• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

டாக்டர் மைதிலி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

V R K

நாட்டாமை
Author
Joined
Oct 28, 2021
Messages
37
Reaction score
62
Location
Salem
டாக்டர் மைதிலி .




இந்த கொரோனா வந்தாலும் வந்தது , மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் இன்று வரையிலும் . அதிலும் குறிப்பாக இந்த சூழ்நிலையில் முன்களப்பணியாளர்கள் என்று அழைக்கப்படும் டாக்டர் , நர்ஸ் , மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோர் படும் கஷ்டங்களை சொல்லி முடியாது . அல்லது சொல்லில் அடங்காது . அரசாங்கமும் எதை தின்றால் பித்தம் குறையுமோ என்பது போல அவர்களால் முடிந்த வரை உதவிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள் . இந்த கதை கொரோனா சூழ்நிலையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதை .

டாக்டர் மைதிலி நாராயணன் ஒரு மகப்பேறு மருத்துவர் . அவருடைய கணவரும் ஒரு மருத்துவர் தான் . அவர் பம்பாயில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக இருக்கிறார் . டாக்டர் மைதிலி சேலம் அரசு மருத்துவமனையில் அதாவது மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் பணியில் இருக்கிறார் .

சேலத்தில் நகர்புறங்களில் நோய் தொற்று அதிகம் காரணமாக டாக்டர் மைதிலிக்கு வேலை அதிகமாக இருந்ததால் அவர் 15 க்கு பிறகு இன்று தான் , தான் தங்கி இருக்கும் , அஸ்தம்பட்டில் உள்ள ‌வீட்டிற்கு வந்தார் . அரசு கூறியுள்ள படி கைகளும் சேனிடைசர் போட்டு நன்றாக சுத்தம் செய்து பிறகு தான் , வெளி கேட்டின் பூட்டையே திறந்தார் .

மிகவும் களைப்பாக இருப்பதால் அப்படியே‌ ஸோபாவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார் . அப்பொழுது தான் அவருடைய கைபேசி அழைத்தது . யார் என்று பார்க்க ‌ஹவுஸ் ஓனர் என்று தெரிந்தது . உடனே கால் ஐ அட்டெண்ட் செய்து ,
" சொல்லுங்க அங்கிள் நான் டாக்டர் மைதிலி பேசறேன் " என்றார் . அதற்கு அவர் , " நான் ஹவுஸ் ஓனர் பேசறேன் " என்றார். மைதிலி , " சம்பளம் வந்தவுடன் நான் கூகுள் பே வில் வாடகையை நேற்றே அனுப்பிட்டேன் அங்கிள் " என்று சொல்ல , அதற்கு அவர் , " நான் வாடகை க்காக ஃபோன் பண்ணலை " என்றார் .


" நீங்கள் உடனே வீட்டை காலி செய்து விடுங்கள் நாளைக்கே ‌ " என்றார் . " நான் உங்க கிட்ட முதலேயே காலி செய்ய சொன்னேன் . நீங்க தான் இன்னும் காலி செய்யாம இருக்கீங்க " . நீங்கள் அரசாங்க ஆஸ்பத்திரியில் வேற வேலை செய்யறீங்க . அதனால் இங்கு இருக்கிறவங்க எல்லாம் எங்கே தங்களுக்கு அதனால் கொரோனா வந்திருமோன்னு பயப்படறாங்க " . மேலும் என் பெண்ணும் வேற நிறைமாத கர்ப்பமா இருக்கா இப்பவோ அப்பவோன்னு ... " . அதனாலே நான் சொல்லறேன்னு தப்பா நினைக்காம நாளைக்கே காலி செய்துடுங்க . இந்த மாத வாடகை கூட கொடுக்க வேண்டாம் . உங்கள் அட்வான்ஸ் ‌அமெண்ட்டை கூகுள் பே மூலம் அனுப்பிடறேன் " என்று சொல்ல , ‌மைதிலி உடனே , " வீட்டை காலி செய்ய சொன்னா நான் எங்கே போவேன் அங்கிள்‌ ? கொஞ்சம் டைம் கொடுங்க " என்று சொல்ல ‌, அதற்கு அவர் , " அதெல்லாம் எனக்கு தெரியாது . நீங்கள் உடனே காலி செய்து தான் ஆகவேண்டும் ‌" என்று கூறி , மைதிலி பேச கூட நேரம் கொடுக்காமல் ஃபோனை வைத்து விட்டார் மைதிலி தொடர்ந்து தொடர்பு கொண்ட போது , ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று தகவல் சொன்னது .

இருக்கிற பிரச்சினையில் இது வேறு என்று நினைத்து இப்போழுது என்ன செய்வது என்று தெரியாமல் அவருடைய நண்பர்களும் ஃபோன் செய்து அவசரம் அவசரமாக வீடு தேவை என்று சொல்ல‌ அவர்களோ , இந்த சூழ்நிலையில் வீடு உடனே கிடைப்பது கஷ்டம் என்று கூறினார்கள் . தேவை என்றால் ஏதாவது ‌தனியார் ஆஸ்டலில் கேட்டு பார்க்க சொன்னார்கள் .

தனியார் ஆஸ்டலில் கேட்க இந்த கொரோனா சூழ்நிலையில் வெளி ஆட்களுக்கு ரூம் எதுவும்
கொடுப்பதில்லை என்று கூறினார்கள் . அவளுடைய நண்பர்களிடம் கேட்க அவர்களையே காலி செய்ய சொல்லி இருப்பதாகவும் தாங்களும் வேறு வீடு தேடிக்கொண்டு இருப்பதாகவும் கூறினார்கள் வேறு வழி இல்லாமல் , மைதிலி ஆஸ்பத்திரி டீனிடம் கேட்க அதற்கு அவர் , " மைதிலி உங்களுக்கே இங்கு இருக்கும் சூழ்நிலை தெரியும் " . நீங்கள் டியூட்டியில் இருந்தாலும் பார்க்கலாம் . நீங்கள் வேறு இப்பொழுது டியூட்டி மில் வேறு இல்லை ... " எனவே மிகவும் கஷ்டம் ... " என்றார் அவர் மேல் கோபப்படுவதில் அர்த்தம் இல்லை .‌ அவர் சொல்வது சரிதான் . அங்கு வேலை செய்பவர்களுக்கே இடம் இல்லாமல் கிடைக்கின்ற இடத்தில் படுத்துக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டு இருந்தார்கள் .

ஆனால் டீன் இன்னொரு விஷயம் சொன்னார் . " இந்த மாதிரி கொரோனா சூழ்நிலையில் யாரையும் குறிப்பாக டாக்டர்களை காலி செய்ய சொன்னால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறினார் " என்று . எனவே அதை சொல்லி வீடு காலி செய்ய முடியாது என்றும் அப்படி அவளை கட்டாய படுத்தினால் கலெக்டரிடம் புகார் செய்வேன் என்றும் சொல்லப் சொன்னார் அவளை . பிறகு ஃபோனை வைத்து விட்டார் . அவர் சொல்வது உண்மை தான் . கலெக்டர் சொல்லி இருக்கிறார் . ஏன் பேப்பரில் கூட வந்தது . என்ன பிரயோஜனம் ?


சட்டம் இருக்கிறது தான் . ஆனால் சட்டத்தை யார் மதித்து நடக்கிறார்கள் ? தங்களுடைய உயிருக்கு ஆபத்திருக்கிறது என்று தெரிந்தும் டாக்டர்ஸ் எல்லோரும் டிரீட்மெண்ட் செய்கிறார்கள் . அப்படி இருந்த போதிலும் டாக்டர்ஸ் இறந்த போது‌‌ , அவர்களுடைய உடலை அடக்கம் செய்ய கூடாது என்று , விடாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை என்ன என்று சொல்வது ? அரசாங்கத்தால் என்ன செய்ய முடிந்தது ? கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாதவர்கள் . இவர்களிடம் போய் என்ன ஞாயத்தை எதிர் பார்க்க முடியும் ? மனதில் பலவித சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது .

அன்று அவள் வெளியில் போய் விட்டு இரவு திரும்பி வந்தபோது , அவளுடைய வீடு , வெளியில் வேறு பூட்டு போட்டு பூட்டப்பட்டு இருந்தது . அதைப் பார்த்து அவள் அதிர்ச்சி அடைந்தார் . அவளுடைய பெட்டி வெளியில் எடுத்து வைக்கப்பட்டிருந்தது . இதையெல்லாம் யார் செய்தது என்று தெரியவில்லை . அப்பொழுது தான் ஹவுஸ் ஓனர் வீட்டில் இந்த வீட்டின் இன்னொரு சாவி இருப்பது ஞாபகத்திற்கு வந்தது . என்ன மனிதர்கள் இவர்கள்...? இவ்வளவு கேவலமான முறையில் நடந்து கொள்கிறார்கள் ...? ஹவுஸ் ஓனருக்கு ஃபோன் செய்து பார்க்க , அது சுட்ச் ஆஃப் என்று தகவல் சொன்னது . தன்னுடைய பரிதாபமான நிலையை நினைத்து சுயபச்சாதாபத்தில் அழுகை தான் வந்தது . வீட்டின் முன்புறம் உள்ள இடத்தில் அமர்ந்து ஒரு மூச்சி அழுதாள் .


பிறகு ஒருவாறு மனதை திடப்படுத்திக் கொண்டு டாக்டர் மைதிலி தன்னுடைய பெட்டியை இழுத்துக் கொண்டு நடு ரோட்டில் சென்று கொண்டிருந்தார் . இங்கு ஹவுஸ் ஓனர் ‌வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் ஹவுஸ் ஓனர் மகளுக்கு பிரசவவலி எடுத்து மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு , துடித்துக் கொண்டு இருந்தாள் . வலி பொறுக்க முடியாமல் தரையில் இங்கும் அங்கும் புரண்டு கொண்டிருந்தாள் . அவளுடைய அம்மா செய்வது அறியாமல் மகளை படுக்கையில் படுக்க வைத்து அவளுடைய கையை பிடித்துக் கொண்டு
ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தாள் .

பிறகு தனது கணவரை
அழைத்து உடனே ‌ ஏதாவது செய்யுங்கள் என்று சொன்னாள் . ஹவுஸ் ஓனர் மகளை வந்து பார்த்து விட்டு உடனே ஆம்புலன்ஸூக்கு ஃபோன் செய்தார் உடனே வரும் படி விஷயத்தை சொல்லி . ஆம்புலன்ஸ் டிரைவர் உடனே வரமுடியாது என்றும் தான் இப்பொழுது ஊரை விட்டு வெகு தூரத்தில் தொலைவில் இருப்பதால் மாற்று ஏற்பாடு செய்யுமாறு கூறினான் . உடனே அவர் அவருடைய நண்பருக்கு ஃபோன் செய்து விஷயத்தை கூறி உடனே வரச்சொல்ல‌ , அதற்கு அவர் நான் வெளியூரில் இருப்பதால் உடனே வர இயலாது . எனவே ஆட்டோ ஸ்டேண்டுக்கு ஃபோன் செய்து டிரைவரை வரச்சொல்லி , உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு போக சொல்ல சொன்னார் . ஆட்டோ டிரைவர் தான் வெளியில் இருப்பதாகவும் தன்னால் இப்பொழுது வர இயலாது என்று கூறி ஃபோனை வைத்து விட்டார் . அவருக்கு இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் ரோட்டிற்கு வந்தார் . அப்பொழுது தான் டாக்டர் மைதிலி பெட்டியுடன் ரோட்டில் போவது தெரிய உடனே அவளிடம் வந்து விஷயத்தை கூறி அவளை வரச்சொல்லி கை எடுத்து கும்பிட்டு கெஞ்சி கேட்டுக் கொண்டார் .

டாக்டர் மைதிலி எதுவும் சொல்லாமல் உடனே வேகமாக விரைந்து அவருடைய வீட்டிற்கு ‌உள் சென்று அவருடைய மகளுக்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்தார் . அவரை வெளியே இருக்க சொன்னாள் . சிறிது நேரம் கழித்து குழந்தையின் அழுகுரல் கேட்டது . குழந்தை பிறந்து விட்டதை அறிந்து கொண்டார் . சிறிது நேரம் கழித்து டாக்டர் மைதிலி வெளியே வந்தவுடன் அவர் அவளை கையெடுத்து கும்பிட்டு விட்டு , டாக்டர் என்னை மன்னித்து விடுங்கள் . இங்கு இருப்பவர்கள் சொன்னதால் தான் நான் அப்படி சொன்னேன் . நீங்கள் வீட்டை காலி செய்ய வேண்டாம் அங்கேயே தங்கி இருக்கலாம் என்று சொன்னார் . அவருடைய கண்களில் நீர் வழிந்தது கொண்டு இருந்தது தாரை தாரையாக . டாக்டர் மைதிலி ஒன்றும் சொல்லாமல் அவரை ஒரு விநாடி பார்த்து , நான் என் கடமையை தான் செய்தேன் என்று அதையும் மனதில் நினைத்துக் கொண்டு , தனது ‌பெட்டியை எடுத்துக் கொண்டு நடுவீதியில் தனியாக நடக்க ஆரம்பித்தார் .





(முற்றும்)
 




Last edited:

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
Wow....super ah oru vishyatha soliyirukinga Sis....👏❤
Nice story.....😊
Doctor's andha nerathula ipdilam problems face panirupanga kandipa
Adhum pola na onu kelvi patten
News la oru doctor ah anga adakam panna koodathu nu kal lam eduthu adichanga....andha udala anga ye vechitu thapika odananga....aprm police vandhu dha problem solve aachu nu la kelvi patten.
Actually andha doctor corona ku sigichai alikum pothu thotral bathikapatu iruandha oru maruthuvar.....avaroda friend koda romba feel pani peti kodutharam
Corona ah la naraya manidhargal matum ila
Naraya idathula manidhamum irandhadhu dha kasapana unmai.....
😔
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top