• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சைரா நரசிம்ம ரெட்டி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
1570299038127.png


ஹாய் நட்பூஸ்

இன்றைக்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்து இருப்பது நான் பார்த்து வியந்த படம் ஒன்றை பற்றி.

தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து தமிழில் மொழிமாற்றம் செய்ய பட்ட "சைரா நரசிம்ம ரெட்டி" என்ற படம்.

உண்மை சரித்திர நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட படம்.கற்பனை கலப்பும் உண்டு. ஆந்திராவின் ராயலசீமா பகுதியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது.

1857 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நடந்த பெரும் கலகத்தில் Mangal Pandey,Bahadur Shah II,Nana Sahib,Rani Laxmibai,Tantia Tope போன்றோர் பங்கேற்றதாக படித்து இருப்போம்.இவர்கள் பிரிட்டிஷ் எதிர்ப்பதற்கு 10 வருடங்கள் முன்பே REVOLT வித்திட்ட மன்னர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி


குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.

படம் யுத்தம் பற்றியது என்பதால்,தலைகள் பந்தாடபடுகிறது ,ரத்த ஆறும் ஓடுகிறது.இதை மனதில் வைத்து கொண்டு உங்கள் குழந்தைகளை அழைத்து செல்லுங்கள்.

1846களில் 5000 விவசாயிகள் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக எழுந்தனர்.கிட்டத்தட்ட 1000 கிளர்ச்சியாளர்களை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது, அவர்களில் 412 பேர் குற்றச்சாட்டு இன்றி விடுவிக்கப்பட்டனர். மேலும் 273 பேருக்கு பிணை வழங்கப்பட்டது மற்றும் 112 பேர் குற்றவாளிகள். ரெட்டியும் குற்றவாளி, அவரது வழக்கில் மரண தண்டனை கிடைத்தது. பிப்ரவரி 22, 1847 அன்று, கோய்குண்ட்லாவில் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் கூட்டத்திற்கு முன்னால் தூக்கிலிடப்பட்டார்.

சிவாஜி கணேசன் நடித்த "ராஜராஜ சோழன்",MGR நடித்த "காஞ்சி தலைவன்",அனுஷ்கா நடித்த "ருத்ரமா தேவி "அஜய் தேவ்கன் நடித்த "லெஜெண்ட் ஆப் பகத் சிங் ",அக்ஷய் குமார் நடித்த "கேசரி ",கங்கனா ரணாவத் நடித்த "மணிகர்ணிகா -குயின் ஆப் ஜான்சி " போன்ற சரித்திரத்தை உண்மை போராளிகளின் வாழ்வை அடிப்படையாக கொண்ட படங்களின் வரிசையில் இந்த சைரா நரசிம்ம ரெட்டி ஒன்று.

படம் பக்கா மாஸ்.GOOSEBUMB MOMENTS என்று தேகத்தை சிலிர்க்க வைக்கும் இடங்கள் உண்டு.


படம் முடிந்த போது போடப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்படங்கள் அவர்களை அறியவும்,இந்த சுதந்திரம் நாம் அடைய அவர்கள் சிந்திய செங்குருதியும் மனதை கனக்க செய்து விடுகிறது.

முகம் சுழிக்க வைக்கும் எந்த காட்சி அமைப்புகளும் இல்லாமல்,தேவை இல்லாத பாடல்கள் இல்லாமல்,கேசரி படத்திற்கு பிறகு கண்டு ரசித்த படம்.


உங்களுக்கும் பிடிக்கும் என்றும் நினைக்கிறன்.

1570299151787.png



 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top