டாமியைத் தேடி

Jaalan

Author
Author
SM Exclusive Author
#1
நிசா கொண்டு வந்த டூப்ளிகேட் சாவி, ஒரிஜினலுக்கு நிகராக வேலை செய்ய, அந்த பிளாட் கதவு கொட்டாவி விட்டது போல திறந்தது . இருவரும் உள்ளே நுழைய, மறுபடியும் அடைத்துக் கொண்டது.
" நான் இந்த ரூம்ல செக் பண்றேன், நீ அங்க போய் பாரு .. ஓகே தானே..? " என்றாள் மேரி.

"ஓகே தான்ன்... இந்த குளோஸ் தான் வொய்ட்ல வாங்கிட்டீங்க.." நிசா தன் கை குளோசை பார்த்தவாறு சொன்னாள்.

"ஏன், வொய்ட்க்கு என்ன..?"

"வொய்ட் அழுக்காயிரும்ல, ரெட் னா நல்லாயிருக்கும்.."

மேரியின் கண்கள், பத்திரிக்கையாளர்களை பார்த்த விஜயகாந்த் போல கோபத்தில் சிவக்க, அதனை புரிந்தவளாய் நிசா அங்கிருந்து நழுவினாள்.

நிசா அந்த பெரிய அறையில் நுழைந்து , தன் இனிய குரலில் "டாமி...! டா.....மிமி.....! டா.............மி..!" காதலனை தேடும் காதலி போல அழைத்தாள், இல்லை பாடினாள் .
அவள் செல்ல நாய் வரும் ஓசை கேட்க, அவள் உடலெல்லாம் உற்சாகத்தில் புல்லரித்தது. நீண்ட நாள் பிறிவுக்கு பிறகு, தன் செல்ல டாமியை தொட்டுத் தழுவ கைகள் துடித்தன, தன் இரு கைகளையும் நீட்டி கட்டியணைக்க தயாராக நின்றாள்.
ஆனால் வந்தது என்னவோ டாமியல்ல , ஆளுயரத்தில் ஒரு டாபர்மேன் நாய், கரிய முகத்துடனும் கூரிய பற்களும் , எச்சில் சொட்டும் நீண்ட நாக்குடனும் , மர்ம படங்களில் வரும் வில்லனின் நாய் போலவே இருந்தது அது.

நிசா மனதிற்குள் மரண ஓலமிட்டாலும் "அக்கா...! அக்கா.. ப்ளீஸ் ஹெல்ப் " என்று கிசுகிசுக்கும் ஓசையில் தான் அழைத்தாள் மேரியை.

'இப்போ எது சரியில்லைனு நொட்டை சொல்ல போறாளோ' என்று நினைத்துக் கொண்டே அவளிடம் சென்றாள். அங்கே நிசா உறைந்து போய் நிற்பதையும் , அவள் உறைய காரணமான டாபர்மேன் அவள் குரல்வளையை குறி பார்த்து பாய தயாராக நிற்பதையும் கண்டு அதிர்ந்தாள்.


"கொஞ்சம் கூட அசையாத.., அப்படியே இரு" என்றாள் மேரி நிலவரம் கண்டு சுதாரித்தவளாய்.


"என்னக்கா .. ஜுராஸிக் பார்க் படத்துல வர்ர டயலாக்லாம் சொல்றீங்க.."


"உன் முன்னாடி நிக்கறதுக்கு டைனோசரே தேவலடி.. ஆமா .. நாம அன்னைக்கு கேட்டது இந்த நாய் வாய்ஸ் தான் போல, டாமி வாய்ஸ் இல்ல . நான் அப்பவே சொன்னேன் நீங்க தான் கேக்கல.."


"இப்ப இது ரொம்ப முக்கியம் .. நான் தப்பிக்க ஏதாச்சும் வழி சொல்லுங்கக்கா... " நிசா சொல்லிக் கொண்டிருக்கெயிலே அந்த நாய் உருமியவாறு அவளை நெருங்கியது.


"ஏதாவது பேசி அதை கால்ம் (calm) ஆக்குடி .." மேரி மெல்ல இரண்டு அடி பின் சென்று கொண்டு ஓடத் தயாராயிருந்தாள்.


"நானா..?.. நீங்க பேசுங்கக்கா .. உங்களுக்குத் தான் கராத்தே லாம் தெரியுமே..!"


"எனக்கு தெரியும், அந்த நாய்க்கு தெரியாதே .. நீ தான் நாய்ட்ட பேசறதுல எக்ஸ்பெர்ட் நீயே பேசு.. சீக்கிரம்..!"


மனதின் மூலை முடுக்கிலிருந்த தைரியத்தையெல்லாம் தோண்டி எடுத்துக் கொண்டு பேசத் தொடங்கினாள் நிசா
"நாயக் குட்டி .. நல்ல நாய்ல என்னை கடிச்சுறாத.. என்னை ஒன்னும் செஞ்சிராத... ப்ளீஸ் .. நான் பாவம்.."


"நாய்.. நாய்னு சொல்லாதடி.. டென்சனாகி கடிச்சு வைக்கப் போது .. ஏதாவது பேர் சொல்லி கூப்புடு" என்றாள் மேரி சுவரின் பின்னாள் ஒழிந்து கொண்டு.


"பாபுக் குட்டி .. பாபுச் செல்லம்.. உம்மா... என்ன விட்ருங்க பாபு தங்கம்..!"


"ஏதாச்சும் பேர் வை னு சொன்னா .. உன் புருசன் பேரே வச்சுட்டியேடி.."


"என்னக்கா பண்றது .. திடீர்னு நாய் பேர்னா அவரு பேரு தான் நியாபகம் வருது. ஆனா நான் அவரை கூட இப்படி கொஞ்சுனதில்ல" அவள் சொல்லிமுடிப்பதற்குள் அந்த நாய் அவள் முகம் நெருங்கி மோந்து பார்ப்பது போல ஏதோ செய்தது. இருவரும் செய்வதறியாது நிற்கையில் நிசா செய்தாள் , அவள் எங்கே செய்தாள் பயம் அவளை செய்ய வைத்தது.
"ஆஆஆஆஆஆஆஆஆ............" என தொண்டை கிளிய கத்தினாள். இவள் அலறளை கேட்டு டாபர்மேன் வெடி சத்தம் என பயந்து தெறித்து ஓடி ஓர் அறைக்குள் சென்று ஒளிந்தது.


மேரி பின்னாலே ஓடிச் சென்று அதை ரூமில் வைத்து இழுத்துப் பூட்டினாள்.
நிசா தன் நிலை தெளிய தொடங்கினாள். தான் பிழைத்து விட்டதை எண்ணி , அல்லாவிலிருந்து , தெரு முனையில் வீற்றிருக்கும் ஐகோர்ட் மகாராஜா வரை அனைத்து கடவுளுக்கும் நன்றி மழை பொழிந்தாள்.


இருவரும் ஒருவரையொருவர் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்ட நேரம், பிளாட்டின் வாசற் கதவை யாரோ திறக்கும் ஓசை கேட்டது.


வந்தது மித்ரனா .. நாயை சமாளித்த இவர்களால் மித்ரனையும் அப்படியே சமாளிக்க முடியுமா..? Dont worry மேரிக்குத் தான் கராத்தே தெரியுமே..!
அடுத்த அத்தியாயம் சனியன்று, உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் தொடர்ந்து அளிக்கவும்.
 

Maha

Author
Author
SM Exclusive Author
#8
ஹாஹா 🤣👌👏👏👍😅 செம்ம ப்ரோ actually இந்த டிடெக்ட்டிவ் crime சப்ஜெக்ட் novels என்றாலே நான் அங்கே அப்சென்ட்.....🤭🤷‍♀️ பட் உங்க ஸ்டைல் செம்ம ஜி......
வித் ஹுமாயூர் ultimate சகோ.....

இந்த டாபர்மேன் என்ட்ரி,
ஹாஸ் நேம்லில் நாயை கெஞ்சுவது😄👌 நைஸ் ஜலான்.... 👌
 

Jaalan

Author
Author
SM Exclusive Author
#9
ஹாஹா 🤣👌👏👏👍😅 செம்ம ப்ரோ actually இந்த டிடெக்ட்டிவ் crime சப்ஜெக்ட் novels என்றாலே நான் அங்கே அப்சென்ட்.....🤭🤷‍♀️ பட் உங்க ஸ்டைல் செம்ம ஜி......
வித் ஹுமாயூர் ultimate சகோ.....

இந்த டாபர்மேன் என்ட்ரி,
ஹாஸ் நேம்லில் நாயை கெஞ்சுவது😄👌 நைஸ் ஜலான்.... 👌
ஹா மிக்க மிக்க நன்றி சிஸ்
 
Top