• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode தஞ்சம் மன்னவன் நெஞ்சம் எபிலாக்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priya kumar

SM Exclusive
Joined
Mar 6, 2019
Messages
350
Reaction score
2,215
Location
Madurai
Blend_1_20190306112145.jpg



எபிலாக்

ராஜா அழகம்மையிடம் நடந்த அனைத்தையும் கூறி பாவ மன்னிப்பு வேண்டினான்...அவருக்கும் இவற்றை யெல்லாம் கேட்டு கோபம் தான் என்றாலும் மகனை விட்டுக் கொடுத்து அறியாத அழகம்மையால் அவனை வெறுக்க முடியவில்லை...அவன் விருப்பமே தன் விருப்பம் என்றிருப்பவர் அவனோடு சேர்ந்து தானும் வெற்றிவேல் குடும்பத்திலிருந்த அனைவரிடமும் தான் செய்த தவறுக்காய் மன்னிப்புக் கேட்டார்...எல்லோரிடமும் கைகூப்பி மன்னிப்பு வேண்டியவன் வெற்றிவேலிடம் வந்ததும் அவன் காலில் விழப் போனான்...அவனைத் தடுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான் வெற்றிவேல்..."என்னைய மன்னிச்சுருண்ணே...நான் உனக்கு ரொம்பக் கொடுமை செஞ்சுட்டேன்..."

"டேய்...போனதெல்லாம் மறந்துருடா...இனிமே நீ திருந்தி நல்லபடியா இருந்தா அதுவே எனக்குப் போதும்..." என்றான் வெற்றிவேல்.

அதன்பின் அனைவரும் வெற்றிவேலின் வீட்டிலேயே கூட்டுக் குடும்பமாய் வாழலாயினர்... பொறுப்பாய் வயல்,தோப்பு என அனைத்தையும் நல்ல பிள்ளையாய் கவனித்துக் கொண்ட ராஜாவுக்கு அழகம்மையின் நெருங்கிய உறவுப் பெண்ணான ரேகாவை மணமுடித்து வைத்தனர்....

அன்று காளியம்மன் கோவில் கொடை!வீடு மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது.மயிலம்மையின் வேண்டுதலான இரட்டைக்கிடாய் வெட்டி அன்னதானம் இடும் நாள். கமலமும் சுந்தரமும் கூட வந்திருக்க மனக்கசப்புகள் நீங்கி அன்பும் மகிழ்ச்சியுமே ஆட்சி செய்து கொண்டிருந்தது மயிலம்மையின் இல்லலத்தை... வெற்றிவேல் - மதுவின் பிள்ளைகளான 5 வது வயது சக்திவேல் பாண்டியனும் மூன்று வயது தேஜஸ்வினியும் ராஜாவின் மகளான ஆராதனாவும் கதிர் -கயலின் மகனான ஜெகதீஷ் பாண்டியனும் ஒற்றுமையுடன் விளையாடிக்கொண்டிருந்தனர்.

வெற்றிவேலின் அறையிலோ அவன் தன் மனைவியுடன் வம்பிழுத்து விளையாடிக் கொண்டிருந்தான். "இப்போ சும்மா இருக்க போறீங்களா இல்லையா மாமா..."

"நான் எதுக்கு பூனைக்குட்டி சும்மா இருக்கணும்...அதுக்கா உன்னைய கல்யாணம் பண்ணினேன்..." என்றவன் அவனை நெருங்கி அவள் கன்னத்தைக் கடித்து வைத்தான்...

"யோவ் வீரபாகு வலிக்குதுய்யா... பாருங்க எப்படி ரெட்டிஷ்ஷாகியிருச்சுன்னு...யாராவது என்ன சிவந்திருக்கு கேட்டா நான் என்ன சொல்லுவேன்..."என்றவளிடம்

"என்னமோ சொல்லு...அது உன் டிபார்ட்மெண்ட்...இது மட்டும் தான் என் டிபார்ட்மென்ட்...."என்று அவளை மீண்டும் நெருங்கியவனைத் தள்ளி விட்டு கீழே ஓடினாள்.

விளையாடிக் கொண்டிருந்த தேஜஸ்வினியிடம் ஜெகதீஷ் பாண்டியன் ஒரு ரோஜாவை நீட்டி "இதை வச்சுக்கோ பாப்பு... உன் டிரஸ் கலரிலேயே இருக்கு பாரு...ஹேவ் இட்" என்றான்.தேஜஸ்வினியும் அந்த ரோஜாவை சிரித்தபடி வாங்கிக் கொண்டது.

இதைக் கண்ட வெற்றி "டேய் உங்க அப்பன் என் தங்கச்சியை பூச் செடியாக் கொடுத்து மயக்கினான்... நீ என் பிள்ளைய பூக் கொடுத்து மயக்க பாக்குறியா...அதுலயும் பாப்புன்னு வேற சொல்ற..."
என்று அவனை தூக்கிக் கொஞ்சினான்...

"ஆமாம் மாமா...ரொம்பப் பிடிச்சிருந்தா பாப்பு கூப்பிடணுமாம்...அதுனால தான் டாடி மம்மிய பாப்புனு கூப்பிடறாரு..."

அவன் பேச்சைக் கேட்டு சிரித்த வெற்றி,"டேய்...இதெல்லாம் உனக்கு யாருடா சொன்னது..." என்றவனிடம்

அப்போது அங்கே கயலுடன் வந்த கதிர்,"அதெல்லாம் ரத்தத்திலேயே ஊறுனதுடா வெற்றி...தானா வரும்...சொல்லிக் குடுக்கத் தேவையில்ல...இல்லடா ஜெகன்..."என்று அவனிடம் கேட்க அவனுக்கு என்ன புரிந்ததோ...ஆமாம் தலையாட்டி வைத்தான் ஜெகன்.
இதைக் கண்டு எல்லோரும் சிரித்தனர்.

கோவிலுக்குச் சென்று குழந்தைகளுக்கு காது குத்தி இரட்டைக் கிடாய் வெட்டி அம்மனுக்கு படையல் வைத்தனர்.வெற்றியும் ராஜாவும் ஜெகனுக்கு தாய்மாமன் சீர் செய்ய கதிர் சக்திக்கும் தேஜஸ்வினிக்கும் ஆராதனாவிற்கும் தாய்மாமன் சீர் செய்தான். சிரிப்பும் கும்மாளமுமாய் வீடு வந்து சேர்ந்த அனைவரும் இன்பக்களைப்பில் உறங்கச் சென்றனர்.

ஏகாந்தமான இரவுப் பொழுதில் எப்போதும் போல் மதுமதி தன் மன்னவனான வெற்றி வேலையும் கயல் தன் மன்னவனான கதிரையும் மஞ்சத்தில் மட்டுமல்லாமல் நெஞ்சத்திலும் தஞ்சமடைந்திருந்தனர்.

கண்ணாடிச் சட்டத்துள் இரவு விளக்கின் மெல்லிய ஒளியில் புன்னகைத்துக் கொண்டிருந்தார் மயிலம்மை...உருவமாய் இருந்து பார்க்க விரும்பியதை எல்லாம் அருவமாய் இருந்து பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.அவரது ஆன்மா தனது வாரிசுகளின் மகிழ்ச்சியில் தானும் களிப்புற்று அமைதி அடைந்தது.இனி அவர்கள் வீட்டில் நிகழப் போவதெல்லாம் சுகம் சுகமே... சுபம் சுபமே....

-முற்றும்-

அன்பிற்குரிய நட்புகளே...எனது முதல் படைப்பான தஞ்சம் மன்னவன் நெஞ்சத்திற்கு இதுவரை ஆதரவளித்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்...அறிமுக எழுத்தாளரான எனக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு நானே கூட எதிர்பாராதது...நீங்கள் தந்த கமண்ட்டுகளே என்னை அடுத்தடுத்த அத்தியாயங்களை எழுத வைத்தன...அதற்காக இத்தனை அத்தியாயங்களுக்கும் லைக்ஸ் போட்டு கமண்ட்ஸ் அளித்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள்...இரமணிச்சந்திரன் நாவல் குழுவிற்கும்...தமிழ் நாவல் லின்க் குழு உறுப்பினர்களுக்கும்...எல்லா அத்தியாயங்களையும் அப்ரூவ் செய்த அட்மின்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...????விரைவில் இன்னொரு கதையுடன் வருகிறேன்....நன்றிகளுடன் பிரியா குமார்???

 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
அழகான கதை அருமையான தமிழ் நடை ?????? அடுத்த படைப்பை இதை விட சிறப்பாக எழுத வாழ்த்துகள்??
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அழகா முடிச்சிருக்கீங்க ப்ரியா... விரைவில் அடுத்த கதையை எதிர்பார்க்கிறோம்...
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Adudha story kku all the best. Yaru ma adula hero and heroen. Namma jagan um dejasvini yum ya
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
அருமையான எபிலாக் பிரியா...
உங்களின் அடுத்த முயற்சி க்கு என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துகள்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top