• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

டாமி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jaalan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
111
Reaction score
361
காயத்ரி வரும் வழி நெடுகிலும் ஜெரியின் பிடியில் தான் சந்தித்த இன்னல்களையும், அதனை தான் சாமர்த்தியமாக சமாளித்த வித்தை பற்றியும் புகழ்ந்து பேசியவாறே வந்தாள். அவள் சொன்ன கதையில் டிரைவர் உட்பட வண்டியில் இருந்த அனைவரும் தூங்கி விழாத குறை. ஒரு வழியாக வண்டி வீடு வந்து சேர்ந்தது இருப்பினும் காயத்ரியின் கதை மெகா சீரியலை போல நீண்டு கொண்டு தான் இருந்தது. இவ்வாறாக நான்ஸ்டாப் எப்எம் ஆக பிதற்றிக் கொண்டு இருந்த அவள் வீட்டின் உள் அறையினை அடைந்தும், ஒரு கனம் உறைந்து போனாள். அடுத்த கணம் டாமி என்று கூச்சலிட்டு விட்டு தன நாயை தாவி அணைத்துக் கொண்டாள். தோழிகள் மூவரையும் டாமியுடன் சேர்த்து பார்த்த நூர்க்கு இவ்வாறெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா என வியப்பாகத்தான் இருந்தது. அந்த பாச மலர் காட்சி காண ஏதோ இனம் புரியாத சந்தோசத்தை நூரிடம் ஏற்படுத்தியது. அவள் பலதரப்பட்ட மனிதர்களை பார்த்திருக்கிறாள். குடிக்க காசில்லை என தாயின் காதணிக்காக காதை வெட்டிய கனவான்கள். கள்ள காதலுக்கு இடைஞ்சலாய் இருந்த குழந்தையை விஷம் வைத்துக் கொன்ற மாதர் குல மாணிக்கங்கள், ஆனால் இவர்களை போன்ற ஆட்களை அவள் பார்த்திருக்கவில்லை. ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு போட்டி போட்டு அந்த நாயை கொஞ்சி விளையாடிய அவர்களை பார்த்து நூர்க்கு சற்று பொறாமையாக தான் இருந்தது. அவள் தன்னையும் அவர்களில் ஒருவராக கற்பனை செய்து பார்த்தாள் சேலையும் சுடிதாருமாக, நீண்ட கூந்தலும் நெய்ல் பாலிஷுமாக அவளை நினைத்து பார்க்க அவளுக்கே சிரிப்பாக இருந்தது. ஒரு வேளை அவள் தந்தை மற்ற பெண் குழந்தைகளை போல விளையாட செப்பு சாமானும் டெடி பியரும் வாங்கி தந்திருந்தால், அவளும் இப்படி ஆகியிருப்பாளோ, அனால் அவள் தந்தை ஆண் மகனை போல துப்பாக்கியும், காரும் தான் வாங்கி தந்தார். ஆணை போல வாழ வேண்டுமென்று தான் அவளை வளர்த்தார். பெண் வாழ்வும் இனிக்குமென அவருக்கு ஏனோ தெரியவில்லை. மனதுக்குள் பல நினைவலைகள் ஓட அவள் கண்கள் தான் கண்ட காட்சியில் லயித்திருந்த வேளை . காயத்ரியின் கீச்சு குரல் அவள் கவனத்தை ஈர்த்தது.
" என்னடி இது டாமி வயத்துல கட்டு போட்டுண்டிருக்கு.." என்றாள் காயத்ரி.

" மாமி இவ்ளோ நேரமா நீங்க இத கூட கவனிக்கலயா..?" என்றாள் மேரி நக்கலாக

" இல்லடி சந்தோஷத்துல கண்ணு மூக்கு தெரியாதும்பா.. எனக்கு ரொம்ப சந்தோசம் அதான் வயிறே தெரியல.." அசடு வழிந்தாள் காயத்ரி.

" மாமி அந்த மித்ரன் நம்ம டாமிய என்னலாம் படுத்திருக்கான் தெரியுமா.." மேரி குரல் தழுதழுத்தது.

" என்னடி ஆச்சு.."

" அவன் டாமி வயத்துல ஒரு செயற்கை தோல் வச்சு அத டாமி வயித்தோட தச்சிருக்கான் , பாவம் டாமி வலில துடிச்சிருக்கும். அது டாமி தோல் கலர்லயே இருந்துச்சா அதான் யாருக்கும் வித்யாசமா தெரில ஆனா நான் பாத்ததுமே கண்டு புடிச்சிட்டேன் "

" அட படுபாவி அவன் என்ன லூசா ஏன்டி அப்படி பண்ணுனான் " காயத்ரி கைகளால் தன வாயை அடைத்துக் கொண்டாள் .

" அவன் எதோ ஒண்ண அந்த செயற்கை தோலுல வச்சி . அத டாமி வயித்துக்கு மேல வச்சு தச்சிருக்கான்."

" சுருக்கமா சொல்லனும்னா உங்க டாமிய டாமி ஹில்பிகர் பேக்கா மாத்திட்டான்.." கணேஷ் ஜோக் அடித்ததாய் நினைத்து சிரிக்க முயல, தோழிகளுடன் சேர்ந்து டாமியும் அவனை முறைத்துக் கொண்டிருந்தது.

" அப்புடி என்னத்த தான் கடத்துனானோ கடன்காரன் " அழுத்துக் கொண்டாள் காயத்ரி.

அவள் சொன்னது மேரிக்கு எங்கேயோ பொறி தட்ட , " சாரி மேடம் வந்ததுமே கொடுக்கணும்னு நெனச்சேன் மறந்துட்டேன் .. " தன் பையிலிருந்து சின்னதாய் ஒன்றை எடுத்து நூரிடம் கொடுத்தாள் மேரி " இத தான் மேடம் அவன் டாமி வயத்துல வச்சிருக்கான் , டாக்டர் இப்போ தான் எடுத்துக் கொடுத்தாரு.."

மேரி கொடுத்ததை வாங்கி பார்த்தாள் நூர் . அது ஒரு சிறிய பிளாஸ்டிக் டிவைஸ் கால்குலேட்டர் போல ஒரு சிறிய டிஸ்பிளே. ஒரு இரண்டு சென்டிமீட்டர் நீளமும் அரை சென்டிமீட்டர் அகலமும் இருந்தது. அது என்னவென்று நூர் விநோதமாய் பார்த்த வேளை , வழக்கம் போல முந்திரி கொட்டையாய் முந்தி அடித்து நின்றாள் நிஷா,
" இத நான் பாத்திருக்கேன், இது டோக்கன் ஜெனெரேட்டர்.."

" டொக்கென்னா ..? அது வட்டமான்னா இருக்கும்.." ஏதோ ஏலியன் ஜந்துவை பார்ப்பது போல எட்டி நின்று பார்த்தாள் காயத்ரி.

" மாமி நீங்க ஹோட்டல்ல காபி டோக்கென சொல்றீங்க இது சாப்ட்வேர் டோக்கன் "

" இந்த வாய்க்கு மட்டும் கொறச்சல் இல்ல.. சாப்ட்வேர்னு சொல்லி நீ இது வர ஏதும் பண்ணதில்ல எப்போதும் அந்த லேப்டாப்ல படம் தான் பாக்குற.." காயத்ரி பதிலடி கொடுத்தாள்

பெருமூச்சு விட்ட வாறே தொடர்ந்தாள் நிஷா, " மாமி சாப்ட்வேர் டோக்கன்னா , இந்த டிவைஸ்ல இந்த பட்டன் அமுக்குனா ஒவ்வோர் நிமிசத்துக்கும் ஒத்த ஆறு டிஜிட் நம்பர் ஜெனெரேட் ஆகும் , அடுத்த நம்பர் என்னனு கண்டு பிடிக்கவே முடியாது டோடல்லி ரெண்டோம். இந்த டிவைஸ் கூட ஒரு சாப்ட்வேர் இருக்கும் அதுலயும் சேம் நம்பர் தான் ஜெனெரேட் ஆகும், அதுல இந்த நம்பரை போட்டோம்னா, ரெண்டும் மேட்ச் ஆகி சாப்ட்வேர் ஓபன் ஆகும். உள்ள இருக்குற டீடைல் நம்ம பாக்கலாம். ரொம்ப செக்யூரிட்டி ப்ரொஜெக்ட்ல இத யூஸ் பண்ணுவாங்க.." விளக்கி முடித்தாள் நிஷா.

" அவன் என்ன சாப்ட்வேர் வேலை பாக்குறானா .. அவனுக்கு எதுக்கு இதெல்லாம்." மேரி குழப்பத்தில் கேட்டாள்.

" எனக்கு புரியுது.." அனைவரையும் பார்த்தாள் நூர் , எல்லோர் கவனமும் இவள் என்ன சொல்ல போகிறாள் என்பதிலேயே இருந்தது.

" மித்ரன் தான் ஜெர்ரிக்கு கொள்ளை அடிச்ச பணத்தை மாத்தி கொடுக்றேன்னு ஏமாத்திட்டான்னு நமக்கு தெரியும். அந்த பணத்துக்காக பாஸ்வர்ட் ஆர் அது சம்பந்த பட்ட எதோ ஒன்னு தான் இந்த சாப்ட்வேர் வச்சு அவன் மறச்சுருக்கான். இதுக்காக தன ஜெர்ரி ஆளுங்க செல்வாவை தேடிருக்காங்க.."

" அவன் என்ன முட்டாளா .. பத்திரமா வைக்கணும்னா பேங்க் லாக்கர் இருக்கு ஏன் இப்டி பண்ணனும் " கணேஷ் கேட்டான்

அவனை ஒரு நொடி ஆழமாய் பார்த்தவள் கண்ணில் விழுந்த தன் முடியை ஒதுக்கியவாறு தொடர்ந்தாள்.
" அவன் உண்மையாவே ஜீனியஸ் .. " இதை கேட்ட கணேஷ் முகத்தில் அதிர்ச்சி , அவன் காரணம் கேட்க அவகாசம் வழங்காமல் தொடர்ந்தாள்,
" நீங்க சொல்ற மாதிரி பேங்க்ல வச்சா மித்ரன் மாட்டுனானா அவனை டார்ச்சர் பண்ணி இது இருக்குற இடத்தை கண்டு புடிச்சருவாங்க , இப்புடி பண்ணுனா இந்த டாக் எங்க இருக்குனு அவனுக்கே தெரியாது அதனால அவங்க அவனை ஒன்னும் பண்ண முடியாது. அந்த கேப்ல அவன் ஏதாச்சும் பிளான் பண்ணி தப்பிக்கலாம். இத பத்தி நான் படிச்சருக்கேன் ஆப்பிரிக்கால கூட காட்டு விலங்கு கொம்புல வச்சு டைமண்ட் கடத்துவங்களாம், அத ட்ரெஸ் பண்ண ஜிபிஎஸ் மாட்டிருப்பாங்க அதே போல இதுலயும் அவன் ஜிபிஎஸ் வச்சிருக்கலாம் அவன் செத்ததால இப்போ இத ட்ரெஸ் பண்ண முடியாது."

" ஆமாம் மேடம், செல்வா கூட சொன்னான் அவன் மாட்டிட்டானா நாய அவுத்து விட்டுருன்னு மித்ரன் அவன்கிட்ட சொல்லிருக்கான் இப்போ தான் ஏன்னு புரியுது." கணேஷ் ஆமோதித்தான்.

" அதுக்கு அவனே ஒரு நாய் வளக்குறானே அத யூஸ் பண்ண வேண்டியது தானே.." மேரி ஆவேசமானாள்

" அங்க தான் அவன் புத்திசாலித்தனமே இருக்கு .. அவன் வளத்தது ஜாதி நாய்னு சொன்னிங்க. அத தெருவுல பாத்தா வித்தியாசமா தெரியும். அதனால தான் நாட்டு நாய தேடிருக்கான். உங்க நாய் ஹெல்த்தியா இருந்ததால அத ச்சூஸ் பன்னிருக்கான் , இதுல அவன் எதிர் பாக்காத விஷயம் இந்த நாய்க்காக இவ்ளோ ரிஸ்க் எடுக்க உங்கள மாதிரி ஆள் இருப்பாங்கன்னு தான். லாஜிக்கா யோசிக்கிற அவனால ஒரு நாட்டு நாய் மேல இவ்ளோ அன்பு வைக்கிறத நம்ப முடியல.." என சொல்லும் போது நூர்க்கு மனம் குறுகுறுத்தது அவளாலும் இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

" நீங்க சொல்றத பாத்தா, இது ஒரு சாவி இத வச்சு பூட்ட தேடி அலையனுமா " கணேஷ் அழுத்துக் கொண்டான்.

" வேண்டாம். சாவிய தேடி பூட்ட வர வைப்போம்.."
அனைவரும் நூர் கண்களை கூர்ந்து கவனித்தனர்.

" எனக்கு ஒரு பிளான் இருக்கு, இந்த நாய தேடி தான் இப்போ அவங்க அலைஞ்சுட்டு இருப்பாங்க.. நம்ம இப்போ இந்த ஒரிஜினல் டிவைஸ் மாதிரி ஒன்னு டூப்ளிகேட் ரெடி பண்ணுவோம். அதுல ஜிபிஎஸ் செட் பன்னிட்டு, இந்த நாய அவங்க தேடுற நொச்சி குப்பம் ஏரியால விட்டுருவோம். அவங்க இத எடுத்துட்டு போனதும் , நம்ம ஜிபிஎஸ்ல ட்ராக் பண்ணி அவங்க லொகேஷன்ல கையும் களவும்மா அமுக்கிடலாம். அந்த கம்ப்யூட்டர்ல நம்மட்ட இருக்குற ஒரிஜினல் டிவைஸ் வச்சு மொத்த பணத்தையும் எடுத்துடலாம்.."

" சூப்பர் பிளான் மேடம், " என்றான் கணேஷ்

" ஆனா அவங்க டாமிய ஏதும் பண்ணிட்டாங்கன்னா ..? " மேரி தன் நாயை தடவியவாறே கேட்டாள்.

" இல்ல அவங்க அப்படி பண்ண மாட்டாங்க .. அவங்களுக்கு தேவை டிவைஸ் மட்டும் தான்." நூர் சொன்னதும் கணேஷின் கண்கள் நூரை நோக்கின ஆனால் அவள் கண்களோ அவன் பார்வையை தவிர்த்தன.

எல்லோரும் அமைதியாய் இருக்க, நூர் தொடர்ந்தாள், " ஓகே, அப்போ உடனே இதுக்கான வேலையெல்லாம் பண்ணிடலாம், மேரி இத நீங்களே பத்திரமா வச்சுக்கோங்க.." அந்த டிவைஸை மேரியிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து நகன்றாள், கணேஷும் அவளை பின்தொடர்ந்தான். அந்த அறையை விட்டு நகன்றதும் கணேஷ் பொறுக்க முடியாமல் வாய் விட்டே கேட்டான், " மேடம் .. அவங்க இந்த நாய கொல்ல மாட்டாங்கன்றதுக்கு ..."

" எந்த கேரன்டியும் இல்ல.." நூர் முடித்தாள்
" எனக்கும் தெரியும் கணேஷ் , ஆனா நமக்கு நாய விட முக்கியமான விஷயம் நெறய இருக்கு.." சொல்லிட்டு அவன் பதிலுக்கு காத்திராமல் நகர்ந்தாள்.
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
நூர் நீங்க இப்படி பொய்‌ சொல்லிட்டீங்களே...ஆனா எங்க திருமதீஸ் கண்டிப்பா டாமிய கொல்ல விட மாட்டாங்க... அருமையான பதிவு அண்ணா...ஜெர்ரி இவர்கள் வலையில் சிக்குவாரா?
 




Rianya

நாட்டாமை
Joined
Dec 4, 2018
Messages
29
Reaction score
24
Location
Chhhhhhh
Super episode. Emotional one too. Liked to read the technical details. Interesting and fast paced narration. Pls don't do anything to Tommy. I thought the three ladies would protest to use the dog for further investigation. I mean isn't that the prudent thing to do after all the ruckus. Eagerly waiting for the next update.
 




Jaalan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
111
Reaction score
361
Super episode. Emotional one too. Liked to read the technical details. Interesting and fast paced narration. Pls don't do anything to Tommy. I thought the three ladies would protest to use the dog for further investigation. I mean isn't that the prudent thing to do after all the ruckus. Eagerly waiting for the next update.
Haa thank u so much.. you ll see in next epi ?
 




Jaalan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
111
Reaction score
361
நூர் நீங்க இப்படி பொய்‌ சொல்லிட்டீங்களே...ஆனா எங்க திருமதீஸ் கண்டிப்பா டாமிய கொல்ல விட மாட்டாங்க... அருமையான பதிவு அண்ணா...ஜெர்ரி இவர்கள் வலையில் சிக்குவாரா?
Haa yes yea.. thank u sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top