• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

டிசம்பர் 4.1970 - இந்திய கடற்படை தினம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
இந்திய கடற்படை தினம்
1638768509621.png
1638768526954.png

சுதந்திர இந்தியாவிற்கு மிக முக்கியமான ஒரு நாள் டிசம்பர் 4.1970 களிலேயே நமது ராணுவ பலம் எப்படி பட்டது என்றும் அதன் வீரமும் வீரியமும் எத்தகையது என்று உலகுக்கு பறை சாற்றிய நாள்.

உலக அளவில் தன் நாட்டின் பெயர் கடல் இருப்பது இந்தியாவில் மாத்திரமே. அது மட்டுமல்ல தமிழ் பெயரில் உள்ள ஒரே கடல் பிராந்தியம் மன்னார் வளைகுடா என்று சொல்வர். அது முக்கியம் அல்ல. ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இந்திய கடலை இந்துமகா சமுத்திரத்தை தன் படைபலத்தால் ஆண்டவர்கள் தமிழர்கள்.

இப்படி அப்படி அல்ல சுமார் இரண்டு லட்ச வீரர்கள் அவர்கள் அனைவரையும் அரவணைத்து வழி நடத்தி செல்வது சாமானியமான ஒன்று அல்ல, சில நூறு பேர்களை வைத்து அதை சாதித்து காட்டியவர் #மாமன்னர்_இராஜேந்திர_சோழன்.
எளிமையான அதே சமயம் வலிமையான கடற்படை அமைத்து உலகின் ஐந்தில் ஒரு பகுதியை ஆண்ட மாபெரும் அரசன்.


இவர் காலத்தில் தாம் சீனா வரை தன் தடங்கல்களை தமிழன் பதித்தான்.
அன்றிலிருந்து இன்றுவரை உலகில் இரண்டே இரண்டு நாடுகளுக்கு மாத்திரமே #நீலக்கடல் அந்தஸ்து உண்டு. ஒன்று அமெரிக்கா மற்றொன்று இந்தியா.

அப்படி பட்ட அமெரிக்கா 1970 களில் இந்திய எதிரணியில் இருந்த சமயத்தில் பாகிஸ்தான் மூலமாக பலவிதமான குடைச்சல் கொடுத்து வந்தது.ஆனால் இந்திய ராணுவத்தினர் தீரமான செயல் திறனால் படை பலம் எல்லாம் ஒன்றும் இல்லை,அதனை இயக்கும் ஆளுமை தன்மையே வெற்றிக்கு ஆதாரம் என்று வகுப்பு எடுத்தனர்.ஒருமுறை இரண்டு முறை அல்ல வரலாற்றில் மூன்று முறை அமெரிக்காவை எதிர் கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

முதலில் உலகில் யாராலும் வெல்லவே முடியாத பீரங்கிகள் என்று பிரசாரம் செய்த பேட்ரியாட் பீரங்கிகளை அடித்து நொறுக்கியது இந்திய பாகிஸ்தான் போரின் போது தான். இந்தியா அமெரிக்கர்கள் முகத்தில் பூசிய கரியையும் மீறி அமெரிக்கர்களின் முகம் சிவந்து போனது நன்றாகவே வெளியே தெரிந்தது.

அவ்வளவு ஏன் சமீபத்தில் நம் அபிநந்தன் அமெரிக்க தயாரிப்பு F16 விமானத்தை அதர பழசான ரஷ்ய தயாரிப்பு மிக்21 கொண்டு அடித்து வீழ்த்தினார். கிட்டத்தட்ட அமெரிக்க லாக்கீட் மார்டீன் நிறுவனம் நொருங்கி நின்ற சமயம் அது தான்.

உலக அளவில் அதன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. அவர்களின் சமீபத்திய ஐந்தாவது தலைமுறை விமானங்கள் வரை சந்தேக கண் கொண்டு பார்க்க ஆரம்பித்து விட்டனர் உலக ராணுவத்தினர்.

அப்படி ஓர் சம்பவம் தான் நாம் இன்று கடற்படை தினம் கொண்டாட காரணமாக இன்றளவும் விளங்குகிறது. அமெரிக்க தயாரிப்பு நீர் மூழ்கிக் கப்பல் PNS Ghazi காஜி என பெயரிடப்பட்ட அது பண்ணாத அழிச்சாட்டியம் இல்லை.

அந்நாளில் அதனை எதிர்கொள்ள நம்மிடம் எந்த கப்பலோ அல்லது நீர்மூழ்கியோ இல்லை, அதனை தகர்க்க ஆயுதங்கள் இல்லை..... ஆனால் இந்திய தரப்பில் மதிநுட்பம் இருந்தது. கிட்டத்தட்ட கடல் ராட்சஸனாக வலம் வந்து கொண்டு இருந்த அந்த நீர்மூழ்கி கப்பலை அழித்து விட்டு தான் மறுவேலை என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல் பட்டனர் இந்திய கடற்படையினர்.

அந்நாளில் அந்த பாகிஸ்தானிய நீர் மூழ்கிக் கப்பலின் இலக்கு நம் ஐஎன்எஸ் விக்ராந்த் என்று நம் படையினருக்கு தெரிய வந்தது.

களத்திற்கு வந்தார் #மானக்ஷா. சாமானிய வீரர்களுக்கு மாமனிதர் அவர்.
பிரிட்டிஷ் சரித்திரத்தில் வின்சென்ட் சர்ச்சிலுக்கு ஓர் பெயர் உண்டு, யுத்த காலத்தில் அவரது உரையை கேட்ட மாத்திரத்தில் முடவன் கூட எழுந்து நின்று சண்டை இடுவான் என்று.

அது போலவே ஒரு மனிதர் தான்

மானக்ஷா.#சாம்_ஹோர்மூஸ்ஜி_பிரேம்ஜி_ஜம்செட்ஜி_மானக்ஷா என்பதாகும்.பெயர் எவ்வளவு நீளமோ அந்த அளவிற்கு இவரது பராக்கிரம் பெரியது.சுருக்கமாக சாம் பகதூர் என்று இரண்டாம் உலகப் போரின் போது அறியப்பட்டார்.இந்திய பாகிஸ்தான் போர்களில் அனைத்திலும் பங்கு கொண்டவர்.இந்திய ராணுவ தலைமை பொறுப்பில் இன்று வரை இருவர் மட்டுமே உயரிய விருது பெற்றவர்கள், ஒருவர் #கரியப்பா, இன்னொருவர் இவர் SHFJ மானக்ஷா.

(அவர் பெற்ற விருது என்ன?????

இவ்வளவு பெரிய அளவில் கொண்டாடப் பட்ட இந்த மாமனிதர் நம் தமிழகத்தில் ஊட்டி வெலிங்டனில் தான் வாழ்ந்தார் என்பது நம்மில் பலருக்கு தெரியவில்லை.....)

கடல் ராக்ஷனாக வலம் வந்து கொண்டு இருந்த காஜியை வேட்டையாட முடிவு செய்தார், வியூகம் வகுத்தார்.முதல் காரியமாக கிருஷ்ணன் என்பவரோடு இந்த திட்டம் செயல் படுத்த உத்தேசித்து காய் நகர்த்தினார். அது சமயம் காஜி தேடி வந்த நம் ஐஎன்எஸ் விக்ராந்தை அந்தமான் தீவுகளில் போர்ட்பிளேரில் மறைந்து இருக்க சொன்னார்.

அதன் துணைக்கப்பலாக #ராஜபுத்தை இயக்கும் பொறுப்பு கடற்படை கப்பல் கேப்டன் இந்திரஜித் என்பவரிடம் ஒப்படைத்தார். அவருக்கு இடப்பட்ட பணி பிராந்தியத்தில் காணப்படும் அசாதாரண கடல் நகர்வுகளை கண்காணித்து தாக்குதல் நடத்த வேண்டும் என்பது திட்டம். கிட்டத்தட்ட பயிற்சி என்ற பெயரில் அவருக்கு சொல்லப்பட்டது.

ஏனெனில் ஒரு ஆம்னி பஸ்ஸை ஆட்டோ வைத்து எதிர்ப்பதற்கு சமம் இந்த காரியம்.
யாருக்கும் அந்த சமயத்தில் சந்தேகமே வரவில்லை.அந்த சமயத்தில் வளர்ந்தது தான் ONGC நிறுவனம். அங்கு வேலை பார்ப்பவர்கள் வேலை பார்க்க வில்லை தேசத் தொண்டு செய்தார்கள். விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள இஃது மிக முக்கியமான ஒரு கட்டத்தில் இதுவரை அவர்களுக்கு பழக்கம் இல்லாத வேலைகளில் ஈடுபட்டு வெற்றி கண்டவர் அவர்கள்.நிஜத்தில் ஊழியர்களால் வளர்ந்த நிறுவனம் ONGC. அது தனி கதை பிறகு பார்ப்போம்.

மூன்று இடங்களில் காஜியை மடக்க, அதனை விசாகப்பட்டினம் நோக்கி நகர்த்தி அங்கு வைத்து தாக்கி அழிப்பது தான் திட்டம்.இதற்காக பல கட்ட வேலைகளை எல்லாம் செய்தது உளவு துறை. 13 நாட்களில் வந்து பொறியில் சிக்கியது காஜி. விசாகப்பட்டினம் ஆழமான இயற்கையான துறைமுகம் அது.

ராஜபுத்தை பார்த்த மாத்திரத்தில் குஷியாகி போன காஜி முன்னேறி வந்து விக்ராந்தை தேடி தொடங்கியது. ஏற்கனவே கடற் பிராயத்தில் ஏற்படும் சலனங்களை கண்காணிக்க மற்றும் தாக்க உத்தரவு இருந்த சமயத்தில் ராஜபுத்தை இயக்கிய கப்பல் கேப்டன் கப்பலின் இயக்கத்தை குறைத்து மிக மெதுவாக முன்னேறி ஏற்கெனவே ONGC நிறுவனத்தாரிடம் பெற்ற கழிவு எண்ணெய் கலவையை வெடி மருந்துகள் கலந்து விநோத வெடி பொருளை உண்டாக்கி நீர்மூழ்கி கப்பல் மீது மிகச்சரியாக விழ செய்து வெடிக்க செய்தனர்.

காஜி காத்திருந்த சமயத்தில் அது அன்றைய கிழக்கு பாகிஸ்தானுக்கு இதே வந்து கொண்டு இருக்கிறோம், மிகப் பெரிய சாதனையை செய்து விட்டு வருகிறோம் என்று தகவல்களை எல்லாம் அனுப்பி அளப்பறை செய்து கொண்டு இருந்திருக்கிறார்கள். ஆனால் சுலபமாக வீழ்த்த படுவோம் என்று கனவிலும் நினைத்துப் பார்த்து இருக்க மாட்டார்கள்.

இந்திய கடற்படை அந்த டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி நள்ளிரவில் ராஜபுத் கப்பலில் கொண்டு சென்று வெடிப்பொருள் கலவையை மிக சரியான விதத்தில் கணித்து காஜி மீது நழுவு செய்து வெடிக்கவிட்டனர்.

அந்த கடல் பிராந்தியத்தில் அருகில் உள்ள நகரில் இருந்து இடங்களில் எல்லாம் வெடி சத்தம் உணரப்பட்டது. சன்னல்கள் நொறுங்கியது. காஜியின் முகப்பு தகர்ந்து போனது. அதில் இருந்த 93 பாக்கித்தானிய வீரர்கள் இறந்து போனார்கள். எப்படி இதனை இந்தியா செய்தது என்று இன்றுவரை மர்மம் தான் அவர்களுக்கு.

பின்னாளில் இஞ்சின் கோளாறு என்று சப்பைக்கட்டு சொன்னார்கள்.
ஆனால் இன்று பங்களாதேஷ் என்கிற நாடு உருவாக இது தான் அடித்தளம் அமைத்து கொடுத்தது. அவர்கள் இன்று வரை மானக்ஷாவை கொண்டாடுகிறார்கள். இந்திய கடற்படை சாமானிய பட்டது இல்லை, எதையும் செய்யும் சாகசகாரர்கள் என்று உலகம் உணரத்துவங்கியது. கடலில் கப்பல்கள் இல்லாமலேயே கடலை ஆண்ட காலம் எல்லாம் இருக்கிறது என்று பேசத் துவங்கியது அப்பொழுது தான்.

இன்று அப்படி அல்ல.

பலவிதங்களில் இந்திய கடற்படை மிக பெரிய அளவில் முன்னேறி வருகிறது.பரிட்சார்த்தமாக இந்திய கட்டளை தளங்களை ஒருங்கிணைந்து ஒரே குடையின் கீழ் இன்று முதல் இயங்க இருக்கிறது.

இந்திய எல்லை மூன்று புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தேசம். அதன் எல்லை பிராந்தியத்தின் ஆளுமை இந்திய வசம் தான் இது வரை.

அடுத்து வரவிருக்கும் பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய கடற்படை ஒன்று இருக்கும் படி திட்டமிடப்பட்டுள்ளது, அதற்கு ராஜேந்திர சோழன் பெயர் தான் சூட்டப்பட்டுள்ளது. இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?????

இன்று இந்திய கடற்படை பயிற்சி பள்ளியில் சேர வேண்டும் என்பதே பலரது கனவு திட்டம். +2 முடித்து இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் நுழைவு தேர்வு வாய்ப்பு உள்ளது.
இது மட்டும் அல்லாமல் சிறப்பு பயிற்சி வகுப்புகளில் யார் வேண்டுமானாலும் எந்த தேசத்தவரும் சேர முடியும்.

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இதற்கு பலத்த போட்டி உள்ளது.
1638768546972.png

இந்திய கடற்படை தினத்தில் நம் நிஜ கதாநாயகர்களை நினைவு கொள்வோம் ‌
❤️
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top