• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode தஞ்சம் மன்னவன் நெஞ்சம் 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priya kumar

SM Exclusive
Joined
Mar 6, 2019
Messages
350
Reaction score
2,215
Location
Madurai
View attachment 10169

அத்தியாயம் 10

பெட்டியை வாங்கித் திறந்து பார்த்தவள் முகம் சிவப்பேறியது….

“எனக்கு எதுக்கு இதெல்லாம்….?”

“நகை எல்லாம் எதுக்கு…. போடறதுக்குத்தான்…”

“எனக்கு இதெல்லாம் வேண்டாம்…” அவள் குரலில் ஏறியிருந்த வெறுப்பினைக் கவனியாமல்...

“வேண்டாம்னா இதெல்லாம் நானா மாட்டிக்க முடியும்…” என்று அவள் ஆத்திரத்தை உணராமல் வழக்கடித்தவன் அதிரும் வண்ணம் அந்த பெட்டியைக் கட்டிலின் மேல் வீசி எறிந்து இருந்தாள் மதுமதி..

“என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க…. என்னப் பத்தி....இந்த நகைக்கெல்லாம் எவ்வளவு விலை குடுத்தீங்க….எனக்கான விலையும் கூட அதுதான...
இந்த நகையெல்லாம் காட்டினா….அதுல நான் மயங்கிப் போயிடுவேன்னு பாத்தீங்களா…”

“ என்ன... நகையக் காட்டி மயக்குறேனா...எதுக்காக உன்ன நான் அப்பிடி மயக்கப் பாக்கணும்...…”

“வேற எதுக்கு ….இன்னிக்கு காலையில அத்த சொன்னாங்கல்ல...சீக்கிரமே அவங்கள அப்பத்தா ஆக்கனும்னு அதுக்குத்தானே…”

“??????”

“இதையெல்லாம் பார்த்ததும் சந்தோஷப்பட்டு நான் உங்ககூட குடும்பம் நடத்த வந்துடுவேன்னு நினைச்சீங்களா….ரப்பிஷ்….இப்பிடி ஏதாவது வரும்னு எதிர்பாத்துட்டு தான் இருந்தேன்...ஏற்கனவே உங்க பணத்தப் பாத்துட்டு வந்தவனு எனக்கு பட்டம் கட்டினவர் தானே நீங்க… இப்ப அதை உண்மையாக்கப் பாக்குறீங்க...நகைங்களப் பாத்துட்டா நான் உங்க கூட ப…….. ஆ…...அம்மா……”

அவள் முடிக்கும் முன்பே இடி போன்றதொரு அறையினை அவள் கன்னத்தில் இறக்கியிருந்தான் வெற்றிவேல்…

“என்னடி….நானும் போனாப் போகுது …. போனாப் போகுதுன்னு விட்டா...வாய் வாசப்படி வரைக்கும் தான் நீளுது…. “

“இதெல்லாம் அப்பத்தா உனக்காக பாத்துப் பாத்து சேர்த்து வச்ச நகைங்கடி...அதை எல்லாம் உன்கிட்ட சேர்த்துடணும்னு ரொம்ப தவியா தவிச்சுச்சு…. ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிஞ்சு இன்னைக்குத்தான் லாக்கரில் இருந்து கைக்கு வந்துச்சு….
அம்மா உன் கிட்ட இத குடுக்கச் சொன்னதால கொடுத்தேன்...இதெல்லாம் நான் என் கைக்காச போட்டு வாங்கவும் இல்ல… உனக்கு விலை வைக்கவும் இல்ல…
இல்லை...போதுமா...இல்ல இன்னும் விளக்கணுமா உனக்கு….”

கன்னத்தைப் பிடித்துக் கொண்டே அதிர்ச்சியில் உறைந்திருந்த மதுமதிக்கு அவனுடைய வார்த்தைகள் மெல்ல அவள் மூளைக்குள் இறங்கின.

“இந்தாரு... நான் பிள்ளை பெத்துக்கணும்னு நினைச்சிருந்தா இப்பிடிங்கிறதுக் குள்ள எப்பவோ செஞ்சுட்டு போயிட்டே இருந்திருப்பேன்…”என்று விரல்களைச் சுண்டிக்காட்டியவன் தொடர்ந்தான்....

“அதுக்கு உன் அனுமதி எனக்கு தேவையும் இல்லை.. இவ்வளவு சீப்பா இறங்கணும்னு எனக்கு அவசியமும் இல்லை….உனக்கு நான் ஏன்டி விலை வக்கணும்...நான் நெனச்ச நேரத்துல நெனச்ச மாதிரி உங்கிட்ட நடந்துக்குற உரிமை எனக்கு இருக்கு.. என்ன எவங் கேப்பான்...எங்க விருப்பம் தான் முக்கியம் நான் நெனச்சுருந்தா நான் என் பிள்ளை இந்நேரம் உன் வயித்துக்குள்ள விளையாடிக்கிட்டு இருந்திருக்கும்…”

“எனக்கு உன் புருஷன்ன்ற முழு உரிமை இருக்கு…. ஆனா அதை நிலைநாட்ட நான் தயங்கிட்டு நின்னேன்…. ஏன் தெரியுமா உன் மனசு புண்பட்டு இருக்கு …..

“தெரிஞ்சோ தெரியாமலோ அதுக்கு நான் காரணமாயிட்டேன்….உன் மனரணமெல்லாம் மாறணும்னு தள்ளி நின்னேன்ல…. அதுக்கு நீ இதுவும் பேசுவ… இதுக்கு மேலயும் பேசுவ….ஒரு தடவ செஞ்ச தப்புக்கு எத்தனை தடவ தாண்டி தண்டிப்ப…. என் பக்க நியாயத்தை உனக்கு புரிய வச்சுரனும்னு போன நிமிஷம் வரைக்கும் துடிச்சுக்கிட்டு இருந்தேன்…..
ஆனா இனிமே அப்படி இல்லை..”

“இவன் இப்படித்தான்னு நீயே ஒரு சீல் குத்தி வெச்சிருக்க இல்ல... உன்கிட்ட எதையும் புரிய வைக்க முடியாது…. ரோசக்காரன்டி... இந்த வெற்றிவேல்…. யாருக்கும் தழைஞ்சு போய் பழக்கப்பட்டவன் இல்ல … ஆனா உன்கிட்ட மடங்கிப் போனதுக்கு காரணம்…. உன் மேல எனக்கு இருந்த காதல் … இதெல்லாம் உனக்கு எங்கே புரிய போகுது…. நீ உன் பிடிவாதத்தைக் கட்டிக்கிட்டே தொங்கு…. உனக்காக எவ்வளவோ பொறுத்துப் போயிட்டேன்... அதுக்கு பரிசாத்தான் உன்ன நகையக் காட்டி மயக்கப் பார்த்தேன் பழி போட்டுட்ட... போதும் …உன் மேல மனச வச்சதுக்கு பட்டதெல்லாம் போதும் ..”

“ இனிமே நீ இந்த வீட்டில இருக்கலாம் எங்க அம்மா அப்பாவுக்கு மருமகளா மட்டும்…” என்று அவளிடம் கத்திவிட்டு….. எதிர்ப்பட்ட டீப்பாயை தன் உதையால் பறக்க விட்டு ….
அவனது ராயல் என்ஃபீல்டைக் கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டான் வெற்றிவேல்…

மகன் தன் வண்டியை கிளப்பும் வேகத்தை வைத்தே அவன் கடும் கோபத்தில் இருப்பதை உணர்ந்து கொண்டார் அஞ்சுகம்….மகன் முன் கோபக்காரன் தான்…. ஆனால் முரடன் அல்ல….அநியாயத்தைக் கண்டு பொங்குவானே தவிர தன் கோபத்தை இதுவரை குடும்பத்தினரிடமோ அல்லது தன்னை அண்டி இருப்பவரிடமோ அவன் காட்டியதே இல்லை... இதுநாள்வரை முதலும் முடிவுமாக அவன் காயப்படுத்தியது மதுமதியை மட்டும்தான்... தன் மகன் ஒரு காரியம் செய்தால் அதன் பின்னால் ஒரு நியாயமான காரணம் இருக்கும் என்று அந்த தாய் மனதுக்கு தெரிந்தே இருந்தது…
ஆனால் அதை உணர வேண்டியவள் உணரவில்லையே ….

உணர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டதை அறிந்தவராய் வெற்றிவேல்-மதுமதியின் அறைக்குள் நுழைந்தார்.அங்கே இவர் எதிர்பார்த்தபடியே தன் கைகளால் முழங்காலைக் கட்டிக் கொண்டு அதில் தலை கவிழ்ந்தவாறு….. இவர் வருகையை அறியாதவளாய் கண்ணீர் உதிர்த்தபடி அமர்ந்திருந்தாள் மதுமதி…. சுவற்றில் மோதியவாறு தலைகீழாய் கிடந்த டீப்பாய் மகனின் கோபத்தை படம்பிடித்துக் காட்டியது …. அதோடு கட்டிலின் மேல் சிதறியிருந்த நகைகளும் அவருக்கு சில விவரங்களை கூறின...

அவளருகே அமர்ந்து ஆறுதலாய் தலை கோதினார் அஞ்சுகம்…..
உடனே “அத்தை” என்ற கேவலோடு அவர் மடியில் விழுந்து கண்ணீர் விட்டு அழுதாள் மதுமதி…. அவள் அழுது ஓயும் வரை பொறுமை காத்த அஞ்சுகம் அவள் எழுந்து அமர்ந்ததும்….

“ அம்மாடி… உங்களுக்குள்ள என்ன நடந்துச்சுன்னு நான் கேக்கப்போறதில்லை… ஆனா... என்ன நடந்திருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது ….எனக்கு கயலு வேற..
நீ வேற இல்லை…
உன் எடத்தில கயலு இருந்தா என்ன சொல்லுவேனா அதைத்தான் உனக்கு சொல்ல போறேன்…”

“நீ ஆகட்டும்... வெற்றி ஆகட்டும்..
ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரையே வச்சிருக்கீங்க ...அது தப்பில்லை ...ஆனா ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் அத புரியவைக்க தவறிட்டீங்க …
பெரியவங்க எங்க மேலயும் தப்பு இருக்கு ….
பொறுமையாக எடுத்துச் செய்ய வேண்டிய காரியத்தை…. சந்தோசத்துல நிதானம் தவறிப் போய் செஞ்சுட்டோம்...அவசரத்தில் அள்ளித் தெளிச்ச கோலமா….அன்னைக்கு
நடக்கக்கூடாதது எல்லாம் நடந்து போச்சு….”

அது உன்னை ரொம்பவே பாதிச்சுடுச்சு... தப்புத்தான்…. எம் மவன் அன்னைக்கு பண்ணது தப்புத்தான்... இல்லங்கல...ஆனா அதுக்கு பின்னாடி ஒரு காரணம் இல்லாம இருக்காது தாயீ... என்ன சொன்னாலும் ஆத்த முடியாதது உன் வேதனை... ஒரு பொம்பளயா அது எனக்கும் புரியுது... ஆனா அதக் கால முச்சூடும் சுமந்துகிட்டே இருந்தா நிம்மதி பறிபோய்ரும்மா…”

“ மனசுல இருக்குற கோபம் எல்லாம் குப்பைக மாதிரி... வீட்டில் குப்பை சேர்ந்தா வீடு நாறிப்போயிரும்…. மனசுல கோபம் சேர்ந்தா நம்ம நடத்த மாறிப்போயிரும்..
இன்னைக்கு அதுதான் இங்க நடந்து இருக்குன்னு நினைக்கிறேன்…. “

“ஆண்டவன் அதுக்குத்தேன் மறக்குற சக்தியை கொடுத்து இருக்கான்..
நீ என் மவன மன்னிக்காட்டாலும்
பரவாயில்ல... நடந்ததை மறக்க முயற்சி பண்ணுமா…. அது அவனுக்கு மட்டுமில்ல... உனக்கும் ….இந்தக் குடும்பத்துக்கும் தான் நல்லது… பொம்பள சென்மமாப் பொறப்பபெடுத்துட்டா... அவ வாழ்க்கையில நாளையும் கடந்து தான் வரணும்….பெரிய வீட்டுக்கு மூத்த மருமகளாக வாக்கப்பட்டு நாம் பார்க்காத கஷ்ட நஷ்டமா….”

“நீ புத்தியுள்ள பொண்ணு…. உனக்கு நான் சொல்ல தேவையில்லை... ஒரு குடும்பத்தை ஒரு பொம்பள நெனச்சா ஆக்கவும் முடியும்...
அழிக்கவும் முடியும்…. இப்ப இந்த குடும்பத்தோட ஒட்டுமொத்த நிம்மதி..
எதிர்காலம் …. எல்லாம் உன் கையில இருக்கு ….என்ன செய்யப் போறன்னு நீயே ரோசனை பண்ணிக்கோ….”

“ கண்டதையும் போட்டு மனச குழப்பிக்காம நிம்மதியா தூங்கு….” அஞ்சுகம் சென்றதும் அவர் பேசியவற்றை சிந்தித்துப் பார்த்த மதுமதி சுவற்றில் தலை சாய்த்து கண்களை மூடினாள்...மூடிய விழிகளுக்குள் அவளது கடந்த காலம் விரிந்தது….

-----தொடரும்.

சென்ற அத்தியாயத்திற்கு லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸிட்ட அனைத்து நட்புக்களும் நன்றிகள்...படித்துவிட்டு கருத்துக்களைச் சொல்லுங்கப்பா...உங்கள் மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்கும் பிரியா குமார்.
 




Attachments

Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
பிரியா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பிரியா குமார் டியர்
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Nice update Priya...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top