• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

?சீதாபஹரணம்?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
சீதாபஹரணம்:

"தாங்க முடியாத மூன்று விசனங்கள் இந்த உலகத்திலே உண்டு சுவாமி! பொய் சொல்வது; பிறன் மனையாடல், துவேசம் எதுவும் இல்லாத சமயத்தில் கூட அனாவசியமாக ஆயுதம் தாங்கி நிற்றல். இந்த மூன்று குற்றங்களில் முதல் இரண்டும் தங்களிடத்திலே இல்லை; ஆனால் மூன்றாவது குற்றம் தங்களிடத்திலே இருக்கிறதே! என்கிறாள் சீதை.

"ஒரே சொல், ஒரே இல், ஒரே வில்" என்று பெயர் பெற்றவன் ராமன். பொய் பேசமாட்டான். பிற பெண்களைக் கண்ணெடுத்தும் பாரான் - ராவணனின் பதினாலாயிரம் சைன்யமும் அடித்து வீழ்த்தப் பட்ட நேரத்தில் அவனிடம் போய் அந்தச் செய்தியை சொன்னான் ஒருவன்.

ராவணன் ஆரவாரமாய்ச் சிரித்து கைதட்டினானாம்! "என்ன உளறுகிறாய்! எல்லோரும் மாண்டு போய்விட்டார்கள் என்றால் நீ மட்டும் எப்படிப் பிழைத்தாய்"? என்று கேட்டானாம்.

செய்தி கொண்டு வந்தவன் சொன்னான், "எனக்கிருக்கிற சாமர்த்தியம் அவர்களுக்கு இல்லையே"! "அப்படி என்ன தனி சாமர்த்தியம் உனக்கு? நீ என்ன பண்ணி தப்பித்தாய்"? என்றான் ராவணன்.

"சீதையைத் தவிர வேறு ஸ்திரீயைப் பார்க்காதவன் ராமபிரான். அதனால், நான் பெண்ணுடை உடுத்தி ஓடி வந்தேன், இல்லா விட்டால் தப்பித்து இருக்க முடியுமா"?

எதிர் கட்சியிலே இருக்க கூடியவன் ராமனுக்குத் தந்த நற்சான்று பத்திரம் இது! ராவண குடும்பமே ராமபிரானை இப்படி நிறைய ஸ்தோத்திரம் பண்ணியிருக்கிறது.

"இந்த நற்குனங்களைத்தான் சீதையும் சுட்டிக் காட்டினாள். முதல் இரண்டு நற்குணங்கள் வாய்க்கப் பெற்ற மாதிரி மூன்றாவது ஏன் வாய்க்கப் பெறவில்லை என்றும் கேட்டாள் ...

"ஜடாமுடியும், மர உரியும் தரித்துக் கொண்டு, ஒரு கையிலே தர்பையும் மறு கையிலே சமித்தும் அல்லவா வைத்துக் கொள்ள வேண்டும் சுவாமி? அப்படியில்லாமல், தாங்கள் வில்லையும் அம்பையும் ஏந்தியிருக்கிறீர்களே? இது பொருந்தாமல் இருக்கிறதே?

பரமாத்மா அதற்கு பதில் பேசுகிறான்.
"உத்தம குலத்தில் பிறந்து, உத்தம குலத்தில் வாழ்க்கைப்பட்டதற்கேற்ப நீ பேசினாய் சீதா !

ஆனால், அவசியமேற்பட்டால் நான் உன்னையும் கை விட வேண்டும்.. என் பிராணனாக, என் உடலுக்கு வெளியே நடமாடும் லட்சுமணனையும் உதற வேண்டும். என் திருவடி பற்றினவர்களைக் காப்பதற்காக, அவசியமானால் அப்படிச் செய்யத்தான் வேண்டும்" என்கிறான்.

அந்த வார்த்தையை முடிச்சுப் போட்டு வைத்துக் கொண்டாளாம் சீதை! சீதாபஹரணமே அதனால் தான் சாத்தியமாயிற்று!

ராமனின் இந்த வார்த்தை நிரூபணமாக வேண்டும் என்பதற்காகத்தான் சீதை அவனை விட்டு பிரிக்கப்பட அனுமதித்தாள். அவள் மட்டும் அப்படி நினைத்திருக்காவிட்டால் ராவணனால் அவளை பகவானிடமிருந்து பிரிக்க முடியுமா? அந்த திவ்ய தம்பதிகள் இணைந்த சிந்தனையால் அந்த நிகழ்ச்சியை சங்கல்பித்தார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

அதோடு, அப்படியொரு சொல் ராமனிடமிருந்து வெளிப்பட்டதே அவன் பகவான் நாராயணன் தான் என்பதைத் தெளிவாக மீண்டும் உணர்த்துவதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜெய் ஶ்ரீராம்!!

படித்ததில் பிடித்தது
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
மிகவும் அருமை.
இப்படி ஒரு கோணம் இப்போ தான் கேள்விப்படுறேன்.
Thanks for the sharing devi ka.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top