டாம் அண்ட் ஜெர்ரி.2

#1
டாம் அண்ட் ஜெர்ரி.2

நம்ம ஹிரோவபத்தி ஒரு அறிமுகம்… பனைமரத்துல பாதி உசரம்னு சொல்லுவாங்கல அந்தமாதிரி அப்பத்தா வூட்டி வூட்டி வளர்த்ததுல ஆறடி உசரத்துக்கு வளர்ந்து வளர்ச்சிக்கு ஏத்த உடம்புடன் வேட்டி சட்டை போட்டு மீசைய முறுக்கிவிட்டு அப்படியே நடந்துவந்தா சும்மா கெத்தா இருப்பான். எப்பவுமே வூட்ல தலைச்சம்புள்ளை அதுவும் பையனா இருந்தா வூட்ல உள்ள பெரியவங்களுக்கு சந்தோசத்த சொல்லவா வேணும் அந்தமாதிரிதான் ரெங்கநாயகிக்கும் முதல் பேரன் ஆண்வாரிசுங்ரதால பார்த்திமேல ஓவர்பாசம் வச்சிருக்காங்க..பார்த்திக்கும் அப்பத்தானா உசுரு அவங்க என்ன சொன்னாலும் செய்வான்.பெரியவங்க சொன்னா அது நம்ம நல்லதுக்குதானே சொல்ராங்கனு அத அப்படியே ஏத்துக்குர பையன்.குறிப்பா பெரியவங்களுக்கு மரியாதை குடுக்குர பையன்.குடும்பத்துமேல ரொம்ப பாசம் வச்சிருக்குர பாசக்கார பையன் (நம்ம ஹிரோயின தவிர) இன்சினியரிங் முடிச்சிப்போட்டு தன்னோட அப்பாக்கூடவும் மாமாக்கூடவும் சேர்ந்து தொழில பாத்துக்கறானுங்க…


சந்திரனும் பார்த்தியும் பாலாவை கூட்டிவர பாலா படிக்கும் பள்ளிகூடத்திற்கு வந்திருந்தனர்…மாமா நீங்கப்போய் பிரின்சிபல பாத்துப்போட்டு பார்மாலிட்டிஸ்ச முடிச்சிப்போட்டு வாங்க நா இங்கனையே நிக்கறேன்…

சரிங் மாப்பிள்ளை சந்திரன் சென்று சிறிதுநேரம் கழித்து பாலாவையும் கூட்டிவந்தார்…

பாலா எப்படி இருக்க??எக்ஸ்சாம்லா எப்படி பண்ணிருக்க???

நல்லாருக்கேனுங்ண்ணா…எக்ஸ்சாம் நல்லா எழுதிருக்கேனுங் அண்ணா…

பார்த்தி அண்ணா நீங்க எப்படி இருக்கிங்க??வூட்ல அல்லாரும் நல்லாருக்காங்ளா???

அல்லாரும் நல்லாருக்காங்கடா அப்பத்தாத்தாத்தா உன்னபத்தி அடிக்கடி பேசிட்டே இருந்தாங்க…

ஏனுங் மாமா ஜனனிய கூட்டிட்டு வரல??ஜனனியையும் உங்கக்கூட கூட்டிட்டு வந்துருக்கலாம்ல??

அதா வூட்டுக்கு போரம்தானேங் மாப்பிள்ளை அங்கப்போய் ஜனனிய பாருங்க…

சரி வண்டில ஏறுங்க நேரமாகுது வூட்டுக்கு போலாம்…

கார் சத்தம்கேட்டு வெளியவந்து பார்த்த அப்பத்தா காரிலிருந்து இறங்கிய பாலாவை பார்த்ததும் அவனிடம் சென்று அவனுடைய கையை பிடித்துக்கொண்டு தங்கோ வந்துட்டியா ராசா வா வா என்றா தங்கம் இப்படி எழும்பும் தோலுமா வந்துக்கர நல்லா சாப்ட்டியாயா?? இல்லையா??உன்ற அப்பேங்கிட்ட அன்னைக்கே சொன்னேன் பையன ஹாஸ்ட்டலுக்குலாம் அனுப்பாத பையன் நல்லது பொல்லாது சாப்டாம ஏங்கிப்போயிருவானு கேட்டானா உன்ற அப்பன் இப்பப்பாரு இப்படி ஒட்டடைக்குச்சிக்கு சொக்கா போட்டமாதிரி வந்து நிக்கரையே தங்கோ…

அப்பத்தாவின் பொழம்பல் சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்த ருக்மணியும் ஜனனியும் பாலாவை பார்த்ததும் பாலாகண்ணு நல்லாருக்கியா என்றா கண்ணு இம்புட்டு எளச்சிபோய் வந்து நிக்கர???

டேய் பாலா வாடா எப்படிடா இருக்க???

அவனை சுற்றி நின்று மொத்த குடும்பமும் பாசமழையை பொழிந்தனர்…

அம்மா முதல்ல அவன உள்ளக்கூட்டி போங்க இப்படி வாசல்லையே நிக்கவச்சி அவனபேசவே விடாம நீங்கபாட்டுக்கு பேசிட்டே இருக்குரிங்க என்றான் பார்த்தி…

நீ வா பாலா நாம வூட்டுக்குள்ளப்போய் பேசிக்கலாம் இங்க சிலபேருத்துக்கு பொறாமைல வயிறு எரியுது..

ஆமா எரியுது அத நீ வந்து பாத்த ச்சி போடி குட்டச்சி..

நீ போடா நெட்டையா…

என்ற பேரன வாடா போடான செவுனிலே ரெண்டு குடுத்து போடுவேன் போடி அங்குட்டு உன்னாலதா என்ற தங்கோ ஒருவருசமா ஹாஸ்டல்ல கெடந்தான்…நீ வாடா தங்கோ பாலா கையை பிடித்துக்கொண்டு உள்ளே சென்றார் அப்பத்தா…

நானேன்ன பண்ணேனுங்க அம்மத்தா எப்பபாத்தாலும் என்னையவே வஞ்சிப்போட்டு இருக்கிங்க இருங்க என்ற மாமா வந்தவுடனே சொல்லிவைக்றேன் கண்ணை கசக்கி கொண்டே வேக வேகமாக உள்ளே தனதறைக்குள் சென்று கதைவடைத்து கொண்டாள்…

போய் சொல்லு உன்ற மாமனையும் பாத்தவ உன்ற தாத்தனையும் பாத்தவடி நானு ஏங்கிட்டையேவா போடி பொசக்கெட்டவளே…நீ வா ராசா நாம போவோம் அவ கெடக்கரா…

அக்கா பாவம்ங்க அப்பத்தா.. அப்பாதா என்ன ஹாஸ்ட்ல்ல சேர்த்தாங்க அதுக்கு அக்கா என்னபண்ணுவாங்க அவங்கள எதுக்கு வையரிங்க பாருங்க அக்கா கோவிச்சிப்போட்டு போயிட்டாங்க…

அவளா பாவம் உன்ற அப்பன் வந்தவுடனே எப்படி அழுது நடிக்கரானு நீ வேனா பாரு தங்கம்…

ஏபுள்ள ருக்கு என்ன மசமனு நின்னுட்டு என்ற வாயபாத்துட்டுருக்க போ போய் என்ற பேராண்டிக்கு சாப்பாடு போட்டு எடுத்துப்போட்டு வா…

சரிங்கத்தை


பார்த்தியும் சந்திரனும் லக்கேஜ்ஜை எடுத்துட்டுவந்து உள்ளே வைத்தவர்கள் சரி மாப்பிள்ளை மீட்டிங் இன்னும் முடிஞ்சிருக்காது அப்படியே நாம்போய் உன்ற அப்பாக்கூட ஜாயின் பண்ணிக்குறேன் நீ பண்ணைக்குப்போய் இன்னைக்கு அனுப்பவேண்டிய லோடு எல்லாம் அனுப்பிட்டாங்ளானு பாத்துப்போட்டு வா…

சரிங்மாமா…


பாலாவுக்கு தட்டில் சாப்பாடை எடுத்துவந்த ருக்மணியிடம் தங்கச்சி இந்தாம்மா இத ஜனனிக்கிட்ட கொடுத்துப்போடு அவர் கையிலிருந்த ஐஸ்கிரிம்பார்சலை கொடுத்தார்…

நீங்கள் கொண்டுப்போய் குடுங்களேன் அண்ணா ஜனனிகண்ணு கோவிச்சிப்போட்டு போய் உட்கோர்ந்துருக்கு நீங்க கொண்டுப்போய் குடுத்திங்னா சமாதானம் ஆயிடும்ல…

இல்லைம்மா இப்போ போய் ஜனனிக்கிட்ட பேசுனா நேரமாகிடும் நா போயிட்டு வந்து பேசிக்குறேன்…

சரிங்ண்ணா அந்த டேபில்ல வச்சிப்போட்டு போங்க நா குடுத்துப்போடறேன்…

சரிம்மா நா போயிட்டு வாறேன்…

அண்ணா சாப்புட்டு போங்க…

சாப்பாடு வேணாம்மா நா மீட்டிங்க முடிச்சிப்போட்டு வரப்ப அங்கையே எதாவது ஹோட்டல்ல சாப்புட்டுக்கறேன்…

அம்மா நானும் போயிட்டுவாறேன்…

டேய் பார்த்தி நீயாவது சாப்புட்டு போடா…

இல்லைம்மா எனக்கு பசிக்கல நா போயிட்டுவந்து சாப்புட்டுக்கறேன் என்றவன் தனது ராயல் என்பீல்டு பைக்கை எடுத்துக்கொண்டு சென்றான்…


இந்த வூட்டுல மூனு ஆம்பளைங்களுமே நேரா நேரத்துக்கு சாப்டாமையே வேலைவேலைனு சுத்தராங்க இப்படியே சாப்டாம இருந்தா உடம்பு என்னத்துக்குத்தா ஆகரதுனு தெரியலை என பொழம்பிக்கொண்டே வந்தவர் பாலாவின் அருகில் உட்கோர்ந்து அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தார்…

அம்மா என்ன இம்புட்டு சோறு போட்டுவந்துருக்கிங்க என்னாலலா இவ்வளவையும் சாப்டமுடியாது…

கொஞ்சம்தா தங்கம் போட்டுவந்தேன் சாப்புடு தங்கம்…இந்தசோறுக்கூட சாப்டலைனா எப்படிதங்கம்…

வளரபசங்க நல்லா சாப்ட்டாதானே வேலை செய்யமுடியும் நீ வூட்டு புள்ள அதலா என்ற தங்கம் சாப்புட்டுபோடுவான் என்றார் அப்பத்தா…

இருவரும் கெஞ்சி கொஞ்சி சாப்பாட்டை வூட்டிவிட்டனர்…

சாப்பிட்டு முடித்த பாலாவும் ருக்மணியும் ஜனனியின் அறைக்கு சென்றார்கள்… அங்கு கட்டிலில் படுத்தவாரு போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்த ஜனனியை பார்த்ததும் ருக்மணியும்,பாலாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டு அவளின் அருகில் உட்கோர்ந்தனர்..

ஜனனிக்கண்ணு எந்திச்சி வா ஒருசாப்புட்டுப்போட்டு வந்து கேம்விளையாடு கண்ணு…

எனக்கு இப்போ பசிக்கலைங் அத்தை நீங்க போங்க நா கொஞ்சநேரம் கழிச்சி வாறேனுங்…

அக்கா என்ன இது நீங்க அப்பத்தா திட்டுனதுல அழுதுப்போட்டு இருப்பிங்க உங்கள சமாதானபடுத்தோனும்னு நினச்சி வந்தா நீங்க என்னடானா ஜாலியா கேம்விளையாடிக்கிட்டு இருக்கிங்க…

ஏ கோபமா இருந்தா கேம்விளையாடக்கூடாதா பாலா???

நீ கோபமா இரு ஆனா ஒருவா சாப்புட்டுபோட்டு வந்துருடா கண்ணு…

போங்கத்தை நீங்களும் அம்மத்தா திட்ரப்ப எதுவும்பேசாமதானே இருந்திங்க…

உனக்குதா அத்தையபத்தி தெரியும்ல கண்ணு அவங்களுக்கு பொட்டபுள்ளைங்கனா வூட்டுவேலையெல்லாம் செஞ்சிப்போட்டு பெரியவங்கள எதிர்த்துப்பேசாம அடக்கஒடுக்கமா இருக்கோனும்னு நினைக்கராங்கடா அதா நீ வேலை செய்யாம இருக்கனு உன்ன திட்டிட்டு இருக்காங்க..

பொட்டப்புள்ளைனா இப்படித்தா இருக்கோனும்னு சொன்னதெல்லாம் அந்தக்காலம் அத்தை இப்போலா எல்லா பெண்களும் ஆம்பளைங்க செய்யரதக்கூட சர்வசாதாரனமா செய்யராங்க தெரியும்ங்ளா???

அது அப்படி இல்லைக்கண்ணு உங்களோட சாதனைகாளையும் நாங்க பாராட்றோம் அதேசமயம் நாம குடும்ம பெண்கள் நாமபண்ற ஒரு சின்ன தப்புக்கூட நம்மலோட குடும்பத்தையே பாதிக்கும்ங்ரதையும் மறந்துரக்கூடாது.இந்த உலகத்துல நாம மட்டும் தனியா இல்லை புரியுதாக்கண்ணு…

உனக்கு போட்ஸ்னா ரொம்ப புடிக்கும் நீ காலேஜ் டைம்ல எங்க விளையாட்டுபோட்டி நடந்தாலும் உன்ற மாமாவும் உன்ற அப்பவும் பொம்பளைபுள்ளைய அவ்வளவுதூரம் எப்படி அனுப்பரதுனு தயங்குனப்ப உன்ற அம்மத்தா உனக்காக பேசி அனுப்பிவச்சாங்கதானே.அத்தைக்கு தெரியும்டா பொட்டபுள்ளைங்க வூட்டுக்குள்ளையே முடிங்கிப்போககூடாதுனு அதேசமயம் நம்ம பாரம்பரியம்,குடும்ப கௌரவத்தையும் நீ காப்பாத்தோனும்னு நினைக்கராங்கடா…

ஐயோ அத்தை போதும் போதும் உங்க மாமியாரோட புராணம்.எனக்கும் அப்பத்தாவபத்தி தெரியும் இருந்தாலும் அவங்கட்ட ஒரண்டை இழுக்கரது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு..

அவளின் காதை வலிக்காமல் பிடித்து திருகியவர் வாலு உன்ன என்னத்தா பண்றதுனே தெரியலை சரி இந்தா எந்திருச்சி ஐஸ்கிரிம் சாப்புடு அண்ணா வாங்கிட்டு வந்து குடுத்துப்போட்டு போனாங்க…

ரொம்ப தேங்ஸ் அத்தை…


அடிப்பாவி அக்கா உன்ன போய் பாவம்னு அப்பாத்தாக்கிட்ட பேசுனேன்பாரு என்ன சொல்லோனும்…


சரி சீக்கரம் சாப்புட்டுபோட்டு வா அத்தைய பாத்துப்போட்டு வரலாம்…

ஐயோ நா வரலைப்பா அங்கவந்தா அம்மா அம்மத்தா திட்டுனதவிட இன்னும் அதிகமா திட்டுவாங்க..நீ மட்டும் போயிட்டு வா…

உங்கல வந்து கூப்பிட்டேன் பாருங்க என்ன சொல்லனும் உங்கலைலா அப்பத்தா திட்டரதுல தப்பே இல்லை என்றவன் எழுந்து சென்றான்…

அப்பத்தா நா அத்தைவூட்டுக்கு போயிட்டு வாறேனுங்க…

உன்ற அத்தை இன்னைக்கு குச்சிகாட்டுக்கு களைவெட்ட ஆள்வந்துருக்குனு அங்கதா இருப்பா போய் பாரு…

சரிங் அப்பத்தா…பைக்கை அத்தைவூட்டு வாசலில் நிறுத்திவிட்டு வூட்டிற்கு பின்னாள் இருந்த தோட்டத்திற்கு வரப்பில் நடந்துக்கொண்டே வயல்லைகளை சுற்றிப்பார்த்தவாறு நடந்து சென்றான்…

ஒருகாலத்தில் முப்போகமும் நெல்விளைந்தவயலின் இன்னு தண்ணீர் பற்றாக்குறையால் சொட்டுநீர் பாசனத்தில் மரவள்ளிக்கிழங்கு செடியும் ஒருபக்கம் எழுமிச்சை தோப்பும் மாடுகளுக்கு தீவனப்பயிரும் காய்ச்செடிகளும் தோட்டத்தில் விளைந்துக்கொண்டிருந்தன…அதை பார்ப்பதற்கே பச்சைபசேல் என கண்ணிற்கு குளிர்ச்சியாக இருந்தது…

குச்சிக்காடு(மரவள்ளிக்கிழங்கு)ட்டில் ஆட்களுடன் சிவகாமியும் ஊர்க்கதைகளை பேசிக்கொண்டே வேலை செய்துக்கொண்டிருந்ததார்.…

சிவகாமி அங்கப்பாரு உன்ற அண்ணன் மகன் வறான்…

ஆரு பார்த்தியா அவன் எதுக்கு இங்க வரான் என சொல்லிக்கொண்டே நிமிர்ந்து பார்த்தவர் வரப்பில் நடந்து வந்துக் கொண்டிருந்த பாலாவை பார்த்ததும் பாலாக்கண்ணு எப்போ வந்த??

இப்போதா கொஞ்சநேரத்துக்கு முன்னாடிங்த்தை ஏனுங் அத்தை நீங்க களைவெட்ரிங்க??

ஏங்கண்ணு நம்மகாட்ல நாம வெட்டாம ஆருவெட்டுவாங்க?? இப்போதா இம்புட்டு வசதி வாய்ப்பெல்லாம் நாங்க சின்னபுள்ளைங்ளா இருந்தப்ப என்ற அப்பா விவசாயம்தா பண்ணாங்க அப்போ நானும் என்ற அண்ணனும் ஆள்க்கூட லீவுநாட்கள் வேலை செய்வோம் தெரியுமா???

அதுக்கில்லைங் அத்தை இன்னும் ரெண்டு ஆள்வர சொல்லிருக்கலாம்லனு சொல்லவந்தேன்…

ஆள் கூப்பிட்டேன் கண்ணு எல்லாரும் குட்டைவேலைக்கு போயிக்கிட்டு காட்டுவேலைக்கு வரமாட்ராங்க அதா நானும் செத்த கூட வெட்டுனா காடு மூயும்ல அதே வெட்டிப்போட்டு இருக்கேன்…

நீ வூட்ல போய் உட்கோர்ந்துருகண்ணு இன்னும் கொஞ்சநேரத்துல ஆள வூட்டுக்கு வுட்டுப்போட்டு வாறேன்…

இன்னும் கொஞ்சநேரம்தானேங் அத்தை நானும் உங்கக்கூட செத்த வெட்றேன் களக்கொத்து எங்க இருக்குங் அத்தை…

நீ எதுக்குக் கண்ணு வெயில்ல வேலை செய்யோனும் நீ வூட்டுக்குப்போ நா வாறேன்…

வேலை செய்துக்கொண்டிருந்த ஒரு அம்மா ஏய் சிவாகாமி அதா பையன் வெட்டேங்ரான்ல அப்பரமென்ன செத்த வெட்டித்தா பாக்கட்டுமே எலேய்தம்பி கொத்துப்பாரு அங்க வரப்புல இருக்கு போய் எடுத்துப்போட்டுவந்து வெட்டு…
 
Last edited:
#2
வரப்பில் கிடந்த கொத்தை எடுத்து வந்து பாலாவும் ஆட்களுடன் களைவெட்டியதை பார்த்த பெண்கள் பாரவாலை பாலா நல்லாதா களவெட்ர…

இது என்ன பெரியவிசயமுங் அக்கா கண்ணு பாத்தா கை வேலை செய்யுது..நாம என்ன எல்லாவேலையும் பொறந்தப்பையே கத்துக்குட்டா வந்தோமுங் எல்லாம் செய்ய செய்ய வந்துரப்போகுதுங் அக்கா…


சிவகாமி உன்ற அண்ணன் பையன் காட்டுவேலைக்கூட நல்லாத்தா செய்யரான்..கண்டிப்பா உன்ற மருமகன் எந்தவேலை செஞ்சாலும் பொழச்சிக்குவான்...

அக்கா இது என்ற அண்ணனோட வாரிசாச்சே சோடைபோகுமா என்ன??என்ற அண்ணன் பசங்க ரெண்டுமே தங்கம்…

அதுவேனா உண்மைத்தா சிவகாமி வூட்டுக்கு போனவுடனே உன்ற மருமகனுக்கு சுத்திப்போடு எங்க கண்ணே பட்ருக்கும்…

பாலாவும் அவர்களுடன் பேசிக்கொண்டே வேலை செய்தான்…

ஏங்கண்ணு இம்புட்டு எழச்சிப்போயிட்ட. ஹாஸ்டல்ல சாப்பாடு நல்லாலையா???

ஆமாங்த்தை பசிக்கு சாப்டலாம் அம்புட்டுதே…

ஏ பாலா உன்ற அப்பா உன்ன நாமக்கல்லையே பெரிய ஸ்கூல்லதானே படிக்கவச்சாரு அங்கக்கூடவா சாப்பாடு நல்லால???

இங்க வூட்ல அம்மா சமச்சி பாசத்தோட வூட்ரதும் அங்க பத்தோடு பதினொன்னா போட்டத சாப்டரதுக்கும் வித்தியாசம் இருக்குதானேங் அக்கா…

பாலாக்கண்ணு ஜனனி என்ன பண்றா அவளையும் உங்கூடவே கூட்டிப்போட்டு வரவேண்டியதுதானே??

அக்கா அம்மாக்கூட எதோ வேலைசெஞ்சிப்போட்டு இருந்தாங்க அதா நாமட்டும் வந்தேனுங் அத்தை…

ஆரு என்ற மகளா வேலை செஞ்சா?? இத நா நம்பனுமா கண்ணு…

நெசமாத்தானுங் அத்தை நீங்க அம்மாக்கிட்டையே கேளுங்களேன்…

ம்க்கும் என்ற அண்ணிக்கிட்டதானே அவளுக்கு செல்லங்குடுத்து கெடுக்கரதே என்ற அண்ணனும் அண்ணியும்தான்…

சரி விடுங்க அத்தை நம்ம வூட்ல இருக்கவரைக்கும்தானே அக்காவால ஜாலியா இருக்கமுடியும்…

இதசொல்லி சொல்லியே அண்ணனும் அண்ணியும் ஏவாய அடைக்கராங்கனா இப்போ நீயுமா கண்ணு…

அக்கா மணி ரெண்டரை ஆகிப்போச்சு நீங்க அல்லாரும் வூட்டுக்குபோங்க…நாளைக்கு இன்னும் ஆள்வந்தா கூட்டிட்டு வாங்க…

சரி சிவகாமி ஆள்கூப்புட்டு பாக்கறோன் வந்தா கூட்டிப்போட்டு வாறோம்…

வேலைமுடித்து ஆட்களை வூட்டிற்கு போகசொல்லிவிட்டு இருவரும் வூட்டிற்கு வந்தனர்…
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top