• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஜனனம்

  • Thread starter ஜனனம்
  • Start date

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ஜனனம்

Guest
அன்று நேரமாகவே ஸ்டேஷன் வந்து விட்டான் நாராயணன். நெற்றியில் சந்தனமும் குங்குமமும் ஒட்டியிருக்க, வழியில் டீ கடையில் கேட்ட பாட்டை மனதுக்குள் முணுமுணுத்து வாறே நுழைந்தான்.
" என்னய்யா எல்லாம் இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி இருக்கீக .. எவன் எழவு கொட்டுனான் இன்னைக்கு.."
தன் இருக்கையில் அமர்ந்து ரெண்டு சட்டை பட்டனை கழட்டி விட்டான், ' நவம்பர்லயே இந்த வெயில் அடிக்குது.' அவனுக்கு மேல் பேன் மாரத்தான் ரன்னரை போல மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது.
" ஏட்டய்யா அந்த பல்லாவரம் கேஸ் பைல் கொண்டாய்யா .. இணைக்காச்சு முடிப்போம்."
தட் என்றது பைல், வழுகி தரையில் விழுகையில், அதை எடுக்க இவன் எத்தனிக்க , இவனோடு குனிந்த ஏட்டய்யா கிசுகிசுத்தான்,
" அய்யா , உங்கள அர்ரெஸ்ட் பண்ண போறாங்க.. இங்க எல்லார் போனையும் புடுங்கி வச்சுட்டாங்க, அப்டி எஸ்கேப் ஆயிருங்கய்யா.. உங்க தயவில தான் இன்னைக்கு என் பொண்ணு படிச்சுற்றுக்கு , அந்த.."
அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே எழுந்து விட்டான் நாராயணன், இதயத் துடிப்பு இரைச்சலாக மாறியது, சுற்றி பார்த்தான் , ஆங்கங்கே புது முகங்கள், நைசாக நழுவ நினைக்கையில் வாசலில் நூர் வருவதை கண்டு விட்டான்.

" சார் நகலாதீங்க உங்கள கைது பண்றோம் " எதிர் திசையில் வாட்ட சாட்டமாக ஒரு போலீஸ் இளைஞன் இவனை நெருங்கி இருந்தான். அவன் கை துப்பாக்கி உரையை தேடுவதை கண்டு சுதாரித்தவன், அவனை தள்ளி விட்டு பக்கத்திலிருந்த லாக்கப்பில் நுழைந்து தன்னை பூட்டிக் கொண்டான், அவன் வைத்திருந்த லாக்கப் சாவி சரியான நேரத்தில் உதவியது. அங்கே கால் மேல் கால் போட்டு படுத்திருந்த பிக் பாக்கெட் இவனை கண்டதும் திடுக்கிட்டு எழுந்தான், " ஐயா என்ன நீங்க இங்க வந்துட்டீங்க வெளிய புழுக்கமா இருக்கா.."
அவனுக்கு பதில் நூரிடம் இருந்து வந்தது,
" நாராயணன் , நீங்க தப்பிக்க முடியாது, மரியாதையா சரண்டர் ஆயிடுங்க.." நாராயணன் சட்டென அவள் பார்வையிலிருந்து விலகி ஒரு மூலையில் அமர்ந்தான். தன் போனை எடுத்து டயல் செய்தான்.
ட்ரிங் ட்ரிங் ...... ட்ரிங் ட்ரிங்......
"நாராயணன் இதெல்லாம் வேஸ்ட் யாரும் உங்களுக்கு உதவ முடியாது" நூர் அவனை குரலால் துரத்தினாள் , அவன் கவனமோ போனை தவிர எங்கும் திரும்ப வில்லை.
" ஹலோ நாராயணன் " ஜெரியின் குரல் மறுமுனையில் ஒலித்தது.
" சார் நாம மாட்டிட்டோம், நூர் என்ன அர்ரெஸ்ட் பண்ண ஸ்டேஷன்கே வந்துட்டா.. அஞ்சு பேருக்கு மேல இருப்பாங்கன்னு நினைக்குறேன் . என்ட்டயும் கன் இருக்கு .. நீங்க உடனே ஆள் அனுப்புங்க்.."
" நாராயணன் நாராயணன்.. ஸ்லோ டவுன், நீங்க சொல்றதுலாம் சினிமால தான் நடக்கும். எப்படி அவளுக்கு வாரண்ட் கிடைச்சதுனு தெரிலேயே இப்போ எங்க இருக்கீங்க .."

" நான் லாக்கப்ல பூந்துகிட்டேன் அவங்க வெளிய இருக்காங்க, என்ன காப்பாத்துங்க சார்.."
மறுமுனையில் சிறு மவுனம்.

" நாராயணன் ஓபன் பண்ணுங்க இப்போவே.." நூர்

" நாராயணன், எனக்கே இத சொல்ல கஷ்டம் தான் இருக்கு ஆனா வேற வழியில்லை, உங்களுக்கு தப்பிக்க வழியே இல்லை. நீங்க மாட்டிட்டிங்கனா .. நாம எல்லாரும் மாட்டிப்போம், அதோட உங்க பசங்க நாளைக்கு வெளிய கூட போக முடியாது, நாங்க தப்பிச்சிப்போம் எப்படியாச்சும், உங்களுக்கு தெரியாதது இல்ல , நாம கேச எப்படி கிளோஸ் பண்ணுவோம்னு.. நீங்க போய்ட்டீங்கனா உங்க பேமிலி என்ன ஆகும்.."

" நான் என்ன சார் பண்றது என்ன எப்படியும் போட்ருவாங்க சார் சரண்டர் ஆனா.."

" அம் சாரி நாராயணன்.. நீங்க பொழைக்க எனக்கு வழி தெரில, ஆனா உங்க பேமிலிய காப்பாத்த முடியும் .. நீங்க நெனச்சா .."

" வேற கீ இல்லையா.. தேடி பாருங்க .." நூர் யாருக்கோ ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தாள்.

" நான் என்ன சார் பண்ணனும்,"

" ... சாரி நீங்க சூசைட் பண்ணிக்கோங்க.. எனக்கு வேற வழி தெரியல.. அவங்களுக்கு ஆள் கிடைக்கலேனா கேஸ் எடுக்க மாட்டாங்க. போலீஸ் இமேஜ் போய்டும்னு பயப்படுவாங்க.. உங்க பேமிலிய நான் பாத்துக்கறேன்...... கன் இருக்குல்ல.."

அதை கேகய பக்கென்று இருந்தது, அனால் அதை தவிற வேறு வழியில்லை என்பது அவனுக்கு தெரியும்.

" இருக்கு சார் " தூக்கத் அடைத்த தொண்டையில் சிக்கி வார்த்தைகள் மெலிதாய் தான் வந்தன..

" நீங்க எதுக்கும் கவலை படாதீங்க, உங்க பங்கு உங்க புள்ளைங்கள போய் சேறும், நீங்க நினைச்ச மாதிரியே அவங்க வெளிநாட்டுல படிப்பாங்க.. ப்ராமிஸ் "

" தயவு செஞ்சு அவங்கள பாத்துக்கோங்க சார் உங்கள தான் நான் நம்பி இருக்கேன் ." அவன் வார்த்தைகளை நம்பி போனை கட் செய்தான்.

" சுட போறாரு சுட போறாரு .. சார் வேண்டாம் " அலறினான் பிக் பாக்கெட்.

" சும்மா இருடா .. சாவுறப்போ ஒரு கொலை பண்ண வேண்டாம்னு பாக்குறேன்."

" நாராயணன் கன்ன கீழ போடுங்க.. ஏய்... இத உடைங்க .. அந்த டேபிள் வச்சு இடிங்க குயிக்.."

நாராயணன் கன்னை தடவி பார்த்தான், கனத்தது. ட்ரிகரில் விரலை செருகி, தன் நெற்றியில் வைத்து அமுக்கினான்......... அது வெடிக்க வில்லை. சுடு என்ற மூளையின் கட்டளை, விரலுக்கு வருவதற்குள் வீக் ஆனதோ என்னவோ அவன் விரல்கள் பேச்சை கேட்க மறுத்தன.

" ஐயா சுட்றாதீங்கய்யா ... ப்ளஸ் யா நான் புள்ள குட்டி காரன்யா " பிக் பாக்கெட் அழுதான்.

" அழாதடா .. நான் உன்ன சுடல."

" அது எனக்கே தெரியும்யா.. நீங்க செத்திங்கன்னா , நான் தான் கோன்னேனு உங்க ஆளுங்க என்ன தூக்குல தொங்க விட்ருவாங்கய்யா.." மேலும் ஒப்பாரி வைத்தான்.

" நாராயணன் கன்ன கீழ போடுங்க.. உங்களுக்கு ஏதும் ஆகாது நான் பாத்துக்கிறேன்.." நூர்

" ஆமாய்யா வேண்டாம்.. உங்க தர்மம் காப்பதும்யா.. உங்களாலதான்யா என் பொண்ணு இன்னைக்கு படிக்குது.."

' இவன் வேற ..நேரம் தெரியாம நன்றி கடன்னு... சொல்லிகிட்டு.. ' மனதுக்குள் ஏட்டய்யாவை திட்டிக் கொண்டான்.

இம்முறை மூச்சை இழுத்து விட்டு சுட முயல.. " டாங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்..ங்ங்ங்ங்ங் " என்றது லாக்கப் கதவை உடைக்கும் ஓசை. அதை கேட்ட பதற்றத்தில் கன்னை தவற விட்டான்.

" பாத்தீங்களாய்யா.. கை தவருது .. " பிக் பாக்கெட் விம்மியவாறே சொன்னான், "வாழ்க்கைனா சில அடிகள் விழத் தான் செய்யும் அவசர பட்டு இந்த முடிவை எடுக்கலாமா . ஆண்டவரை நம்புங்க .. தூய ஆவி உங்களை .."

டாங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்..ங்ங்ங்ங்ங்.... அடுத்த இடி .. இன்னும் சில நிமிடங்கள் தான் கதவு தாங்கும்..

" நிம்மதியா சாவ வாச்சும் விடுங்கடா.." தலையில் அடித்துக் கொண்டான், இது வேலைக்கு ஆவாது என முடிவு செய்தவன் தன் பாக்கெட்டை துளாவி ஹெட் செட்டை எடுத்தான், அது நூடுல்ஸாக பிண்ணி இருக்க, அதனை பிரிக்க முயலையில்,

டாங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்..ங்ங்ங்ங்ங் அடுத்த அடி , இம்முறை கதவு பக்கவாட்டில் கீரலே விட்டு விட்டது.

அவசரமா ஹெட் செட்டை காதில் மாட்டி, தன் மொபைலில் ஒரு பாட்டை போட்டு முழு வால்யூமையும் கூட்ட.. இவன் காதுகளுக்கு அந்த இசையை தவிர வேறெதும் கேட்கவில்லை, தன் குடும்ப போட்டாவை போனில் கடைசி முறையாக பார்த்தவன், கண்ணை இறுக மூடிக் கொண்டு , முழு பலத்தையும் திரட்டி ட்ரிகரை அழுத்த, டுமீல்ல்ல்.... என்ற சத்தத்துடன் அந்த பாடல் மவுனித்து நிசப்தமானது.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
Me Second,
ஜாலன் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஜாலன் டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top