• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சேரன் தலைவி-முன்னுரை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
ஹாய் நட்பூஸ்

நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதத் தொடங்கியதில் பெருமகிழ்ச்சிக் கொள்கிறேன்.எழுதத் தொடங்கியிருந்த இரு கதைகளைத்(தேடாமல் வந்த பூந்தென்றல் நீயோ,லவ் கெமிஸ்ட்ரி) தற்சமயம் தொடர இயலவில்லை.அவைகள் தளத்தில் சிலநாட்கள் கழித்து நீங்கள் படிக்கலாம்.

இப்போது என் நீண்ட நாள் கனவான சரித்திர கதையோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.கதையின் பெயர் சேரன் தலைவி.

சங்க காலத்தில் சோழர் பாண்டியரைப் போலவே சேரரும் வீரமும் கொடையும் தமிழும் கொண்டு சிறப்பாட்சிப் புரிந்திருக்கின்றனர்.

அவர்களில் புகழ்பெற்ற இளையவரம்பனின் மகனான களங்காய்க்கண்ணி நார்முடி சேரலே(நமக்கு இளங்கோ) இக்கதையின் கதாநாயகன்.நிகரில்லா ஆண்மை படைத்தவன்.எளியருக்கு இரங்குபுவன் பகைவர்க்கு காலனாவான்.குமரி முதல் இமயம் வரை இளவரசிகள் இவனுக்கு மாலையிட காத்திருக்க மன்னவனின் மனமோ நிகரில்லா பேரழகுப் பெட்டகமாம் ஏந்திழையிடம்.

நம் கதையின் கதாநாயகி வண்டார்குழலி.பெண்மையின் மென்மையோடு வீரமும் தன்னம்பிக்கையும் மிக்கவள்.தாய்நாட்டுக்காக உயிரையும் கொடுப்பதற்கு சித்தமாக இருப்பவள்.

ஒவ்வொரு மனிதனின் வெற்றியின் பின் ஒரு பெண்ணின் காதல் இருக்கும் என்பதற்கிணங்க நம் இளவரசரின் வெற்றிக்கு குழலியின் அர்ப்பணிப்பு என்ன என்பதே இந்த கதை.

சங்க கால தமிழிரின் அறம் வீரம் காதல் வாழ்க்கை முறைகளை விரிவாக கூற முயற்சிக்கிறேன்.உங்களின் அன்பான கருத்துக்கள் தான் என் எழுத்து நில்லாமல் தொடர ஊக்குவிக்கும்... உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும்

உங்கள்
பவ்யா
 




Last edited:

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,398
Reaction score
22,046
Location
Tamil Nadu
?வாழ்த்துக்கள்...

?காத்திருக்கேன்.. வண்டார்குழலியை வாசிக்க?சேரனையும்..
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
நல்ல முயற்சி. வாழ்த்துகள் பவ்யா.????
இந்தப் பயணத்தில் உங்களோடு இணைந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
 




Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
?வாழ்த்துக்கள்...

?காத்திருக்கேன்.. வண்டார்குழலியை வாசிக்க?சேரனையும்..
நன்றி சுகா சிஸ்???
 




Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
நல்ல முயற்சி. வாழ்த்துகள் பவ்யா.????
இந்தப் பயணத்தில் உங்களோடு இணைந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
மிக்க நன்றி அழகி சிஸ்???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top