• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சப்த சப்தாஹா சாயி சரித்திர பாராயண விவரம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
சப்த சப்தாஹா சாயி சரித்திர பாராயண விவரம் :

துர்லபம் த்ரயேமே வைதத், தெய்வானுக்கிரக ஹேத்துகம் மனுஷ்யத்தயம் முமுக்ஷத்வம் மஹாபுருஷ ஸம்சயம்.

சீரடி சாயி சத்சரித்திர பாராயணத்தையும், விரத பூஜையையும் 67 நாட்களிலோ (சப்த சப்தாஹா) அல்லது ஒரு நாளில் குறிப்பிட்ட அத்தியாயங்கள் என கணக்கில் கொண்டு 9 நாட்களிலோ முடிக்க வேண்டும். கடவுளால் படைக்கப்பட்ட 84 லட்சம் ஜீவராசிகளிலேயே மிகவும் உன்னதமானது மனித ஜென்மம். அவனால் மட்டுமே இதே மனித ஜென்மத்தில் தனது மனதைக் கட்டுப்படுத்தி ஆத்ம ஞானத்தை பெறும் அவகாசமிருக்கிறது. தேவதைகள் கூட ஒரு தடவையாவது பூலோகத்தில் மனித ஜென்மம் எடுப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்களாம். ஆதலால், இந்த மனித ஜென்மம் எவ்வளவு விசேஷமானது என்று நினைத்துப் பாருங்கள். சாயிநாதரின் சேவையில் ஜீவன் முக்திப் பெறுவதற்கு முயற்சிக்கலாம். சாயி நாதரின் பிள்ளைகளாகவே இருந்து இந்த ஜென்மத்தில் முக்தியடையலாம்.

சீரடி சாயி நாதரை மனதில் தியானித்து செய்யப்படும் 9 வியாழக்கிழமை விரதம் மற்றும் சப்த சப்தாஹா பாராயணத்தையும் செய்து முடிக்கும் போது, தங்களால் இயன்ற காணிக்கையை பக்தி சிரத்தையுடன் சாயி பாபாவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். இப்பூஜையை சுயமாகவோ அல்லது ஆச்சார்யரின் துணையுடனோ நமது வீட்டிலேயே செய்து சாயி நாதரின் ஆசீர்வாதம், அனுக்ரஹம், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், பக்தி, ஞான வைராக்கியமும் பெற்று பிரம்மானந்தத்தைப் பெறலாம்.

சீரடி சாயி நாதரின் விரத பூஜைக்குத் தேவையானப் பொருட்கள்: பூஜை சாமான்கள் : மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, அக்ஷதை, பஞ்சபாத்திரம், உத்தரணி, மணி, கலசம் அல்லது பெரிய டம்ளரில் தீர்த்தம், அகர்பத்தி, தீப்பெட்டி, தீப ஆராதனைக்கு பசு நெய் அல்லது நல்லெண்ணெய், தேங்காய், பூ, பழங்கள், பிரசாதம் இவை எல்லாம் வைக்க இரண்டு பெரிய தட்டுகள், அவசியமென்றால் கை துடைக்க துணி வைத்துக் கொள்ளலாம்.

விரத பூஜை செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

1. இப்பூஜையை சுயமாகவோ அல்லது ஆச்சார்யரை நியமித்தோ செய்யலாம். ஆனால் சுயமாக செய்யும் போது நம் கவனம் பெருகும். ஈடுபாடு அதிகரிக்கும் என்ற காரணத்தால் சுயமாக செய்வது நல்லது. பூஜையை தொடங்குவதற்கு முன் அனைவரும் ஒன்றாக ஸச்சிதானந்த ஸமர்த்த ஸத்குரு சாயி நாத் மஹாராஜ்கீ ஜய் என்று 3 முறை கூற வேண்டும். பிறகு அவரவர் இஷ்ட தெய்வங்களை மனதில் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

2. பின்னர், சாயி நாதரை மனதில் நினைத்து விபூதியை இட்டுக் கொள்ள வேண்டும். குங்குமம், சந்தனம் வைத்துக் கொள்ளலாம்.

3. பூஜை செய்யும் இடத்தில் ஒரு மணையை போட்டு, அதன் மீது புதிய வெள்ளை துணியையோ அல்லது துவைத்து சுத்தம் செய்த வெள்ளைத் துணியையோ போடவும்.

4. அந்த ஆசனத்தின் மீது சாயி பாபாவின் சிலையையோ அல்லது படத்தையோ வைத்து இரு பக்கமும் தீபம் ஏற்ற வேண்டும். பசு நெய்யிலோ அல்லது நல்லெண்ணையிலோ தீபம் ஏற்ற வேண்டும்.

5. பூஜை தொடங்குவதற்கு முன் பாபாவின் படத்திற்கோ அல்லது சிலைக்கோ பூ மாலைகளால் அலங்கரிக்க வேண்டும். நல்ல மணமுள்ள ஊதுவத்தியை ஏற்ற வேண்டும்.

எனக்கு சமர்ப்பிக்கப்படும் இலை, புஷ்பம், தீர்த்தம் எதுவாகிலும் அதை பரிசுத்தமான மனதோடும், பக்தியுடனும் எனக்கு சமர்ப்பிப்பார்களேயானால் அவற்றை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்கிறார் சாயி நாதர். இதையேதான் பகவத்கீதை 9வது அத்தியாயத்தில் ராஜவித்யா ராஜ குஹ்யா யோகத்தில் 26வது ஸ்லோகத்தில் கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனுக்கு கூறினார்.

பத்ரம், புஷ்பம், ஃபலம், தோயம், யோமே, பக்த்யா ப்ரயச்சதி ததஹம் பக்த்யுபஹ்ருதம் ச் னாமி ப்ரயதாத்மன :

மேலுள்ள விசயத்தை நினைவில் கொண்டு, பரிசுத்தமான மனதோடும், பக்தி விசுவாசத்துடனும் பூஜை பாராயண நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், விசேஷமான பலனை பெறலாம் என்பது உறுதி.



சீரடி சாயி நாதா ஸ்மரணம்!



ஸாயிபாபா ஸர்வாந்தார்யாமி, (எங்கும் வியாபித்திருப்பவர்) முற்றும் அறிந்த ப்ரஹ்ம ஞானி, பஞ்ச பிட்சகர் (ஒரு நாளில் ஐந்து வீடுகளில் மட்டுமே பிட்சை வாங்குவார் என்பதால் இந்தப் பெயர்), நிரதாக்னி ஹோத்தரன் (ஷீர்டியில் அவரருகே துனி எப்பொழுதும் எரிந்துகொண்டே இருக்கின்ற காரணத்தால் அவரை இப்படியும் அழைப்பர்), அனைத்து சாஸ்திரங்களையும் கற்றறிந்தவர், தியான ஸ்வரூபி, அவரே பிரம்மா, விஷ்ணு, பரமேஸ்வரன், அப்படிப்பட்ட சாயிநாதரை ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்து நாம் வழிபடுவோம். ஸச்சிதானந்த ஸமர்த்த ஸத்குரு சாயிநாத் மஹராஜ்கீ ஜய்!

தேவர்களும் பிறப்பெடுக்க விரும்பும் மானிட பிறப்பில், செய்வதற்கு எத்தனையோ இருக்கின்றது. இது தெரியாமல் மாயையில் திளைத்து பொறாமை, கோபம், துவேஷம், உதாசீனப்படுத்துதல் போன்ற செயல்களில் நாம் உழன்று கொண்டிருக்கிறோம்.

புனரபி ஜனனம் புனரபி மரணம் என்பது போல், இந்த லோகத்தில் பிறப்பதும், இறப்பதுமான சுழற்சி நடந்து கொண்டிருக்கிறது. இறப்பது மறுபடியும் பிறப்பதற்கா? எதற்காக இந்த மனித ஜென்மம் எடுத்திருக்கிறோம்? என்று கேட்கிறார் சாயிபாபா. ஒரு தடவை நிதானமாக யோசியுங்கள். நிரந்தரம் இல்லாத ஈனமான, அருவருப்பான ஒரு விநாடி சந்தோஷத்திற்கு அடிமையாகி இருக்கிறோமே தவிர, நிரந்தரமான சந்தோஷம் ஒன்று இருக்கிறது என்பதை அறியவில்லை. அதை முயற்சி செய்து அடைய இந்த மானிட ஜென்மத்தை உபயோகித்துக் கொண்டிருக்கிறோமோ?

க்ருதே ஜனார்த்தனோ, த்ரேதாயாம் ரகு நந்தன:
த்வாபரே ராம கிருஷ்ணௌச
கலௌ ஸ்ரீ ஸாயிநாத:

க்ருத யுகத்தில் சமதா (உள்ளம், உடல் இவற்றின் தனித்தன்மை) மூலமும், த்ரேதாயுகத்தில் யாகத்தின் மூலமும், த்வாபர யுகத்தில் பூஜை முறையிலும் தெய்வ வழிபாடுகள் நடைபெற்றது. தற்போது கலியுகத்தில் நாமஸ்மரணை மட்டும் போதும் என்கிறார் சாயி.

நாமஸ்மரணையிலும் குண நாமஸ்மரணம் விசேஷம். யாருடைய நாமத்தை ஸ்மரணை செய்கிறோமோ, அவர்களின் குணத்தையும் சேர்த்து பாராயணம் மூலம் கேட்பதினால் அதிக பலன் கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல், ஸத்ஸங்கத்துடன் இதை செய்யும்போது, மனது பகவானுடன் ஐக்கியமாகிறது. இதன் மூலமே முழு பலன் அடைய முடியும். அதனால்தான், கலியுகத்தில் நாம ஸ்மரணை போதும் என்பது சாயிநாதரின் நோக்கம். அதனால்தான், நாம் அனைவருக்கும் நாதரான சாயிநாதரின் சரித்திரமான சாயி ஸத்சரித்திரத்தை இந்த சப்த சப்தாஹாவில் பாராயணம் செய்வது அவசியமாகிறது.

கண்மூடித்தனமாக இல்லாமல், எனது பக்தர்களாக இருக்கிறீர்கள் என்பதை நினைத்து, கவனத்தோடு மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு, எனது நாமத்தை ஸ்மரனை செய்தால் போதும் என்கிறார் பாபா. அதோடு பாபா கூறிய மற்றொரு உன்னதமான விஷயம். பலவகையில் வழி தவறி ஓடும் மனதை, அவர் மீது வைத்து கவலையில்லாமல் இருக்கும்படி கூறுகிறார். வழி தவறிய மனதை பாபாவிற்கு அர்ப்பணம் செய்ய வேண்டுமென்றால், முதலில் நம் மனதை நாமே கட்டுப்படுத்தி, அதற்குப் பிறகு பகவானுக்கு அர்ப்பணம் செய்யவேண்டும்.

அவ்வாறு, நம் மனதை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், அது பூரண விசுவாசத்துடன் செய்யப்படும் பூஜை, பஜனை, பாராயணம், ஸத்ஸங்கம் மூலமாக மட்டுமே முடியும்.

ஸத் ஸங்கத்வே நி: ஸங்கத்வம்
நி: ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச் சலதத்யம்
நிச் சலதத்வே ஜீவன் முக்தி

என்று ஆதிசங்கரர் கூறினாரென்றால் ஸத்ஸங்கத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது நடக்கும் ஸத்சங்கங்களில் கலந்து கொண்டு, அங்கு சொல்லப்படும் கருத்துக்களை கவனமாக கேட்டு நடந்தால், குருவின் திருவருள் பரிபூரணமாகக் கிட்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சாயி ஸத் சரித்திர பாராயணம்!

சாயி ஸத் சரித்திர பாராயணம் என்றால் சாயிநாதரை ஆராதனை செய்வதாகும். சாயி நாதரின் மறு நாமமாக ஸத் சரித்திரத்தை நினைத்து, சாயி பாபாவும் அவரது சரித்திரமும் (இரண்டும்) வேறு வேறு அல்ல என்பதை தெளிவாக அறிய வேண்டும். எங்கெல்லாம் சாயி ஸத் சரித்திர பாராயணம் நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் சீரடி சாயிநாதர், பவித்ரமான கோதாவரி, துவாரகமாயி, குருவிருக்குமிடம், துனி ஆகியவை அகண்டமான கீர்த்தி அளிக்கும் நோக்கில் நமக்கு பிரத்யட்சமாக தோன்றும்.

நாஹம் வஸாமி வைகுண்டே ந யோகி ஹ்ருதயே ரவெள
மத்பக்தா யத்ர காயந்தி தத்ர திஷ்டாமி நாரத

எங்கெல்லாம் பக்தியோடு தன் நாமஸ்மரனை, பஜனை, பாராயணம் நடைபெறுகிறதோ, அங்கு பக்தர்களை ஆசீர்வதித்து, அவர்களுக்கு மேலும் நன்மை தருவதற்கு பகவான் அங்கு கட்டாயம் இருப்பார். அதனால், வியாழக்கிழமைகளில் விரத பூஜையும் தொடர்ந்து 67 நாட்கள் (9 வாரங்கள்) தினமும் ஒரு அத்தியாயம் என்ற கணக்கில் - சாயி ஸத் சரித்திரத்தை பக்தி விசுவாசத்துடன் பாராயணம் செய்து சாயிநாதரின் ஆசீர்வாதத்தையும் அனுக்கிரஹத்தையும் பெறலாம்.

1910 ஆம் ஆண்டு, முதன் முதலில் ஹேமந்த்பந்த் சீரடியில் காலடி வைத்தபோது, ஊர் எல்லையில் கோதுமை மாவை தூவிக் கொண்டிருந்த பாபாவை கண்டார். காரணம் கேட்டபோது, காலரா வியாதி ஊருக்குள் பரவியுள்ளது. அதனால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அவர் அவ்வாறு செய்வதாகக் கூறப்பட்டது. அந்தக் காட்சியைக் கண்ணார கண்ட அவருக்கு, அவரைப் பற்றிய சரித்திரத்தை எழுத ஆர்வம் வந்தது. இதைப் படிப்பதால், வரும் சந்ததியர்கள் பயன்பெறுவார்கள் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. இதற்கு, பாபாவிடம் அனுமதி பெறுவதற்காக சியாமா என்ற பக்தரை அணுகினார். அவர் இதை பாபாவிடம் தெரிவித்தபோது பாபா, ஹேமந்த்பந்த் தனது அஹங்காரத்தைக் களைந்து என் பாதங்களில் சரணடையட்டும். அப்போது நானே அவருள் புகுந்து என் வாழ்க்கை நிகழ்ச்சிகளை எழுதுகிறேன். வாழ்க்கையில் இவ்வாறு அஹங்காரத்தை விட்டவனுக்கே நாம் மிகவும் உதவி புரிகிறேன். அவனுக்கு என்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சியை சொல்வது மட்டுமல்ல. நான் அவருடைய வீட்டில் ஒல்லும் வகையெல்லாம் ஓவாதே பணிபுரிகிறேன் என்று சுயமாகவே வாக்களித்தார். பாபா சொன்னதைப் போலவே ஹேமந்த்பந்த் ஸத்சரித்திரத்தை எழுதி முடித்தார். பாபாவின் வாக்கிலிருந்து வந்த அப்படிப்பட்ட இந்த ஸத்சரித்திரத்தைப் பாராயணம் செய்ய கிடைத்தால், அது நாம் செய்த பாக்கியமே. அப்போதும், இப்போதும் சாயி சத் சரித்திர பாராயணம், பூஜை, பஜனை செய்ததன் மூலம் லட்சக்கணக்கானோர் அடைந்த பலன்கள் கணக்கிலடங்கா.

அஜ்ஞச் சாச் ரத்ததாநச் ச ஸம்ச யாத்மா விநச் யதி
நாயம் லோகோ(அ)ஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ச் யாத் மந:

என்கிறது பகவத்கீதை 4ஆவது அத்தியாயம். 40 ஆவது ஸ்லோகம். அதாவது ஞானத்தின் மீது அன்பு, ஆர்வம் இல்லாமல் சந்தேகத்துடன் இருப்பவர்களுக்கு இவ்வுலகத்திலோ, பரலோகத்திலோ சுகம் இருக்காது.

ஆகவே, எவ்வித சந்தேகமும் இல்லாமல் கீழ் குறிப்பிட்டுள்ளவற்றை படித்து சாயிநாதனின் மஹிமையை தெரிந்து கொண்டு நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும் பூஜையில் கலந்து கொண்டு, சாயிநாதரின் அனுக்கிரகத்தையும் ஆசீர்வாதத்தையும் பெறலாம்.
 




Last edited:

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஓம் சாயி ராம்

1. பாபாவின் எங்கும் நிறை தன்மையும், கருணையும்

1910ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம் இது. அன்றைய தினம் தீபாவளித் திருநாள். துனிக்கருகில் அமர்ந்திருந்த பாபா, திடீரென்று தன் கரத்தை துனியில் நுழைத்தார்.

கரம் உடனே கருகி வெந்துவிட்டது. அப்போது அருகில் இருந்த வேலையாட்கள் மாதவ் மற்றும் சியாமா பாபாவின், கரங்களை வேகமாக துனியிலிருந்து இழுத்து தேவா எதற்காக இங்ஙனம் செய்தீர் என்று கேட்டனர். அதற்கு பாபா, தொலை தூரத்தில் உள்ள ஓர் இடத்தில் ஒரு பெண் தன் குழந்தை ஊது உலைகளத்தில் விழுந்ததை பார்த்தவுடன் பாபா என்று என்னை நோக்கி கதறினாள். அந்த கதறலைக் கேட்டு, என் கரத்தை நீட்டி குழந்தையைக் காப்பாற்றினேன். என் கரம் வெந்தாலும், ஒரு குழந்தை காக்கப்பட்டதை எண்ணி மகிழ்வடைகிறேன் என்றார். சில நாட்களுக்குப் பிறகு, அத்தம்பதியினர் சீரடி வந்து பாபாவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இதன் மூலம் பாபாவின் எங்கும் நிறை தன்மையையும் கருணையையும் உணரலாம்.

2. பீமாஜி பாட்டீல் க்ஷய ரோகம்

அந்த நாட்களில் (1909ம் ஆண்டில்) க்ஷயரோகம், பிளேக் போன்ற வியாதிகள் ஆபத்தானவை. அந்நாட்களில் இவைகளுக்கு எந்த வைத்தியமும் கிடையாது.

நாராயணகாவ்ங் என்னுமிடத்தைச் சேர்ந்த பீமாஜி பாட்டீல் தீவிரமான க்ஷயரோகத்தால் துன்பப்பட்டார். எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை. மரணம் நெருங்கிய நாட்களில் நானாஸாஹேப் பீமாஜிபாட்டீலுடன் சீரடி சென்று பாபாவை தரிசித்தார். அவருக்குள்ள தீவிரமான க்ஷய ரோகம் குறித்து பாபாவிடம் விவரித்து அவரை ரட்சிக்குமாறு பிரார்த்தித்தார். முந்தைய தீய கருமங்களாலேயே இவ்வியாதி என்று பாபா சுட்டிக் காண்பித்து, முதலில் இதில் தலையிட தீர்மானம் இல்லாதவராய் இருந்தார். இருந்தும் பீமாஜி பாட்டீலின் பிரார்த்தனையைக் கேட்டு பாபாவின் உள்ளம் உருகியது. இம்மசூதியில் கால் வைத்த உடனே அவன் மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான். இங்கே உள்ள பக்கிரி மிகவும் அன்பானவர். அவர் இவ்வியாதியைக் குணப்படுத்துவார் என்று கூறினார்.

அன்று இரவு, பீமாஜி பாட்டீலுக்கு பயங்கரமான கனவு தோன்றியது. இக்கனவின் மூலம் அவரின் பூர்வஜென்ம பாவங்களுக்கு பரிகாரங்கள் செய்தார் பாபா. கனவில் அவர் பட்ட கஷ்டத்துடன் அவரின் சிகிச்சை முடிவடைந்தது. அதற்கு நன்றி தெரிவிக்குமாறு பாட்டீல் பிரதி ஆண்டும் தனது கிராமத்தில் சாயி ஸத்ய விரதம் மேற்கொண்டு பாபாவிற்கு நன்றி செலுத்தி வந்தார். நாமும் சாயிநாதரின் கருணையை நினைவு கூர்ந்து, இச்சரித்திர பாராயணமும், ஸப்த ஸப்தாஹா விரதத்தையும் மேற்கொண்டு, சாயிநாதரின் ஆசீர்வாதத்தையும் அனுக்கிரஹத்தையும் பெறுவோம்.

3. உதியின் மகிமை

பாபாவின் உதியை நாமஸ்மரணை செய்து கொண்டு தன் நெற்றியிலிட்டுக் கொண்டவர்களுக்கு ஆரோக்கியமும், ஐஸ்வர்யமும், கவலைகளிலிருந்து விடுதலையும் கிடைக்கும். உதாரணம், நாசிக்கை சேர்ந்த நாராயண் மோதிரம் ஜானியின் நண்பருக்கு தேள் கடித்ததால் தீவிரமான வலி ஏற்பட்டது. பாபாவின் உதியை வைக்க அவர் தேடிய போது உதி கிடைக்கவில்லை. அப்போது பாபாவை பிரார்த்தனை செய்து அவர் முன் புகைந்து கொண்டிருக்கும் ஊதுபத்தியின் சாம்பலிலிருந்து ஒரு சிட்டிகை எடுத்து, அதை உதியாக நினைத்து பாபாவை மனதில் தியானித்து அதை தேள் கடித்த இடத்தில் தடவினார். விரைவில் வலி மறைந்தது.

4. பிளேக் வியாதி, உதி வைத்தியம்

ஒரு முறை மும்பையிலுள்ள தானே ரயில் நிலையத்தில் தனது மனைவியுடன் ரயில் வண்டியை எதிர்பார்த்து காத்திருந்தார் சாயி பக்தரான நானா சாஹேப். அப்போது, அவரை அடையாளம் தெரிந்து கொண்ட மற்றொரு பக்தர் அவரிடம் வந்து, நல்ல வேளையாக நான் உங்களைச் சந்தித்தேன். என் நண்பரின் மகள் பிளேக் வியாதியினால் அவதிப்படுகிறாள். பாபாவின் உதி கிடைத்தால் சிறப்பாயிருக்கும். சிறிது உதி கிடைத்தால் அந்த குழந்தைக்கு இட்டு விடுவேன் தருகிறீர்களா என்று கேட்டார். அந்தோ பரிதாபம். அந்த சமயம் பார்த்து அவரிடம் உதி இல்லை. ஒரு கணம் பாபாவை நினைத்தார். தரையிலிருந்த மண்ணை எடுத்து பாபாவை தியானம் செய்து, அவரது மனைவியின் நெற்றியிலிட்டார். போ. குழந்தைக்கு உடம்பு சரியாகியிருக்கும் என்று அவரை வழியனுப்பி வைத்தார்.

நம்பிக்கையுடன் அவர் தனது நண்பனின் வீட்டுக்குச் சென்றபோது, அந்த குழந்தைக்கு உடம்பு பரிபூரண குணமாகியிருந்தது. என்னே பாபாவின் கருணை!

நாமும் சாயி நாதரின் பாதம் பணிந்து, அவரது அனுக்ரஹத்தை பெற்று நல்வழி அடைய முயலுவோமாக. அனுதினமும் சாயி நாமம் ஜெபித்து சரணடைவதுடன் சாயி சன்னதி சென்று நம்மால் இயன்ற பணிகளை (உதவிகளை) செய்வோமாக.

சாயி சன்னதியில் கிடைக்கும் உதி என்ற விபூதி மருத்துவ குணமுடையது. ஒரு சிறிய பாக்கெட்டை எப்போதும் உங்களுடன் வைத்துக் கொள்ளவும். வெளியில் செல்லும்போது இந்த மகிமை வாய்ந்த சக்தி மிகுந்த உதியை நெற்றியில் இட்டு கொள்ளவும். நம்பிக்கையுடன் சிறிது தண்ணீரில் கலந்து உட்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

5. மலேரியா வியாதி நிவாரணம், கருப்பு நாய்க்கு தயிர்சாதம் இடுதல்

பால கணபதி என்கிற அடியவர் மலேரியா வியாதியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். சாயியின் மஹிமை அறிந்து, அங்கு சென்று, அவரின் பாதத்தில் வீழ்ந்து மலேரியா காய்ச்சலை குணப்படுத்துமாறு பிரார்த்தித்தார். சாயிபாபா, லட்சுமி கோயிலுக்கு முன்னால் கருப்பு நாய்க்கு தயிர் சாதம் கொடுக்குமாறு கூறினார். பாபாவின் ஆசீர்வாதத்தினாலும், விசேஷத்தினாலும் லட்சுமி கோயிலுக்கு சென்று பார்த்தபோது ஒரு கருப்பு நாய் இருந்தது. அந்த தயிர் சாதத்தை கொண்டுவந்து கருப்பு நாய்க்கு கொடுத்தவுடன் பால கணபதி மலேரியா நோயிலிருந்து விடுபட்டார்.

இது போன்ற சாயி மகிமைகளும், விசேஷங்களும் சாயி சரித்திரத்தில் அநேகமாக இருக்கும். அவை அனைத்தும் எழுதுவதற்கு இடமில்லாததால் சில உதாரணங்களை மட்டும் அளித்துள்ளோம். சாயி ஸத்சரித்திரத்தை பாராயணம் செய்தும், பூஜை விரதங்களை முறையாக கடைப்பிடித்தும் சாயி நாதரின் ஆசீர்வாதத்தையும், அனுக்கிரஹத்தையும் பெறலாம்.

ஸச்சிதானந்த ஸமர்த்த ஸத்குரு ஸாயிநாத் மஹாராஜ்கீ ஜய்!
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
சீரடி சாயி பாபா பூஜை மந்திரங்கள்!



சாயி நாத பூஜை

சாயி நாதரின் பூஜையை ஆரம்பிப்பதற்கு முன் அவரவர்களின் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு ஆரம்பிக்கலாம்.

ஆசமனம் : (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி, மூன்று முறை உட்கொள்ளவும்.)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அநந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்க வந்தனம் (பெண்களுக்கு கிடையாது)

கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு வலது கை விரல்களால் அந்தந்த அங்கங்களை தொட வேண்டும்.

ஓம் கேசவாய நம: - கட்டை விரலால் வலது கன்னம்
ஓம் நாராயணாய நம: - கட்டை விரலால் இடது கன்னம்
ஓம் மாதவாய நம: - மோதிர விரலால் வலது கண்
ஓம் கோவிந்தாய நம: - மோதிர விரலால் இடது கண்
ஓம் விஷ்ணவே நம: - ஆள்காட்டி விரலால் வலது மூக்கு
ஓம் மதுஸுதனாய நம: - ஆள்காட்டி விரலால் இடது மூக்கு
ஓம் த்ரிவிக்ரமாய நம: - சுண்டு விரலால் வலது காது
ஓம் வாமனாய நம: - சுண்டு விரலால் இடது காது
ஓம் ஸ்ரீதராய நம: - நடுவிரலால் வலது தோள்
ஓம் ஹ்ருஷீகேசாய நம: நடுவிரலால் இடது தோள்
ஓம் பத்மநாபாய நம: - நான்கு விரல்களால் நாபி (தொப்புள்) யைத் தொடவும்
ஓம் தமோதராய நம: ஐந்து விரல்களையும் சேர்த்து, தலையைத் தொடவும்.

கணபதி தியானம்

வலது கையில் அக்ஷதை எடுத்துக் கொண்டு இரு கைகளாலும் தலையில் 5 முறை குட்டிக் கொண்டே கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி கணபதியின் பாதங்களில் சமர்ப்பிக்கவும்.

சு க்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே

குரு தியானம்

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர:
குருஸ்ஸாக்ஷõத் பரப் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:
நாராயண ஸமாராம்பம் வியாஸ சங்கர மத்யமாம்
அஸ்மதாசர்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

பிராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. வலது மூக்கை வலது கைக் கட்டை விரலாலும், இடது மூக்கைச் சுண்டுவிரல், மோதிர விரல்களாலும் பிடித்துக் கொண்டே கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

ஓம் பூ:, ஓம் புவ:, ஓகு:ம ஸுவ:, ஓம் மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோதேவஸ்ய தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ தயாத் ஓமாபோ ஜ்யோதீரணு:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்ஸுவரோம் ஓம் (வலது காதைத் தொடவும்)

ஸங்கல்பம்

வலது கையை (அக்ஷதையுடன்) இடது கைமேல் வைத்து இரண்டு கைகளையும் வலது தொடை மேல் வைத்தவாறு கீழ்வரும் மந்திரத்தைச் சொல்லவும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீபரமேச் வர ப்ரீத்யர்த்தம், சு பே, சோ பனே முஹுர்த்தே, ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ச் வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்ச திதமே, கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரதகண்டே, மேரோ, தக்ஷிணே பார்ச வே, ச காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே, ......... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்). ........... அயனே (அயனத்தின் பெயர்), ........ ருதௌ (ருதுவின் பெயர்), .......... மாஸே (மாதத்தின் பெயர்), ..... பக்ஷ (வளர்/தேய்பிறை), .......... சு பதிதௌ, .......... வாஸர யுக்தாயாம் (கிழமையின் பெயர்), ......... நக்ஷத்ர யுக்தாயாம் (நட்சத்திரத்தின் பெயர்), சுபயோக சுபகரண, ஏவங்குண விசே ஷண விசிஷ்டாயாம், அஸ்யாம் சு பதிதௌ, அஸ்மாகம் ஸஹ குடும்பானாம் க்ஷமஸ்த்தைர்ய, தைர்ய, வீர்ய, விஜய ஆயுராரோக்ய ஐச் வர்யாணாம் அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த மங்களாவாப்த்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம் தர்மார்த்த காமமோக்ஷ சதுர்வித ஃபல புருஷார்த்த ஸித்யர்த்தம், லோகஸம்ரக்ஷணார்த்தம் ஸ்ரீ சாயி நாத தேவதாமுத்திச் ய, ஸ்ரீ சாயி நாத தேவதா ப்ரீத்யர்த்தம் யதா சக்தி, த்யானாவாஹநாதி ஷாடசோ பசார பூஜாம்ச கரிஷ்யே.

(அக்ஷதையை வடக்குப்புறம் கீழே போட்டு கை அலம்பவும்)

விக்னேஸ்வர பூஜை

வக்ரதுண்ட மஹாகாய சூர்ய கோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவ சர்வ கார்யேசு சர்வதா

கண்டா பூஜை: (பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீய சக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்).

ஆகமார்த்தம் து தேவானாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாராவம் க்ரோம்யாதௌ தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

கலச பூஜை: பஞ்சபாத்திரத்திற்கு (தீர்த்த பாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

அஸ்மின் கலசே திவ்ய பரிமள கந்தாம் ஸமர்ப்பயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும்.

கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் ஸமர்ப்பயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்த பாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளசி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் ஸிந்துவே நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் சர்வதீர்த்ததேவதாப்யோ நம:

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ஸ்லோகம்

கலச ஸ்ய முகே விஷ்ணு: கண்டே ருத்ர: ஸமாச் ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குöக்ஷள து ஸாகரா: ஸர்வே ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ(அ)த யஜுர்வேத: ஸாமவேதோ(அ)ப்யதர்வண:

அங்கைக் ச ஸஹிதா: ஸர்வே கலசா ம்பு ஸமாச் ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம் ஸர்வ துரிதக்ஷயகாரகா:

கங்கை ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி ஜலே(அ)ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ (3 முறை)

என்று ஜபித்து, கலசத் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவியங்களையும், சுவாமியையும் பிரோக்ஷித்து, தன்னையும் பிரோக்ஷித்துக் கொள்ளவும்.

ஆவாஹனம்

ப்ரஹ்மானந்தம் பரம ஸுகதம்
கேவலம் ஞானமூர்த்திம்
த்வந்த்வாதீதம் ககன ஸத்ருஷம்
தத்வ மஸ்யாதிலக்ஷ்யம்

ஏகம் நித்யம் விமலம் அசலம்
ஸர்வதீஸாக்ஷிபூதம்
சாயீநாதம் த்ரிகுணர ஹிதம்
ஸத்குரும் தம்நமாமி

நமஸ்தே சாயிநாதாய
மோக தந்த்ர விநாசினே
குரவே புத்திபோதாய
போத மாத்ரஸ்வரூபிணே.

அஸ்மின் சித்ரபடே ஸாயிநாதம் த்யாயாமி/ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை சமர்ப்பிக்கவும்)
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஸமஸ்த உபசார பூஜைகள்

ஸ்ரீ ஸாயிநாதாய நம: நவரத்ன கஜித ஸிம்ஹாஸநார்த்தே
அக்ஷதான் ஸமர்ப்பயாமி (புஷ்பம் அக்ஷதைகளை சமர்ப்பிக்கவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: பாதயோ: பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

ஸ்ரீ ஸாயி நாதாய நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தொட்டு தெளிக்கவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: சு த்தோதக ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தொட்டு தெளிக்கவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: வஸ்த்ரம்/வஸ்த்ரார்த்தே அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(ஆபரணம்/ அக்ஷதை சமர்ப்பிக்கவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: அலங்காரணார்தே அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: கந்தம் ஸமர்ப்பயாமி
(வலது கை மோதிர விரலால் சந்தனமிடவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: ஹரித்ராசூ ர்ணம் ஸமர்ப்பயாமி
(குங்குமம் சமர்ப்பிக்கவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம்/மாலை போடவும்)

உத்தராங்க பூஜை

ஸ்ரீ ஸாயிநாதாய நம: தூபமாக்ராபயாமி
(சாம்பிராணி, ஊதுபத்தி காட்டவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: தீபம் தர்ச யாமி
(நெய் தீபம் காட்டவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: தூப தீபானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

நைவேத்திய மந்திரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பூலத்தில் வைத்து கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மேற்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்திய தாம்பூலத்தின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்
(தீர்த்தத்தை நைவேத்தியங்களின் மேல் தெளிக்கவும்)

தேவஸவித ப்ரஸுவ ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(தீர்த்தத்தை நைவேத்திய தாம்பூலத்தின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

அம்ருதமஸ்து, அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்)

(கீழ்கண்ட ஒவ்வொரு மந்திரத்திலும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு, சுவாமியின் பக்கம் கைகளால் காண்பித்து நைவேத்தியம் செய்யவும்).

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாயநாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா, ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய

ஸ்ரீ ஸாயிநாதாய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீஃபலம் ஸஹிதம் மஹா நைவேத்யம் நிவேதயாமி (நைவேத்தியம் செய்யவும்)

மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

நைவேத்யாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் 3 முறை உத்தரணியால் தீர்த்தம் விடவும்)

சுத்தமான தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, பழம் எடுத்து வைத்து கீழ்வரும் மந்திரத்தைச் சொல்லவும்.

பூகீஃபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ருதிக்ருஹ்யதாம்
ஸ்ரீ ஸாயிநாதாய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தின் மேல் தீர்த்தம் விட்டு, நைவேத்தியம் செய்யவும்.)

தீபாராதனை

ஸ்ரீ ஸாயிநாதாய நம: கற்பூர நீராஜனம் ஸந்தர்ச யாமி
(கற்பூர ஆரத்தி காட்டவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: நீராஜநானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்) தீபாராதனைக்குப் பிறகு ஆரத்தி பாடலை பாடவும்.

ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தை சுவாமியிடம் சமர்ப்பிக்கவும்)

மந்த்ரபுஷ்பம்

ஓம் யஜ்ஞேன யஜ்ஞமயஜந்த தேவாஸ்தாநி
தர்மாணி ப்ரதமாந்யாஸந்
தே ஹ நாகம் மஹிமாந: ஸசந்தே
யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா:

ஓம் யோ(அ) பாம் புஷ்பம் வேத
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி
சந்த்ரமா வா அபாம் புஷ்பம்
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான்பவதி
ய ஏவம் வேத
யோ(அ) பாமாயதனம் வேத
ஆயதனவான் பவதி

ஓம் ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே
நமோ வயம் வைச் ரவணாய குர்மஹே
ஸ மே காமான் காம காமாய மஹ்யம்
காமேச் வரோ வைச் ர வணோ ததாது
குபேராய வைச் ரவணாய
மஹாராஜாய நம:

ஓம் ஸ்வஸ்தி ஸாம்ராஜ்யம் பௌஜ்யம் ஸ்வாராஜ்யம்
வைராஜ்யம் பாரமேஷ்ட்யம் ராஜ்யம்
மஹாராஜ்யமாதிபத்யம் மயம் ஸமந்தபர்யா
ஈஸ்யாத் ஸார்வபௌம:
ஸார்வயுஷாந் த தாபரார்தாத்
ப்ருதிவ்யை ஸமுத்ரபர்யந்தாய ஏகராளிதீ
ததப்பேஷ ச் லோக(அ) பிகீதோ மருத:
பர்வேஷ்ட்ரோ மருத்தஸ்யாவஸந் க்ருஹே
ஆவிக்ஷிதஸ்ய காமப்ரேர்விச்வே தேவாஹ: ஸபாஸத இதி
ஓம் ஸ்ரீ நாராயண வாசுதேவ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயி நாத் மஹாராஜ்கீ ஜய்.

ஸ்ரீ ஸாயிநாதாய நம: மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பங்களை சமர்ப்பிக்கவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: ச்சத்ர - சாமராதி ஸமஸ்த்த
ராஜோபசாரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை சமர்ப்பிக்கவும்)

ப்ரார்த்தனை, ப்ரதக்ஷிணம், நமஸ்காரம்
(கையில் புஷ்பம் அக்ஷதைகளை எடுத்துக்கொண்டு கீழ்வரும் ஸ்லோகத்தைச் சொல்லியபடி 3 முறை ப்ரதக்ஷிணம் செய்யவும்)

யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச
தானி தானி விநச் யந்தி ப்ரதக்ஷிண பதே பதே
பாபோஹம் பாபகர்மாஹம் பாபாத்மா பாப ஸம்பவஹ:
த்ராஹிமாம் க்ருபயா தேவ சரணாகத வத்ஸலா
அன்யதா சரணம் நாஸ்தி த்மேவ சரணம் மம
தஸ்மாத் காருண்ய பாவேன ரக்ஷ ரக்ஷ ஸ்ரீ ஸாயீச் வரா
ஆத்ம ப்ரதக்ஷிண நமஸ்காரன் ஸமர்ப்பயாமி
(ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவும்)
ஓம் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸமர்த்த ஸத்குரு ஸாயிநாத் மஹராஜ்கீ ஜய்

விபூதி தாரணம்

சாயி நாதரை மனதில் தியானித்துக் கொண்டு இந்த ஸ்லோகத்தை மூன்று முலை சொல்ல வேண்டும்.

ஸ்ரீகரம் நித்யம் சுபகரம், திவ்யம் பரமம், பவித்ரம்
மஹா பாபஹரம் ஸ்ரீ ஸாபி பாபா விபூதிம் தாரயாம்யஹம்
பரமம், பவித்ரம் பாபா விபூதிம் பரமம் விசித்ரம் லீலா
விபூதிம் பரமார்த்த இஷ்டார்த்த மோக்ஷ பிரதாந்தம்
பாபா விபூதிம் இதமாஸ்ரையாமி

இந்த ஸப்த ஸப்தாஹா விரதத்தை மேற்கொள்ளும் 49 நாட்களும் காலையில் பூஜை முடித்தவுடன் எப்போது முடிகிறதோ அப்போது சாயி சத் சரித்திரம் படிக்கவும். தினமும் பாராயணம் முடிந்த பிறகு உங்களால் இயன்ற அளவு காணிக்கையை பாபாவின் பாதங்களில் சமர்ப்பிக்கவும். பாராயணம் முடிந்த நாளன்று, சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து காணிக்கைகளையும் திரட்டி, அருகிலுள்ள சாயி பாபாவின் கோயில் உண்டியலில் செலுத்தவும்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
மங்கள ஆரத்தி

ஸ்வாமி ஸாயிநாதா ஷீர்டி ÷க்ஷத்ர வாஸாயா
நமகா பீஷ்ட ப்ரதாய மஹீத மங்களம் - ஸ்வாமி
லோக நாதாய பக்த லோக சம்ரக்ஷகாய
நாகலோக ஸ்த்துத்தாய நவ்ய மங்களம் - ஸ்வாமி
பக்த விருந்த வந்திதாய ப்ரஹ்ம ஸ்வரூபாய
முக்தி மார்க்க போதகாய பூஜ்ய மங்களம் - ஸ்வாமி
சத்ய தத்வபோதகாய சாது வேஷயதே
நித்ய மங்கள தாயகாய நித்ய மங்களம் - ஸ்வாமி

ஆரத்தி (2) (மராத்தி)

ஆரத்தி ஸாயிபாபா ஸெளக்ய தாதாரா ஜீவாம்
சரண ரஜதளீம் நிஜ தாஸாம் விஸாவா பக்தாம் விஸாவா

ஜாரு நியாம் அநங்க ஸ்வரூபி ராஹே டங்க
முமுக்ஷு ஜனா தாவீ நின டோளா ஸ்ரீரங்கா (ஆரத்தி)

ஜயாமநிம் ஜய் ஸாபாவ தயா தைஸா அனுபவ
தாவஸீ தயாகநா ஜஸீ து ஜீ ஹீமாவ (ஆரத்தி)

துமசே நாம த்யாதா ஹரே ஸம சுருதி வ்யதா
அகதா தவ கரணீ மார்க தாவிஸீ அநாதா (ஆரத்தி)

கலியுகீ அவதார ஸுகுண ப்ரம்ம ஸாசார
அவதீர்ண ஜாலாஸே ஸ்வாமீ தத்தா திகம்பர (ஆரத்தி)

ஆட்டா திவஸா குருவாரீம் பக்தகரீதிவாரீ
ப்ரபுபத பஹாவயா பவ பய நிவாரீ (ஆரத்தி)

மாஜா நிஜ த்ரவ்ய டேவா தவ சரண ரஜஸேவா
மாகணே ஹேச்சி ஆதா தும்ஹா தேவாதி தேவா (ஆரத்தி)

இச்சித தின சாதக நிர்மள தோய நிஜ ஸுக
பாஜாவே மாதவா யா ஸாம் பாள ஆபூலீ பாக (ஆரத்தி)

ஆரத்தி (3)

ஜயதேவ ஜயதேவ ஸாயீ மஹாராஜ ஸ்ரீ ஸாயீ மஹாராஜ
ஓவாளீதோம் பாவோம் ஆரத்தீ யோகீராஜ (ஜயதேவ)

அகடித கடநா கடலீ பக்த ஜனாம் லாட்டீ
ஸாயீ ரூபாநேம் ஆலே ஜகதீம் ஜகஜேட்டீ

அகாத ஹீகுரு லீலா ந களே கோணாலா
மங்கல மகந்த - மஹிமா ஸகலாம் தாவியலா (ஜயதேவ)

பஸலாம் பாங்குநி பாரிக சிம்த்யாம்சா ஜோலா
ஆத்மபலாசா தேவ்ஹாம் நவ ப்ரத்யய ஆலா
தேலாம் வாசுநி ஸஹஜீ பணாத்யா பேடவில்யா
அநந்த அஸல்ய லீலா ஜகதாஸா திசல்யா (ஜயதேவ)

அசோத கீதீஹி மோட்டயா பாபாம்த்யா ராசீ
நாம ஸ்மரணேம் அவத்யா ஜாதீ விலயாஸீ
க்ருபா ப்ரஸாதே லாபே ஸகவஹி ஸம்ருத்தீ
குசல கராயா யேதி த்யா ருத்தீ ஸித்தீ (ஜயதேவ)

ஷீரடி வாஸீ ஸ்வாமீ ஸ்ரீ ஸத்குரு நாதா
துமச்யா சரணீம் ஆதாம் டேவியலா மாதா
உமிலிந்த மாதவ காதோ குண கௌரவ பாவே
துரித ஹராவேம் தர்ச ந தேஊநீ சுப வ்ஹேம் (ஜயதேவ)
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நிஜமான ஸாயிபாபா பூஜையில்
கலந்து கொண்டதைப் போல
ஒரு நிறைவு, சரயுவெற்றி டியர்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அருமையான பதிவு சிஸ்டர் Write your reply...
 




SaiDivya

புதிய முகம்
Joined
Apr 28, 2020
Messages
9
Reaction score
1
Location
Chennai
நெய்வேதிய மந்த்ரா

குருவே சாய்! குருவே சாய்!
எனக்கு உணவு அளிக்கும் எந்தன் குருவே சாய்!
இந்த நைவேத்தியத்தை தாழ்மையுடன் படைக்கிறான் சாய்!
இதை ஏற்று கொண்டு என் வாழ்வில் ஒளி வீசுவார் சாய்!
பழம் பால் தேன் படைத்துள்ளேன்!
கங்கை யமுனை காவேரி நீர் படைத்துள்ளேன்!
வெத்தலை பாக்கு ஏலக்காய் படைத்துள்ளேன்!
இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு
என் துன்பம் துடைக்க வாரும் சாய்!​
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top