• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode தஞ்சம் மன்னவன் நெஞ்சம் 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priya kumar

SM Exclusive
Joined
Mar 6, 2019
Messages
350
Reaction score
2,215
Location
Madurai
View attachment 10234



அத்தியாயம் 11

இரண்டு வருடங்களுக்கு முன்பு.....

அன்று கமலத்திற்கு மனம் கொள்ளா ஆனந்தம்... 21 வருடங்களுக்குப் பின் தன் பிறந்த வீட்டையும் …. தன் சொந்தங்களையும்…. பார்க்கப் போகிறார் . கமலத்தைத் திருமணம் செய்த பின்பு மகளைப் பிரிந்து இருக்க முடியாத மயிலம்மையின் வேண்டுகோளுக்கிணங்க...அவர் வார்த்தைகளைத் தட்ட முடியாத சுந்தரம்... மயிலம்மையின் வீட்டிலேயே இருக்கலானார் … ஆனால் வீட்டுப் பெண்ணை திருமணம் செய்த மாப்பிள்ளையாய் சுந்தரத்தை பார்க்கத் தவறினர் அந்த வீட்டு மனிதர்கள்…

“ சுந்தரம் ….நாளைக்கு நாத்து நடவு இருக்கு.. வெள்ளனையே அதை போய் பார்த்துரு….”

“ சுந்தரம்.. அழகம்மை பக்கத்தூரு கோயிலுக்கு போகணுமாம்...கூப்பிட்டு போயி பத்திரமா கூட்டியாந்துரு…”

“ சுந்தரம்…. டவுன்ல பூச்சி மருந்து வாங்கப் போகணும் ….வண்டிய எடு…”

என்று அவரை அந்த வீட்டு மாப்பிள்ளையாக பாவிக்காமல் பழைய வேலையாளாகவே பார்த்தனர் அனைவரும்...அஞ்சுகத்திற்கு இது புரிந்தாலும் எதையும் மாற்றி விட முடியவில்லை அவரால் ....

கூடுதலாக தனது அண்ணன் தருமரை விடுத்து கமலம் சுந்தரத்தைத் திருமணம் செய்தது சொல்லவொண்ணா ஆத்திரத்தைக் கொடுத்தது அழகம்மமைக்கு...

சுந்தரத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவமதித்துக் கொண்டிருந்தார் அழகம்மை. தன் மனைவிக்காக சுந்தரம் அனைத்தையும் பொறுத்துப் போனாலும் கமலத்தால் இதனை பொறுத்துக் கொள்ள முடியவில்லை ….. கமலம் ஒருநாள் பொங்கி எழும் நாளும் வந்தது…

அன்று அழகம்மையின் அண்ணன் தருமர் மயிலம்மையின் வீட்டிற்கு வந்திருந்தார்…

“வாண்ணே….” என்று வரவேற்றார் அழகம்மை….

“வாரேன்...வந்துதான ஆகணும்….உன்ன இந்த வீட்டில கட்டிக்குடுத்துட்டனே….பெறவு என்ன பண்ண….” வரும் போதே பேச்சில் ஊசியேற்றிக் கொண்டே வந்தார்….

இதனைக் கண்டு கொள்ளாமல் சுந்தரம், “வாங்கண்ணே….” என்று வரவேற்றார்..

“நீயெல்லாம் எந்தங்கச்சி வீட்டுக்கு என்னயவே அழைக்குற காலமாகிப் போச்சு…” என்று காய்ந்தார் தருமர்.

சுந்தரம் அமைதியாகச் சென்று விட்டார்….காலை உணவுக்கு சுந்தரத்தை அழைத்த கமலம்…. அவருக்குப் பரிமாறத் துவங்கிய போது…. “கமலம்...எங்கண்ணே சாப்புடணும்...சுந்தரத்தை பெறகு சாப்புடச் சொல்லு…..”

இதனால் கோபம் வந்தாலும்… ”அதுக்கென்ன மதினி….இவரு பாட்டுக்கு இங்க சாப்பட்டா...உங்கண்ணே பாட்டுக்கு அங்குட்டு சாப்புடட்டும் இங்க என்ன எடமாயில்ல….” என்றார் பொறுமையாகவே…

“எங்க வீட்டுல வேலக்காரவுக கூடல்லாம் சமதையா உக்காந்து சாப்புடுற பழக்கம் இல்ல…..” காட்டமாக வந்தது அழகம்மையின் பதில்…

அவ்வளவு தான்... பொங்கிவிட்டார் கமலம்...
ஏற்கனவே தன் பிறந்த வீட்டினர் தன் கணவரை நடத்தும் முறையில் மாறாத கோபம் கொண்டிருந்தார் கமலம்….இதற்கிடையே சுந்தரத்திற்கு மதுரையில் வேளாண்மை அலுவலகத்தில் அரசு வேலை கிடைத்திருந்தது..இந்த நிலையில் இப்படி ஒரு நிகழ்ச்சியும் நடந்துவிடவே..

“என் கணவரை மரியாதைக் குறைவாய் நடத்தும் இந்த வீட்டில் நாங்கள் உயர்ந்த அந்தஸ்தை அடையும் வரை இதன் வாசல் படி மிதிக்க மாட்டோம்….அதுவரை யாரும் என்னையும் வந்து பார்க்கக் கூடாது... " என்று கூறிவிட்டு மதுரையில் தான் வேலை கிடைத்திருக்கிறது என்பதை கூட மறைத்து விட்டு மயிலம்மை முதலாக அனைவரும் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டும் இளகாமல் அன்று கிளம்பியவர்தான்..

மதுரையில் உறவினர் ஒருவர் கமலத்தை சந்தித்துவிட்டு தேவனூர் சென்று விபரம் கூறவே கமலத்தை தொடர்பு கொண்டார் மயிலம்மை... பத்திரகாளியம்மன் கோவில் கொடைக்கு வருமாறு மயிலம்மை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதாலும் தாங்களும் இன்று நல்ல நிலையில் இருப்பதாலும் இதோ கமலமும் மதுமதியும் தேவனூர் கிளம்புகின்றனர்….

தன் தாயிடம் உள்ள மகிழ்ச்சியை தன் தந்தையின் முகத்தில் காண முடியவில்லை மதுமதிக்கு…. புருவ மத்தியில் முடிச்சுகளோடு சிந்தனை வயப்பட்டவராகவே இருந்த அவரின் கண்களில் கலக்கம்….’ தன்னையும் தன் தாயையும் பிரிவதால் இருக்கும்’ என்று எண்ணியவள் அதுபற்றி தந்தையிடம் பேசலானாள் …..

“அப்பா.. நாங்க பத்திரமா போயிட்டு திருவிழாவை முடிச்சுட்டு சீக்கிரமா வந்துருவோம்…. நீங்க ஒண்ணும் வொரி பண்ணிக்காதீங்க….”

என்ற மகளுக்கு மில்லிமீட்டர் புன்னகையை காட்டிவிட்டு முகம் தெளியாமல் அமர்ந்திருந்தவரிடம் …

“என்னங்கப்பா…வாட் இஸ் ஈட்டிங் யு”

“மது நீங்க போறது உங்க அம்மத்தா வீட்டுக்கு தான்…. அவங்க எல்லாரும் நல்லவங்க தான் … ஆனா இத்தனை வருஷத்துக்கு அப்புறம் நீங்க போகும் போது உங்களுக்கான வரவேற்பு அங்க எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது… பெரியவங்க…. ஆத்தா... தன் புள்ள மேல பாசமா தான் இருப்பாங்க….. அதே பாசத்தை உன்மேலேயும் காட்டலாம்... ஆனால் மத்தவங்க எல்லாம் உன்னை இன்னமும் அவங்க வீட்டு வேலைக்காரன் மகளாகத் தான் பார்ப்பாங்களோன்ற பயம் எனக்குள்ளே இருக்குமா…..”

“ அதுபோக சொல்லத் தெரியாத ஏதோ ஒரு இண்டியுஷன்…. உனக்கு அங்க எதுவும் கஷ்டம் நடந்துவிடுமோ என்ற தவிப்பு…. அது தான் வேற ஒண்ணும் இல்ல…. எது எப்படி இருந்தாலும் அவங்க கிட்ட ஒரு லிமிட்டோடவே நடந்துக்க... என்னடா அப்பா இப்படி சொல்றாரேன்னு நினைக்காத ….. உன் கண்ணுல நான் எப்பவும் சந்தோஷத்தை மட்டும் தான் பார்க்கணும்…. அதுதான் எனக்கு வேணும்….”

“ஷ்யூர்ப்பா….நீங்க சொன்ன மாதிரியே நடந்துக்கிறேன்…. நீங்களும் வரலாமேப்பா…”

“இல்லம்மா நான் வந்தா அது உங்கம்மாவோட நிம்மதியை கெடுத்துடும்...அது போக எனக்கே எம்பாரஸிங்கா இருக்கும்…”

“ ஓகேப்பா... பட் ஐ வில் மிஸ் யூப்பா..”

“நானும் தான்டா….”

“என்ன அப்பாவும் மகளும் கொஞ்சிட்டு இருக்கீங்க” -கமலம்

“அம்மா... அப்பா உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவாங்களாம்…”என்றாள் மதுமதி

கணவரிடம் என்றும் மாறாத தன் நேசப் பார்வையை வீசியவர்….நேரத்துக்கு உண்ண வேண்டும்...உறங்க வேண்டும்...தினமும் தன்னிடம் செல்பேசியில் தொடர்பு கொள்ள வேண்டும் போன்ற பத்து கட்டளைகளை நூற்றியோறாவது முறையாகக் கூறிவிட்டு தன் பிறந்த வீட்டிற்கு பயணமானார்...


கமலமும் மதுமதியும் சென்று இறங்கியதுமே அனைவரும் வாசலுக்கு வந்து வரவேற்றனர்…

“ விளக்கி வச்ச வெங்கல வெளக்காட்டம் இருக்கா என் பேத்தி….” என்று மதுமதிக்கு திருஷ்டி கழித்தவர்…. கமலத்தை தன் 21 வருட பிரிவுத்துயர் போக கட்டிக் கொண்டு அழுதுவிட்டார் ….

வீட்டின் உள்ளே சென்ற கமலத்திற்கு இன்றைய காலத்திற்கேற்ப நவீனமாய் மாறி இருந்த தன் பிறந்த வீடு வியப்பைக் கொடுத்தது ...அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் கூட அவருக்கு தன் சிறுவயது நினைவுகளைத் தட்டி எழுப்பின…

“ஆத்தா கமலம் சாப்பிட்டு வெரசாக் கெளம்புங்க... இத்தனை வருஷம் கழிச்சு எம் மக்கள கண்ணுக்கு காட்டுன காளியாத்தாவுக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு வந்துரலாம்….”
என்றதும் கயலையும் கூட்டிக் கெண்டு கோவிலுக்கு கிளம்பினர்…



அன்று காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தினால் கோவிலில் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. கமலமும் மயிலம்மையும் ஆங்காங்கே நின்று உறவுகளிடம் பேசிக் கொண்டு வர கயலும் மதுமதியும் இணைந்து நடந்தனர்.

மதுமதியிடம் கதிரை அறிமுகப்படுத்திய போதே அவனை ‘அண்ணா’ என்று அழைத்தவளைக் கதிரைவிட கயலுக்கு மிகவும் பிடித்துப் போனது…

மதியுடன் பேசிக்கொண்டே நடந்த கயல் அர்ச்சனைத்தட்டு வாங்க கடையில் நின்று விடவே…. வேடிக்கை பார்த்துக்கொண்டு நடந்த மதுமதி தன் பக்கத்தில் வந்த கயலையும் தனது அம்மத்தா மற்றும் தாயையும் காணாமல் தேடினாள்...கோவிலில் கூட்டமாதலால் அவளால் அவர்களைக் கண்டு பிடிக்க முடியாமல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே வந்தவள்... எதிரே வந்தவன் மீது மோதப் போய்…. இறுதியில் சுதாரித்து நின்று விட்டாள்….

முன்பின் அறியாத பெண் பக்கத்திலே இடிப்பது போல வந்து நிற்பவனை கண்டு திகைத்தாள் மதுமதி... அவனோ அவளை கண்களால் மேலும் கீழும் அளவெடுத்து கொன்டிருந்தான் …. அதில் எரிச்சலுற்றவள் இடப்பக்கமாக நகரப்போனாள்...அவனும் இடப்பக்கமாக நகர்ந்தான்..
அவள் வலப்புறமாக நகர்ந்த போதும் அதுவே நிகழ்ந்தது….

“ வழியை விடு …..”

“நாங்க வழியவிட்டாப்புல நீங்க போயிருவீங்களாக்கும்…
பாதை தெரியாமல் தான் முழிச்சுக்கிட்டு இருந்த…நான் தான் பார்த்தேனே….”

“ஏய்…. நான் தனியா வந்து இருக்கேன் நினைச்சி என் கிட்ட வம்பு பண்றியா.. நான் என் ஃபேமிலியோட வந்து இருக்கேன்…”

அதற்குள் கயல் அவர்களை நெருங்கி விடவே…. “ யார் இந்த சைட் டிஷ்…” என்றவனைக் கயல் மட்டுமல்ல மதுமதியுமே சேர்ந்து முறைத்தாள்...

மயிலம்மையும் கமலமும் அவர்களை சமீபிப்பதைக் கண்டவன்…

“ஓ…. ஒரு ஓல்டு லேடி…. ஒரு சைட் டிஷ்... இதுதான் உன் ஃபேமிலின்னு சொன்னியா... அது சரி இது யாரு புதுசா ஃப்ரேமுக்குள்ள ….”
என்று கமலத்தைக் காட்டி கேட்டான்….

“ போடா போக்கத்தவனே... யாருக்குடா வயசாயிருச்சு….நீ தான்டா குறுக்குச் செத்த பய…. வந்துட்டான் எம் பேத்திகளை நக்கலடிக்க…” என்ற மயிலம்மையின் வசை மொழிகளுக்கு கடகடவென்று சிரித்தான் அவன்….

யார் அவன்…….?

--------தொடரும்

நட்புக்கேள.. அடுத்த யூடி போட்டுவிட்டேன்...இப்போது நீங்கள் சொல்லுங்கள் ….மதுமதியிடம் வம்பிழுக்கும் அவன் யார்….சென்ற அத்தியாயத்திற்கு லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸிட்ட அனைவருக்கும் நன்றிகள்….உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்கும் பிரியா குமார்..

[ /B]
 




Attachments

Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பிரியா குமார் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top