• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தஞ்சம் மன்னவன் நெஞ்சம் 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priya kumar

SM Exclusive
Joined
Mar 6, 2019
Messages
350
Reaction score
2,215
Location
Madurai
View attachment 9634

அத்தியாயம் 4

“இங்க என்ன அண்ணி பண்றீங்க... “ என்றபடி தோட்டத்திற்கு வந்தாள் கயல்.

“ஆலொஸ் கட் பண்ணிட்டு இருக்கேன் கயல்…”

“ஐயே...சோத்துக் கத்தாழை ...இது நாத்தம் அடிக்குமே அண்ணி…”

“என்ன கயல் இப்படிச் சொல்லிட்ட... இதுல மெடிசனல் யூஸஸ் எக்கச்சக்கமா இருக்கு தெரியுமா....

“அப்பிடியா அண்ணி...இத வெச்சு என்ன செய்வீங்க....”
“இதோட லேயர எடுத்துட்டு உள்ள இருக்க ஜெல்லிய நல்லா வாஷ் பண்ணிட்டு சாப்பிட்டா பாடில இருக்க ஹீட் குறைஞ்சு கூல் ஆகிடும்...அந்த ஜெல்லிய ஃபேஸ்ல அப்ளை பண்ணி வாஷ் பண்ணினா நல்லா பளிச்சுனு ஃபேஸ் க்ளோ ஆகும்...அவ்ளோ ஏன்...நான் காலேஜ்ல ப்ராஜக்ட் பண்ணின அப்போ அதிகமா கம்ப்யூட்டர் முன்ன இருக்கணும்...அப்போலாம் கண் பயங்கரமா எரியும்...அப்போ ஆலோஸ கட் பண்ணி கண் மேல அஞ்சு நிமிஷம் வச்சுருந்தாலே போதும்...எரிச்சல் சரியாகிடும்…”

“இதுல இவ்ளோ இருக்கா அண்ணி....
அப்போ இதெல்லாம் போட்டுக்கிட்டு தான் நீங்க இம்புட்டு வெள்ளயா அழகா இருக்கீங்களா….”

சிரித்துக் கொண்டே…”உனக்கென்ன குறை கயல்.... நீயும் அழகாத் தான் இருக்க… இன்னும் சொல்லப் போனா என்ன விட களையா லட்சணமா இருக்க…”

“ பெறவு(கு) ஏன் அண்ணி யாருக்குமே என்னைய பிடிக்க மாட்டேங்குது…..”

தோட்டத்தில் மண்ணை கொத்தி கொண்டிருந்த கதிரின் கைகள் ஒரு நொடி நின்று பின் இயங்கியது…
“ பிடிக்காம போகுதா இந்த வீட்டு விட
செல்லம் இல்லையா நீ ….
இங்க இருக்கிற எல்லோருக்கும் உயிர் கயல் நீ....படிக்கலன்னு வேணும்னா ஏதாவது கோபமா சொல்லி இருப்பாங்க அதையெல்லாம் மனசில வெச்சுகாதேடா…”
எனும் போதே… அஞ்சுகம் , ”அம்மாடி மது….வெற்றி சாப்புட வந்துருக்கான் பாரு….“ என்று குரல் கொடுத்தார்...
உடனே தோட்டத்தில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தவள்... அவனுக்கு உணவு பரிமாற சாப்பாடு மேசை நோக்கிச் சென்றாள்....

அஞ்சுகம் மதுமதியிடம் வெற்றிவேலுக்குத் தேவையான அனைத்தையும் மதுமதி தான் கவனிக்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்...அவள் மறுத்தாலும் கனிவாகவோ கண்டிப்பைக் காட்டியோ அவளை எப்படியும் செய்ய வைத்து விடுவார் என்பதால் அவளும் தலையாட்டி பொம்மையாக மண்டையை உருட்டி வைத்தாள்…அன்றிலிருந்து வெற்றிவேலிடம் பேச்சு வார்த்தை யில்லாவிட்டாலும் அவனுக்கு காலைக் காப்பியிலிருந்து இரவு உணவு வரை அவன் தேவைகள் அனைத்தையும் கவனிக்கும் அக்மார்க் மனைவியாக மாறிவிட்டாள்...ஆனால் அவனை தனக்கென ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட அனுமதித்தாளில்லை...




மதுமதி சென்றவுடன் கதிரின் அருகே வந்தவள்,”எல்லாருக்கும் கேட்டுச்சா….நான் அழகாத்தான் இருக்கேனாம்..."
கயல் கூறியது காதில் விழாதது போன்ற பாவனையுடன் தன் வேலையிலேயே குறியாய் இருந்தான் கதிர். இதனால் எரிச்சலடைந்த கயல் அவனது கரம் பற்றி தடுத்தாள்.வெடுக்கென்று அவளிடமிருந்து கரத்தை உருவிக் கொண்டவன் ,
“ ம்ப்ச்….இப்ப என்ன வேணும்... உனக்கு …”
“என்ன வேணும்னாலும் தந்துருவீகளோ….” இடக்காக கேட்டாளா கயல்.
“தள்ளு அந்த பக்கம்….”
என்றவன் நேற்று கொண்டு வந்து இருந்த பிச்சிக் கொடியை பள்ளத்தில் ஊன்றி வைத்தான் .அவனை முறைத்தபடியே நின்றிருந்தவள் அவன் கைகள் கழுவி நிமிர்ந்ததும்
“அண்ணி சொன்னது காதில் விழுந்துச்சா…” என்று மீண்டும் தொடர்ந்தாள் .
”வழியை விடு ...எனக்கு மில்லுக்கு நேரம் ஆச்சு ….”என்றான் கதிர் .”
ஆமா இப்ப நீங்க நேரத்துக்கு போகாட்டி எங்க அண்ணே உங்களை வெளியவே நிப்பாட்டி வைக்க போகுதாக்கும்…” என்று நொடித்தாள்.அவளைச் சுற்றிக்கொண்டு நடந்தவனை தொடுத்துக் கொண்டே பின்னால் சென்று மீண்டும் அவன் வழியே மறைத்தபடி நின்றாள் .நிமிர்ந்து அவளை தீர்க்கமாய் ஒரு முறை பார்த்தவனிடம்,
” நான் அழகாத்தான் இருக்கேனாம்” என்றாள்...
“இப்ப அதுக்கு என்ன…”- இது கதிர். "பெறவு ஏன் உங்களுக்கு என்னைய பிடிக்கவே மாட்டேங்குது…..”
“போ….போய் காலையில ஏதாவது உருப்படியான வேலை இருந்தா பாரு…” என்று கூறிவிட்டு தோட்டத்தில் இருந்த தன் அறைக்குள் சென்று விட்டான். அவன் முதுகையே வெறித்தபடி நின்றவள் பின் ‘தொம் தொம்’என்ற வேக நடையுடன் கோபத்துடன் வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
குளித்துவிட்டு வந்த கதிர் நேற்று துவைத்து காயப் போட்ட சட்டையை கொடியில் காணாமல் சுற்றுமுற்றும் தேடிக்கொண்டிருந்தான்.
“ இதத்தான தேடுறீக…” என்று என்ற கயலின் குரல் கேட்டுத் திரும்பினான்.



“இத எதுக்கு நீ எடுத்த….”என்று அவன் தனது சட்டையை அவளிடமிருந்து வேகமாக கைப்பற்றினான்.
“ம்ம்….. எனக்கு போட வேறு மாத்து உடுப்பு இல்ல ...அதான் உங்களோடத போட்டுக்கிடலாம்னு எடுத்தேன்…..
என்று கடுப்படித்தாள் கயல் .
“நாலு வெளி இடத்துக்கு போறவக இப்படி கிழிஞ்ச சட்டையவா போடுறது….”
என்று பொரிந்தாள் கயல்.
சட்டையை நேற்று காயப்படும் போது கொடிக்கம்பம் இழுத்து சட்டையின் பாக்கெட் கிழிந்துவிட்டது .சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தவன் அதை மறந்தே போனான். காயப்போட்டிருந்த அவன் சட்டை பாக்கெட்டில் கிழிந்து தொங்குவதை கண்டு அதனை எடுத்துச் சென்று தைத்து பெட்டி போட்டுக் கொண்டு வந்திருந்தாள் கயல். சட்டையினைப் பார்த்தவனின் கண்கள் அதன் பாக்கெட்டிலேயே நிலைபெற்று நின்றன .பாக்கெட்டின் மேற்பகுதியில் அழகாக செய்யப் பட்டிருந்த எம்பிராய்டரி வேலை அவனை வெகுவாக கவர்ந்தது.

“அது என்னான்னு விளங்குதா….?”
என்ற கயலை நிமிர்ந்து பார்த்தான்.

கூர்ந்து கவனித்தால் மட்டுமே என்னவென்று விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் செய்யப்பட்டிருந்தது அந்த வேலைப்பாடு. தன் வால் பகுதியை தலைவரை நளினமாக வளைத்து நெளிந்து கொண்டிருந்தது ஒரு மீன்.


“அது ஒரு மீன் டிசைனு.. கயல்ன்னா மீன் னுஅர்த்தம்….இந்த கயல் உங்க பாக்கெட்ல உங்க இதயத்துக்கு மேலே இருக்கிறது போல இந்த கையிலும் உங்க இதயத்துல ஒட்டிக்கிட்டு இருப்பா….”என்று தன்னைச் சுட்டிக் காட்டி கூறிவிட்டு வீட்டிற்குள் சென்று விட்டாள் கயல்.
புன்னகையுடன் தன் சட்டை பாக்கெட்டில் மேல் வருடியவன் “பாப்பு...உனக்கு இப்படி எல்லாம் கூட யோசிக்க தெரியுமாடா….”என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான் கதிர் .



மயில்லம்மையின் ஒன்றுவிட்ட தங்கை தங்கத்தின் மகள் வழிப் பேரன் கதிர்..
கதிருக்கு ஐந்து வயது நடக்கும்போது திருமணத்திற்குச் சென்ற கதிரின் தாயும் தந்தையும் சாலை விபத்தில் இறந்து விடவே கதிரை வளர்க்கும் பொறுப்பு தங்கத்திடம் வந்தது .
தாயாகவும் தந்தையாகவும் கதிரை கவனித்துக் கொண்ட தங்கமும் மூன்று வருடங்களில் இறைவனடி சேர்ந்து விடவே ஆற்றுவதற்கோ தேற்றுவதற்கோ ஆளின்றி அனாதையாக அழுது கொண்டிருந்த கதிரை தம் வீட்டிற்கு அழைத்து வந்தார் மயிலம்மை. ஒத்த வயதுடைய வெற்றிவேல் நல்ல நண்பனாய் கதிரை ஏற்றுக் கொண்டான். வீட்டிலேயே தங்கி இருந்த கதிர் பின்னர் நாளடைவில் தோட்டத்தை ஒட்டிய அந்த சிறிய அறையில் தங்கிக் கொண்டான்.உறவுகள் அனைத்தையும் இழந்து வந்த கதிருக்கு உற்ற நண்பனான வெற்றிவேலும் குண்டு கன்னங்களுடனும் பெரிய விழிகளுடனும் குழந்தையாயிருந்த கயலுமே அனைத்தும் ஆகிப் போனார்கள்.

கதிருக்கு கல்வியின் மீது இருந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்டு மயிலம்மை வெற்றி வேலுடன் கதிரையும் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.பள்ளி நேரம் போக எந்நேரமும் கயலைத் தூக்கிக் கொண்டு திரிந்தான் கதிர்.”பாப்பு... பாப்பு…” என்று கொஞ்சிக்கொண்டே அலைவான். வேற்றாள் என்று கருதாமல் தன்னை வீட்டில் ஒரு ஆளாக ஏற்றுக் கொண்ட அந்த உறவுகளுக்காக தன் உழைப்பைக் கொடுத்தான் கதிர்.படிப்பு நேரம் போக மற்ற நேரங்களில் எல்லா வேலைகளையும் தானே இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தான் கதிர் .
கயல் வளர வளர “கதிர் மாமா... கதிர் மாமா..” என்று உயிரை விட்டாள். கயலுக்கு சாப்பிடுவது முதல் தூங்குவது வரை எல்லாவற்றிற்கும் கதிர் வேண்டும். கதிர் இவள் சாப்பிடும் நேரம் இல்லாவிட்டால் கத்தி ஊரையே கூட்டி விடுவாள்…

ஒருநாள் மாலை பள்ளியிலிருந்து வரும் போதே சோர்வாக வந்தாள் கயல்.கல்லாரி முடிந்து வரும் கதிரைக் கண்டதும் அவனை நோக்கிச் சென்றவள் பாதியிலேயே வயிற்றைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.இதனைக் கண்டதும் பதற்றத்துடன் அவளை நெருங்கினான்

”பாப்பு என்னடா பண்ணுது…”
“கதிர் மாமா வயிறு ரொம்ப வலிக்குது” என்றவளை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்றவன் மயிலம்மையை அழைத்து வந்தான்.

“கதிரு...நீ போய் கயலுக்கு குடிக்க தண்ணி கொண்டு வாய்யா…” என்றவர் கயலிடம் திரும்பினார்..

கதிர் தண்ணீர் எடுத்துவந்த போது ஆனந்தத்தில் கண்ணீர் பெருக,”கதிரு நம்ம கயலு பெரிய மனுசி ஆகிட்டாயா”.என்றார்.

கதிர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...ஆனாலும் பெண்களாய்க் கூடியிருந்த இடத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தன் அறைக்குச் சென்று விட்டான்.

அன்று எந்த அளவு மகிழ்ச்சியடைந்தானோ அதே அளவு துன்பத்தைப் பின் வந்த நாட்களில் கதிர் அனுபவித்தான்..கயலைக் காண அவனுக்கு வாய்ப்பே கிடைக்கவிவல்லை...வீட்டில் ஒரு மூலையில் தென்னை ஓலையால் வேயப்பட்ட மறைவில் அமர்ந்திருந்த கயலை எந்நேரமும் யாராவது ஒரு பெண்மணி அருகே அமர்ந்து அடை காத்துக் கொண்டே இருந்தார்கள்..கயலைப் பார்க்காமல் அவனால் சரியாக உண்ணவோ உறங்கவோ முடியாமல் தவித்தான்.
அவனது தவிப்பைப் போக்கும் நாளும் வந்தது.

அன்று கயலுக்கு மஞ்சள் நீராட்டு விழா...ஊரையே அழைத்து விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் குலசேகரன்.அன்று தான் போன உயிர் திரும்பியது கதிருக்கு….ஆவலாக அவளைக் கண்ணுற்றவனால் தன் கண்ணையே நம்ப முடியவில்லை….விளையாட்டும் குழந்தைத் தனமும் மிகுந்திருக்கும் கயலின் வதனத்தில் இன்று நாணம் குடிகொண்டிருந்தது...சதா அங்கும் இங்கும் அலையும் விழிகளில் நிதானம் இடம் பெற்றிருந்தது...தான் தூக்கி வளர்த்த குழந்தை இன்று பெரிய பெண் போல் சேலை கட்டி நிற்பதைக் கண்டபோது பிரமித்துதான் போனான்.கயலைப் பார்க்கையில் அவனுக்குள் ஒரு நூதன உணர்வு உற்பத்தியானது.

கயல் மீதான பாசம் எந்த நொடியில் நேசமாய் உருப்பெற்றது என்று அவனுக்குத் தெரியவில்லை.ஆனால் இந்த ஏழு நாட்களில் கயல் இல்லாது கழியும் ஒவ்வொரு நாளும் நரகம் என்பதை உணர்ந்து கொண்டான்.

இங்கு கயலின் நிலையோ வேறாக இருந்தது.ஏழு நாட்களுக்குப் பின் கதிரை எப்போதடா காண்போம் என்றிருந்தவள்..அவன் கண்ணில் பட்டவுடன் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் நாணத்தால் தவித்தாள்.ஆர்வமாக கதிரைப் பார்ப்பதும் அவன் பார்வையினைச் சந்தித்ததும் தலை குனிவதும் என இருந்தவளைக் கண்டவனுக்கு அந்த சூழல் இனித்தது.

“ஏலேய்...இங்க என்னடா பராக்கு பாத்துக்கிட்டு நிக்கிறவன்...போடா உறவக்காரவக சாப்பிட்ட இலையெல்லாம் எடுக்காம கெடக்கு...போயி எடுடா…”என்று அழகம்மையின் தந்தையான சண்முகத்தின் ஏச்சுப் பேச்சினைக் கேட்கவும் துடித்துப் போனான்…

வீட்டிலும் சரி...வயலிலும் தோப்பிலும் சரி...கதிர் தான் முன் வந்து வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வானே தவிர...யாரும் அவனை ஏசியதோ ...இதுபோல தரக் குறைவாக நடத்தியதோ...வேலை ஏவியதோ இல்லை...குடும்பத்தில் ஒருவனாக பாவிக்கப் பட்டு வந்த கதிரை ஏனோ அவருக்குப் பிடிக்காமல் அவனை அவமானப்படுத்தும் நோக்கோடு ஏசிவிட்டார்...வெற்றி வேலும் மற்றவர்களும் விசேச வீட்டிற்கே உரித்தான பரபரப்பில் இருந்ததால் இங்கு நடந்ததை கவனிக்கவில்லை…

‘இப்போது என்னவாகிவிட்டது...பாப்புவின் விசேசத்திற்கு இதைக் கூட செய்யமாட்டேனா…இதையெல்லாம் நான் செய்யாமல் வேறு யார் செய்வது’ ,என்று எண்ணியபடியே வேலைகளை செய்துவிட்டு வந்தாலும்…’நீ வேற்றாள்’என்பது போன்ற சண்முகத்தின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அவனை வதைத்தன… வயிற்றில் பசியிருந்தும் உண்ண மனமில்லாமல் தன் அறைக்குச் சென்று படுத்து...அப்படியே தூங்கிவிட்டவன் பாதி இராத்திரியில் அரண்டு புரண்டு பதறி எழுந்து அமர்ந்தான்...

சென்ற அத்தியாயத்திற்கு லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸிட்ட அனைத்து நட்புக்களுக்கும் நன்றிகள் பல... உங்கள் மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்கும் பிரியா குமார்...





 




Attachments

Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top