• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஜனகனின் மகளை...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
அற்புதமாய் விரிந்த சிந்தனை!
*********************************
கவியரசரின் கற்பனை கரைந்தோடிய ஒரு அருமையான பாடல்..
"ரோஜாவின் ராஜா" படத்தில் இடம் பெற்ற பி.சுசீலா அம்மா மிக அற்புதமாய் பாடிய "ஜனகனின் மகளை".. என்ற பாடல்.

இது பெண்களின் கையறு நிலையை கூறும் பாடல்." எடை போட கம்பன் இல்லை, எனக்கந்த திறனும் இல்லை" என்று கண்ணதாசன் தன்னை அவையடக்கத்துடன் மதிப்பிட்டு கொண்டாலும் இந்தப் பாடலின் படிமங்களும் அந்தக் காதல் உள்ளத்தின் கையறு நிலையும், இதுவரை எவரும் கூறாத ஜானகியின் நிலையையும் மிக அற்புதமாக கவியரசர் கூறியிருப்பார்.

இந்த பாடலின் சூழல்..தன் காதலியை தன் நண்பனுக்காக பெண் பார்க்க செல்லும் காதலனிடம் தன் நிலைமை குறித்து, குறிப்பால் உணர்த்திட காதலி பாடும் பாடல்.

தற்குறிப்பேற்றம் என்பது கம்பரின் பல பாடல்களில் காணலாம். இதுவும் ஜானகியின் கதையை கையில் எடுத்துக் கொண்டு கண்ணதாசன் தற்குறிப்பேற்றமாய் எழுதியிருக்கும் பாடல்..

"ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான் ராஜாராமன் நினைத்திருந்தான்"என்று நாயகி தன் நிலையை காதலனுக்கு கூறுவதாய் பல்லவியிலேயே கவிஞர் பிரமாதமாக துவக்கம் கொடுக்கிறார்.

அடுத்தடுத்து வரும் வரிகளில்...
இந்த பாடலைபற்றிக் கூறிக் கொண்டே போகலாம்.
மணிமுத்து மாணிக்க மாடத்தில் இருந்து ஜானகி பார்த்திருந்தாள்
இரு மைவிழி சிவக்க மலரடி கொதிக்க ராமனை தேடி நின்றாள்
நாணம் ஒருபுறம் ஆசை ஒருபுறம் கவலை ஒருபுறம்
அவள் நிலைமை திரிபுரம்...

"திரிபுரம்"என்பது ஒரு தத்துவ விளக்கம். அவளுடைய திரிபுர நிலையை எரிக்கும் வில் ராமனிடம் இருப்பதால் அவள் ராமனை தேடி நின்றாள் என்று கவிஞர் மிக அழகாக கூறியிருப்பார்.

"கொதிக்கின்ற மூச்சு மாலையில் விழுந்து மணியும் கருகியதே
அவள் கூந்தலில் இருந்த மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே" என்ற வரிகளில் பொருள் பதிந்து பாடும்பொழுது நம் மனமும் அவளுடைய மனநிலையை அடைந்தது போல் இருக்கும். இதற்கு சுசீலா அம்மாவின் பங்களிப்பு அபாரமானது!

இதன் பிறகுதான் பாடல் வேறு ஒரு பரிமாணத்தை அடையும்.
"நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை
அவள் மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர் மறைத்தும் மறையவில்லை
முனிவன் முன்புறம் ஸ்ரீராமன் பின்புறம்
சீதை தனியிடம் அவள் சிந்தை அவனிடம்...
வார்த்தைகள் வெகு நேர்த்தியாய் வரிசையிட்டு வந்து விழுவதுதான் கவிஞரின் அற்புதம்!

"மன்னவர் எல்லாம் சுயம்வரம் நாடி மண்டபம் வந்து விட்டார்.
ஒரு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான் ஜானகி கலங்கி விட்டாள்"!

இதுவரையில் ராமனின் கரம் பிடித்த சீதையையே, நாம் கற்பின் கனலாக அறிந்திருக்கிறோம். ஆனால் அவள் மிதிலையில் ஜனகனின் மகளாக இருந்த பொழுது பேதை பருவத்தில் ஒரு சீதை இருந்திருப்பாளே அவளை பற்றி நாம் அறிவோமா? அப்படி ஒரு சீதையை நமக்கு இந்த பாடல் வரிகளில் கவிஞர் காட்டுகிறார். கிளியுடன் காலம் கழிக்கும் அந்த பேதை மனத்தால் ஒருவனை வரித்த பின்பு வேறு ஒருவன் அவன் மன்னனாகவே இருப்பினும், வில்லை எடுத்து அது உடைந்து விட்டால் அவள் காதலுக்கு என்ன அர்த்தம் இருக்கும்? இதன் மூலம் கவிஞர் நமக்கு உணர்த்தும் அற்புத செய்தி என்னவென்றால், கைபிடித்த பின்புதான் ஜானகி தன் கற்புநிலையை உலகிற்கு பறை சாற்றினாள் என்றில்லை. ..அவள் காதலும் வலுவான காதல் அந்த காதலுக்கும் கற்பின் திண்மை இருந்தது. அந்தத் தின்மைதான் ஸ்ரீராமனுக்கு உறுதியான தெம்பை கொடுத்து "சிவ தனுசை" முறிக்கச் செய்தது என்பதாகும்.

கவியரசரின் இந்த வித்யாசமான சிந்தனைக்கு இனிமையான இசை கொடுத்திருப்பது திரு. எம். எஸ். வி. பாடலுக்கு ஜீவனாய், மிக அழகாய் ஏற்ற இறக்கங்களை அனாயசமாக,தன் தேன் குரலால், சுசீலா அம்மா பாடுவது மனதை வருடுவதாய் மிக அருமையாக இருக்கும்!

படித்ததில் பிடித்தது ??
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,011
Location
Tamil Nadu
?????...

555b8f9f1c5d5e5d2e603ee7fc19ec1b.jpg
நான் இப்போதான் இந்த பாடல் கேட்டேன் ஸ்ரீ...


8205b1613a57c94ed2312de46704e5e4.jpg

சுசீலா குரல் ரொம்ப சூப்பர்...

கேட்டுட்டே இருக்கலாம் போலிருக்கு...

7efe3ef6de946e1ad7c2d8f07f48d3e5.jpg

கண்ணதாசன் வரிகள் மனதைக் கவர்ந்தாலும்... காட்சியையும்... வரிகளையும்... நீங்க விவரித்த விதம் ரொம்ம்ம்ம்ம்ப அழகு ஸ்ரீ...

38974355ab5c6ce7db6f83dbb989ef99.jpg
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
?????...

View attachment 28915
நான் இப்போதான் இந்த பாடல் கேட்டேன் ஸ்ரீ...


View attachment 28912

சுசீலா குரல் ரொம்ப சூப்பர்...

கேட்டுட்டே இருக்கலாம் போலிருக்கு...

View attachment 28913

கண்ணதாசன் வரிகள் மனதைக் கவர்ந்தாலும்... காட்சியையும்... வரிகளையும்... நீங்க விவரித்த விதம் ரொம்ம்ம்ம்ம்ப அழகு ஸ்ரீ...

View attachment 28914
படித்ததை பகிர்ந்துள்ளேன் சுகா... நான் எழுதியது அல்ல. நன்றிமா
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top