• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சுரைக்காய் கார குழம்பு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
தேவையான பொருட்கள் :

சுரைக்காய் - ஒன்று
சின்ன வெங்காயம் - 20 முதல் 30
மல்லித்தூள் - இரண்டு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
காஷ்மீரி மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்
நார்மல் மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன் (உங்களுக்கு காரம் அதிகமா இல்ல கம்மியா உங்க விருப்பம் போல)
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
தக்காளி - 5
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் - தேவையான அளவு. (உங்களுக்கு நல்லெண்ணெய் பிடிக்காதுன்னா நீங்க எப்பவும் உபயோகப்படுத்துற எண்ணெய் சேர்த்துக்கோங்க)


செய்முறை :

சின்ன வெங்காயம் ஒரு 10 எடுத்து தோல் உரிச்சுட்டு தனியா வச்சுக்கோங்க. மிச்சம் 20 எடுத்து தோல் உரிச்சுட்டு நறுக்கி வச்சுக்கோங்க...

சுரைக்காய் தோல் சீவிட்டு கொஞ்சம் பெருசா நறுக்கிக்கோங்க.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி தோலுரித்து வைத்த சின்னவெங்காயத்தை சேர்த்து வதக்கவும், பொன்னிறமானதும், மூன்று தக்காளிகளை இரண்டிரண்டாக நறுக்கி சேர்த்து வதக்கவும், தக்காளி சிறிது வதங்கியதும், அதில் மல்லித்தூள், மிளகாய்த்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும், (அடுப்பை மிதமான தீயில் வைத்திருக்கவும்). பச்சை வாசனை போனவுடன், அடுப்படி அணைத்து வதக்கிய பொருட்களை ஆற வைக்கவும்.,

பின்பு வேறு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், கடுகு சேர்க்கவும், பொரிந்ததும், நறுக்கி வைத்த வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வைத்தவும், பொன்னிறமானதும், சுரைக்காய் மற்றும் மீதமுள்ள தக்காளிகளை நறுக்கி சேர்த்து, இதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி விடவும்,. (அடுப்பை மிதமான தீயில் வைத்திருக்கவும்)

இரண்டு நிமிடம் கழித்து ஆறவைத்த பொருட்களை மிக்ஸியில் கொஞ்சமா தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து இதனுடன் சேர்த்து கிளறவும், தேவையான அளவு உப்பும் சேர்த்து கிளறிவிடவும்,. உங்கள் தேவைக்கேற்றது போல தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். அடுப்பை மிதமான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும். (இடையில் ஒருமுறை கிளறிவிடவும், உப்பு காரம் தேவைப்பட்டால் இந்த சமயத்தில் சேர்த்துக்கொள்ளலாம்)

10 நிமிடம் எடுத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான சுரைக்காய் காரக்குழம்பு தயார்...

5.jpg

1.jpg
 




shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
867
Reaction score
2,644
ரொம்ப ரொம்ப சுவையான சூப்பரான ரெசப்பி. எனக்கு நாக்குக்கு நண்பேன்டா வயித்துக்கு வில்லன்டா(அல்சர்) ரெசப்பி. நான் உறைப்புக் குறைவா செய்து பார்க்கின்றேன். நான் செய்ய வேண்டிய ரெசப்பியின் எண்ணிக்கை கூடுதே தே தே. நல்ல அழகா செய்முறை விளக்கம் தருவீர்கள் ப்ரியா சூப்பர். அதெல்லாம் சரி இப்படி அசத்தலா சமைக்கிற உங்களுக்கு தங்க, வைர வளையல்கள் பரிசாக் கிடைச்சிருக்கா?
1647278231205.png1647278272511.png1647278340803.png1647278565708.png
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
ரொம்ப ரொம்ப சுவையான சூப்பரான ரெசப்பி. எனக்கு நாக்குக்கு நண்பேன்டா வயித்துக்கு வில்லன்டா(அல்சர்) ரெசப்பி. நான் உறைப்புக் குறைவா செய்து பார்க்கின்றேன். நான் செய்ய வேண்டிய ரெசப்பியின் எண்ணிக்கை கூடுதே தே தே. நல்ல அழகா செய்முறை விளக்கம் தருவீர்கள் ப்ரியா சூப்பர். அதெல்லாம் சரி இப்படி அசத்தலா சமைக்கிற உங்களுக்கு தங்க, வைர வளையல்கள் பரிசாக் கிடைச்சிருக்கா?
View attachment 35303View attachment 35304View attachment 35305View attachment 35306
Nandri shiyama ma. Ungaluku kaaram kuraivaaga serthukonga...

Unga thangachi purushan athavathu endra purushanoda anbum kadhalum தங்க வைர வளையல்களை Vida perusilla. (Anthalavuku vasathi illa. Neengal ketta nalla neram koodiya veraivil vangiduvom).

Aana en nanban athavathu unga thombi @KalaiVishwa Avanoda தோழியாகிய Enakku இரண்டு செட் தங்க வளையல்களும், நான்கு செட் வைர வளையல்களும், மூன்று ஜோடி வைர நெக்லஸ் um vangi tharenu sonnan. Innaiku than shop ku poitu photo kamichan ithu ok va nu. Nanum sari nanban aasaipattu kekkurane nu ok solliten.😍😍😍😍😍😍
 




shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
867
Reaction score
2,644
இப்படி ஒரு நண்பன் கிடைக்க நீங்க கொடுத்து வைச்சிருக்கணும். தம்பி அப்படியே எனக்கும் இரண்டொன்ட அனுப்பி விடுங்கோ. நண்பியைக் கண்டதும் அக்காவ டீலில் விடக்கூடாது.:p:p:p:D:D:D:D;);););):rolleyes::rolleyes::rolleyes:
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
இப்படி ஒரு நண்பன் கிடைக்க நீங்க கொடுத்து வைச்சிருக்கணும். தம்பி அப்படியே எனக்கும் இரண்டொன்ட அனுப்பி விடுங்கோ. நண்பியைக் கண்டதும் அக்காவ டீலில் விடக்கூடாது.:p:p:p:D:D:D:D;);););):rolleyes::rolleyes::rolleyes:
Ungaluku venum na ore oru மூக்குத்தி vangi thara sollava shiyama ma🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️


Nee ennada nanba solra @KalaiVishwa
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top