட்கள் மட்டுமே சக்தி உண்டு.அதன் பிறகு அது செய்தவனையே திருப்பித்தாக்கும்.தான் செய்த வினையை தாமே அனுபவிப்பார்.

27 உங்கள் வீட்டில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தால் கண்ணூறு தாக்கி இருப்பதாக உறுதி செய்து,உங்கள் வீடு முழுக்க உப்பு கலந்த நீரால் கழுவி விட்டால் கண்ணூரு போய்விடும்.

28 அடுக்கு அரளி,செம்பருத்தி பூக்களைக் கொண்டு பூஜை செய்வதினால் ஞானம் பெருகும்.தொழில் விருத்தியடையும்.

29 ஒரு பெண் கர்ப்பமான ஏழாவது மாதத்திலிருந்து அவள் குழந்தை பெற்ற முப்பதாவது நாள் வரை அவளது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லுதல் கூடாது.

30 அன்னாச்சிப்பழம் ஓவியத்தை உங்கள் வீட்டில் சுவற்றிலோ அல்லது தொழிலகங்களின் முன்புற அறைகளிலோ வரைந்து வைத்தால் அதிர்ஷ்டம் தேடிவரும்.. இனிதாகட்டும் வாழ்க்கை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்
 
#4
Super ma👍 இதுல நிரய fallow pannuvom😉😅இந்த 5த் பாயிண்டு தான் கொஞ்சம் இடிக்கும் கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு போறதுக்குல்ல அடக்கி வைக்குற பாடு .......??😳🥴 சோ இதை fallow panna margaya Shala dhan😅

அப்புறம் இந்த13வது பாயிண்டு காரக்ட்டு பா ஆனா என்ன கொடுமை பாரு நிரயபேரு பார்த்து இருக்கேன் போயிடே இருபாங்க திடிர்ன்னு நின்னு கும்மி அடிப்பாங்க பாருங்க நமக்கு அப்பிடியே அள்ளிக்கும் பா கோவில் முடி இருக்குதுன்னுகூட தெரியாது அப்பிடியே சாமி நேர்ல வந்த போல தோப்பு கரணம் போடுறதும் கன்னத்திலே டமார் டமார்ன்னு அடிக்கிறதுன் சொத்த பல்லு இருந்துச்சு மவனே டாக்டாரே வேண தா தானா பல்லு எகிரிடும் அவ்வளவு பக்தியாம் பக்கிக்கு🥴🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️இப்பிடி தான் அடிச்சுக்க தோணும் மா🙆🏻‍♀️
 
#5
Super ma👍 இதுல நிரய fallow pannuvom😉😅இந்த 5த் பாயிண்டு தான் கொஞ்சம் இடிக்கும் கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு போறதுக்குல்ல அடக்கி வைக்குற பாடு .......??😳🥴 சோ இதை fallow panna margaya Shala dhan😅

அப்புறம் இந்த13வது பாயிண்டு காரக்ட்டு பா ஆனா என்ன கொடுமை பாரு நிரயபேரு பார்த்து இருக்கேன் போயிடே இருபாங்க திடிர்ன்னு நின்னு கும்மி அடிப்பாங்க பாருங்க நமக்கு அப்பிடியே அள்ளிக்கும் பா கோவில் முடி இருக்குதுன்னுகூட தெரியாது அப்பிடியே சாமி நேர்ல வந்த போல தோப்பு கரணம் போடுறதும் கன்னத்திலே டமார் டமார்ன்னு அடிக்கிறதுன் சொத்த பல்லு இருந்துச்சு மவனே டாக்டாரே வேண தா தானா பல்லு எகிரிடும் அவ்வளவு பக்தியாம் பக்கிக்கு🥴🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️இப்பிடி தான் அடிச்சுக்க தோணும் மா🙆🏻‍♀️
Ha ha dear comment padichu sirichu stomach valika arabiruchu ha ha
 

Latest updates

Latest Episodes

Top