சீலா மீன் புட்டு

SAROJINI

Author
Author
#1
சீலா மீன் புட்டு

தேவையான பொருட்கள் ::

சீலா மீன் – ¼ கிலோ (முள், தோல் நீக்கி உதிரியாக)
தேங்காய் – ½ மூடி துருவியது (பெரியது)
சின்ன வெங்காயம் – 150 கிராம் (சிரிதாக அரிந்தது)
பச்சை மிளகாய் - 5 நீளமானதை சின்னதாக வெட்டிக்கொள்ளவும்.
இஞ்சி – 2 இஞ்ச் (பொடி பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
புளி – புளி முத்து 2 அளவு
தேங்காய் எண்ணெய் – 1 குழி கரண்டி
தேவையான அளவு உப்பு


செய்முறை :
சுத்தம் செய்த சீலா மீன், துருவிய தேங்காய், அரிந்த வெங்காயம், சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், புளி, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒரு அடி கனமான பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, 100 ml அல்லது வேக தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு கிளறிவிட்டு வேக வைக்கவும். வெந்து, தண்ணீர் வற்றி வரும்போது தேங்காய் எண்ணெய் பரவலாக அவியலில் ஊற்றி 2 நிமிடம் கிளறி விட்டு இறக்கவும். சீலா மீன் அவியல் ரெடி.

இது மீன் குழம்பு, கார குழம்பு, புளி குழம்பு, வற்றல் குழம்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மசால் மீன் தோசைக்கு, தோசைக்கு இடையில் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்

. fish-pittu.jpg
 
#2
இதெல்லாம் நான் ட்ரை பண்ணினதில்ல டியர்.. டைம் கிடைக்கும்போது செஞ்சு பாக்குறேன்....
 

shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
#6
:love::love:........... எனக்குரொம்ப புடிச்ச மீன்
சீலா... இந்த மீனை பொரிக்கும் போது தேங்காய் திருவி போட்டு பொரிச்சா
ரொம்ப நல்லா இருக்கும்... சாப்டுட்டே இருக்கலாம் :love::love:
 

Latest Episodes

Sponsored Links

Latest updates

Top