• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

டேய் உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது.7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Meghna suresh

நாட்டாமை
Joined
May 26, 2019
Messages
83
Reaction score
873
Location
India
பகுதி – 7

முகிலன் தன்னிடம் உதவி வேண்டி வந்திருக்கிறான் என்பதையே சூரியால் நம்ப முடியவில்லை. அவனை நன்றாக நிமிர்ந்து பார்த்தவள், “சென்னை சிட்டி அசிஸ்டன்ட் கமிஷ்னருக்கு சாதாரண பொண்ணு நான் என்ன உதவி செய்ய முடியும் சார்.’’ என்று சற்று அழுத்தமாகவே கேட்டாள்.

அவளின் அந்த அலட்சிய தொனியிலும் முகிலனின் முகத்தில் இருந்த புன்னகை வற்றவே இல்லை. “சென்னை சிட்டி கமிஷ்னருக்கு ஒரு அக்கா பொண்ணு இருந்து.. அந்த பொண்ணு பிறவியிலேயே வாய் பேச முடியாத, காது கேக்கதா குழந்தையா இருந்து.. அந்த பொண்ணுக்கு திடீர்ன்னு பார்க்ல பாக்குற ஒருத்தி அவளுக்கு புரியுற மொழியில சிரிப்பு காட்டும் போது.. அவளை பிடிச்சிப் போனா.. அப்போ அந்த மாமனான கமிஷ்னருக்கு உங்க உதவி தேவைப்படலாம் மிஸ் சூர்யா.’’ என்றவன், சூர்யாவின் முகத்தில் வெளிப்பட்ட அதிர்ச்சியை கண்டான்.

“ப்ளீஸ்..! எல்லார் மாதிரியும் நீங்களும் அவள் மேல அனுதாபப்படுறதா இருந்தா... எனக்கு உங்க ஹெல்ப் வேண்டாம். இன்னும் ஒன் மன்த்ல ஸ்பெஷல் கிட்ஸ் டேலண்ட்ஸ் வெளிப்படுத்துற நேசனல் லெவல் கல்ச்சுரல் நடக்கப்போகுது. நித்திக்கு மோனோ பிளே செய்ய ஆசை. உங்களால முடிஞ்சா கொஞ்சம் அவளுக்கு ட்ரைனிங் கொடுக்க முடியுமான்னு கேட்டுட்டு போலாம்னு தான் வந்தேன். எனிவே தாங்க்ஸ். நியாயமா உங்களுக்கு என் மேல இப்ப கோவம் இருக்கும். அது சரி தான். எல்லாரும் சராசரி மனுசங்க தானே.’’ என்றவன் திரும்பி நடந்தான்.

முகிலனின் தோளில் இரு முறை தொற்றிக் கொண்டிருந்த, அந்த அழகு குழந்தையின் முகம் சூரிக்கு நினைவில் வந்தது.

“ஹெலோ..! சார்..! கமிஷ்னர் சார்..!’’ என்று உரக்க அழைக்க, நடந்து கொண்டிருந்தவன் அப்படியே நின்றான். ஆனால் முகத்தை திருப்பவில்லை.

“உங்க மேல எனக்கு கோவம் தான். ரொம்ப கோவம். ஆனா அதையெல்லாம் என்னால ஒரு குட்டிப் பொண்ணுகிட்ட காட்ட முடியாது. ஏன்னா நான் நீங்க சொன்ன மாதிரி மனுசி. சாதாரண மனுசி. சாயங்காலம் ஆறு மணிக்கு பார்க்குக்கு பாப்பாவை கூட்டிட்டு வாங்க.’’ என்றவள் அவன் மறுமொழிக்கு கூட காத்திருக்காமால் தன்னுடைய அலுவல் அறைக்கு திரும்பினாள்.

அன்றைக்கு மாலை, அவள் பூங்காவில் காத்திருக்க, அவளை ஏமாற்றிவிடாமல் முகிலன், நித்யகல்யாணியை அழைத்துக் கொண்டு பூங்காவிற்கு வந்தான்.

நித்யா, சூரியை கண்டதும் ஓடி வந்து அவள் இடையை கட்டிக் கொண்டாள். சூரி குழந்தையை குனிந்து தூக்க, அவள் கன்னத்தில் மென்மையாய் இதழ் பதித்தாள் நித்தி.

‘உங்க பேர் என்ன..?’’ என நித்யா கேட்க, அது சூரிக்கு புரியவில்லை. அதுவரை முகிலனை கண்டுகொள்ளாமல் நின்றிருந்தவள், அவன் புறம் திரும்பி, “என்ன கேக்குறாங்க..?’’ என கேட்க, “உங்க பெயரை..!’’ என்றவன் சூர்யா என்ற பெயரை அவளுக்கு சைகையில் கூறினான்.

“உங்களுக்கு சைன் லாங்குவேஜ் தெரியுமா..?’’ என்று சூரி கேட்க, “நித்திக்காக கத்துகிட்டேன்.’’ என்றான் ஒட்டாத குரலில்.

‘ஓ.. சாருக்கு கோவமாம். நியாப்படி அது எனக்கு தானே இருக்கணும். போடா டேய்..’ என்று மனதிற்குள் அவனுக்கு கவுண்டர் கொடுத்தவள், குழந்தையிடம் தான் பேசுவதற்கு பலமாய் முகிலன் நிச்சயம் தேவைப்படுவான் என அடுத்த கணம் உறைக்க தற்சமயம் அவனிடம் முறைத்துக் கொள்ள வேண்டாம் என மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டாள்.
குழந்தையிடம், அவளுக்கு தெரிந்த ஏதேனும் ஒன்றை நடித்துக் காட்ட, சொல்லி முகிலனிடம் தெரிவிக்க, அவன் குழந்தையிடம் தெரிவிக்க, நித்தி பள்ளியில் பயிற்றுவித்த, ‘முயல் ஆமைக் கதையை ‘ அழகாய் நடித்துக் காண்பித்தாள்.

முயலுக்கு துள்ளி துள்ளி ஓடியும், ஆமைக்கு மெதுவாய் அசையும் உடல் மொழியை தத்ரூபமாய் வெளிப்படுத்த, சூரி ரசித்து பார்த்து கைதட்டில் தன் பாராட்டினை தெரிவித்தாள்.

சைகை மொழியில் எப்படி பாராட்டினை தெரிவிக்க வேண்டும் என முகிலன் அவளுக்கு கற்றுக் கொடுக்க, அதன் படியே நித்தியிடம், சூரி செய்து காட்ட, நித்தி நன்றியினை தன் மொழியில் தெரிவித்தாள்.

“நித்திக்கு நல்ல பேசியல் லாங்குவேஜ் இருக்கு. சோ... ட்ராமா பெஸ்ட் சாய்ஸ் தான். ஆனா மோனோ பிளேவா இல்ல க்ரூப் ட்ராமா போடலாமான்னு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு யோசிக்கலாம். நாளைக்கு வரும் போது நான் ஸ்கிரிப்ட் ரெடி செஞ்சிட்டு வந்துடுறேன்.” என்றாள். அதற்கு முகிலனும் சரி என்பதாய் தலை அசைத்தான்.

நேரம் பறப்பதை உணர்ந்தவள், “சரி சார்..! டைம் ஆச்சு நான் கிளம்புறேன். நாளைக்கு மீட் பண்ணலாம்.’’ என்றுவிட்டு, நித்தியிடம், கை அசைத்து விடை பெற, நித்தியும் ஒரு பறக்கும் முத்தத்தை கொடுத்து சூரியை வழி அனுப்பி வைத்தாள்.

சூரி தன் வெண்ணிற டியாகோவை கிளப்பி செல்லும் வரை, முகிலன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அதை உணர்ந்த போதும், சூரி முகிலனை திரும்பிப் பார்க்கவே இல்லை.
இரவில் நடந்த விசயங்களை தோழிகளிடம் பகிர்ந்து கொள்ள, அவர்களோ ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ரம்யா தீர்க்கமாய், “நீ அது இதுன்னு எதையும் மனசுல போட்டுக் குழப்பிக்காம ஒழுங்கா அந்த குழந்தைக்கு ஆக்டிங் சொல்லிக் கொடுத்தோமா வந்தோமான்னு இரு. இப்போ தான் ஒரு ரெண்டு நாளா தெளிவா இருக்க. மறுபடி எதையும் மனசுல ஏத்திகிட்டு கஷ்டப்படாத சூரி’’ என்று தோழிக்கு அறிவுரை வழங்கினாள்.

சூரியும் பதிலுக்கு, “கண்டிப்பா..!’’ என்றவள், அன்றைக்கு இரவே அமர்ந்து குழந்தைகளுக்கு ஏற்ற நாடகக் கரு ஒன்றை தயார் செய்தாள்.

அடுத்த இரண்டு நாட்களும் அவர்களின் பூங்கா சந்திப்பு தொடர்ந்தது. இது தான் கதை என்று முடிவு செய்ததும், நித்தியோடு மேலும் சில குழந்தைகளுக்கும் பயிற்சி தேவை என்ற நிலை உருவானது.

முகிலன் நித்தி படிக்கும் பள்ளியில் இருந்த சில குழந்தைகளின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு, நாடக ஒத்திகைக்காக தங்கள் வீட்டிற்கு மாலை குழந்தைகளை அழைத்து வர முடியுமா என வேண்டுதல் வைத்தான்.

சில பெற்றோர் ஒப்புக் கொள்ள, நான்காம் நாள் மாலையில் இருந்து, நாடக ஒத்திகை துவங்கியது. நாடகத்திற்கு இசை கோர்ப்பு, குழந்தைகளுக்கு புரியும் வகையில் மிக எளிமையாய் உணர்ச்சியை வெளிப்படுத்தும் முக பாவ பயிற்சி என சூரிக்கு தான் வேலை மென்னி முறித்தது.

ஆனாலும் அந்த வாண்டுகளோடு இணைந்து வேலை செய்தது அவளுக்கு மிகப் பெரிய ஆன்ம திருப்தியை கொடுத்தது. பெரும்பாலும் மாலை வேளைகளில் முகிலன் வீட்டில் இருப்பதில்லை.

வீட்டின் பொறுப்பாளர் கணேசமூர்த்தி தான் இவள் அங்கே செல்லும் போதெல்லாம் அவளை வரவேற்ப்பார். பயிற்சியில் ஈடுபடும் மற்ற குழந்தைகளை அழைத்து வர, மீண்டும் இல்லத்தில் சேர்ப்பிக்க, தற்காலிகமாய் மகிழுந்து ஒன்றை முகிலன் ஏற்பாடு செய்திருந்தான்.

குழந்தைகளில் சிலருக்கு கேட்பதில் மட்டும் பிரச்சனை இருக்க, சிலருக்கோ பேசுவதில் மட்டும் பிரச்சனை இருந்தது. ஆக அவர்களோடு கலந்து உரையாடி ஒரு வழியாய் முடிந்த அளவு சூரி சைகை மொழியை கற்றிருந்தாள்.

தொடர்ந்த பத்து நாட்கள் பயிற்சியில் குழந்தைகள் நன்றாக தேர்ந்திருந்தனர் நாடகப் பயிற்சியில். அன்றைக்கு முகிலனின் வீட்டிற்குள் நுழையும் போதே, அங்கிருந்த கொண்டாட்ட மனநிலையை கண்டவளுக்கு அதன் காரணம் புரியவில்லை.

குழந்தைகளோடு அன்று முகிலனும் வீட்டில் இருந்தான். கணேச மூர்த்தி இவளைக் கண்டதும் அவள் எப்போதும் விரும்பி அருந்தும், பில்டர் காப்பியை கொண்டு வந்து கொடுத்து, அவளின் நன்றிப் புன்னகையை பெற்றுக் கொண்டார்.

அவள் முகத்தில் வெளிப்பட்ட புன்னகையை கண்ட முகிலன், “என்ன கணேஷ் அண்ணா... மேடம் உங்களோட பிரண்ட்டாயிட்டாங்க போல இருக்கு. சிரிப்பு எல்லாம் பலமா இருக்கே...’’ என்று அவரிடம் விசாரிக்க,

“பாப்பா வந்தாலே வீடு எப்பவும் கல கலன்னு தான் தம்பி இருக்கும். நீங்க என்ன இப்படி சொல்றீங்க. இவங்க நாடக ஒத்தி எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் தனியா நம்ம சூரி அம்மா போடுவாங்க ஒரு ட்ராமா. சிரிக்க ஒரு வாய் போதாது. அப்படி இருக்கும். அவங்க சிரிக்காம இருந்தா தான் அது அதிசயம்.’’ என்று சொல்லி செல்ல, ‘அப்படியா’ என்பதைப் போல முகிலன் புருவம் உயர்த்தி அவளைப் பார்த்தான்.

‘இந்தப் பார்வையை என் செய்ய’ என தடுமாறியவள், ‘என்ன இன்னைக்கு எல்லாரும் ரொம்ப ஹாப்பியா இருக்காங்க.’’ என கேட்க, “டிஸ்ட்ரிக் லெவல் ரவுண்ட்ல செலக்ட் ஆகிட்டாங்க. அடுத்து நேரா ஸ்டேட் லெவல் போறாங்க. அதான் இவ்ளோ சந்தோசம்.’’ என மொழிய, குழந்தைகளின் உற்சாகம் அவளையும் தொற்றிக் கொண்டது.

“ஹே... சூப்பர்..!’’ என்றவள் குழந்தைகளிடம் ‘ஹை பை’ கொடுத்து மகிழ்ந்தாள். அன்றைக்கு மீண்டும் ஒரு முறை நாடக ஒத்திகை முடிந்த பின்பு, குழந்தைகள் அனைவரும் புறப்பட்டு செல்ல, “நித்திக்கு உங்க கூட ஐஸ்கிரீம் சாப்பிடணுமாம். மேடமோட அப்பாயின்மென்ட் கிடைக்குமா..?’’ என கேட்ட படி முகிலன் வந்து நின்றான்.

சட்டென மறுப்பது அவ்வளவு நன்றாய் இராது என்பதை உணர்ந்தவள், நித்தியிடம் திரும்பி, தன்னுடைய அறையில் தன்னுடைய தோழிகள் இருப்பதையும், அவர்களை விட்டு விட்டு தான் மட்டும் தனியே ஐஸ்கிரீம் சாப்பிட வந்தால் அவர்கள் கோபித்துக் கொள்வார்கள் என சைகை மொழியில் தெரிவித்தாள்.

நித்தி இப்பொழுது என்ன செய்வது என முகிலனை பார்க்க, “அவங்க பிரண்ஸ்சையும் ஆன்டியை கூப்பிட சொல்லு நித்தி..’’ என சைகை செய்தான். நித்தியும் அதையே மறு ஒலிபரப்பு செய்ய, இதற்கு மேல் மறுத்தால் நன்றாய் இராது என்பதை உணர்ந்தவள் தன் தோழிகளுக்கு அலைபேசி அழைப்பு விடுத்தாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் அனைவரும், சிட்டி சென்டரில் இருந்த ஒரு ஐஸ்கிரீம் பாரில் குழுமி இருந்தனர். சூரி, நித்தியையும், முகிலனையும் தன் தோழிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

தன்னிடம் அன்று அப்படி எரிந்தது விழுந்த சிடு மூஞ்சி முகிலனா இது என்று கார்த்தி வியந்து போய் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏனெனில் தற்சமயம் அப்படி ஒரு புன்னகை மன்னனாக இருந்தான்.

சூரியின் ஐஸ்கிரீமுக்கு “இந்த டாபிங்க்ஸ் வச்சிகோங்க.. டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும்.’’ என்று அவளின் கண்ணாடி குடுவையை தானே நிரப்பிக் கொண்டிருந்தான்.

ராவி ரம்மியின் காதில், “இங்க என்னவோ சரி இல்லாத மாதிரி உனக்கு பீல் ஆகல.’’ என கேட்க, இடையிட்ட கார்த்தியோ, “எதுவுமே சரி இல்லாத மாதிரி தோணுதுடி..’’ என்று வார்த்தைகளை மென்று துப்பினாள்.

என்ன தான் குறை சொல்லிக் கொண்டு இருந்த போதும், ராவியும், கார்த்தியும் இரண்டு லார்ஜ் ஐஸ்கிரீம்களை உள்ளே தள்ளியிருந்தனர். நித்தியை வழி அனுப்பி வைப்பதற்காக, நால்வரும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் வந்திருந்தனர்.
 




Meghna suresh

நாட்டாமை
Joined
May 26, 2019
Messages
83
Reaction score
873
Location
India
வாகன நிறுத்துமிடம் ஆள் அரவமின்றி இருக்க, கார்த்தியோ துடுக்காய், “சார்..! இன்னைக்கு இப்படி சிரிச்சி சிரிச்சி பேசுறீங்க..! அன்னைக்கு எங்ககிட்ட அப்படி கத்துனீங்க..!’’ என கேட்டே விட்டாள்.

“கார்த்தி..!’’ என மற்ற மூன்று தோழியர்களும் அலற, முகிலனின் முகத்தில் கொஞ்சமும் மாற்றமில்லை.

“ஏன்னா.. நீங்க அன்னைக்கு செஞ்சது ரொம்ப பெரிய முட்டாள் தனம். ஒரு பொறுப்புள்ள போலீஸ் ஆபிசரா உங்ககிட்ட அப்படி பேச வேண்டியதா போச்சு.’’ என்றுவிட்டு மீண்டும் தன்னுடைய அடையாள புன்னகையை புரிந்தான்.

‘எனில் இவனுக்கு முதல் நாள் தொட்டே என்னை நன்றாக அடையாளம் தெரிந்ததா..’ என்று சூரி அதிர்ந்து நோக்கும் போதே, “ஒரு திருடன் உங்ககிட்ட இருந்து எதையாவது பிடுங்கிட்டு தூரமா ஓடினா முதல்ல, கைல கிடைக்குற பொருளை எடுத்து அவன் பின்னாடி முழு வேகத்துல வீசி அடிக்கணும். அவன் கீழ விழுந்ததுக்கு அப்புறம் தான் மடக்கி பிடிக்கணும்.’’ என்றவன் சூரி எதிர்பார்க்காத தருணமொன்றில் அவள் கரம் பற்றி இழுத்தான்.

சூரி கொஞ்சம் திடுக்கிடலுடனே அவன் கரங்களுக்குள் வந்திருந்தாள். “முதல்ல.. திருடனை பிடிக்கணும்னா... அவன் கை ரெண்டையும் பின்னாடி முறுக்கி பிடிக்கணும்.. இப்படி..’’ சூரியின் உடலை அவன் தன்னோடு இறுக்க, அவனின் உஷ்ணப் பெரு மூச்சு சூரியின் காதுமடல் தீண்டியது.

அப்புறம் அவன் உங்க செயினை அறுக்க வரும் போது கழுத்துப் பக்கம் தான் கை வரும் அப்போ எப்படி தடுக்கணும்னா... அவளை அப்படியே முன்னால் சுழற்றியவன், அவள் கரங்களை எக்ஸ் வடிவில் தன் கரங்களால் சிறை செய்தான். அப்படி செய்யும் போது இருவரின் உதடுகளுக்கும் சில மில்லி அளவு இடைவெளியே இருந்தது.

“இப்படி தடுக்கும் போதே, உங்க காலை நடுவுல விட்டு, உங்க காலால அவன் காலை தடுக்கிவிட்டு கீழ விழ வைக்கணும்.” என்றவன் நிஜமாய் சூரியின் கால்களை வாரிவிட, சூரி அப்படியே மடங்கி பின்னால் சரிந்தாள்.

அவள் அப்படியே சரிய, சரியாய் 45 டிகிரி கோணத்தில் அவளை தாங்கிப் பிடித்தவன், அவள் இடையில் கை கொடுத்து அப்படியே 90 டிகிரி கோணத்தில் நிற்க வைத்தான். அவள் நேராய் நின்ற பின்பும் அவன் கரம் அவள் இடையில் தான் தேங்கி இருந்தது.

மூன்று தோழிகளும் வாயை பிளந்து அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். நித்தி எதற்கோ முகிலனை சுரண்டவும் தான் அவனுக்கே சுரணையே வந்தது.

அவசரமாய் சூரியின் இடையில் இருந்த கரத்தை எடுத்துக் கொண்டவன், “என்ன செல்ப் டிபன்ஸ் லெசன் நல்லா புரிஞ்சதா..?’’ என்று மற்றவர்களிடம் கேட்க, அவனிடம் பொதுவாய் தலையை மட்டும் ஆட்டி வைத்தனர்.

கார்த்தியோ மற்ற இரு தோழியருக்கு மட்டும் கேட்கும் சிறிய குரலில், “இது என்ன செல்ப் டிபன்ஸ் மச்சி. எனக்கு என்னவோ ரெண்டு பேரும் சேர்ந்து பாலே ஆடின மாதிரி இல்ல இருந்தது.’’ என கேட்க, ரம்மி, “வாயை மூடு.. ரூமுக்கு போயி பேசிக்கலாம்.’’ என்று தோழியை அடிக் குரலில் எச்சரித்தாள்.

நால்வரும் நித்திக்கு விடை கொடுக்க, முகிலன் தன் வண்டியை கிளப்பினான். அதே நேரம், சூரி தன் டியோவையும், ரம்மி தன்னுடையை ஸ்கூட்டியையும் கிளப்ப, மற்ற இருவரும் ஆளுக்கு ஒருவராய் அவர்கள் பின் அமர்ந்தனர்.

அனைவரும் ஒன்றாய் கிளம்ப, இம்முறையும் முகிலனின் கவனம் தன் மேல் இருப்பதை சூரி உணர்ந்தே இருந்தாள். ஆனால், சென்ற முறை போல அல்லாமால் சாலை வளைவை கடக்கும் வரை வாகனத்தின் கண்ணாடி வழியே அவன் உருவை ரசித்துக் கொண்டே பயணித்தாள்.

அதே நேரம் சூரியை கடந்து சென்ற பேருந்தில் ஒலித்த பாடல் வரிகள் அப்படியே அவள் நெஞ்சில் இறங்கியது.

கண்கள் இரண்டால் .. உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென...
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் எனை
கட்டிவிட்டு கட்டிவிட்டு ஓடி ஒளிந்தாய்.

கரெக்ட் செய்யப்படுவான்.
 




Meghna suresh

நாட்டாமை
Joined
May 26, 2019
Messages
83
Reaction score
873
Location
India
ஹாய் லவ்லீஸ்..

அடுத்த பதிவை போட்டாச்சு.

உங்கள் கருத்துக்களுக்கு எல்லாம் சீக்கிரம் பதில் பதிவிடுகிறேன்.

நன்றி உற்சாக பூமாலைகளுக்கு.

அன்பில்..

மேக்னா சுரேஷ்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மேக்னா சுரேஷ் டியர்
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
முகிலன் சார் செல்ப்டிபன்ஸ்க்கு பதிலா டேன்ஸ் கத்து கொடுத்திருக்காறூ... அட்டகாசம் தான்.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top