செல்வ சங்கரியின் 'என் சுவாசக் காற்றே' 🌷

அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
நிறைவான நேர்த்தியான படைப்பிற்கு முதலில் என் வாழ்த்துகள் செல்வா.👏👏👏

மன்னிக்க வேண்டும். நான் படிக்கும் உங்கள் முதல் கதை இதுதான். முந்தைய ஆக்கங்களைத் தவற விட்டு விட்டேன்.

கதை மிகவும் இயல்பாக யதார்த்தமாக இருந்தது. எங்கேயும் மனதை ரணப்படுத்தாத காட்சி அமைப்புகள் பிரமாதம்.
கடலூரின் தகவல்கள் கதைக்கு ப்ளஸ்.

முரட்டுத்தனமான ஆஞ்சநேயர் பக்தன் ஹீரோ. அதற்கு எதிர்மாறாய் அமைதியாய், அன்பிற்கு ஏங்குபவளாக ஹீரோயின். இவர்களுக்குள் ஒரு அழகான காதல்.

சமூக சிந்தனைகளுக்கு நீங்கள் விதைத்திருக்கும் விதைகளையும் நான் பாராட்டுகிறேன். அத்தனை தகவல்களும் கொஞ்சம் கதிகலங்க வைத்தது உண்மை.

முகம் சுளிக்க வைக்காத காதல் காட்சிகளுக்கு ஒரு சபாஷ். இந்த முரட்டு ஹீரோ இன்னும் கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணினால் அட்டகாசமாக இருக்குமே என்று எண்ண வைக்கும் காட்சி அமைப்புகள். நெருங்கத் துடிக்கும் ஹீரோ... விலகிப் போகும் ஹீரோயின். இதற்கு நடுவில் அக்காவின் கண்டிப்பு.😄😄😄😄
சில விஷயங்கள் இலை மறைவு காய் மறைவாக இருந்தால் தான் அழகு என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுகிறேன்.👏👏👏👏

விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில இடங்களைத் தவிர்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. செல்வா என்னைக் குறையாக நினைக்கக் கூடாது. உங்கள் படைப்புகள் மேலும் மெருகேற வேண்டும் என்ற அக்கறையில் சொல்கிறேன்.
உதாரணமாக... சவுக்குத் தோப்புக் காட்சி. அந்த சவுக்குத் தோப்பை வேறு இடமாக மாற்றி இருக்கலாம் என்று தோன்றியது.
(என்னுடைய அபிப்பிராயம். தவறாக எடுக்க வேண்டாம்.)

மிகவும் அருமையான ஒரு காதல் கலந்த குடும்பக் கதையைப் படித்த திருப்தி என் மனதில் நிற்கிறது.

பாத்திரப் படைப்புகள் அருமை.
இன்றைய சமுதாயத்தில் நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் என்ற பாஸிட்டிவ் எண்ணத்தைக் கொடுத்ததுக்கு நன்றி.

படிக்காத தோழமைகள் தாராளமாகப் படிக்கலாம்.
பிழைகளில்லாத இயல்பான எழுத்து நடை கதையை இன்னும் மெருகேற்றுகிறது. வாழ்த்துகள் செல்வா.💐💐💐
அன்புடன் அழகி.🌷
 

Selva sankari

Major
SM Exclusive Author
#4
மிகவும் நன்றி அழகி டியர். இது என்னுடைய முதல் நெடும் நாவல். குறு நாவல் போட்டிக்காக முதலில் ஒரு சிறிய நாவல் எழுதியிருக்கிறேன்.

உங்கள் அனைவரது ஆதரவும் ஊக்கமும் இல்லாமல் இந்த நாவலை என்னால் எழுதியிருக்க முடியாது.

மீண்டும் ஒரு முறை நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.

இந்த நாவலில் வரும் அனைத்து சம்பவங்களும் ( சிற் சில நாவலுக்காக சேர்க்கப் பட்ட கற்பனைகள். எ. கா.. ராகவன், வாசுகி, கதிர்... )
உண்மையில் நடந்தவையே...
என்னைச் சுற்றி நான் பார்த்தவைகளும் நான் செய்தித் தாள்களில் படித்தவைகளையுமே சம்பவங்களாக மாற்றி எழுதியிருக்கிறேன்.

கதையில் வரும் கல்லூரி உண்மையில் கடலூரில் இருக்கிறது பா... கடலோரத்தில் சவுக்குத் தோப்புகள் சூழ்ந்த இடத்தில் உண்மையில் இருப்பதைத் தான் எழுதியிருக்கிறேன்.

காட்சிகள் வேண்டுமானால் சிற்சில கற்பனைகளாக இருக்கும். பெரும்பாலான இடங்கள்... நான் குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் கடலூரில் இருப்பவையே...

நான் கடலூர் காரியாக்கும்... 😂😂😂
நான் பிறந்து வளர்ந்தது, திருமணம் புரிந்து இருப்பது அனைத்தும் கடலூர் மாவட்டம்.

மிகவும் நன்றி அழகி... உங்களுடைய கருத்துக்களையும் நான் என்றும் மனதில் கொள்கிறேன். :):):)
 

Suvitha

Brigadier
SM Team
#8
ஏற்கனவே என்னை படிக்க சொன்ன ஸீனா. நேரமின்மையால் முடியவில்லை. நிறைய கதைகள் விடுபட்டு போச்சு. சீக்கிரம் இதையும் படிக்க ஆரம்பிக்க வேண்டும்.
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top