• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

டேய் உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது??? 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

thilagamarul

நாட்டாமை
Joined
May 11, 2019
Messages
42
Reaction score
127
Location
Chennai
Part 2




மீரா முதன் முதலாய் தன் கண்ணனை பார்த்ததை நினைத்து கொண்டிருந்தாள். மீரா அன்று வழக்கம் போல தூங்கி கொண்டிருந்தாள்.

“மீரா மீரா சீக்கிரம் எழுந்து குளி”

“எதுக்கும்மா மணி ஆறுதான் ஆகுது”

“பக்கத்துல ராஜூ அங்கிள் வந்திருக்காங்க”

சரி யாரோ தெரிந்தவர்...அம்மா இப்படி கத்தினால் ஏதோ முக்கியமானவர் என்பதை உணர்ந்தவள் உடனே எழுந்து தயாரானாள்.

வா வா கொஞ்சம் தண்ணி எடுத்துக்கோ, பால் பாக்கெட் எடுத்துக்கோ, சர்க்கரை எடுத்துக்கோ??

அம்மாவின் பதட்டம் அதிசயமாக இருந்தது மீராவுக்கு, ஏனெனில் அவர்கள் வீட்டில் அப்பாதான் எப்பவும் இப்படி, அம்மா ரொம்ப பொறுமை ஆனால் ஏன் இப்படி பதட்டபடுறாங்க யோசித்தவாறே அவர் சொன்னதையெல்லாம் எடுத்து கொண்டு கிளம்பினாள்.

அங்கே ராஜூ அங்கிள் பார்த்ததும் இவளுக்கு பிடித்தது. அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு இவளும் அம்மாவும் சேர்ந்து பால் காய்ச்சி சாமியிடம் வைத்து ஆசீர்வாதம் வாங்க, இருங்க கண்ணனை கூப்பிடுறேன், “கண்ணா கொஞ்சம் வாப்பா”

மாடியிலிருந்து அவன் இறங்கி வர சுற்றுபுறம் பிரீஸ் ஆக மற்றது மறந்து மேலே பறக்க ஆரம்பித்தாள். வாய் மூட மறந்து பார்த்திருக்க, மீரா அந்த பாலை எல்லாருக்கும் கொடு என்னும் தாயின் குரலில் பூமிக்கு வந்தாள்.

அனைவருக்கும் கொடுக்க கண்ணன் யாரையும் பார்க்கவில்லை பால் டம்ளரை மட்டும் எடுத்து கொண்டு மேலே சென்று விட்டான்.

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன?? ரஹ்மான் அவளுக்கு மட்டும் பாட திருதிருவென விழித்தாள்.

என்ன மீரா அப்படி முழிக்கிற, காலேஜுக்கு டைம் ஆச்சு நீ கிளம்பு, இன்னைக்கு ஒரு நாள் கான்டீன்ல சாப்பிடு என்றாள் அம்மா.

இன்னைக்கு ஒரு நாள் காலேஜுக்கு போலனா என்ன?? மனதிற்குள் சொல்லி கொண்டவள் வேறு வழியின்றி கிளம்பினாள். அதன் பிறகு இந்த ஆறு மாதமாய் இப்படி ஒரு ஜென் நிலையில் இருக்கிறாள்.

மீராவிற்கு அவளது வாழ்கையே மாறி விட்டது. அவளது உலகம் கண்ணை சுற்றி நடந்தது. காலை எவ்வளவு எழுப்பினாலும் ஏழு மணிக்கு எழுந்திருப்பவள் இப்போதெல்லாம் காலை 5.3௦ எழுந்து மாடிக்கு படிக்க சென்று விடுகிறாள். ஏதோ புத்தி வந்து விட்டது என்று காயத்ரி நினைக்க, உண்மையில் கண்ணனை பார்க்க மட்டுமே அது என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

**************

எப்பொழுதும் மகள் மீது ஒரு கண் வைத்திருப்பார் காயத்ரி. அவள் சாப்பிடும் அளவு, பார்க்கும் டிவி நிகழ்ச்சி, நண்பர்கள், படிப்பு, அனைத்திலும் அவளுக்கே தெரியாமல் இவரது ஆளுமை இருக்கும். ஒரு மாதத்தில் எதுவும் பெரிதாக தோன்றவில்லை அதன் பிறகு ஊன்றி கவனித்தவர் மகளின் மனதை கண்டு கொண்டார்.

வேலை முடிந்து களைப்பாக “காயத்ரி” என்னும் அழைப்பினுடன் வீட்டுக்குள் நுழைந்தார் ராமச்சந்திரன்.
எப்பொழுதும் ஒரு குரலிலேயே வருபவள் எங்கே என தேடியபடியே உள்ளே செல்ல ரூமில் ஏதோ யோசனையில் மூழ்கியிருந்தார்.


“காயூ??” கூப்பிட்டும் பயனின்றி, தோளை தொட

சட்டென்று நிமிர்ந்தவர் “வாங்க” எப்ப வந்தீங்க இருங்க டீ கொண்டு வரேன் என விரைந்து சென்று டீயுடன் வந்தார்.

“என்னாச்சு காயூ?? என்ன யோசனை??”

“ஒன்னுமில்லைங்க”

“அதுலேயே நிறைய இருக்குன்னு தெரியுது...சொல்லு என்னன்னு??”

“அது எப்படி சொல்றதுன்னு தெரியலையே??”

“மனசுல வச்சுக்கிட்டு கஷ்டபடுறதுக்கு வெளிய கொட்டிடு கொஞ்சம் சமாதானமா இருக்கும்.”

“உண்மையான்னு தெரியல...ஆனா என்னோட யூகம் தான்”

“என்ன யூகம்??”

“நம்ம மீரா ராஜூ அண்ணா பையன் கண்ணனை விரும்புற மாதிரி தெரியுது...”

“எப்படி சொல்ற??” கேட்டவரின் குரலில் அடக்கப்பட்ட எரிச்சல்.

“பார்த்தீங்களா....உங்க பொண்ணை பத்தி சொன்னதும் கோபம் வருது.”

“இல்லைம்மா அவளே ஒரு குழந்தை (!!) அவ எப்படி இப்படியெல்லாம் நடந்துப்பா??” பாசமான தந்தையாக தடுமாறினார்.

“கடவுளே அவளுக்கு வயசு 21, இந்த வருஷம் டிகிரி முடிக்க போறா...”

“சரி அவளுக்கு 5௦ வயசானாலும் எனக்கு குழந்தைதான்...”

இது மாதிரி பொண்ணு பைத்தியத்தை வச்சுக்கிட்டு மகளை எப்படி கரையேற்ற போகிறோம் புது கவலை பிறந்தது காயத்ரிக்கு, “சரி குழந்தையை கல்யாணம் கட்டி கொடுப்பீங்களா இல்லை வீட்லயே வச்சுப்பீங்களா??”

“கண்டிப்பா கல்யாணம் செய்து கொடுப்பேன் அவன் அவளை தங்க தாம்பாளத்துல வச்சு தாங்குற ஒருத்தனுக்கு கொடுப்பேன். என் பொண்ணுனா சும்மாவா? தங்கம் சொக்க தங்கம்டி, அவ மனசு யாருக்கு யாருக்கு வரும், யாரையும் பேச்சால கூட துன்புறுத்த மாட்டா, அவளுக்கேத்த மகாராஜாவை கண்டுபுடிச்சு கட்டி வைப்பேன்.”

தெய்வமே இந்த மனுஷனுக்கு எப்படி புரிய வைக்குறது, நானும் எங்க அப்பாவுக்கு இப்படித்தான் இருந்தேன், அவரும் ராஜாவை தேடுறேன்னு உங்களைத்தான் கட்டி வச்சாரு என்று கத்த வேண்டும் போலிருந்தது காயத்ரிக்கு. ஆனால் பிரச்சனை அதுவல்ல என்று தெளிவாக யோசித்தவர், “சரிங்க நம்ம ராஜூ அண்ணா பையனுக்கு என்ன பிரச்சனை, நல்லா இருக்கான், படிச்சிருக்கான், கை நிறைய சம்பாதிக்கிறான், அவர்கிட்டேயே பேசலாமே??”

ஒரு காலத்தில் நெருங்கிய தோழன் காலம் பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கிறது. விதி செய்த வேலைக்கு நான் என்ன செய்ய?? மனம் நிலையில்லாமல் தடுமாற, “எப்படி அவன்கிட்ட போய் பேசுறது காயூ??

என்னவோ போல இருக்கு. இவ்ளோ நாள் கழிச்சு வந்திருக்கான், ஆனா பழைய நட்பு அவன்கிட்ட இல்லை.”
என்னங்க இப்படி சொல்றீங்க, “அவர் இழப்பு தெரிஞ்சும் இப்பிடி பேசினா எப்படி??”


“நிச்சயம் அவனோட இழப்பு ரொம்ப அதிகம் தான், ஆனா விதியோட விளையாட்டுக்கு நாம என்ன செய்ய முடியும்”

எதுவும் செய்ய வேண்டாம் அவருக்கு நாம இருக்கோம்னு ஆதரவா நடந்துகிட்டா போதும், பதினைந்து வருஷத்துக்கு முன்னே அவருக்கு வயசு இருந்தது, இப்போ நாம தாங்க கூட இருக்கணும். அவர் கொஞ்சம் மூஞ்சை திருப்பினா நாம தாங்கிக்க கூடாதா?? சொல்லுங்க??

“அதனால தான் அவன் பையன் வேண்டாம்னு சொல்றேன். அன்னைக்கு இங்க வந்தாங்களே அப்போ ஓடி போனோமே அவனை பார்க்க ஞாபகம் இருக்கா??”

“ம்ம் இருக்கு”..இருவரது எண்ணமும் அன்றைய நிகழ்வுக்கு சென்றது.

அன்று காலை வழக்கம் போல வாசல் அருகே அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்தார்.

பக்கத்து வீட்டில் திடீரென கார் வந்து நிற்க, படித்து கொண்டே பார்த்தவர் பரபரப்பானார்.

“ராஜூ மெல்ல முனங்கியவர் கிட்டத்தட்ட அவரை நோக்கி ஓடினார்.

“ராஜூ எப்படி இருக்க?? இவ்ளோ நாள் கழிச்சு வந்திருக்க?? இப்பவாவது உனக்கு இங்க வரணும்னு தோனுச்சே” படபடவென பேசியவர், அமைதியாய் புன்சிரிப்புடன் கேட்டு கொண்டிருந்த நண்பன் வித்தியாசமாய் தெரிந்தான்.

நீ மாறவேயில்லை ராமு, அதே படபட பேச்சு....என்றார் அப்பொழுதும் அமைதியாய். அதற்குள் கண்ணன் வர “கண்ணா இதுதான் ராமு அங்கிள் நான் நிறைய சொல்லி இருக்கேனே” என அறிமுகப்படுத்த “ஹலோ அங்கிள்” என்றான் அமைதியாய்.

அவர்கள் இருவரும் அமைதியாய் இருக்க தான் மட்டும் உணர்ச்சிவசப்பட்டு பேசியதில் சற்றே தடுமாறியவர்.

“நான் போய் காயூவை கூட்டிக்கிட்டு வரேன்.”

“சரி நிதானமா வா, இனிமே இங்க தானே இருக்க போறோம்” என்றார் இயல்பாய்.

அதையும் தவறாக புரிந்து கொண்ட ராமு உள்ளே தன் மனைவியிடம் நடந்ததை கூற, “அட ராஜூ அண்ணா வந்து இருக்காங்களா?? வாங்க உடனே போய் பார்த்துட்டு எதாவது உதவி வேணுமான்னு கேட்டுட்டு வரலாம்”

“காயூ அவன் என் பழைய பிரெண்ட் இல்லை.”

“இருக்கட்டுங்க நீங்க அவரோட பிரெண்டா இருங்க, வாங்க, இருங்க மீராவையும் அழைச்சிகிட்டு போகலாம்.” பிடிவாதமாய் அழைத்து சென்றாள்.

மூவரையும் அமைதியாய் வரவேற்றார் ராஜூ. “வாங்க உட்காருங்க தண்ணி குடிங்க”

அண்ணா நீங்க இருங்க நான் எடுத்துக்கிறேன், காயத்ரி அவராக சென்று அவர் வீட்டிலிருந்து எடுத்து வர, “இன்னும் எதுவும் செட் பண்ணலம்மா”

“இருக்கட்டும்னா, நான் ஹெல்ப் பண்றேன்”

“அது ஒன்னும் பிரச்சனை இல்லை, நான் பார்த்துக்கிறேன்.”

மீண்டும் சென்று மகளையும் உடன் அழைத்து வந்தவர், அண்ணா இது மீரா, மீரா மாமா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கு, மீராவும் அவரின் காலில் விழ, கைகள் நடுங்க அவளின் தலையை வருடி “நல்லா இரும்மா” என்று வாழ்த்தினார்.

பார்த்து கொண்டிருந்த ராமுவுக்கும் காயத்ரிக்கும் கண்கள் கலங்கின.

“அண்ணா கண்ணன் எப்படி இருக்கான்”

நல்லா இருக்கான் மா, இப்போதான் மேல அவன் ரூமுக்கு போனான், பால் காய்ச்சினதும் கூப்பிடுறேன்.
பால் காய்ச்சியதும் சாமி கும்பிட, அங்கிருந்த கீதாவின் படத்தை பார்த்தும் தன்னை அறியாமல் கண்கள் கலங்கியது காயத்ரிக்கு.


இரும்மா கண்ணனை கூப்பிடுறேன், “கண்ணா கொஞ்சம் வாப்பா”

“வரேன் டாட்” வந்தவன் இவர்களை அந்நிய பார்வை பார்க்க, “நம்ம ராமு காயத்ரி டா.”

“ஒ...ஹாய் அங்கிள், ஹாய் ஆண்ட்டி” மேலோற்றமாய் வரவேற்றுவிட்டு சென்று விட்டான். அவனை பார்த்து பெருமூச்சு விட்டவர், “அவனுக்கு இங்க வேலை கிடைச்சிருக்குமா அதான் இங்க வந்துட்டோம். அவனது வேலை பார்க்கும் நிறுவனம் அவனின் பதவி என்று சொன்னவர். அடிக்கடி வாங்க” என்றார்.

அதற்கு பிறகு இந்த ஆறு மாதத்தில் என்னதான் ராஜூ பேசினாலும் அதிலிருந்த அந்நியத்தன்மை ராமுவை மிகவும் பாதித்தது. ஆனால் காயத்ரி அதையெல்லாம் நினைக்காமல் அவரால் முடிந்த உதவியை செய்து கொண்டும் பேசி கொண்டும் இருந்தார்.

இருவரும் நினைவுகளில் இருந்து மீண்டு வந்தனர்.

“இதுல நீங்க சங்கடப்பட ஒன்னுமில்லைங்க, கேட்டு பார்போம் இல்லேன்னா சீக்கிரம் வேற இடம் பார்த்து அவ கல்யாணத்தை சீக்கிரம் முடிச்சுடனும்.”

மனைவி இந்த அளவுக்கு பேசுகிறாள் என்றால் அதில் விஷயம் இருக்கிறது என்று புரிந்தவராய் அமைதி காத்தார்.
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
அப்பா யோசிச்சா அதுல ஆயிரம் அர்த்தம் ???இருக்கும் பார்ப்போம் மீரா லோவுக்கு? யாறுதான் வில்லன்னு??
 




thilagamarul

நாட்டாமை
Joined
May 11, 2019
Messages
42
Reaction score
127
Location
Chennai
அப்பா யோசிச்சா அதுல ஆயிரம் அர்த்தம் ???இருக்கும் பார்ப்போம் மீரா லோவுக்கு? யாறுதான் வில்லன்னு??
Thanks dear
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top