• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சித்திரையில் பிறந்த சித்திரமே 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,861
Location
MADURAI
சித்திரையில் பிறந்த சித்திரமே 7

தனிமையில் அமர்ந்திருந்த லெட்சுமிக்கு சில நாளகளுக்கு முன்னல் லெட்சுமி,கீர்த்தி,நிவேதா மூவரும் தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டீருந்தது நியாபகம் வந்தது

“ என்ன டி கீது அந்த ஸ்டோரி படிச்சியா நான் வாட்ஸப்ல லிங்க் செண்ட் பண்ணேண்ல அது நல்லா இருந்துச்சுல்ல டி கீது “

“ ஹம் நல்லா இருந்துச்சு பாப்பு அதுல வர மாதிரியே நம்ம மூணு பேருக்கும் ஒரே மாதிரி அண்ணன் தம்பியே மாப்பிள்ளையா வந்தா நல்லா இருக்கும்ல டி ,யாருக்காவது எதாவது பிரச்சனைனா மத்த இரெண்டு பேரும் போய் பார்த்துக்கலாம் ,மாமியார் கொடுமை இருக்காது ,நம்ம பண்ற கொடுமையில யாரும் எதுவும் பண்ண மாட்டாங்க

"சமைக்க முடியலைனா எந்த பிரச்சனையும் இருக்காது ,நல்லா இருக்கும்ல டி நிவி “என கீர்த்தி கூற

“ அப்படி மட்டும் நடந்துச்சுனா எனக்கும் சந்தோசம் தாண்டி நம்ம தனி தனி வீட்டுல பிறந்துருந்தாலும் உங்க இர்ண்டு பேரையும் என்னால எந்த சூழ்நிலையையும் விட்டு கொடுக்க முடியாது டி இப்படி மட்டும் நடந்துச்சுனா இந்த உலகத்துலையே கொடுத்து வைச்சது நம்ம மூணு பேரும் தாண்டி “ என கண்ணீருடன் நிவி கூற

“ தங்கைகள் இருவரும் அவளை கட்டிக்கொண்டனர் “

“ இன்று அவர்கள் மூவரும் ஆசை பட்ட வாழ்க்கை அமைந்து விட்டது ஆனால் அதை எப்படி ஏற்பது என்பதில் தான் லெட்சுமிக்கு குழப்பம் “

“ இந்த அதிரடியான திருமணத்தை ஏற்கும் மனபக்குவமும் இல்லை அதை புரிந்து கொள்ளக்கூடிய வயதும் இல்லை “
இதில் இவள் வாழ்க்கை என்ன ஆகுமோ ?


( ஹிரோ சார் என்ன பண்ணுரிங்க )

அங்கே கமிஷனர் அலுவலகத்தில் தன்னுடைய அசிஸ்டெண்ட் கமிஷனர் புரோமோசன் லெட்டரை புன்னகையோடு வாங்கிக்ட்டு இருக்காரு நம்ம ஹிரோ (எவ்ளோ பெரிய புன்னகை சே புன்னகை மன்னன் டா உதயா நீ )
சந்தோச செய்தியை தன் அம்மா அப்பாவிடம் கூறியவன் அடுத்து யாருக்கு அழைப்பான் அவனோட கருவா


டார்லிங்கிற்க்கு தான்
அவன் பரிசாக தந்த போனிலிருந்து
செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
அழகோ அழகு அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது


செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
பாடல் ஒலிக்க எடுத்து பார்த்தவளுக்கு அதில் உதயா என வர


“ அதுக்குள்ள பாட்டுல இருந்து எல்லாமே செட் பண்ணி வைச்சுருக்கான் பாரு பேரு தான் போலிஸ் ஆனா பக்கா கேடி “ என மனதினுல் திட்டியவள்
“ இப்போ தான போனான் அதுக்குள்ள எதுக்கு திரும்ப கூப்பிடுறான் “
என யோசனையோடு காலை அட்டன் செய்தவளுக்கு


“ ஏய் கருவா டார்லிங் என்ன இவ்ளோ நேரம் மாமாவ பத்தி யோசிச்சுயா போன் எடுக்க இவ்ளோ நேரம் “

“ அதெல்லாம் ஒன்னும் இல்ல சும்மா தான் உட்கார்ந்துருக்கேன் “ என கூற

“ என்ன விஷயம் “

“ உதயா உனக்கு கொடுத்து வைச்சது அவ்ளோ தாண்டா உன் பொண்டாட்டி உன்ன பத்தி நினைக்கவே மாட்டா போல டா “ என சத்தமாக புலம்பியவன்

“ அது ஒன்னும் இல்ல செல்லக்குட்டி மாமாவுக்கு ப்ரோமோசன் கிடைச்சுஇருக்கு அம்மா அப்பா கிட்ட சொன்னேன் “ஏன் மருமக வந்த நேரம் எல்லாமே நல்லதாவே நடக்குது நீ உடனே என் மருமக கிட்ட சொல்லுனு சொன்னாங்க அது தான் என் பொண்டாட்டிக்கு போன் போட்டேன் “

“ என்னடி சந்தோசமா இருக்கியா ?”

"ஹம் ஆனா இதுக்கு நான் வந்த நேரம் ஒன்னும் காரணம் இல்ல ,அப்பா இறந்தப்போ எல்லாரும் சொன்னாங்க நான் சித்திரையில பிறந்துனால தான் அப்பாக்கு இப்படி ஆச்சுனு “

என கலங்கிய குரலில் கூறியவளிடம்

( டேய் அப்படி சொன்னவங்க மட்டும் என் கையில கிடைச்சிங்க உங்கள டீன் கட்டிருவேண்டா )என மனதிற்க்குள் பாராட்டு விழா நடத்தியவன்

“ கருவா டார்லிங் அப்படி பேசுனுன நாய்களை பத்தி எல்லாம் நீ கவலைபடுவியா என்ன?
என் பொண்டாட்டி எவ்ளோ தைரியமானவனு நான் நினைச்சா நீ இப்படி பேசுற
இப்போ சொல்றேன் டி நீ எனக்கு


“சித்திரையில் பிறந்த சித்திரம் தான் டி என் பொண்டாட்டி ” என அவன் கூற என்ன சொல்வதென்றெ அவளுக்கு தெரியவில்லை

பின்னே சித்திரையில் பிறந்த சித்திரமே இது அவளின் அப்பா உபயோகிக்கும் வார்த்தையல்லவா

“ என்னடி பேச்சயே காணோம் “

“ ஹம் ஒன்னும் இல்ல,சொல்லுங்க “

“ நீ தான் சொல்லனும் எல்லாரும் வாழ்த்து சொல்லிட்டாங்க ஆனா நீ மட்டும் தான் இன்னும் சொல்லலைல “

“ வாழ்த்துக்ள் “

“ ஏண்டி மாமானு கூப்பிட்டா என்ன குறைஞ்சா போவ பிளிஸ் டி மாமானு கூப்பிடுடி “

“ அதெல்லாம் முடியாது எனக்கு வேலை இருக்கு அப்புறம் பேசுறேன் “

“ ஓய் இருடி வேலைனு சொன்ன உடனேதான் நியாபகம் வருது இனி நீ வேலைக்கு போக வேண்டாம் “

“ என்ன ஆர்டர் போடுறீங்களா “

( அப்பா பழைய கருவா டார்லிங் திரும்பிட்டா , என மனதுக்குல் மகிழ்ந்தவன் )

“ ஆர்டர் போடலை அதுக்கு அவசியமும் இல்லை, என் பொண்டாட்டி கஷ்டப்பட்டது போதும் என் பொண்டாட்டிய சந்தோசமா வைச்சுக்க என்னோட சம்பளமே போதும் புரியுதா உங்க் அம்மாகிட்டையும் சொல்லியாச்சு. போ போய் ரெஸ்ட் எடு போ “

என்ன கேட்காமலே என்னோட எல்லா விசயத்துலையும் நீங்களே முடிவு எடுக்குறீங்களே எந்த உரிமையில இப்படி பண்றீங்க சொல்லுங்க “

“ நீங்க திருமதி உதயா அப்படிங்குற உரிமைல தான் மேடம் “

“ வர்ற சண்டே நம்ம வெளிய போறோம் நீ ரெடியா இரு ,பாய் டி பொண்டாட்டி “

“ இவங்க எப்படி நம்ம அப்பா சொல்லுற மாதிரியே சொன்னாங்க இவங்கள விட்டு விலக நினைச்சா இவங்க நினைப்பு தான் நிறைஞ்சு இருக்கு ஐயோ “என்றானது லெட்சுமிக்கு
சொன்ன மாதிரியே சண்டே காலையில லெட்சுமியின் வீட்டில் சார் ஆஜராகி விட்டார்
(மேடம் மிடியில் சுத்தி கொண்டிருந்தார்கள் )


“ அம்மா போடாதே என கூறியதையும் கேட்காமல் போட்டதன் விளைவு நம்ம போலிஸ் வந்தவுடனே அவர் கண்ணுல சிக்குனது தான் “

“ என்ன அத்தை உங்களுக்கு இரண்டு பொண்ணுனு சொல்லவே இல்ல ஒரு சின்ன பிள்ளை லெட்சுமி மாதிரியே இருக்கா “ (என கலாய்க்கவும் இவனுக்கு இருக்குற கொழுப்புக்கு என மனதிற்க்குள் வைச்சு செஞ்சுட்டா நம்ம லெட்சுமி இவனுக்கு என் தங்கைச்சி வேற கேட்க்குதானு)(அப்போ பிள்ளைக்கு காதல் வந்துருச்சு)

“ அத்தை நான் லெட்சுமி வெளீய கூட்டிட்டு போறேன் “

“ சரி மாப்பிள்ளை “

“ என்ன பார்த்துட்டே இருக்க போ போய் ரெடியாகு அதான் மாப்பிள்ளை சொல்லுறாருல்ல “

“ கிளம்புறேன் மா “
இருவரும் கிளம்பி அவனின் புல்லட்டில் செல்ல( மேடம் ஓட்டி உட்காரல நோட்டீஸ் த பாயிண்ட் அதுல நம்ம ஹிரோ லைட்டா காண்டுல இருக்காரு)


“ என்னடி பேசவே மாட்டேங்குற “

“ இல்ல உங்களுக்கு வேலை இருக்காதா சினிமால போலிஸூக்கு குடும்பத்த பாக்க நேரமே இருக்காது ஆனா நீங்க அப்படி இல்லையே அதுவுமில்லாம போலிஸ்னா நிறையா கோபம் வரும் ஆனா நீங்க சுத்தம் “என கூற

“ போடி லூசு போலிஸீனுனா குடும்பம் மேல பாசம் இருக்ககூடாதா ,பொண்டாட்டி மேல காதல் இருக்ககூடாதா நானும் மனுசன் தாண்டி எனக்கும் ஆசையெல்லாம் இருக்கும் டி ,தப்பு பண்றவன் மேல தாண்டி கோவம் வரனும் எப்ப பார்த்தாலும் கோவம் வந்த அந்த கோவத்துக்கே அர்த்தம் இல்லாம போயிடும்டி என் கேடி “

“ என்ன நான் கேடியா “

“ ஆமா கருவா டார்லிங்க சுருக்கி கேடி “

“ உங்கள “

“ என்ன பேபி கிஸ் பண்ண போறீயா “
அதுக்கு அப்பறம் வாய் தொறப்பாளா லெட்சுமி
கோவிலுக்கு அழைத்து சென்றவன் தன்னவளுடன் சாமி கும்பிட்டுவிட்டு அவளுக்கும் குங்குமம் வைத்து விட்டான் அவளும் மறுப்பு தெரிவிக்கவில்லை (சூப்பர் ஜீ )
கோவிலை விட்டு வெளியே வர அங்கு சில பேர் தெரு முனையில் பெண்கள் எல்லோரையும் கேலி செய்து கொண்டிருக்க


“ வண்டியில் தன்னவளையும் ஏற்றி கொண்டு செல்ல அவர்கள்

“ மச்சான் பாருடா புல்லட் பொண்ண தள்ளிக்கிட்டு கோவிலுக்கு வந்துஇருக்கு
ரூம்முக்கு போகம என கூற “
வண்டியை நிறுத்திவிட்டு நிதானமாய் இற்ங்கியவன் அவனுடைய கூலர்ஸை கழட்டி
தன்னவளிடம் கொடுத்துவிட்டு


“ என்னடா சொன்ன சொல்லு “என கையை மடக்கி அடிக்க வருவது போல கேட்க

“ என்னடா அடிப்பியா வாடா பார்போம் என கூற இவன் ஓங்கி அவன் வயிற்றில் விட்ட குத்தில் எழுந்திருக்க முடியாமல் தரையில் கிடந்தான் “
அதற்க்குள் மறைந்திருந்த போலிஸுகளூம் வெலீ வந்து சூழ்ந்து கொண்டனர்


“ ஏண்டா நீ பொண்ணுங்கள கிண்டல் பண்ணுவ கேட்டா மூஞ்சில ஆசிட் அடிப்ப இனி ஜென்மத்துக்கும் உன்ன அப்பா ஆக முடியாத மாதிரி நான் பண்றேன் டா “

உங்களால வாழ்க்கை பாழான பொண்ணுங்களுக்கேல்லாம் நியாயம் கிடைக்க வேண்டாம் “

“உங்கள பிடிக்க தாண்டா மாப்பிள்ளைகளா நாங்க இன்னைக்கு இங்க வந்ததே “

“ ஏட்டு எல்லாரையும் போய் செல்லுல போடுங்க நான் வந்து நல்லா கவனிக்கிறேன் “
என கூறிவிட்டு திரும்பியவனின் கண்களில் பட்டது


“ என்னடா நடக்குது இங்க “ என்று பார்த்து கொண்டிருந்த லெட்சுமியைதான்

சித்திரம் சிந்தும்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top