டேய் எப்படிடா உன்னை கரெக்ட் பண்றது..? 1

#1
‘டேய்! உன்ன எப்படிடா கரெக்ட் பண்றது..?

அடிக்கின்ற வெயிலுக்கு பெருங்குடை பிடிக்கும் பசு மரங்கள் நிரம்பிய சாலை ஒன்றில், பதட்டமாய் விரல் கடித்தபடி நின்றிருந்தாள் சூர்யா.

அவள் விழிகளோ நொடிக்கு ஒரு முறை தொலைவில் இருந்த சாலையை வெறிப்பதும், பின்பு அருகில் இருக்கும் தோழியை முறைப்பதுமாக இருந்தது.

“எங்கடி அந்த ராவி..! பேரு தான் ராவி..! ஒன்னையும் ஒழுங்கா ராவிட்டு வர்றது இல்ல. இந்த ப்ளான் மட்டும் சொதப்புச்சி. அவளை நான் ராவிடுவேன் ராவி..! எனக்கு இருக்க டென்சன்ல..” என்றுவிட்டு சூர்யா தன் பற்களை நறநறத்தாள்.

“கொஞ்சம் கூலா இரு சூரி..! இப்போ வந்துடுவா ராவி. நீ கேட்டது என்ன தெருவுல ஈசியா கிடைக்குற பொருளா. இப்ப இந்த கார்ப்பரேசன்காரங்க வேற ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசரா வேலை பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. நீ கேட்டது கிடைக்குறது கொஞ்சம் கஷ்டம் தான்னு நினைக்குறேன்.’’

சமாளிப்பதாய் எண்ணி ரம்யா வார்த்தைகளை விட, சூரி இன்னும் சூடாகிப் போனாள்.

“நான் அப்பவே சொன்னேன். ஏதாச்சும் பெட் ஷாப்ல ஒன்னை வாங்கி யூஸ் பண்ணிடலாம்னு. பெரிய இவளுகளாட்டாம் நேச்சர் பீல் வராது. புண்ணாக்கு வராதுன்னு சொல்லிட்டு இப்போ எனக்கே ரிவீட்டா. ஐயோ டைம் ஆகுதே. நாம ஆர்டிபிசியலா ரெடி பண்ண குட்டை வேற அடிக்கடி வத்திப் போகுதே..! மச மசன்னு நிக்காம வண்டி டிக்கியில இருக்க வாட்டர் கேனை எடுத்துட்டு வந்து தண்ணியை ஊத்துடி எரும..!’’

சூர்யா கொடுத்த சவுண்ட் எபக்டில் ரம்யா ஐம்பது மீட்டர் தள்ளி நிறுத்தியிருந்த தங்கள் ஆக்டிவா வண்டியை நோக்கி போனாள்.

அவள் உள்ளே இருந்து தண்ணீர் புட்டியை எடுத்து வந்து அவர்கள் சற்று நேரத்திற்கு முன்னாள் செயற்கையாய் உருவாக்கி இருந்த சிறிய பள்ளத்தில் அந்த நீரை ஆவாகனம் செய்தாள்.

சாலையில் சென்ற சில பாதசாரிகளும், வாகன வாசிகளும் அவர்களை விசித்திரமாய் பார்த்து சென்றதை எல்லாம் அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.

தூரத்தில் தெரிந்த சிகப்பு நிற ஸ்கூட்டியை பார்த்ததும் ரம்யா, “சூரி..! ராவி வந்துட்டா..!’’ என்று உற்சாக குரல் எழுப்ப, உணவிற்கு முன்பதிவு செய்துவிட்டு. கொலைப்பசியோடு வீட்டில் காத்திருக்கையில், பதிவு செய்த பிரியாணியை சுமந்து வந்த சொமாட்டோ சிப்பந்தியை பார்ப்பது போல, சூரி ராவியை ஒரு பாசப் பார்வை பார்த்து வைத்தாள்.

அதுவும், வந்த ராவி என பெயர் சுருக்கம் பெற்ற ராகவியோ, சீதையை கண்டு வந்த அனுமன் போல, தன் வெற்றியை ஒரு செய்கையில் உணர்த்த எண்ணி, வண்டியை நிறுத்தியதும், வெற்றி என்பதின் அறிகுறியாய் தன் கட்டை விரலை உயர்த்திக் காண்பித்தாள்.

உச்சி வெய்யிலில் ஜிகர்தண்டாவை உள்ளுக்குள் சரித்தது போல சூரியின் உள்ளம் குளிர்ந்துவிட்டது.

“வாரே.. வா ! என் ராவின்னா ராவி தான்.’’ என்று அவளைப் பார்த்து சொல்லியவள், அது நடு சாலை என்றும் பாராமல் பறக்கும் முத்தம் ஒன்றை தெறிக்க விட்டாள் தோழியை நோக்கி.

ராவி அதை ஒரு புன்சிரிப்பில் ஏற்றபடி, தன் வண்டியின் டிக்கியை திறந்து, அச்சிறு உருவத்தை கைகளில் அள்ளினாள்.

அந்த உருவத்தோடே, ராவி சூரியை நெருங்க, அத்தனை நேரம் அவள் இதழ்களில் இருந்த நகை மறைந்து முகத்தில் பீதி வந்து அப்பியது.

“என்னடி..! இப்படி கரு கருன்னு ஒன்னை பிடிச்சிட்டு வந்து நிக்குற..! ஐயோ எனக்கு ஏற்கனவே நாய்னா பயம். பேசாம இந்த பிளானை கேன்சல் பண்ணிட்டு அஞ்சப்பர்ல பிரியாணி ஆர்டர் பண்ணி சாப்பிட்டுகிட்டே அடுத்த பிளானை யோசிப்போமா..?’’

சூரி அப்படி சொல்லியதும், ‘கர்..’ என தொண்டையை செருமியவர்கள் அவளின் அருகில் குனிந்து துப்பிவிட்டு,

“ரெண்டு நாளா லீவ் போட்டு... நாப்பது தமிழ்பட சிடி வாங்கி அதுல முப்பத்தி ஒன்பது படத்துல வர ஒரே சீனை ஐடியாவா கன்வர்ட் பண்ணி இருக்கோம்.’’ என ரம்யா சொல்ல,

ராவியோ, “உனக்காக தெரு தெருவா, புதர் புதரா தேடி திரிஞ்சி.. இந்த நாய்க் குட்டியோட அம்மா அந்த நாத்தம் புடிச்ச குப்பை தொட்டியில இருந்து வெளிய போற வரைக்கும் வெயிட் பண்ணி... குப்பை பொறுக்குற ஆயாகிட்ட எல்லாம் துப்பு வாங்கி உன்னகாக இந்த நாய்க்குட்டிய லவட்டிட்டு வந்து இருக்கேன்.’’

கருவிழிகள் இரண்டும், மூக்கின் மேற்புற பரப்பில் ஒன்றிணைந்து விட்டதோ எனும் அளவிற்கு ராவி, உணர்ச்சிப் பொங்க பேச, தன் மனதில் இருந்த அத்தனை பீதியையும் மூட்டைக்கட்டி முடக்கிவிட்டு, ஒரு அசூசையோடு அந்த கருப்பு நிற நாய்க்குட்டியை தன் இடது கரத்தால் வாங்கினாள்.

“இப்போ போட போற சீனுக்கு இந்த பர்பாமன்ஸ் எல்லாம் ஒத்து வராது. உங்க அண்ணன் பொண்ணு சைந்தவியை கொஞ்சுற மாதிரி நினச்சிக்கிட்டு, அந்த நாய்க்குட்டியை கொஞ்சு பாப்போம். சுஜ்லீப்பா சொல்லு மூக்கோடு மூக்கை உரசி..’’

ரம்யா சூரிக்கு செயல்முறை வகுப்பெடுக்க, “யாக்..! நாறுது..! போதும் விடுங்கடி..! ரொம்ப சீன் போடாம உங்க கேட்டுகுள்ள போங்க. எல்லாம் பர்பாம் பண்ண வேண்டிய நேரத்துல நாங்க சரியா செய்வோம்.’’

சூரி வேண்டா வெறுப்பாய் அந்த நாய்க் குட்டியை வலக் கரத்திற்கு மாற்றும் போது, அது தன் கால்களை உயர்த்தி, “ங்....ங்...’’ என ஒரு விதமாய் முனகல் சப்தத்தை வெளிப்படுத்தியது.

“இது வேற... சை.. கொஞ்ச நேரம் கம்முன்னு கட...என் வேலை முடிஞ்சதும் முக்கு கடையில உனக்கு பாயா சாரி.. சாயா வாங்கி ஊத்துறேன். டீல் ஓகே வா..?’’ ஏதோ இவள் பேசுகிற மொழி அதற்கு புரிந்துவிடும் போல அதனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வாயால் போட்டுக் கொண்டிருந்தாள்.

அதே நேரம் ரம்யாவின் அலைபேசி இசைக்க, “ஏய்..! கார்த்தி தாண்டி கால் பண்றா. முகிலன் செகன்ட் ஸ்ட்ரீட் கிராஸ் பண்ணியாச்சு போல. பீ ரெடி பார் த ஆக்சன். "

சொல்லிவிட்டு ரம்யா தன் வண்டிக்கு அருகில் செல்ல, ராவியும் வேக வேகமாய் தன் அருகில் இருந்த மரத்தின் பின் புறத்தை தஞ்சமடைந்தாள்.

இவர்களுக்கு எட்டப்பி வேலை பார்த்துக் கொண்டிருந்த கார்த்தி, “மச்சி லெமன் எல்லோ டீ ஷர்ட்.. சீ புளு ஜாகிங் பேன்ட்.. செமையா இருக்காண்டி..!’’ என மெசேஜில் ரம்யாவிடம் ஜொள்ளி இருக்க,

“இவ வேற நேரம் தெரியாம..!’’ என்ற அலுத்துக் கொண்டாலும், “அன்னைக்கு தூரமா இருந்து பார்தப்பையே செமையா இருந்தான். எதுக்கும் இன்னைக்கு பக்கத்துல உத்து பாப்போம்.’’ என்று தன் தொலை நோக்குப் பார்வையை கூர்மையாக்கினாள்.

இவர்கள் கொடுத்த ரெட் அலர்ட்டினால், சூரி தன் கையில் இருந்த அந்த கருப்பு நிற நாய்க்குட்டியை இவர்கள் உருவாக்கிய செயற்கை குட்டையில் போட்டாள்.

திடீரென்று தன் உடல் நீருக்குள் அமிழ்தப்பட்டதில், அந்த குட்டிநாய், தன் முனகலை வீல், வீல் என்று வெளிப்படுத்த துவங்கி இருந்தது.

‘நல்லவேளை புளூ கிராஸ் மெம்பர்ஸ் யாரும் இப்ப இங்க இல்ல’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டவள், சற்றே திரும்பிப் பார்க்க, தொலைவில் முகிலன் வருவது சற்றே தெளிவற்ற உருவமாய் தெரிந்தது.

அவன் வந்ததும் தன் நடிப்பினை துவங்க வேண்டி வாகாய் குட்டி நாயை கையில் அள்ளி எடுத்தவள், தன் துப்பட்டா கொண்டு அதன் உடலில் ஒட்டி இருந்த சகதியை கொஞ்சமாய் துடைத்துவிட்டு, முகிலன் அருகில் வந்தாயிற்றா எனப் பார்க்க, கரிய நிற நாயொன்று நாலுகால் பாய்ச்சலில் இவளை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அவ்வளவு தான்... நாயைக் கண்ட மாத்திரத்தில் அதன் குட்டியை தன் கைகளில் வைத்திருக்கிறோம் என்பதையும் மறந்து,

“ஐயோ..’’ என்று அலறியவள், கையில் இருந்த குட்டியோடே வேகமாய் எழுந்து ஓட துவங்கினாள்.

இவள் அலறல் கேட்டு இவள் புறம் திரும்பிய தோழிகள், நாய் சூரியை குறி வைத்து துரத்துவதைக் கண்டதும், அவளுக்கு எதிர் திசையில் மூச்சை பிடித்துக் கொண்டு ஓட துவங்கினர்.

பெண்கள் தனக்கு முன்னும் பின்னும் எதற்கு இப்படி ஓடுகிறார்கள் எனப் புரியாத முகிலன் விசித்திரமாய் அவர்களைப் பார்த்துவிட்டு வழமையான தன் ஓட்டத்தை தொடர்ந்தான்.

ஓட்டத்தில் சூரியை விஞ்சிய தாய்க்கருப்பி, அவளின் கெண்டைக்காலில் தன் முன் பற்களைப் பதிக்க, வலியிலும், பயத்திலும் அலறிய சூரி, தன் கைகளில் இருந்த குட்டியை கீழே விட்டாள்.

தனக்கு வேண்டியது கிடைத்த திருப்தியில் தாய்க் கருப்பி, ஜூனியர் கருப்பியை கவ்விக் கொண்டு செல்ல, சூரி கதற கதற அவளுக்கு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் ஆன்டி ரேபிஸ் என்ற நாய்கடி ஊசி போடப்பட்டது.

அதுவும் அந்த ஊசி தொப்புளில் அல்லாமல், அவள் கை தோலின் மேற்புறம் போடப்பட்டதில், அவள் சகாக்களுக்கு மிக வருத்தம்.

தொப்புளை சுற்றி ஒரு 42 நாட்கள் ஊசி போட்டு இருந்தால் தாங்கள் அடுத்த திட்டம் தீட்ட சற்றே கால அவகாசம் கிடைத்திருக்குமே என்ற நப்பாசை அவர்களுக்கு.

இவர்களின் எண்ணத்தை ஊகித்த சூரியோ, “டாக்டர்..! இந்த ஊசியை வேக்சினா கூட போட்டுக்கலாம்னு சொன்னீங்க இல்ல...! என் பிரண்ட்ஸ் எல்லாம் சோசியல் வோர்கர்ஸ். தெரு தெருவா சுத்துறது தான் அவங்க வேலையே. அவங்களுக்கு முன்னேற்பாடா இந்த ஊசி போட்டுக்கலாம் இல்லையா..?’’ எனக் கேட்டாள்.

“ஓ அப்கோர்ஸ்..! தாரளாமா போட்டுகாலாம். ஒரு வருஷம் ப்ரோடக்சன் இருக்கும்.’’ என்று அறிவுறுத்தி மற்ற மூவருக்கும் அதே ஊசியை பரிந்துரைத்தார்.

அவர்கள் மறுக்க மறுக்க, சூரியோ, “உங்க மேல எனக்கு தானே அக்கறை இருக்கும்.’’ என்று உருகி வழிய, அங்கிருந்த செவிலியோ, “சின்ன ஊசிதான் மா..! பயப்படாதீங்க. ரொம்ப பயந்த உங்க பிரண்டே இப்போ எவ்ளோ நார்மலா இருக்காங்க.!’’ என பேசி பேசியே மற்ற மூவருக்கும் ஊசி மருந்தை செலுத்தினார்.

“நம்ம அடுத்த ப்ளான் என்னடி..?’’ என சூரி மெதுவாய் கேட்க, மூவரும் ஒரே குரலில் வடிவேலு பாணியில், “ரெஸ்ட்டு..’’ என கூட்டாய் முழங்கினர்.

இங்கே நால்வர் ஊசி போட்ட வலியில் கையை உதறிக் கொண்டு இருக்க, இவர்களின் வலிக்கு காரணமாணவனோ, தன்னுடைய கைத் துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பிக் கொண்டு இருந்தான்.

கரெக்ட் செய்யப்படுவான்.
 

அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
துப்பாக்கியில தோட்டாவை நிரப்புறானா? யாருப்பா அது?
துப்பாக்கியை எப்படி சூரி கரெக்ட் பண்ணுவா?
உன்னை எப்படிடா கரெக்ட் பண்ணுவா?😞😞
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#4
கறுப்பி கடித்ததால் கருப்பியை விட்டுவிட்டு கடுப்பாகி நிற்கும் சூரியின் மேல் வெறுப்பாகி நிற்கும் தோழிகள் பாவம்... துப்பாக்கி, தோட்டா...எப்படி இத வச்சு கரெக்ட் பண்ணுவாங்க..😉😜😃😍
 
#8
சூப்பர் 👌ஹீரோ எண்ட்றி விட 💗ஹீரோயின் இன்றோ நாய் கடியோட சும்மா அதுருது 😀😀sema 👌சூரி பட்டாளம் நகை வெடி epi 👌👍🌹🌹😍
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top