You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


டேய் உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது 12.

#1
பகுதி – 12

இதய துடிப்பு திரையில் குறைவதை கண்டவன், “டாக்டர்..’’ என்று பெருங் குரல் கொடுத்து மருத்துவரை அழைத்தான்.

அடுத்த கொஞ்ச நேரத்தில் இவர்கள் வெளியே அனுப்பப்பட, தீவிர சிகிச்சை பிரிவின் திரை மூடப்பட்டது.

சரியாய் பதினைந்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்த மருத்துவக் குழுவினர் சோகமாய் கடந்து செல்ல, இதற்கு முன்பு முகிலனிடம் பேசிய மருத்துவர், “சாரி சார்... எங்களால ஒன்னும் செய்ய முடியல. வெரி சாரி..!’’ என்றுவிட்டு நகர்ந்தார்.

சிலையென சமைந்து நின்ற முகிலன் வேகமாய் மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்தான். அதுவரை அவளை சுற்றி இருந்த உபகரணங்கள் அகற்றப்பட்டு சூரி நிர்மலமாய் அப்படுக்கையில் வீற்றிருந்தாள்.

“சூரி..’’ என்ற கதறலோடு, அவளை தூக்கி தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்தவன், “எழுந்திரு சூரி... உன்னோட முகிலன் வந்துட்டேன் சூரி. இனி எப்பவும் உன்னை பிரியவே மாட்டேன் செல்லம்மா... எழுந்திருடி... என் கிளியம்மா எழுந்துக்கோடி.. உன் லூசு ரூலர் வந்துட்டேன்டி. எழுத்துக்கோ சூரி..’’ என்று அவளை உலுக்கிக் கொண்டிருந்தான்.

அழுதுக் கொண்டிருந்த ரம்யா முன்னால் வந்து நின்றாள். “இப்ப சூரி உயிரோட வந்து நின்னா நீங்க அவளை ஏத்துகுவீங்களா..?’’ என்று கேட்டாள்.

இறந்த மனிதர் மீள வழியில்லை என்பதை முகிலன் உணர்ந்தே இருந்தாலும், “என் சூரி திரும்ப வந்தா அவளே என் கழுத்தை பிடிச்சி தள்ளினா கூட நான் அவளை விட்டு போக மாட்டேன் ரம்யா..’’ என அழுகையின் ஊடே சொன்னான்.


முகிலன் அப்படி சொன்னதும் ரம்யா சாமி வந்தவளை போல சூரியை சுற்றி சுற்றி ஆடினாள். அதிர்ச்சியில் இருந்த முகிலன் கூட அவளின் செயல் கண்டு அப்படியே திகைத்து நின்றான்.

“அம்மா மாகாளி... உனக்கு நான் செஞ்ச பூஜை உண்மைனா... என்னோட நட்பு உண்மைனா.. எல்லாத்துக்கு மேல இதோ இங்க நிக்குறாரே இந்த கமிஷ்னர் அவர் லஞ்சம் வாங்காத உத்தமர்னா.. எல்லாத்துக்கு மேல இங்க படுத்து கிடக்குறாலே சூரி அவ காதல் உண்மைனா... என் உசுரை எடுத்துக்கிட்டு அவ உசுரை திருப்பி தந்துடு தாயி...’’ என கத்திக் கொண்டே சூரியின் கட்டிலை சுற்றி சுற்றி ஆடினாள்.

ராவியும், கார்த்தியும் பய பக்தியாய் கன்னத்தில் கை வைத்து ஒரு ஓரத்தில் ஒதுங்கி நிற்க, சுற்றி ஆடிக் கொண்டே இருந்த ரம்யா ஒரு கட்டத்தில் அப்படியே மயங்கி சூரியின் கட்டிலின் கீழ் விழுந்தாள்.

அந்த நேரம் அறைக்குள் இடியோசை காதைப் பிளந்தது. மின்னலின் ஒளி கண்ணைப் பறித்தது. தலையில் போட்டிருந்த கட்டோடு, சூரி ஏதோ துயில் கலைந்து எழுபவள் போல மெதுவாய் விழிகளைப் பிரிந்து எழுந்து அமர்ந்தாள், “முகிலன்..’’ என்ற மெல்லிய அழைப்போடு.

ஒரு நிமிடம் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதே முகிலனுக்கு புரியவில்லை. அது புரிந்த அடுத்த நொடி அவன் முகம் கோபத்தில் செந்தணலாகிப் போனது.

“ஷிட்.. உங்க பேச்சை எல்லாம் நம்பி வந்தேன் பாரு...’’ என்றவன் அந்தக் கண்ணாடி கதவுகளை திறக்கப் போக, சூரியின் கட்டிலின் கீழ் விழுந்திருந்த ரம்யா எழுந்து அமர்ந்தாள்.
“அண்ணா ஒரு நிமிஷம். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி எங்களுக்கு ட்ரஸ் எடுத்துக் கொடுக்குறப்ப உங்க அண்ணன் வாங்கி தரேன் வாங்கிக்கோங்கன்னு சொன்னீங்க. அந்த வார்த்தை உண்மையா இருந்தா ஒரு ரெண்டு நிமிஷம் நில்லுங்க ப்ளீஸ்.’’ என வேண்ட முகிலன் அப்படியே நின்றான்.

ரம்யா தொடர்ந்து, “ஆமா நாங்க ட்ராமா தான் பண்ணோம். உங்களை இங்க வர வைக்க. சூரி இல்லாம போனா உங்க உலகம் என்ன ஆகும்னு உங்களுக்கு உணர்த்த. எதுவுமே பொய் இல்லைனா. உங்க கண்ணீர். உங்க காதல் எதுவுமே பொய் இல்ல. எங்க பிரண்ட் தினம் செத்து செத்து பிழைக்கிறதை எங்களால நேர்ல பார்க்க முடியல. பிரியனை பிரிஞ்சி வந்தப்ப அவ இப்படி துடிக்கல. பிணத்துக்கும் நடை பிணத்துக்கும் பெருசா வித்யாசம் எதுவும் இல்லைனா. நாங்க போட்டது தான் ட்ராமா. சூரி பேசினது முழுக்க உண்மை. அது உங்களுக்கு இந்நேரம் புரிஞ்சி இருக்கும்னு நம்புறேன். பிடிவாதத்துக்கு விலையா வாழ்க்கையை கொடுத்துடாதீங்க அண்ணா ப்ளீஸ்..! நாங்க வெளிய வெயிட் பண்றோம். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பேசி ஒரு நல்ல முடிவுக்கு வாங்க.’’ என்றவள் மற்ற இருவரை பார்க்க, அவர்களும் ரம்யாவோடு வெளியேறினர்.

முகிலன் தான் நின்ற நிலையில் இருந்து கொஞ்சமும் மாறி நின்றானில்லை. சூரி அவனை பல முறை அழைத்து பார்த்தும் அவன் முகம் திருப்பாமல் இருக்க, கோபத்தின் உச்சிக்கு சென்றவள், “டேய்..! உன்னை எப்படித் தான்டா கரெக்ட் பண்றது..? ரொம்ப ஓவரா போற..! போடா போ.. எங்க அண்ணன் பாக்குற மாப்பிள்ளை கட்டிக்கிட்டு எனக்கு பொறக்கப் போற பிள்ளைக்கு முகிலன்னு பேர் வச்சிட்டு போறேன்.’’ என சூரி வெளியே நடக்க முயல, முயன்றாள் அவ்வளவே அதற்குள் முகிலன் அவளை கைகளில் அள்ளி இருந்தான்.

“என்ன எப்படி கரெக்ட் பண்ணும் தெரியுமா...? இபப்டித் தான்.’’ என்றவன் அடுத்து அவளை யோசிக்க விடாது இதழ்களில் முத்த யுத்தத்தை துவங்கினான்.

“ம்... ஹும்...’’ என்று சிணுங்கிய சூரி ஒரு நிலைக்கு மேல் அவன் முத்தத்திற்கு மொத்தமாய் சரணாகதி அடைந்திருந்தாள். நீண்ட நெடு நேரம் கழிந்தே அவளை தன்னில் இருந்து பிரித்தவன், “செத்துட்டேன் சூரி. இனி இப்படி ப்ளான் எல்லாம் போடாதடி. அது சரி எப்படிடி எல்லாத்தையும் அவ்ளோ ரியலா பக்காவா செட் பண்ணீங்க. செம கேடி தான் நீங்க எல்லாம்.’’ என்றபடி, அவளோடு அங்கிருந்த படுக்கையில் சரிய, சூரி எழுந்து அமர்ந்து அவனை முறைத்தாள்.

“சும்மா யாரும் எதையும் தூக்கி கொடுக்க மாட்டாங்க மிஸ்டர் போலீஸ்கார். இது ஏதோ சினிமா சூட்டிங் நடக்குற ஹாஸ்பிடல் பிளாக்காம். பில்டிங் ரெண்ட் அப்புறம் ஆக்டர்ஸ் பீஸ் எல்லாம் சேர்ந்து ரெண்டு மணி நேரத்துக்கு எழுபதாயிரம் ரூபா. எனக்கெல்லாம் தெரியாது அதையெல்லாம் நீங்க தான் கட்டணும்.’’ என்றவள் தற்சமயம் இலகுவாய் படுத்துக்கொள்ள இப்பொழுது அதிர்ந்து எழுந்து அமர்வது அவன் முறையானது.

“அடிப்பாவி... ஆனாலும் இதெல்லாம் டூ மச்..’’ என்று முகிலன் புலம்ப, “உங்களுக்கு வேணும் எத்தனை முறை பேச வந்து இருப்பேன். அசால்ட்டா அலட்டிகிட்டு போகத் தெரிஞ்சது இல்ல. அப்போ இப்படித் தான் நடக்கும்.’’ என்றவள், “பில்லை செட்டில் பண்ணா தான் வீட்டுக்கு போக முடியும் போலீஸ்கார். சீக்கிரம்.’’ என்று அவனை மேலும் கடுப்பேற்றினாள்.

‘எல்லாம் தலை விதி..’ என்று நொந்தவன் வெளியே வர, அங்கே தோழிகள் மூவரும் வெளி வராந்தாவில் அமர்ந்து வகை வகையாய் உணவுகளை மொக்கிக் கொண்டிருந்தனர்.
அதிலும் ராவி வாயில் கடித்த சிக்கன் பீசோடு, “எவ்ளோ நேரம் பேசுவீங்க. பசிக்கும்ல.... இந்த பில்லையும் சேர்த்து கட்டிடுங்க..’’ என மொழிய, நடுத்தர மக்கள் தீபாவளி சமயத்தில் கிருஷ்ணன் நரகாசுரனை மன்னித்து விட்டு இருக்க கூடாதா என்று ஏங்குவார்களே.. அது போல சூரியுடன் தானே சமாதான உடன்படிக்கைக்கு சென்று இருக்கலாமோ என்று காலம் கடந்து யோசிக்கலானான்.

ஒருவழியாய் தொகையை செலுத்தி முடித்த பின், தோழிகள் மூவரும் தங்கள் இருசக்கர வாகனத்தில் கிளம்ப, சூரி முகிலனின் வாகனத்தின் அருகில் வந்து நின்றாள்.

முகிலன் குறும் புன்னகையோடு வண்டியை கிளப்ப, சூரி அவனை இறுக பிடித்தபடி வாகனத்தில் ஏறி அமர்ந்தாள்.

மாமனையும் சூரியையும் ஒன்றாய்க் கண்ட நித்தி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். எப்போதும் போல மூவரும் சமைத்து, உண்டு, ஒதுங்க வைத்தபின், நித்தியை உறங்க வைத்த சூரி, இதற்கு முன் அவர்கள் மனம் விட்டு பேசிக் கொண்ட பால்கனிக்கு வந்து நின்றாள்.

பின்னால் முகிலனின் அரவம் கேட்கவும், முகத்தை திருப்பாமலேயே, “சாரி..’’ என்றாள். அவள் முன் வந்து மண்டியிட்டு அமர்ந்தவன், “நானும்’’ என்றான் காதலின் மென் நகையோடு.

“எனக்கு உண்மையா தெரியல. நீங்களே சொல்லுங்க உங்களை பர்மனென்ட்டா எப்படி கரெக்ட் பண்றது. பாதியில விட்டுட்டு போகாத மாதிரி..’’ என சூரி கேட்க, அவளின் குரலில் இருந்த கவலையில் பெரிதாய் சிரித்தவன், “ஓ.. சொல்லித் தரேனே.. எப்படி மாமாவை வித விதமா கரெக்ட் பண்ணலாம்னு..’’ என்றவன் அவளை தன் கை வளைவிற்குள் கொண்டு வர, சூரியும் காதலின் நிறைவோடு அவன் மார்பினில் சரண் புகுந்தாள்.

அவள் காதோரம் முத்தமிட்டவன், “ஆல்ரெடி என்னை கரெக்ட் பண்ணி உன் மூக்கு நுனி மச்சத்துல என்ன சுருட்டி வச்சி இருக்கடி என் செல்ல பொண்டாட்டி.. இனிமே புதுசா எல்லாம் கரெக்ட் பண்றேன்னு கிளம்பாதா. மாமா மனசும்.. பர்சும் தாங்காது..’’ என அவளை வார, "உங்களை.." என்றவள் அவனில் இருந்து விலகி அவன் மார்பில் குத்த, அவளை விலக்கி வீட்டிற்குள் ஓடினான் முகிலன்.

பின்னால் சூரி துரத்த, இருவர் சிரிப்பொலியும் சங்கீதமாய் அவ்வீட்டை நிறைத்தது. வெற்றிகரமாய் காதல் இருவரையும் கரெக்ட் செய்திருந்தது.

கரெக்ட் செய்யப்பட்டான்.

முற்றும்.
 
#2
ஹாய் ஹாய் மக்களே..!

இந்த கதையை இந்த பூஜா ஹாலிடேஸ்ல முடிக்கணும்னு ஒரு முடிவோட களத்துல இறங்கி முடிச்சாச்சு.

ஆனா பாருங்க நாளை கழிச்சி பரிட்சை இருக்கு அதுக்கு முன்னாடி முக்கிய வேலையா மனநல நாளுக்கு போட வேண்டிய டிராமா வேலைகள் கழுத்து வரை காத்து கிடக்கு.

ஆனா அதெல்லாம் வேலை மட்டும் தானே. இது நம்ம நேசிப்பாச்சே. அதான் தொட்டதும் வேகம் பிடிச்சு முடிச்சாச்சு.

பதில் போட முடியாம போனதுக்கு ஆயிரம் சாரி செல்லம்ஸ். லேப் டாப்பை திருப்பி அடுத்து எந்த ஹாலிடேஸ்ல தொடுவேனோ தெரியாது. ஆனா உங்க கருத்தை எல்லாம் படிச்சிட்டு தான் இருக்கேன்.

எப்பொழுதும் கருத்தூன்றி நான் நிற்க துணை புரியும் வாசக நெஞ்சங்களுக்கு அன்பும் நன்றியும்.

அடுத்த லீவ்ல பாதியில முடிக்காம கிடக்க அடுத்த கதையை தூசி தட்டுவோம்,

அன்பில் விடைபெறுவது..

மேக்னா சுரேஷ்.
 

kavitha28

Well-known member
#9
Hi magna...a very nice story Dr..Surya n her frnds were awesome... And mugilan tooo..a very interesting story...come back soon Dr..... With a long story...
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top