• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode செங்காந்தள் மலர்கள் - 03

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
செங்காந்தள் மலர்கள்

இதழ் - 3

இளஞ்சிவப்பு டாப்ஸும் சாமபல் நிற லெக்கின்ஸும் அணிந்து, சிகையை பாதி அடக்கி, பாதி விரித்து விட்டபடி தன் அலங்காரத்தை முடித்தாள் கயல்.

மல்லி வீட்டில் இருப்பதால் சீக்கிரமே காலை உணவை தயாரித்திருந்தார் ரத்னா. கயலின் அன்றாட வேலையான பாத்திரம் கழுவுதல் இன்று மல்லி வசம் சென்றிருந்தாலும் சோர்வாக கிளம்பி கொண்டிருந்தாள் கயல். மனம் படபடப்பால் ஒரு புறம் முரண்ட, உடலோ மாதாந்திர வலியால் சக்கையாய் பிழிந்தது போல படாய்படுத்தியது.

மாதந்தோறும் வரும் மாதவிடாய் வந்தாலும் கஷ்டம் வரவில்லை என்றாலும் கஷ்டம். பெண்ணின் பலமும் அது தான். பலகீனமும் அது தான். தாங்க முடியாத வலியை தாங்கி தான் ஆக வேண்டும். பிரசவத்தை தாங்குவதற்கான ஒத்திகையோ இது? பெண்களின் பாதி வாழ்வு வலியுடனே செல்கிறது என்றால் அது மிகையாகாது. காது குத்துவதில் தொடங்கி மாதவிடாய் வலி, கர்ப்ப காலம், பிரசவம், தாய்பால் சுரக்கும் காலம், கர்ப்ப தடை சாதனங்களால் ஏற்படும் வலி, குடும்ப கட்டுப்பாடு செய்வதால் உண்டாகும் வலி இறுதி கால மாதவிடாய் பருவம் (மெனோபாஸ்) வரை பெண்கள் அனுபவிக்கும் வலிகள் ஏராளம். இது போக வேறு நோய்களால் ஏற்படும் வலி, வீட்டு வேலைகள், தொழில், பணி, பொறுப்பு, மன உளைச்சல் அதெல்லாம் தனிக்கதை. அத்தகைய பெண்களை போற்றவில்லை என்றாலும் தூற்றாமல் இருக்கலாம்.

வனஸ்பதி மணக்கும் வெண்பொங்கலும், சாம்பாரும் தட்டில் வைத்து கயலிடம் நீட்டினார் ரத்னா. ஆனால் அதை உண்ணும் நிலையில் கயல் தான் இல்லை.

மனமும் உடலும் படுத்தும்பாட்டில் பசித்தாலும்“ ம்மா…. எனக்கு வேணாமா…” என உணவை புறக்கணித்தாள் பெண்.

“ ஏன் கயல்?”

“ எனக்கு சாப்பிடவே பிடிக்கல”

“ காலையில எழுந்து அரக்க பறக்க ஆக்கி வைச்சிருக்கேன் சாப்பிட பிடிக்கல னு சொன்னா எப்படி கயல்? ஒரு வாரமா நீ சரியே இல்ல கயல்” எனவும் திருதிருவென முழித்தாள் கயல்.

“ கயல்….பஸுக்கு ஓடவும், பஸ்ல நெருக்கி பிடிச்சு நிற்கவும் தெம்பு வேணாமா? நம்மள மாதிரி ஆளுங்களுக்கு சத்து ரொம்ப முக்கியம். நாமல்லாம் உழைச்சி தான் முன்னுக்கு வரணும். ஒரு நாள் உடம்புக்கு முடியாம படுத்தாலும் பொழப்பு நாறிடும். எவ்ளோ முடியுதோ சாப்பிட்டு போடா.” என்றார் பனிரெண்டு வகுப்பே படித்திருந்தாலும் வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிந்து வைத்திருக்கும் மல்லி.

மல்லி கூறுவது ஒரு வாரத்துக்கு முந்தியிருந்த கயலுக்கு வேண்டுமானால் பொருந்தும். இப்போது இருப்பதோ எம்.எல்.ஏ வீட்டு எதிர்கால மருமகள் அவளுக்கு இந்த அறிவுரைகள் எதற்கு? இருந்தாலும் மல்லியின் சொல்லுக்கிணங்கி சாப்பிட தொடங்கினாள் கயல்.

“ இந்த ஓட்டமும், அலைச்சலும் நம்மளோட போகட்டும் மல்லி. நம்ம புள்ளைங்கலாவது நல்ல வேலையில சேர்ந்து கை நிறைய சம்பரிக்கணும். பெரிய வீட்ல வாக்கப்பட்டு வசதியா வாழணும்” தன் நெடு நாள் கனவினை கூறினார் ரத்னா.

“ அதெல்லாம் அருமையா வாழுவாங்க ரத்னா..” என்றார் மல்லி. மலரிடம் பேசி அவளது நலத்தினை அறிந்ததால் இயல்பாகவே இருந்தார்.

தாய் ஆசைப்படும் படி தான் தன் வாழ்க்கை அமைய போவதை எண்ணி வானில் சிறகில்லாமல் பறந்தாள் கயல். தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்கும் செழியனை கண்டால் தாய் மனம் பூரிக்காதோ என நினைத்தவள் மானசீகமாய் செழியனை அணைத்து முத்தமிட்டாள். அதுவரை நெஞ்சின் ஓரத்தில் இருந்த குறுகுறுப்பு குறைய உற்சாகம் பற்றி கொண்டது அவளிடம்.

காலை உணவுக்காக சிவா வர, எங்கே அவனோடு செல்ல நேரிடுமோ என பயந்து பாதி சாப்பாட்டிலேயே எழுந்துவிட்டாள் கயல்.

“ கொஞ்சம் வெயிட் பண்ணு கயல். நா சாப்பிட்டு வந்து டிராப் பண்றேன்” என்றான் சிவா.

“ இல்ல மா….” மாமாவென அழைக்க வந்தவள் செழியனின் அன்பு கட்டளைப்படி பாதியிலேயே அதை முழுங்கினாள்.

“ இல்ல டைமாச்சு நான் கிளம்பறேன்” புத்தக பையை தோளில் மாட்டியவள் எதிலிருந்தோ தப்பிப்பவள் போல ஓடியேவிட்டாள்.

இருதெருக்கள் விறுவிறுவென நடந்தவள் அங்கிருந்த சிறு பூங்காவினுள் நுழைந்து, கையோடு கொண்டு வந்த செழியன் பரிசளித்த காதணிகளை அணிந்து கொண்டவள் அப்படியே சிறு ஒப்பனையை‌ பூசி கொண்டு விரைந்தாள். பூங்காவிற்குள் நுழையும் போதே தான் வந்துவிட்டதாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான் செழியன்.


வேக வேகமாக நடந்து வந்து காரில் ஏறி அமர்ந்ததும் அத்தனை நேரம் பொறுத்துக் கொண்டிருந்த வலி பெருகி உடலெங்கும் பரவியது. கீழ் உதட்டை கடித்து சமாளித்தவள் திரும்பி செழியனை பார்த்தாள்.

அவனோ உர்ரென என முகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அவனது சிறுபிள்ளை கோபத்தை பார்த்து ரசித்தவள்,” அதான் வந்துட்டானே… இன்னும் கோபம் போகலையா?”என்றாள்.

அவள் பேசியதும் கோபமாக காரை இயககியவன்,” அதான் வர வேணா னு சொல்லிட்டேனே அப்புறம் எதுக்கு வந்தே?” என்றான் கூர் குரலில்.

“ நீங்க கூட தான் வர மாட்டேன் னு சொன்னீங்க… நீங்க வரலயா?” பதிலுக்கு சீண்டினாள்.

“ நான் ஒன்னும் உன்னை மாதிரி பிகு பண்றவனில்ல”

அவன் வார்த்தைகள் வலித்தாலும் அடிவயிற்றின் வலியால் அமைதியாக இருந்தாள் கயல். அவளை திரும்பி பார்த்த செழியன் அவளது ஒப்பனையையும் காதிலாடிய காதணியையும் கண்டு ரசித்தவன், அதையும் தாண்டி தெரிந்த சோர்வில் “என்னாச்சு…. ரொம்ப டல்லா தெரியுற?” என்றான்.

“ அதெல்லாம் ஒன்னுமில்ல செழியன்”என சீட்டில் சாய்ந்து கண்களை மூடவும், வண்டியை ஓரம் கட்டி விட்டு, அவளது கரத்தை பற்றி,” இல்லயே கயல்…. உன் முகம் என்னவோ மாதிரி இருக்கு. நாம அவுடிங் போறது பிடிக்கலையா? என்றான் பதட்டமாக.

“ அச்சோ அப்படி எல்லாம் இல்லை செழியன் உடம்பு கொஞ்சம் முடியல அவ்வளவுதான்”

“ உடம்புக்கு முடியலன்னா என்ன செய்யுது கயலினி?”

சொல்லாமல் இவன் விடமாட்டான் என உணர்ந்தவள்,” பீரியட்ஸ்” என்றாள் சிறு குரலில்.

“ ஹோ….” என்றபடி யோசனையில் முழ்கியவன் ,” அப்போ இன்னைக்கு ப்ளனை கேன்சல் பண்ணிடலாம் கயலினி” என்றான் செழியன்.

“ ச்சே…. ச்சே…. வேண்டாம் செழியன். நாம முதல் முறையா வெளியே போறோம். அத கேன்சல் பண்ண வேண்டாம். நா… நா… அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்.”

“ ம்…. ஓ.கே” என்றபடி காரை எடுத்தவன் முப்பது நிமிட பயணத்திற்கு பின் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தினான்.

அதுவரை அயர்வில் கண்மூடி இருந்தவளின் விழி திறந்து பின் விரிந்தது.” இது யாரு வீடு?” என்றாள் கயல்.

“ இது எங்க கெஸ்ட் ஹவுஸ் கயலினி” என்றவன் கார் சாவியுடனே கோர்த்திருந்த மற்றொரு சாவி கொண்டு கேட்டை திறந்து விட்டு உள்ளே சென்றான். வெளியே செல்லலாம் என கூறி விட்டு இங்கு கூட்டி வந்திருந்திருக்கும் செழியனை பார்த்து மலங்க மலங்க விழித்தாள். அடிவயிற்றில் வலியோடு இப்போது இனம் புரியாத பயமும் உருண்டது.

போர்டிக்கோவில் காரை நிறுத்தி விட்டு செழியன் வீட்டை திறக்க, கயலோ அசையாது காரிலேயே அமர்ந்திருந்தாள். இந்த ஒரு வாரமும் அவர்களது காதல் ஸ்பாட் காராக இருந்ததில் அவளுக்கு அதிலிருப்பதே போதுமென்றிந்தது.

“ இறங்கி வர்ற ஐடியா இல்லையா கயலினி?” அவள் முன் சொடுக்கிட்டு செழியன் கேட்க

“ வெளியே போகலாம் னு தானே சொன்னீங்க? ஆனா ஏன் இங்க வந்திருக்கோம்?” தயங்கி தயங்கி பயத்தை கூறினாள்.

“ மறுபடியும் சந்தேகமா?”

அவன் இலகுவாக கேட்டதிலேயே பதறியவள்,” சந்தேகம் எல்லாம் ஒன்னும் இல்ல செழியன் நாம வெளியே போகலாம் னு தானே பேசிக்கிட்டோம்” என்றாள்.

“கரெக்ட் தான். ஆனா இன்னைக்கு என் பொண்டாட்டிக்கு உடம்பு முடியல இல்லையா அதனால தான் இங்க வந்திருக்கோம்” என்றவன் கார் கதவை திறந்து விட, அவனது அனுசரனையில் சரண்ணடைந்தவள் மென்னகையோடு இறங்கினாள்.

இருவரும் வீட்டை திறந்து உள்ளே போக வீட்டின் அழகில் பிரமித்து போனாள் கயல்.

“ வீடு எப்படி இருக்கு கயலினி?”

“ வீடா? மினி பங்களா னு சொல்லுங்க செழியன். சூப்பராக இருக்கு”

“ ஹே…. இதுக்கே இப்படி வாயை பிளந்தா எப்படி? இது ஜஸ்ட் க்ளைன்ட்ஸுக்காக கட்டிய சின்ன கெஸ்ட் ஹவுஸ் தான் கயலினி. எங்க கெஸ்ட் ஹவுஸ் நீலாங்கரையில இருக்கு. அது இன்னும் பெருசா இருக்கும்” சோபாவில் அமர்ந்து அவளையும் அருகே அமர்த்திக் கொண்டபடி கூறினான் செழியன்.

“ இது சின்னதா செழியன்? இதுவே பிரம்மாண்டமா இருக்கு.”

“ ம்.. எனக்கு அந்த கெஸ்ட் ஹவுஸ் தான் பிடிக்கும். ஆனா தூரம். அதான் இங்கேயே கூட்டிட்டு வந்தேன். ஒரு நாள் அங்கேயும் கூட்டிட்டு போறேன்”

“ ஓ.கே. ஆனா எனக்கு ஒரு சந்தேகம் செழியன். நீங்க இருக்குற வீடே பயங்கர பெருசு தான். வீடியோ கால்ல பேசும் போது பார்த்திருக்கேன். அப்புறம் எதுக்கு கெஸ்ட் ஹவுஸ் வேற?” சந்தேகம் கேட்டாள்.

“ அங்க எப்பவும் கட்சிக்காரங்க வந்திட்டும் போயிட்டும் இருப்பாங்க. அதான் கெஸ்ட் ஹவுஸ் போய் ரிலாக்ஸாக இருப்போம்” என விளக்கம் சொன்னவன் ஃப்ரிட்ஜிலிருந்து குளிர்பானத்தை எடுத்து கொடுத்தான்.

அவள் வயிற்றுவலிக்கு அது மிகுந்த ஆசுவாசத்தை கொடுக்க, அப்படியே மெத்து மெத்தென்ற சோபாவில் சரிந்தாள்.

“ ரெஸ்ட் எடுக்கனும் னா மேல போகலாம் கயலினி” என்றவன் அவளது பதிலை எதிர்ப்பாராமல் அப்படியே அவளை அலேக்காக தூக்கி கொண்டு போனான்.

அவனது செயலில் வெகுவாக தடுமாறியவள் அவனது கழுத்தை கரம் கொண்டு மாலையாக போட்டுக்கொண்டாள். இருவரின் முகமும் காதலில் கனிந்திருந்தது. மேல் அறையில் உள்ள படுக்கையில் அவளை படுக்க வைத்தவன் அவளின் அருகே சரிந்தான்.

ஏசியை போட்டு விட்டு,“ நீ ரெஸ்ட் எடு…” என்று விட்டு அலைபேசியில் ஏதோ ஒரு ஆங்கில படத்தை பார்க்க துவங்கியவனை காதலாக பார்த்தாள் கயல். இத்தனை நெருக்கத்திலும் கண்ணியம் காக்கும் ஆண்மகனை யாருக்கு தான் பிடிக்காது? அவனது தோளை பற்றி சாய்ந்து கொண்டவளின் விழிகள் காரணமின்றி தூறல் போட்டது.

புஜத்தில் ஈரம் உணர்ந்தவன்,” ஹேய்…. என்னாச்சு கயலினி? பெயின் ஓவரா இருக்கா? மெடிசன்ஸ் ஏதும் வேணுமாடா?” என பதற, இல்லை என்பது போல தலையசைத்தவள் இன்னும் இறுக்கி கொண்டாள்.

அவளை வாஞ்சையாக அணைத்தவன் ,” என்னடி செய்யுது?” என்றான் தன்மையாக.

“ என்…. என்னை இப்படி எல்லாம் யாருமே பார்க்கிட்டது இல்லை செழியன். அம்மா வேலைக்கு போயிடுவாங்க அதனால பீரியட்ஸ் டைம்ல கூட ரெஸ்ட் கிடையாது. இன்னைக்கு கூட‌ மல்லிமா வலிய பொறுத்து கிட்டு தான் ஆகணும் னு சொல்றாங்க தெரியுமா?” சிறுபிள்ளை போல் விசும்பினாள்.

“ இவ்ளோ தான் விஷயமா? இதெல்லாம் நீ எனக்கு பொண்டாட்டி ஆகுற வரைக்கும் தான். அதுக்கப்புறம் நீ நினைச்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம், பிடிச்ச நேரம் ஷாப்பிங் போகலாம், என்ன தோணுதோ செய்யலாம். என் பொண்டாட்டிய யாரு கேள்வி கேட்க போறா?” எனவும் அவளுள் அப்படி ஒரு ஆனந்தம்.

அவன் கூறியதெல்லாம் மனதில் காட்சியாய் விரிய தாவி அவனை கட்டிக்கொண்டாள்.

“ ஆனா கயலினி நான் தான் பொண்டாட்டி பொண்டாட்டி னு சொல்றேன். ஆனா நீ ஒருமுறை கூட புருஷன் னு சொன்னதில்லயே…. “

அவன் சுணக்கத்தை சகியாதவள்,” புருஷன் னு தான் சொல்லணுமா மாமா ….”அவள் குழைந்து கேட்க,

அவளின் மாமா என்ற விளிப்பில் அவள் இடை வளைத்தவன்,” நீ மாமா னு கூப்பிட்டா செம கிக்கா இருக்கு கயலினி….. இந்த மாமனுக்கு என்ன வச்சிருக்கே?” என்றான் சரசமாய்

“ இப்போதைக்கு இது தான் வைச்சிருக்கேன்” என்றவள் அவனது கன்னத்தில் அழுந்த முத்தம் வைக்க,அதன் பின் செழியனின் சந்தோஷத்தை சொல்லவா வேண்டும்? கொண்டாடி தீர்த்துவிட்டான். அன்று முழுதும் செழியனின் அனுசரணையில் இளவரசியாய் உணர்ந்தவளின் வலி எல்லாம் பஞ்சாய் பறந்திருந்தது.

இருவரும் இணைந்து ஆங்கில படத்தை பார்த்து விட்டு, மதியம் சாப்பாடு வரவழைத்து சாப்பிட்டு விட்டு, சுகமானதொரு தூக்கத்தையும் போட்டு விட்டு மாலை நேரம் நெருங்கவும் இருவரும் கிளம்ப ஆயத்தமாக, கயலுக்கு கிளம்ப மனதேயில்லை. செழியனின் நெருக்கமும், வீட்டின் சொகுசும் அவளை கிறங்கடித்திருந்தது.

செழியன் குளியலறையில் இருந்த சமயம் அவனது அலைபேசி ஒலிக்க, மெத்தை மேலிருந்த அலைபேசியை எடுத்து பார்த்தவள் குழம்பினாள். அழைப்பொலி அதிலிருந்து வரவில்லை. தன்னுடைய அலைபேசியும் கீழே பையிலேயே இருக்க, எங்கிருந்து ஒலி வருகிறது என தெரியாமல் பயந்து போனாள். சுற்றும் முற்றும் பார்த்தவள் மேஜை மீது ஒரு அலைபேசியை அப்போது தான் கவனித்தாள். அதிலிருந்து தான் அழைப்பொலி கேட்டது. தங்க நிற ப்ரேமிட்ட அந்த அலைபேசி பார்க்கும் போதே தன் செழுமையை பறைசாற்றியது. பழசந்தையில் கடித்து வைத்த ஆப்பிளுக்கு மவுசு இல்லாமல் இருக்கலாம் ஆனால் அலைபேசி சந்தையில் இந்த கடித்த ஆப்பிளுக்கு தான் சிகப்பு கம்பள வரவேற்பு.

விழிகளின் கவனம் திரையில் இருக்க, விரல்களின் கவனமோ அதன் வழவழப்பில் குவிந்தது. அதற்குள் செழியன் விரைந்து வந்துவிட்டான். அவளது கரத்திலிருந்த அலைபேசியை வாங்கியவன் வெளியே சென்று பேசி விட்டு வந்தான்.

அவன் வந்ததும்,” நீங்க பணக்காரனா இருந்தாலும் இப்படி அத நொடிக்கு ஒரு முறை நிரூப்பிக்க வேண்டாம் மாமா” என சிரித்தாள் கயல்.

“ அப்படி என்ன செய்தேன்?”

“ நாங்களாம் தேவைப்பட்டா ஒரு போன்ல இரண்டு சிம் போடுவோம் நீங்க போனே ரெண்டு வைச்சிருக்கீங்கல அது தான் சொன்னேன்” என்றாள்.

“ ஓ…. அதுவா? அப்பா அரசியல்ல இருக்குறதால எதிரிங்க அதிகம் கயலினி. நாங்க எவ்வளவுக்கு எவ்ளோ வசதியா வாழுறோமோ அவ்வளவுக்கு அவ்ளோ எங்களுக்கு ஆபத்தும் இருக்கு. அப்பாவோட போன்ல சில விவரங்கள வைக்க முடியாது. லீக் ஆக நிறைய சான்ஸ் இருக்கு. அதனால தான் தனியா ஒரு போன். முக்கியமா விவரங்கள், விஷயங்களுக்காக. “ செழியன் சொல்ல சொல்ல வியப்பாக கேட்டுக் கொண்டிருந்தாள் கயல். மேல்தட்டு வர்க்கத்தினரின் வாழ்க்கை முறை அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“ ஹேய்…. என்ன ப்ரீஸ் ஆகிட்ட”என அவளது தோளை உலுக்க

“ இல்ல மாமா…..” என்றவளின் இதழை முற்றுகையிட்டவன்,” நீ மாமா னு கூப்பிட்டா செம மூட்டாகுதுடி” என கிசுகிசுத்தான்.

அதில் அவள் முகம் செம்மை பூச,” அப்போ நா இனிமே அப்படி கூப்பிடலப்பா” என்றாள்.

“ ம்ஹும்…. இனி அப்படி தான் கூப்பிட்டனும்” என்றவன் அவளை அப்படியே தூக்கிக் கொண்டு படியிறங்கினான்.

“ இப்போ வலியில்ல செழியன். நானே வருகிறேனே…” எனவும் அவன் முறைக்க

“ ஓ.கே…. ஓ.கே…. இப்போ வலியில்ல மாமா. நானே வருகிறேனே” என திருத்தினாள்.

“ என் பொண்டாட்டிய நான் தான் தாங்குவேன்” என்றவன் அவளை பூப்போல் காரில் அமர வைத்தான். அவனோடு இருந்த இந்த ஒற்றை நாளில் ஓராயிரம் ஆண்டுகள் பிணைந்து விட்ட நெகிழ்ச்சி அவளிடம். தன்னிடம் அத்துமீறாத அவனது ஆண்மைக்கு ரசிகையானவள் அவனை உயிருக்குள் ஒளித்து வைத்தாள்.

“ உன் கற்புக்கு சேதாரமில்லாம கொண்டு வந்து விட்டுட்டேன்டி என் பொண்டாட்டி” இறங்குகையில் அவன் கூறி சிரிக்க, அதில் கன்னியவளின் பெண்மை மொத்தமாய் குடைசாய்ந்தது.

மலரும்…..

தங்கள் கருத்துக்களை எதிர்நோக்கும்
- பர்வீன்.மை
 




vijirsn1965

இணை அமைச்சர்
Joined
Dec 10, 2018
Messages
849
Reaction score
612
Location
chennai
Suththama en manathuku sariya padalai mam pendaatti entru solliye Kayalinin yai kavizhththu vittaan romba nallavan mathiri nadikkiraan Kayal nantraaha avanidam maattiyathu pola thoontrukirathu paarkalaam superb mam arumai viji
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top