• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

டீக்கடை சுருள் பூரி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு ஒரு கப்

உப்பு ¼ ஸ்பூன் க்கும் குறைவாக

நெய் இரண்டு ஸ்பூன்

அரிசி மாவு இரண்டு ஸ்பூன்

செய்முறை :

ஒரு சிறிய பௌலில் நெய் மற்றும் அரிசி மாவு சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்..

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்...

மாவு ஊற வைக்க தேவையில்லை...

சிறு சிறு உருண்டைகளாக பிடித்து சப்பாத்திக்கு தேய்ப்பது போல ஒரு உருண்டையை தேய்த்து வைத்து அதன் மேல் நாம் கலந்து வைத்துள்ள அரிசி மாவு கலவையை தடவி விட்டு அதற்கு மேல் அடுத்ததாக தேய்த்து வைத்த சப்பாத்தியை வைக்க வேண்டும்..

இது போல இருக்கும் உருண்டைகளை எல்லாம் ஒன்றன் மீது ஒன்றாக வைத்துக் கொள்ளவும்..

கடைசி சப்பாத்தி வைத்து முடித்ததும் எல்லாம் ஒன்றாக சேர்த்து சுருட்டி கொள்ளவும். அதன் முடிவில் சிறிது நெய் தடவி விடவும்...

சுருட்டி வைத்ததை ஓரத்தில் இருந்து சிறிது சிறிதாக கட் பண்ணிக்கோங்க....

கட் பண்ணி வைத்ததை எடுத்து கல்லில் வைத்து லேசாக அழுத்தி விடவும்... சப்பாத்தி கட்டையில் தேய்ப்பதானால் லேசாக தேய்க்கவும்.. நாம் சுருட்டி வைத்தது போல லேயர் லேயராக வரும்....

வாணலியில்சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் அடுப்பை சிறிது சிம்மில் வைத்து நாம் தேய்த்து வைத்ததை மூன்று மூன்றாக போட்டு பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்...

மற்றொரு வாணலியில் அரை கப் சர்க்கரை கால் கப் தண்ணீர் சேர்த்து பாகு தயாரிக்கவும்.. இதனுடன் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்க்கலாம்.. இதற்கு கம்பி பதம் தேவையில்லை சர்க்கரை நன்றாக கரைந்தாலே போதுமானது.....

நாம் பொரித்து வைத்ததை இரண்டிரண்டாக இந்த பாகில் போட்டு நன்கு திருப்பி திருப்பி விட்டு எடுக்கவும்....

சுவையான டீக்கடை சுருள் பூரி ரெடி.....

வேண்டுமென்றால் இது போன்று பாதாம் முந்திரி குட்டி குட்டியாக நறுக்கி தூவி கொள்ளவும்



20210526_174903_50.jpg
 




Last edited:

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
Aduppai sim la vachuttu theeya enna panratham🙄🙄🙄

Surul na urundaiya neelama irukkatha🤔🤔🤔

Pakka nalla irukku😁😁😁
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Aduppai sim la vachuttu theeya enna panratham🙄🙄🙄

Surul na urundaiya neelama irukkatha🤔🤔🤔

Pakka nalla irukku😁😁😁
Haan theeya bathirama fridge kulla vachu pootidu🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️


Nee pannu apdi🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Doubt nu vnathaa kekka than seivom🤨🤨🤨🤨🤨🤨..

Athu fridge a illa fire saver aa🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
Yenda unakku mattum yepdi da ipdi kelvilam thonuthu?


Unakkenna nee periya Kelviyin nayagan nu nenaippa🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨😠😠😠😠😡😡😡😡😡
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top